Sunday, August 26, 2007

ஒலியின் வேகத்தை விட வேகம் - கான்கார்ட் விமானங்கள்

கான்கார்ட் விமானங்களின் சேவை ஏன் நிறுத்தப்பட்டன என்று அனானி ஒருவர் கேள்வி கேட்டு இருக்கிறார். தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியாமல் போயிற்றே என நான் வருத்தப்படும் ஒரு விஷயம் என்பதால் இக்கேள்விக்கு பதில் சொல்ல நான் ஆசைப்படுகிறேன்.

1969ஆம் ஆண்டு பறக்கத் தொடங்கிய கான்கார்ட் விமானங்கள் ஏன் பறக்காமல் சிறகொடிக்கப்பட்டன? காரணங்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் இருகிறதா? கொஞ்சம் கொசுவர்த்தி சுத்துவோம்.

பறக்கத் தொடங்கியதிலிருந்தே வேகமாய் பறக்க வேண்டும் என்ற ஆவல் மனிதரிடையே இருந்து வந்தது. அதுவும் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில், அதாவது மணிக்கு 1,225 கிலோமீட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒரு மைல்கல்லாக இருந்தது. ராணுவ விமானங்கள் பல அவ்வேகத்தில் பறந்தாலும் பயணிகள் சேவையில் அவ்வேகத்தில் சென்ற விமானங்கள் இரண்டே இரண்டுதான் - ஒன்று கான்கார்ட். மற்றொன்று அதற்குப் போட்டியாக ரஷ்யா தயாரித்த டுப்பலோவ் 144. இதில் வெற்றிகரமாக இயங்கியது என்னவோ கான்கார்ட்தான்.

மிகுந்த பொருட்செலவில் தயார் செய்யப்பட்ட விமானங்கள்தான் கான்கார்ட். அவற்றின் வரலாற்றை மற்றொரு சமயம் பார்க்கலாம். மொத்தமே 20 விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன. அதில் 6 விமானங்கள் ஆராய்ச்சிக்களுக்காகவும் மீதமுள்ள 14 விமானங்கள் பயணிகள் சேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் ஆளுக்குப் பாதி என தலா ஏழு விமானங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். உலகிலேயே இவ்விரண்டு நிறுவனங்கள்தான் கான்கார்ட் விமான சேவையை பயணிகளுக்கு அளித்தன. சரி விஷயத்திற்கு வருவோம்.

ஜூலை 25, 2000. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக விபத்தென்றால் என்னவென்று அறியாத கான்கார்ட் விமானங்களின் முதல் விபத்து. ஆனால் எப்படிப்பட்ட கோர விபத்து. விமானத்தில் இருந்த 100 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் அவர்களுடன் தரையில் இருந்த நால்வரும் மரணமடைந்த ஒரு பரிதாபமான நிகழ்வு. ஆனால் கான்கார்ட் என்ற சகாப்தத்தின் கடைசி அத்தியாயத்தின் ஆரம்பமாக இந்த விபத்து அமையும் என எத்தனை பேர் அன்று நினைத்தார்கள்?

இவ்விபத்து நிகழ்ந்ததால் அனைத்து கான்கார்ட் விமானங்களும் சோதனைக்குட்படுத்தப் படவேண்டும் என இச்சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். இவ்வளவுக்கும் இவ்விபத்தின் காரணம் வேறொரு விமானத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பகுதி ஒன்று ஓடுதளத்தில் விழுந்து, அவ்விமானத்தின் பின் சென்ற கான்கார்ட் விமானத்தின் சக்கரம் அதன் மேலேறியதால்தான் வெடித்தது எனக் கண்டறிந்தார்கள். எனினும் பல சோதனைகளுக்காக இவ்விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பல சோதனைகள், சில மாற்றங்களுக்குப் பின் முதல் சோதனை ஓட்டம் (இது ஓட்டமா? சோதனை பறப்பு எனச் சொல்லலாமா?) நடந்தது ஜூலை 17 2001. வெற்றிகரமான ஓட்டம் என அறிவிக்கப்பட்ட பின், மேலும் சில சோதனைகளுக்குப் பின் பயணிகளுடன் பறக்கத் தொடங்கியது செப்டம்பர் 11, 2001. மற்றுமோர் மாபெரும் கொடுமை நடந்த தினம் அல்லவா அது? அந்த கோர சம்பவம் நடந்த பொழுது லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மாற்றியமைக்கப்பட்ட கான்கார்ட் விமானம். நடந்த செய்தி கேட்டு மீண்டும் லண்டனை நோக்கி திருப்பி விடப்பட்டது.

