Monday, October 15, 2007

55. இந்திய பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களின் கவனத்திற்கு...

டிஸ்கி: தெரியல வலைப்பூவில் உள்ள இந்தப் பதிவுக்கும் இதற்கும் சம்மந்தம் இருப்பதும் இல்லாததும் அவரவர் முடிவுக்கே விட்டுவிடும் அதேவேளையில், பட்டறையில் மாலன் பாஸ்போர்ட் பற்றிச் சொன்னதற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்

----------------------------------------------------------------

பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் (வெளிநாட்டிலல்ல,உள்ளூரில்தான்) என்ன செய்யவேண்டும்.. காவல்துறையினர் எப்படிக் கண்டுபிடித்துத் தருவார்கள்? சற்று விளக்கமாகப் பதிலளிக்க முடியுமா? என்று நண்பர் அபுல் கேட்டிருந்தார்.

கேட்டு ரொம்ப நாள் ஆயிற்று ஆனாலும், இதற்கான பதில் இதோ.


தொலைந்து போனால், அதே பாஸ்போர்டையே கண்டுபிடித்துத் தரமாட்டார்கள். புதிய பாஸ்போர்ட் தான் கொடுக்கப்படும்.

-------------
இந்தியாவில் தொலைத்துவிட்டால் என்ன செய்வது:

stolen or lost passports
1. முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். கொடுத்ததன் பயனாய் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) அவசியம் தேவை.


2. அ) இந்த முதல் தகவல் அறிக்கையின் மூன்று நகல்கள்
ஆ) அன்னெக்ஷர் B
இ) கடவுச்சீட்டு தொலைந்து போக காரணம், இடம், நேரம் போன்றவற்றை விவரிக்கும் கடிதம்
ஈ) தொலைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதிய கடவுச்சீட்டு வழங்குமாறு கடவுச்சீட்டு அலுவலருக்கு வேண்டுகோள் கடிதம்.
உ) தொலைந்து போன கடவுச்சீட்டின் நகல்

இவற்றுடன் தொலைந்த/பழுதடைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதியது வழங்கக்கோரும் விண்ணப்ப படிவத்தையும் (Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport) முழுமையாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் ஆபீஸில் சமர்பிக்க வேண்டும். பழைய பாஸ்போர்டின் நகல்கள் இருந்தால் மாற்று வழங்குவது சற்று விரைவாக நடக்கும். அதோடு இதே விண்ணப்பத்தில் முகவரி மாற்றம், திருமணம், குழந்தைகள் மற்றும் இன்னபிற விவரங்களில் மாற்றங்கள் இருந்தால் அதையும் குறிப்பிடலாம். அதோடு ECNR பழைய பாஸ்போர்டில் கொடுக்கப்பட்டிருந்தால், அதையும் அதற்குண்டான பகுதியில் குறிப்பிடவேண்டும். ECNR உக்கு தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டவற்றோடு, புதிய கடவுச்சீட்டு வேண்டும்போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்களையும் சமீபத்திய புகைப்படங்களையும் இணைக்க வேண்டும்.

இவற்றோடு மாற்றுக் கடவுச்சீட்டிற்கான கட்டணத்தையும் (தற்போது ரூ. 2500) செலுத்த வேண்டும்.

மேற்சொன்னவற்றை பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் இருந்தால் நேரடியாகவோ, மாவட்ட தலைநகரங்களில் இருக்கும் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களிலோ, விரைவுத்தபால் நிலையங்களிலோ சமர்ப்பிக்கலாம்.

தத்கால் முறையில் அவசரமாக மாற்றுக் கடவுச்சீட்டு தேவைப்பட்டால் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். (இது முந்தைய விதி. தற்போது மாறியிருப்பதாக சொல்கிறார்கள். இதை confirm செய்ய வேண்டும்)தத்கால் முறையில் விண்ணப்பம் செய்வதற்கு அவசரத் தேவைக்கான எவ்விதமான சான்றும் சமர்பிக்கத் தேவையில்லை.

-------------------------
வெளிநாட்டில் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
மாதிரிக்காக இங்கே செல்லவும்.



-------------------------
சேதமடைந்த (damaged) கடவுச்சீட்டுகளுக்கு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை (obviously! :)). தற்போதைய கடவுச்சீட்டின் நகலுடன் அசலும் சமர்ப்பிக்க படவேண்டும். அதோடு Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport படிவத்தை பூர்த்தி செய்து புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
-------------------------
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

20 comments:

said...

உபயோகமான தகவலையும் உப்புமாக்குள்ள பொட்டலம் கட்டித் தர்றீங்களே! நல்ல பதிவு, மோசமான டிஸ்கி :)

said...

நல்ல தகவல்....

டிஸ்கிய பத்தி என்னத்த சொல்ல... :)

said...

நல்ல தகவல்கள்...!!!!!!!!!!!!!!!

said...

நல்ல தகவல்.

நன்றி டாக்டரு... :))

said...

நல்ல தகவல். ஆனால் இந்த டிஸ்கி தேவையா? இங்கே தகவல்கள் தகவல்களாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இங்கேயுமா அரசியல் :(

said...

பெனாத்தலார்,
விக்கியில உப்புமா போடலாம்னு முன்னுரையிலேயே சொல்லிருந்தாலும், டிஸ்கில மட்டுமே போட வேண்டிய நிலைமைல இருக்கு.

அதான்..

said...

புலி,
நன்னி..

டிஸ்கிய பாத்தப்புறம் ஒண்ணும் சொல்லப்படாதுன்னுதான் டிஸ்கியே போடுறது... :)

said...

ரவி, இராம்,
நன்னி..

சாரி.. நாப்பது எல்லை வந்தப்புறம் சிலதுக்கு டு-இன்-ஒன் ரிப்ளை கொடுக்க வேண்டியிருக்கு. :((

said...

விவசாயி,
//இங்கே தகவல்கள் தகவல்களாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இங்கேயுமா அரசியல் :(//

தகவல்கள் மட்டுமே இல்லைங்கோ..
அப்புறம் இந்தப்பதிவு அந்தப்பதிவு எழுதறதுக்கு முன்னாடியே எழுதிவச்சது. ரெண்டுத்துக்கும் சம்பந்தம் வந்தது எதேச்சையானது.

ஆனா டைட்டில்/டிஸ்கி வக்கிறதுக்குன்னு தமிழ் வலைப்பதிவுகள்ல சில விதிமுறைகள் இருக்குல்லியா? அதன்படி தான் அவையிரண்டும்... லூசுல விடுங்க.. :))

said...

அருமையான தகவல்கள். மிகவும் பயனுள்ள பதிவு.

said...

தகவல்களுக்கு நன்றி..

-அபுல்

said...

உருப்படாத பதிவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தர நீங்கள் நல்ல முன் உதாரணம். வாழ்த்துக்கள்.

said...

மேலும் உங்களின் மற்ற பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.............!!!

வேறு எதற்கு கருத்து சொல்லத்தான்!!!

said...

பாஸ்போர்ட் இருக்கட்டும்யா. இந்த விக்கி பசங்க இப்படி காணாம போயிட்டாங்களே. அதுக்கு என்ன பண்றதுன்னு ஒரு ஐடியா குடுங்க..

said...

நல்ல தகவல்.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி.

தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

said...

அனைவருக்கும் பயனுள்ள பதிவு . பகிர்வுக்கு நன்றிகள்

said...

பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்வது?
அருமையான விபரங்கள்.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி அம்மா.

said...

பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்வது?
>>
குறிப்பெடுத்துக் கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

said...

பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் பயனுள்ளவை.

said...

அருமை