Thursday, September 20, 2007

மழையும் மண்வாசனையும்

மழை பெய்யத் தொடங்கும் பொழுது வரும் மண்வாசனைக்குக் காரணம் என்ன? இதுதான் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி. நாம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு வாசனை அல்லவா மண்வாசம். நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள் புனைந்த அந்த வாசனை எதனால் எழுகிறது எனப் பார்க்கத்தான் இந்தப் பதிவு.

மண்வாசனைக்கு முக்கியமான காரணம் ஒரு பாக்டீரியாதான். Actinomycetes என்ற வகையைச் சார்ந்த இந்த நுண்ணுயிரிகள் மண் ஈரப்பதமாக வளர்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் நிலமானது காய்ந்து போகும் பொழுது 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை வெளியிடுகின்றன. மழை பொழியும் பொழுது இந்த விதைகள் மழை நீரின் வேகத்தால் நிலத்தை விட்டு எழும்பி காற்றில் கலக்கின்றன. இந்த விதைகள் ஒரு விதமான மண் வாசம் அமையப் பெற்றிருக்கின்றன. இந்த வாசம் தரவல்ல ரசாயனத்தின் பெயர் Geosmins. அப்படி காற்றில் கலந்த இந்த ரசாயனங்களை நாம் சுவாசிக்க நம்மால் மண் வாசனையை உணர முடிகின்றது. இதன் காரணமாகத்தான் வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் பொழுது இவ்வாசம் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பொழுது இவ்வாசனை அதிகம் இருப்பதில்லை. இவ்வகை பாக்டீரியாக்கள் உலகெங்கும் பரவி இருப்பதால் நம்மால் எங்கு மழை பெய்தாலும் இவ்வாசனையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த பாக்டீரியாக்கள் தவிர வேறு மண் வாசத்திற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. பொதுவாகவே மழைநீர், அதுவும் முக்கியமாக நகர்ப்புறங்களில், அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட மழைநீர் மண்ணில் விழும் பொழுது மண்ணில் கலந்திருக்கும் ரசாயனங்களுடன் கலப்பதால் ஏற்படும் வேதி வினை காரணமாகவும் சில வகை வாசனை வெளிவருகின்றன. இது மண்ணில் இருக்கக்கூடும் கனிமங்கள், மேலே படர்ந்திருக்கும் வாகனப் புகை மூலமாக வந்த பெட்ரோலிய ரசாயனங்கள் என பலவற்றோடு சேரும் பொழுது ஒரு வித நொடி பரவுகிறது. இது முதலில் குறிப்பிட்ட மண் வாசனையை போலன்றி முகர்பவர்களுக்கு அவ்வளவு பிடித்தமாய் இருப்பதில்லை. இவ்வகை நெடியும் முதலில் பெய்யும் மழையின் பொழுதே வருகின்றது. ஏனென்றால் முதல் மழையிலேயே இந்த வேதிவினைகள் நிகழ்ந்து விடுவதால் தொடர்ந்து பெய்யும் மழையில் தொடர்ந்து வேதிவினைகள் நிகழ்வதும் இல்லை. அதனால் அந்நெடியும் எழுவதில்லை.

மூன்றாவதாக ஒரு காரணி சொல்லலாம் என்றால் அது மழை பெய்யும் இடத்தில் வளரும் தாவரங்கள்தான். இத்தாவரங்களில் இருந்து வெளியேறும் நறுமண எண்ணைகள் (பூக்களின் வழியாக, கிளைகள் உடைக்கப்படும் பொழுது என பல வகைகளில் இந்த தாவர எண்ணைகள் காற்றில் கலக்கப்படுகின்றன.) காற்றினில் கலந்து பின் அங்கு இருக்கும் பாறைகள் போன்றவற்றில் சேர்கின்றன. இப்பாறைகள் மீது மழைநீர் படும் பொழுது, இந்த எண்ணெய்கள் அத்தண்ணீரில் கலந்து அதன் மூலமும் இந்நறுமணங்கள் கமழ கூடிய வாய்ப்புகள் வருகின்றன. முதலில் கூறிய நுண்ணுயிரிகள் மூலம் வரும் மணம் போன்று இதுவும் இனிதான மணமாகவே இருக்கும்.