அந்நிகழ்வின் பின் மீண்டும் 2001 நவம்பர் மாதம் இவ்விமான சேவை தொடங்கினாலும் முதலில் நிகழ்ந்த விபத்தின் காரணமாகவும், செப்டம்பர் 11 நிகழ்வின் பின் விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததினாலும், உலக வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவினாலும், தொடர்ந்து உயர்ந்து வரும் சீரமைப்பு செலவினங்களாலும் கான்கார்ட் சேவையினை நிறுத்துக் கொள்வதாக ஏப்ரல் 10, 2003 அன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தார் அறிவித்தனர். அவ்வருடம் அக்டோபர் மாதமே இச்சேவை இறுதியாக நிறுத்தப்பட்டது.

இதுதாங்க கான்கார்ட் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்ட கதை. கான்கார்ட் விமானங்களைப் பற்றி சில குறிப்புகள்.

  • இவ்விமானங்கள் பறப்பது கிட்டத்தட்ட மணிக்கு 2200 கிலோமீட்டர்கள். அதாவது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு!
  • லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் அத்தூரத்தை சுமார் மூன்றரை மணி நேரத்தில் கடந்து விடும். மற்ற விமானங்கள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
  • லண்டனுக்கும் நியூயார்க்கும் இடையேயான நேர வித்தியாசம் 5 மணிநேரம் ஆதலால்,லண்டனில் இருந்து கிளம்பிய நேரத்திற்கு முன்னமே நியூயார்க்கில் வந்து இறங்கி விடும். (அதாவது லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்குக் (அதாவது நியூயார்க் நேரம் காலை 7மணி) கிளம்பினால் நியூயார்க் நகரில் காலை 10:30 மணிக்கு வந்து சேர்ந்து விடும்.)
  • வேகத்திற்கான பல உலக சாதனைகளைப் படைத்த விமான ரகம் கான்கார்ட்
  • முதல் பயணிகள் விமானம் சென்றது நியூயார்க் நகருக்கு இல்லை. பஹ்ரைன் நகருக்கு லண்டனில் இருந்தும் பாரிஸில் இருந்து ரியோ டி ஜெனீரோவிற்கும் பறந்தது.
  • இந்தியாவின் மீது இவ்விமானங்கள் பறக்க இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது
  • இவ்விமானங்கள் பறக்கும் உயரம் 60,000 அடிகள். இவ்வளவு உயரத்தில் பறப்பதால் அவ்விமானங்களின் ஜன்னல் வழியாகப் பூமியைப் பார்க்கும் பொழுது அது தட்டையாக இல்லாமல் பந்து போல் வளைவாகத் தெரியும்.
  • மிகுந்த வேகத்தில் பறப்பதால் இவ்விமானங்களின் கட்டுப்பாட்டு அறையில் ஒரு சிறிய விரிசல் வரும். சூடு தணியும் பொழுது அவ்விரிசல் மறைந்து விடும். கான்கார்ட் விமானங்களின் கடைசி பயணத்தின் பொழுது அவ்விரிசலில் அவ்விமானத்தின் பைலட்டின் தொப்பி சொருகப்படும். அவ்விரிசல் மறையும் பொழுது அத்தொப்பி அவ்விமானத்தில் நிரந்தரமாக இணைக்கப்பட்டு விடும்.

மேலும் விபரங்களுக்குச் சில சுட்டிகள்

படங்களுக்கு நன்றி - விக்கிப்பீடியா

32 comments:

said...

நான் கான்கார்ட் விமானங்களில் செல்ல முடியாதது குறித்து முன்னமே வருந்தியது என் எட்டு விளையாட்டு பதிவில்.

மீண்டும் ஒரு முறை அதைப் பற்றி எழுத சந்தர்ப்பம் தந்த அனானிக்கு நன்றி.

said...

அருமையான தகவல்கள்.

