Monday, January 29, 2007

வயித்தெரிச்சல் ஏனில்லை?

'சிறுகுடல பெருங்குடல் சாப்பிடுதுடா'ன்னு பசி வரும் நேரம் நாம் சொல்லக் கேட்டிருப்போம், சொல்லியுமிருப்போம். பல்வகை உணவுகளை செரித்துவிடும் தன்மை கொன்ட வயிறு தன்னைத் தானே செரித்துக்கொள்வதில்லை ஏன்? ஓகையின் கேள்விக்கான பதில் இங்கே.

இக்கேள்விக்கு மருத்துவமே திட்டவட்டமாக இன்னும் பதில் சொன்னபாடில்லை. கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்குமென்று ஒரு பதில் இருக்கிறது. அதை சொல்லிவிடுகிறேன். ஏகப்பட்ட புதுப்பெயர்கள் வருவதனால் குழப்பமாய் இருப்பதுபோல் தோன்றலாம். உண்மையில் மிகவும் எளிமையான லாஜிக் தான்.

நம் வயிறு ஒரு டிரான்ஸிட் பாயிண்ட் மாதிரி. உணவுக்குழாயிலிருந்து வரும் உணவை செரிப்பது மட்டுமில்லாமல் அதை மேலும் propel செய்துவிடுவதும் வயிற்றின் வேலைதான். நம் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் hydrochloric acid. மிகவும் வீரியமான அமிலம் இது. pH சுமார் 0.8. இவ்வமிலம் தினந்தோறும் நம் வயிற்றினுள் சுரக்கப்பட்டு செரிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தானே. சூட்சுமம் வயிற்றின் அமைப்பில் உள்ளது.

க்ராஸ் செக்ஷனில் மூன்று முக்கியமான லேயர்கள் இருக்கின்றது வயிற்றில்.
1. serosa - வெளிப்புறத்தில் இருப்பது

2. muscular - உள்ளே இருக்கும் உணவை சிறுகுடலுக்கு தள்ள உதவுவது இந்த லேயரின் contraction தான்

3. mucosa - இதுதான் உட்புறமாய் இருக்கும் கடைசி லேயர். மிகவும் முக்கியமானதும்கூட.

இதில் இரண்டு விதமான சுரப்பிகள் இருக்கின்றன.

1. oxyntic
2. pyloric

இதில் ஆக்ஸிண்டிக் சுரப்பிகள் சுரப்பது
1) ஹைட்ரோக்ளோரிக் அமிலம்
2) பெப்ஸினோஜன் என்ற வஸ்து - புரதங்களின் செரிமானத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது இதன் பை ப்ராடக்டான பெப்ஸின்
3) intrinsic factor - வைட்டமின் B12 absorptionஉக்கு மிகவும் அவசியமானது
4) கொஞ்சமாய் ம்யூகஸ் (mucus)

பைலோரிக் சுரப்பிகள் சுரப்பது
1) காஸ்ட்ரின் (Gastrin)
2) mucus

இந்த இரண்டு சுரப்பிகளைத் தவிர வயிற்றின் உட்புறம் முழுவதும் ஏகப்பட்டதுக்கு இடைவெளியே இல்லாமல் இருப்பது surface mucosal cells. தண்ணீரிலும் அமிலத்திலும் கரையாத கெட்டியான mucus எனும் வஸ்துவை சுரக்கின்றன. தமிழில் எனக்குத்தெரியவில்லை, viscous என்று சொல்வார்களே. அந்த பதத்தில், கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டர் கனத்திற்கு இந்த ம்யூகஸ் இருக்கும். இந்த ம்யூகஸில் இருக்கும் முக்கியமான பொருள் bicarbonate. இது அல்கலி alkali ஆகும்.

அல்கலியும் அமிலமும் சேர்ந்தால் என்னாகும் என்று நான் சொல்லவேண்டியதில்லையே? இந்த அல்கலியின் உதவியால்தான் இத்தனை அமிலமிருந்தும் நம் வயிறின் உட்பகுதி செரிக்கப்படாமல் இருக்கின்றது.

மேலும் அதிகமாக சுரக்கவைக்கவோ அல்லது தேவைக்கதிகமாக சுரக்காமல் இருக்கவோ positive மற்றும் negative feedback mechanism இருக்கின்றன. மேற்சொன்ன gastrin மட்டுமல்லாமல் இன்னும் acetylcholine, histamine போன்றவையும் பயன்படுகின்றன.

இந்த ம்யூகஸ் பாதுகாப்பு ஒன்றும் அசைக்கமுடியாத கோட்டையில்லை. சிலருக்கு இயற்கையிலேயோ அல்லது வாழ்க்கைமுறைக்கு தகுந்தவாறோ அமிலச்சுரப்பிகள் அபரிதமாக வேலை செய்யலாம் இல்லையெறால் இந்த ம்யூகஸ் லேயரின் தயாரிப்பிலோ sustenanceஇலோ குறைபாடு இருக்கலாம். இன்னும் அபூர்வமாக பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படலாம். அப்படி இருந்தால் அது அல்சரில் கொண்டுபோய் விடும். அல்சர் என்பது நம் அமிலமே நம் வயிற்றை செரிப்பதுபோன்றதுதான்.

