Wednesday, August 01, 2007

ப்ளாஷில் கலக்கலாம் வாங்க! - பாகம் 1

ப்ளாஷில் கலக்குவது எப்படி? அவ்வப்போது நான் செய்யும் ப்ளாஷ் பதிவுகளின் பின்னூட்டங்களில் சந்திக்கும் கேள்வி இது.

நான் நிச்சயமாக தொழில்ரீதியிலான ப்ளாஷ் தயாரிப்பவன் அல்ல. அப்படிப்பட்டவர்கள் யாரும் தங்கள் பதிவுகளில் ப்ளாஷ் ஏனோ உபயோகிப்பதில்லை!

இயந்திரங்களின் இயக்கத்தையும், ஹைட்ராலிக் ஓட்டத்தையும் அசையாப்படம் மூலம் 2 மணிநேரங்கள் சொல்வதைவிட, ஒரு அசையும் படம் 5 நிமிடங்களில் தெளிவாக விளக்கிவிடுகிறது என்பதை அனுபவபூர்வமாகக் கண்டதால், இந்த மென்பொருளை நண்பரின் நண்பரின் நண்பர் மூலம் அடைந்தேன், தட்டித்தடவி உதவிப்பக்கங்கள் மூலமும், உதாரணங்கள் மூலமும் கற்றுக்கொண்டேன்.

இம்மென்பொருளை இங்கே (30 நாள் இலவசம்) அல்லது இணையத்தில் தேடி தரவிறக்கிக்கொள்ளலாம். இலவசமாக எங்கும் கிடைக்கவில்லை :-(.

Interaction என்பது சில பதிவுகளின் வீச்சையே மாற்றிவிடும். ஒரே சம்பவம் பற்றி அதிமுகவும் திமுகவும் வேறு வேறு கருத்துக்கள் வைத்திருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை, அக்கட்சிகளின் தலைவர்களும் அடிமட்டப்பேச்சாளர்களும் பேசும் தொனி வித்தியாசப்படும் என்பதை வைத்து காமடி செய்தது நான் தான் முதலில் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. ஆனால், எந்தக்கட்சி என்பதையும், பேச்சாளர் நிலையையும் பயனர் தேர்ந்தெடுப்பதுபோல் வைத்தால் பழைய கள் புது மொந்தையில் புதுமை காட்டுகிறது அல்லவா?


இந்த வீடியோத் துண்டில் எளிமையான ஒரு ப்ளாஷ்-ஐ எப்படித் தயாரிப்பது என்று விளக்கியிருக்கிறேன்.




அதை SWF கோப்பாக மாற்றுவதற்கான குறிப்புகள் இங்கே.




மேலதிக ஜிகினா வேலைகள், வலைப்பதிவில் ஏற்றுவது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாமா?

14 comments:

said...

ப்ளாஷ் கண்டார் ப்ளாஷே கண்டார் என இல்லாமல், இனி இப்பதிவு கண்டார் ப்ளாஷ் படம் செய்வார் என நம்புகிறோம். :)

said...

பிகு: பதிவை எழுதி, படத்தைத் தயார் செய்தது பினாத்தல் சுரேஷ். அதனால சந்தேகம் எல்லாம் அவர் கிட்டயே கேளுங்க.

said...

சந்தேகம் யாருக்குமேவா வரலை? அவ்ளோ தெளிவாவா சொல்லியிருக்கேன்??? சுரேஷ் கலக்கறேடா!

said...

எப்படி எழுதிய சுரேஷ் இப்படி ஆயிட்டே :((

கண்ணுக்கும் தெரியலே, காதுக்கும் கேட்கலையேப்பா !

said...

நல்ல முயற்சி. ரொம்ப முன்னாடி உபயோகித்திருக்கிறேன். இப்பொழுது தேவை வரும்பொழுது நிறைய தடுமாற்றம். உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். சந்தேகங்களை தனியாக அனுப்புகிறேன்.