இந்த விமானத்தில் நானும் போகலை. ஆனால் இங்கே கிறைஸ்ட்சர்ச்க்கு அது வந்தப்ப
( ஒரு ஸ்பெஷல் சுற்றுலாவுக்கு ஆளுங்க வந்தாங்களாம்) திருவிழா மாதிரி இருந்தது.
நாங்களும் கூட்டத்தில் கலந்துக்கிட்டு, கிட்டேபோய் தொட்டுப்பார்த்தோம்:-)))))))

அது வந்து இறங்குனதையும், திரும்ப இங்கிருந்து கிளம்புனதையும் நாங்க போய்ப் பார்த்தோம்.
கருடன் வந்து இறங்குனதுபோல அப்படி ஒரு அழகு.

வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணங்களில் இதுவும் ஒண்ணு.

said...

They invited me to come and fly with them. I could not go due to various other commitments.:))

Unga pathivaip paarththathum naane
Concord ERi fly seytha maathiri irukku.

IvvaLavu periya manushanga varuvathaRku adhukkuk koduththu vaikka villai.

said...

//நான் கான்கார்ட் விமானங்களில் செல்ல முடியாதது ...// - கொத்ஸ்

//இந்த விமானத்தில் நானும் போகலை.// - துளசி

நானும் கூடத்தான்.
ஓ! இதெல்லாம் நமக்கு ஜுஜுபி-ங்க...
(நரி, திராட்சை கதை நினைவுக்கு வந்தால் நானென்ன செய்ய!)

said...

ஆக உலக மக்களே அறிந்து கொள்ளுங்கள் எங்கள் அண்ணன் தலைவர் கொத்ஸ் பயணிக்க முடியாத ஒரே காரணத்தினால் மனம் நொந்து கான்கார்ட் பயணம் நிறுத்தப்பட்டிருக்கிறது...

கூடவே எங்கள் பதிவுலக பேரோளிகள் துளசி அக்கா, வல்லி அக்கா ஆகியோரும் ஏறாத காரணத்தினால் அது ஏரோ ப்ளேனாக இருந்தாலும் ஏரா பிளேனாக மாறிவிட்டது வரலாற்றில் புதைக்கப்பட்ட உண்மை..

தருமி அய்யா நமக்கு எல்லாம் ராக்கெட் காத்திருக்கிறது.. கவலையை விட்டு கிளம்புங்கள்...

said...

சூப்பர் பதிவு!!
ந்யூயார்க்கில் இருந்து லண்டனிற்கு இந்த விமானத்தில் ஒரு டிக்கெட் எவ்வளவு என்று தெரியுமா??

Just curious! :-)

said...

சீவிஆர்,

உங்க கேள்விக்கு முதல் பதில். இந்த கேள்வி கட்டாயம் வரும் என எதிர்பார்த்தேன். லேசாக தேடிய பொழுது கிடைத்த சுட்டி இதுதான் . இதன் படி, 2002ஆம் ஆண்டு லண்டனில் இருந்து நியூயார்க் போய் வர கிட்டத்தட்ட 10,000 டாலர் கட்டணம் எனத் தெரிகிறது.

said...

ஹூம்.. டிஸ்கவரில இதோட டாகுமெண்டரி பாத்தப்போ கூட இதுல பறக்கலியே ஏக்கமா இருந்துச்சு..

அப்புறமா என்ன.. ஒரு நூறு ரூபா கொடுத்து டிவிடி வாங்கி பறக்கறது என்ன.. ஓட்டவே செஞ்சிட்டேன்.. அதான்பா ப்ளைட் சிமுலேட்டர்.. அதுல இதுவும் இருக்கு..

said...

'நீ ஒரு எஞ்சின் டிரைவர்' எனச் சொல்லிவிட்டு, ஒரு நீண்ட புதிர் கணக்கெல்லாம் கொடுத்துவிட்டு, கடைசியில், அந்த எஞ்சின் டிரைவர் பெயர் என்ன எனக் கேட்கும் போது, ரொம்ப பேரு முழிப்பாங்க!

இந்தப் பதிவும் கிட்டத்தட்ட அதே போல.

ஆனா, நம்ம தேவ் அட்டகாசமா, பதிவோட கருப்பொருளை கச்சிதமாக் கவ்விட்டாரு.

கான்கோர்ட் விமானங்கள் 'ஏறாப்ளேனா' ஆனது எப்படின்னு டக்குன்னு சொல்லிட்டாரு!