இவை மட்டும்தான் என இல்லாது இது போன்று வேறு காரணிகள் பல இருந்தாலும் பிரதானமாய் இவற்றைக் கூறலாம். இப்படி பல வாசங்களை கலவை இருப்பதால்தான் ஒவ்வொரு இடத்திலும் இந்த வாசனை வேறுபடுகிறது. ஆனால் இந்த காரணங்களினால்தான் காய்ந்த நிலத்தில் விழும் மழையினால் ஏற்படும் வாசம் அதிகமாக இருக்கிறது. மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்தை உணர முடிகிறது அல்லவா?

20 comments:

said...

அட டிஸ்கி போட மறந்துட்டேனே. படங்கள் இணையத்தில் சுட்டவை.

said...

என்னப்பா மண்வாசனை ஒரே தூக்கலா இருக்கு.

நல்ல பதிவு. ஆனா கிராமத்துக்குப்போகணும். நகரத்தில் தார் வாசனை(-:

said...

மழைன்னா ஜெயம் "ரவி"யும், தமிழ் கலாச்சாரத்தோட இருக்கிற ஷ்ரேயாவும் நடிச்சது. மண்வாசனைன்னா பாண்டியன், ரேவதி நடிச்சது. இது தலைகீழ் விகிதம்ன்னு எங்க "தலை"(கீழ்) வவ்வால் சொன்ன தத்துவத்தின் அடிப்படை.

Btw, வழக்கம் போல நல்லாவே இருக்கு. டேங்கஸ் ஃபார் தி இன்பர்மேஷன்

said...

டீச்சர், என்ன மாதிரி கிராமத்துக்கு வாங்க, (நகரம் மாதிரி இருக்கிற கிராமம்). போன வாரம் கூட நல்லா வாசனை புடிச்சேன். அதனால ஒரு வாரம் மாத்திரையை வயித்துக்குள்ள புடிக்க வேண்டியதாய் போயிருச்சு(பெரிய ஷ்ரேயான்னு நினைப்பு அப்படின்னு யார்யா கேக்குறது?)

said...

நல்ல விளக்கம்! மண்வாசனை தூக்கலா இருக்கு இது தானா காரணம்!
பாலைவனங்களில் எல்லாம் எப்படி மண் வாசனை வருமோ? மழையும் அதிகம் பெய்யாது.

ஹூம்....நம் கிராமத்து மழையும் மண்ணும் போல வருமா?

said...

பாக்டீரியாதான் காரணம்-ன்னு படித்திருக்கிறேன், இப்போத்தான் அதுன் பெயர், விலாசமெல்லாம் தெரிஞ்சுது :-)

...நன்றி இ.கொ.

said...

எப்படியோங்க... மழை பெய்யும் போது வரும் மண் வாசனை தனி சுகம்...

said...

நகரத்தில் தார் வாசனை(-://

தூசி வாசனைன்னு சொன்னா இன்னும் பொருத்தமாருக்கும்.

தஞ்சாவூருக்கப்புறம் இந்த மண்வாசனை மறந்தே போச்சி:(

said...

இ.கொ,

நீங்க கொஞ்சம் லேட் , ஆனா லேட்டஸ்ட் ஆ போட்டு இருக்கிங்க , நான் அந்த காலத்திலேயே( சும்ம ஒரு ரெண்டு மாசம் முன்ன தான்) மண்வாசனைப்பற்றி போட்டாச்சு!

இங்கே பாருங்க: http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_14.html

ஆனா அது ஒரு பதிவில இடைல சும்மா போற போக்குல இதையும் சேர்த்து இருப்பேன்.

மழை நீரில் ரசயணம் கலந்து அதனால் மண்ணுடன் வினைப்புரிந்து வருவது மண்வாசனைனு சொல்றிங்களே , அது இயல்பானது அல்ல, ஆனா அப்படி எல்லா நகரத்திலும் வாசனை வர மாட்டென்குது!குறிப்பா சென்னைல மழை பெஞ்சதும் சாக்கடை நாத்தம் தான் வருது! :-))

இளா,
//இது தலைகீழ் விகிதம்ன்னு எங்க "தலை"(கீழ்) வவ்வால் சொன்ன தத்துவத்தின் அடிப்படை.//

ஒருத்தன நிம்மதியா தத்துவம் சொல்ல விட மாட்டிங்களே :-))

said...

//நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள் புனைந்த அந்த வாசனை //

அந்த வாசனையை முகர்ந்த அனுபவம் கிட்டியது. வாழ்த்துக்கள்.

said...

//என்னப்பா மண்வாசனை ஒரே தூக்கலா இருக்கு.//

வெண்பா பதிவில் பூவாசம் தூக்கலா இருந்துங்க. அதான் இங்க மண்வாசம்.

//நல்ல பதிவு. ஆனா கிராமத்துக்குப்போகணும். நகரத்தில் தார் வாசனை(-://

ஆமாம், வீடு கட்டினால் கூட இருக்கிற மண்ணை எல்லாம் கான்க்ரீட் போட்டு மூடறோம். அப்புறம் எங்க இருந்து மண் வாசனை! (அட, நீங்க வீடு கட்டறதைப் பத்தி சொல்லலைங்க!)

said...

பதிவுக்கு மிக்க நன்றி இ.கொ.

மழை பெய்யும் போது மண்வாசனையை அனுபவித்திருக்கிறேன். ஆனால் அதன் பின்னால் இருந்த காரணத்தை அறிந்திலேன். இன்று உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

said...

//மழைன்னா ஜெயம் "ரவி"யும், தமிழ் கலாச்சாரத்தோட இருக்கிற ஷ்ரேயாவும் நடிச்சது. மண்வாசனைன்னா பாண்டியன், ரேவதி நடிச்சது. இது தலைகீழ் விகிதம்ன்னு எங்க "தலை"(கீழ்) வவ்வால் சொன்ன தத்துவத்தின் அடிப்படை.//

நல்லாயிருங்கடே!! :))

said...

//பாலைவனங்களில் எல்லாம் எப்படி மண் வாசனை வருமோ? மழையும் அதிகம் பெய்யாது.//

அங்க இப்படித்தான் வாசம் வருமுன்னு நினைக்கிறேன். அமீரக நண்பர்கள் யாராவதுதான் பதில் சொல்லணும்.

//ஹூம்....நம் கிராமத்து மழையும் மண்ணும் போல வருமா?//

அவங்க அவங்க கிராமம் அவங்க அவங்களுக்கு.

said...

அப்ப, மண்வாசனைதான் மழைவாசனைன்னு சொல்றீங்க1
சர்த்தானே கொத்ஸ்!

"தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது"ன்னு அம்புலிமாமாவில படிக்கறப்ப நம்ப முடியலை.

இப்ப நீங்க பதியறதைப் பாக்கறப்ப அதெல்லாம் உண்மைதான்னு நம்பமுடியுது.

நல்ல இருங்க சாமி!

said...

//மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்தை உணர முடிகிறது அல்லவா?//

ஆமாம்... ஆமாம்....

கூடவே தேநீரும், பஜ்ஜியும் :)

நல்ல தகவல்கள்...

said...

மழை நல்லா இருக்கு. வாசனையும் நல்லா இருக்கு.
ஏன் வாசனையா இருக்குன்னு யோசிக்கும்நேரம்

வாசனையை விட்டுவிட விருப்பம் இல்லை.:)))

said...

மண் வாசனையின் காரணத்தை அறிந்து கொண்டேன். நன்றி கொத்ஸ்.

said...

மண்வாசனைக்குக் காரணம் இத்தனை 'பாரதிராஜா'க்களா? அப்டின்னு நாலஞ்சு நாளைக்கு முன்னாலேயே ஒரு பின்னூட்டம் போட்டேனே .. என்ன ஆச்சு?

said...

ஜோசப் சார் சொல்றதையும் ஒத்துக்கிறத்தான் வேண்டியிருக்கு.

இங்க நெதர்லாந்துல ஆவூன்னா மழை பெய்யுது. ஆனா ஒரு வாடையும் கெளம்பலை. தெனமும் மழை பேஞ்சா என்னத்தக் கெளப்புறது? அவனவன் இங்க புட்டியத்தான் கெளப்புறான்.