//சந்தேகம் யாருக்குமேவா வரலை?//

பாருங்க snapjudge-ல Tips for Dummies-னு போட்டிருக்கார். அப்ப நமக்கு இல்ல போல இருக்குன்னு எல்லாரும் போயிட்டு இருப்பாங்களா இருக்கும் :-))

//சுரேஷ் கலக்கறேடா!//

நீங்க எப்பவுமே 'கலக்கல்'தானா? 'அவர' மாதிரி ஹார்லிக்ஸ் பேபி இல்லையா?

said...

நல்லாதான் ஆரம்பிச்சு இருக்கீங்க, சந்தேகம் நிறைய இருக்கு.

சந்தேகம் 1)
இந்த ஃபிளாஷ் எங்கே தரையிறக்கம் பண்ணலாம்?

said...

யோவ் இளா, நக்கலா? பதிவையே படிக்காம பின்னூட்டம் போடறீரா? அல்லது இந்த ஒரு வரியை மட்டும் சாய்ஸில் விட்டுட்டீரா?

//இம்மென்பொருளை இங்கே (30 நாள் இலவசம்) அல்லது இணையத்தில் தேடி தரவிறக்கிக்கொள்ளலாம். இலவசமாக எங்கும் கிடைக்கவில்லை :-(.//

said...

அப்புறம் தரையிறக்க அது என்ன விமானமாய்யா? அது தரவிறக்கம். :))

said...

//அப்புறம் தரையிறக்க அது என்ன விமானமாய்யா? அது தரவிறக்கம். :)) //
இப்படி எல்லாம் கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்லுவோம்னு தெரியாதா? ஹிஹிஹ்

said...

தல பெனாத்ஸ்.
இந்த கமாண்ட்களையெல்லாம் எங்க போயி பாக்கலாம்.. ஏதாச்சும் லின்க் இருக்குதா?

அருமையான முயற்சிகளைப் பார்க்கையில் மனதுக்குள்ளே ஏதோதோ ப்ளாஷ் ஓடுதே..

:)))

said...

நேத்தி ராத்திரி இதுக்கு ஒரு பெரிய பின்னூட்டம் போட்டு "போ" அப்படி சொல்கிற நேரத்தில் இணையத்தில் கஷ்டம்,அப்படியே மூடிட்டேன்.
முதல் சலனப்படம் மட்டும் தான் பார்த்தேன்.
மென்பொருள் முகப்பு உபயோகப்படுத்துபவர்களுக்கு உங்கள் குரலை வைத்து எங்கு போகிறீர்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியும்.இல்லாவிட்டால் சரியாக புரியாது ஏனென்றால் சிறிய அளவில் பார்க்கமுடிவதே.
பார்ப்போம்,கட்டுமானத்துறையில் எப்படி உபயோகப்படுத்தால் என்று.
வேறு ஒரு மென்பொருளை தரவிரக்கம் செய்து "உதவி" கோப்பை படிக்காமலே முயன்றேன்.ஆர்வம் இல்லாததால் தொடரவில்லை.இனி முயலவேண்டும்.
அந்த வீடியோ மூலம் ஓரளவு பிடி கிடைத்துள்ளது.
மிக்க நன்றி.

said...

பல பேர் சரியாகத் தெரியவில்லை எனச் சொல்லி இருப்பதால், இங்கு சென்றால், இம்முழு நகர்படத்தையும் தரவிறக்கி பெரிய அளவில் பார்க்க முடியும்.

said...

இன்னைக்குத்தாய்யா இதப் பாத்தேன். நல்ல முயற்சி. இத நானும் மெதுவா முயற்சிக்கிறேன். பெனாத்தலார் பேசுறப்போ அப்படியே யாரோ ஒரு பெரிய பழைய வாத்தியாரு பாடம் எடுக்குறாப்புலயே இருக்கு. வாத்தியார் பெனாத்தலார் வாழ்க வாழ்க

said...

என்னுடைய முதல் பின்னுட்டம் தங்களின் அழகான குரலுக்கும் உபயோகமான பதிவுக்கும்.எல்லோரும் இந்த மாதிரி கலக்கினா எப்படி இருக்கும்?என்ன செய்யறது மொக்கைகள்தான் மன இறுக்கத்தை தளர்த்துகிறது.பதிவுகள் அதையே பதிவு செய்கின்றன.