எப்படில்லாம் அலம்பல் வீடு கட்டறாங்கப்பா!
:))

said...

கான்கார்ட் விமான சேவை நிறுத்த காரணம் அதில் பயணிக்க அதிகம் பேர் வருவதில்லை என்பது தான் உண்மைக்காரணம், அதனை தான் வி.எஸ்,கே சூசகமாக சொல்லியுள்ளார்.

பயணிகள் எண்ணிக்கை குறையக்காரணம் அதிக கட்டணம். அந்த அளவு செலவழிக்க சாதாரணப்பயணிகளால் முடியாது. சொற்ப எண்ணிக்கையில் ஏற்றிக்கொண்டு பயணிப்பதால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவே கான்கார்ட் நிறுத்தப்பட்டது என அப்போது செய்திக்குறிப்பில் சொன்னார்கள் , எனவே விபத்து பற்றிய பயத்தினால் அல்ல!

said...

Hi!

ALSO THESE SUPERSONIC FLIGHTS (TECHNOLOGICAL WONDER BUT) WERE COMMERCIAL DISASTERS! That's another reason why they were retired from flying!

said...

Thank you so much Mr. Kothanar.

I am the anony from dubai.
One more thanks for your details.
Please continue your help.

said...

நல்ல தொகுப்பு இ.கொ. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி

நானும் இந்த விமானத்தில் பறக்க ஆசைப்பட்டவன்.....ஆனால் என்ன,
துளசி டீச்சர் போல தொட்டுப் பார்க்கக்
கூட முடியவில்லை.

said...

கான்கார்ட் விமானங்களைக் காண் என்று பதிவு போட்டிருக்கீங்க. நல்ல பல தகவல்கள். அப்ப செலவு கூடன்னுதான் மக்கள் போகலையா...ம்ம்ம்...அப்ப ஒன்னும் செய்ய முடியாது..

said...

கொத்து,

நான் இந்த விமானத்துல பறக்கவெல்லாம் ஆசைப் படலே. எனிவே, நல்ல குறிப்புகள்.

வவ்வால் சொன்னமாதிரி, அதிக கட்டணம்தான் நிறுத்துனதுக்கு காரணம்னு நானும் படிச்ச நியாபகம். தவிரவும், இந்த வண்டி(!) கிளம்பும்போது/இறங்கும்போது அனியாயத்துக்கு சத்தம் வருமாம்!

said...

நிறைய தகவல்கள்.

இந்த sound barrier பத்தி தனியே ஒரு விக்கி பதிவு போடலாமே கொத்ஸ்?

said...

//வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணங்களில் இதுவும் ஒண்ணு.//

டீச்சர், நானும் பக்கத்தில் போய் பார்த்திருக்கேன். இந்த முறை வாஷிங்டன் சென்றால் அங்கு இருக்கும் மியூசியம் சென்று ஜூனியருக்குக் காண்பிக்க வேண்டும்.

said...

அருமையான விளக்கம்.

said...

//They invited me to come and fly with them. I could not go due to various other commitments.:))//

ஓஹோ. அப்படியா?! :))

//Unga pathivaip paarththathum naane
Concord ERi fly seytha maathiri irukku.//
நல்ல வேளை இப்பவாவது வந்தீங்களே. இன்னிக்கும் வேற கமிட்மெண்ட் கால் ஷீட் இல்லை அப்படின்னு சொல்லாம இருந்தீங்களே!!

said...

//நானும் கூடத்தான்.
ஓ! இதெல்லாம் நமக்கு ஜுஜுபி-ங்க...//

ஆமாங்க. இப்போ ஒரு நிறுவனம் அதிக உயரத்திற்கு கொண்டு சென்று விண்வெலியில் இருப்பது போல கனமின்மையை உணர வைக்கிறார்களாம். போவோமா? :))

said...

//தருமி அய்யா நமக்கு எல்லாம் ராக்கெட் காத்திருக்கிறது.. கவலையை விட்டு கிளம்புங்கள்...//
ஐயா, இவன் ஏற்கனவே வாத்தியார் வேட்டிக்குள்ள தீவாளி ராக்கெட் விட்டவன். அதனால கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்துக்கோங்க. :))

said...