இதுதான் மேட்டர்
நன்றி: Howstuffworks.com,
படத்திற்கு இத்தளம்
எழுதியது: சிறில் அலெக்ஸ்; கொஞ்சமாய் திருத்தியது இராமநாதன்

17 comments:

said...

ஆக மொத்தம் ம்யூகஸ் என்ற ஒரு தடுப்புச்சுவர் இருப்பதால்தான் நம் வயிற்றில் சுரக்கும் அமிலமானது நம் வயிற்றை செரிப்பதில்லை.

இந்த தடுப்புச் சுவற்றில் துளைகள் விழும் பொழுது அதன் வழியாகச் செல்லும் அமிலம் நம் வயிற்றின் சுவர்களில் ஓட்டை போட்டு விடுகிறது, அதுதான் அல்சர். இல்லையா?

வயிற்றின் சுவர்கள் எவ்வளவு தடிமனாக இருக்கும்? வயிற்றின் கொள்ளளவு எவ்வளவு? கொஞ்சம் சொல்லுங்களேன்.

said...

//வீரியமான அமிலம் இது. pH சுமார் 0.8. // - ?

//அல்சர் என்பது நம் அமிலமே நம் வயிற்றை செரிப்பதுபோன்றதுதான்..//
இதற்கு மேலே நீங்களே சொன்னது போல், அல்சர் என்பது bacterial infection-ஆல் வருவது என்பது இப்போதைய மருத்துவ முடிவு என்று நினைக்கின்றேன்.

said...

ஆகக் கூடி எல்லோரும் சைண்டாக் கைவசம் வைத்துக்
கொள்ளணும்.
புகையிலை வெற்றிலை ,காஃபி
போட்டுக் கொண்டு பட்டினி கிடப்பவர்கள் பாடு
திண்டாட்டம் தான்.

said...

வயித்துக்குள்ளே இவ்வளோ விஷயம் இருக்கா????

said...

//வயித்துக்குள்ளே இவ்வளோ விஷயம் இருக்கா???? //
இருந்தும் பசிக்குதே... :)

அருமையாக மேம்படுத்தியிருக்கிறீர்கள்.

நன்றி.

said...

கொத்ஸ்,
கிட்டத்தட்ட சரி. :)

வயிற்றின் கொள்ளளவு சுமார் 0.9-1.5 லி. தேவைப்பட்டால் நாலு நாலரை லிட்டர் வரை பிடிக்கும்.

உணவின் availability2-ஐ பொருத்து உற்பத்தி ஆவதால் வயிற்றில் இருக்கும் ம்யூகஸின் அளவை குறிப்பிட்டு சொல்ல இயலாது.

said...

பெரீய்யப்பா,
நான் பதிவிலேயே //பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படலாம். // என்று சொன்னபடி Helicobacter pylori வகை பாக்டிரீயாக்கள் அல்சர் வரக் காரணமாக இருக்கலாம். எப்படி யென்றால்...

இப்போதைக்கு - அவை அம்மோனியா போன்றவற்றைச சுரப்பதால் ம்யூகஸ் சுரப்பிகள் சுருங்கிப்போகின்ற காரணத்தால் அமிலம் வயிற்றின் சுவர்களை அரிக்கிறது - என்று hypothesis இருக்கிறது.

said...

வல்லிசிம்ஹன்,
உண்மைதான். மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தவிர நாமே விரும்பி உட்கொள்ளும் விஷங்கள் பலதுடன்
முற்றிலுமாக விட்டுவிட முடியாத ஜென்ம சம்பந்தங்கள் வேறு. எவ்வளவுக்கெவ்வளவு குறைத்துக்கொள்ளலாமோ கொள்ளலாமே.

நன்றி.

said...

இராம்,
இந்த ஒரு டாபிக்கையே இழுத்து இழுத்து பத்துபதிவா கூட போடலாம். அவ்வளவு மேட்டர் இன்னும் இருக்கு. :)))

உயிர்களைப்போல அதிசயம் உண்டா என்ன பூலோகத்தில்? அதிலும் மனிதன் அதிசயத்திலும் அதிசயம்தான்.

said...

சிறில் அலெக்ஸ்,
உங்களுக்கும் மிக்க நன்றி.

said...

The human stomach is a muscular, elastic, pear-shaped bag, lying crosswise in the abdominal cavity beneath the diaphragm. It changes size and shape according to is position of the body and the amount of food inside. The stomach is about 12 inches (30.5 cm) long and is 6 inches. (15.2 cm) wide at its widest point. Its capacity is about 1 qt (0.94 liters) in an adult.

said...

நண்பர் இரவி எழுதிக் கொள்வது -

எண்சாண் உடலுக்கு வயிறே பிரதானம். ஏன் என்று இப்பொழுதுதான் புரிகிறது.

said...

எஸ்.கே,
நன்றி.

said...

மிக்க நன்றி இரவி.

said...

தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு நல்ல தகவல். நன்றி விக்கிபசங்களா...

said...

நன்றி குமரன்

said...

ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏல்என்றால் ஏலாய் - ஒருநாளு்ம்
என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது...

ஆகா...இந்தப் பின்னூட்டம் வெண்பாப் பதிவில் போட்டிருக்கலாமே!

நல்ல தகவல்கள்! நன்றி சிறில், இராமநாதன், கொத்ஸ்!