//அப்புறமா என்ன.. ஒரு நூறு ரூபா கொடுத்து டிவிடி வாங்கி பறக்கறது என்ன.. ஓட்டவே செஞ்சிட்டேன்.. அதான்பா ப்ளைட் சிமுலேட்டர்.. அதுல இதுவும் இருக்கு..//

ஹூம்ம்ம்...உங்க ஊரில் எல்லாம் 100 ரூபாய்க்குள் கிடைக்கும். நல்ல எஞ்சாய் பண்ணுங்கய்யா!!

said...

//இந்தப் பதிவும் கிட்டத்தட்ட அதே போல.//

ஆஹா! பதிவு ரொம்ப எளிதான பதிவுதான் அப்படின்னு பாராட்டினதுக்கு நன்றி தல!! :))

said...

//பயணிகள் எண்ணிக்கை குறையக்காரணம் அதிக கட்டணம். அந்த அளவு செலவழிக்க சாதாரணப்பயணிகளால் முடியாது.//

வவ்வால் அதுவும் ஒரு காரணம் என்ற அளவில்தான். இந்த விபத்துக்கு முன்னாடியும், 9/11க்கு முன்னாடியும் நிறைந்து போன விமான சேவைதாங்க அது. அதுக்கு பின்னாடி விமானத்தில் போறதே குறைஞ்சு போச்சு.

அது மட்டுமில்லாமல் இந்த வகை விமானங்களில் ரொம்ப புதுமைகளை அறிமுகப்படுத்தாம இருந்தாங்க. அதுனால அதில் தானியங்கி வகையாறாக்கள் ரொம்ப கம்மியா இருந்தது. அதுவும் மேற்சொன்ன காரணங்களோடு இன்னும் ஒண்ணு.

said...

//ALSO THESE SUPERSONIC FLIGHTS (TECHNOLOGICAL WONDER BUT) WERE COMMERCIAL DISASTERS! That's another reason why they were retired from flying!//

வாங்க அபாலா. எந்த விதத்தில் இவைகள் Commercial Disasters என கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

said...

//Thank you so much Mr. Kothanar.

I am the anony from dubai.//

ஏங்க இப்பவாவது உங்க பேரைச் சொல்லலாமே. அனானின்னு கூப்பிட ஒரு மாதிரி இருக்கு. அடுத்த கேள்வியோட வாங்க.

said...

//நல்ல தொகுப்பு இ.கொ. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி//

நன்றி மதுரையம்பதி.

said...

//கான்கார்ட் விமானங்களைக் காண் என்று பதிவு போட்டிருக்கீங்க. நல்ல பல தகவல்கள். அப்ப செலவு கூடன்னுதான் மக்கள் போகலையா...ம்ம்ம்...அப்ப ஒன்னும் செய்ய முடியாது..//

அப்படின்னு இல்லை ஜிரா. செலவு அதிகம் அப்படின்னு அது ஒண்ணும் ரொம்ப காலியா போனது இல்லை. 9/11க்குப் பின்னாடி விமான பயணமே குறைஞ்சு போச்சு. அதுதான் முதல் காரணம்.

said...

//தவிரவும், இந்த வண்டி(!) கிளம்பும்போது/இறங்கும்போது அனியாயத்துக்கு சத்தம் வருமாம்!//

ஆமாம். பல இடங்களில் அதுனால இந்த விமானத்துக்கு அனுமதி இல்லை.நியூயார்க் நகரில் அனுமதி கிடைச்சது கூட பல வித போராட்டங்களுக்குப் பின்னாடிதான்.

நான் பதிவில் சொன்ன மாதிரி இந்திய அரசாங்கம் இவ்விமானம் இந்திய எல்லைக்குள் பறக்க அனுமதி மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணம். சிங்கப்பூர் சேவை வெற்றி பெறாததற்கு இதுவும் ஒரு காரணம்.

said...

//இந்த sound barrier பத்தி தனியே ஒரு விக்கி பதிவு போடலாமே கொத்ஸ்?//

இந்தப் பதிவிலேயே சொல்லலாம் எனத்தான் நினைத்தேன் ஸ்ரீதர். ஆனால் நீளம் கருதி விட்டுவிட்டேன்.

said...

//அருமையான விளக்கம்.//

நன்றி இரவி.

said...

10000 டாலரா????? :ஓ

என்னதான் இருந்தாலும் இது "கொஞ்சம்" ஓவாராத்தான் இருக்கு!! :-D