Wednesday, January 03, 2007

ரோடு ரோலர் ஏன் பெரிசா இருக்கு? (03 Jan 2006)

நாமக்கல் சிபியின் கேள்வி:

ரோடு ரோலர்கள் இன்னும் அளவில் பெரியதாகவே இருப்பது ஏன்?

அதன் வடிவமைப்பை மாற்றியமைக்க யாரும் முன்வரவில்லையா? முயற்சி செய்யவில்லையா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா?
பதில்:

ரோடு ரோலர்கள் (அல்லது காம்பாக்டர்கள்) பல வகைகளிலும் அளவுகளிலும் இருக்கின்றன. எல்லாச் சாலைகளும் ஒன்று போலவா இருக்கிறது? (மழைக்காலச் சென்னையைப் பார்த்துவிட்டு ஆமாம் என்று சொல்லாதீர்கள்:-))

ஒரு பெரிய சாலை (தங்க நாற்கரம் போல, ஆட்டோபான் போல) போடுவதன் தொழில்நுட்பமும், கிராமத்துச் சந்தை சீரமைப்பதற்கான தொழில்நுட்பமும் சாலைப்பொறியியலின் வெவ்வேறு எல்லைகளில் இருந்தாலும், ஆதாரமான செயல்பாடுகள் ஒன்றேதான்.

முதலில் சாலையின் தரையை சமனப்படுத்துதல் - இதற்கு புல்டோஸர் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புல்டோஸர்

பிறகு தரையின் கடினத்தன்மையை அதிகப்படுத்தவேண்டும். இதற்கு காம்பாக்டர்கள் உபயோகப்படும். உருளை போன்ற சக்கரங்கள் இல்லாமல் பல்சக்கரம் போல இருப்பதைக் கவனியுங்கள் - இது தரையின்மேல் அழுத்தத்தை அதிகப்படுத்தி, பலமாக்கும்.

காம்பாக்டர்

இயற்கையாகவே நிலம் கடினமானதாக இல்லையென்றால், ஜல்லிக்கற்கள் கொண்டு கடினப்படுத்தப்படும்.

பின்னர் சாலையின் மேம்போக்காக உள்ள கற்கள் சுத்தப்படுத்தப்பட்டு சாலை சீராக்கப்படும் - மோட்டார் கிரேடர்கள் உதவியோடு.

மோட்டார் கிரேடர்

பிறகு தார் - ஆஸ்பால்ட், கான்கிரீட் கலவை சாலையில் கொட்டப்படும் - பேவர்கள் உதவியோடு.

பேவர்

பிறகுதான் ரோலர்கள் கொண்டு சாலை சமனப்படுத்தப்படும்.

ரோடு ரோலர்

ரோலர்களின் வரலாறு பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பாய்ந்தாலும், கையால் இழுக்கப்பட்ட உருளைகள், குதிரைகளால் இழுக்கப்பட்ட உருளைகள் என்ற பரிணாம வளர்ச்சிகளை ஒதுக்கினால் ஸ்டீம் எஞ்சினால் ஓட்டப்பட்ட முதல் ரோலர் இப்படித்தான் இருந்தது.

ஆதி காலம்

காலப்போக்கில் மருவி..

முன்னேற்றம் 1

இப்படி ஆகி

முன்னேற்றம் 2

இப்படியும் ஆகி

முன்னேற்றம் 3

இருக்கிறது.

ரோடு ரோலரின் அளவு, சாலையின் அளவைப்பொறுத்ததே அல்லவா? கிரிக்கெட் பிட்சை சமனப்படுத்தவே ஒரு ஆள் இழுக்கும் அளவிலிருந்து பத்து ஆள் இழுக்கும் அளவு வரை வேறுபடுகிறது.

வெளிப்புறத் தோற்றத்தில், உருளைகளின் அளவு காரணமாக பெரிதும் மாற்றம் இல்லாவிட்டாலும், இயங்கும் விதத்தில் - பவர் ஸ்டியரிங்குகள், எலக்ட்ரோ-ஹைட்ராலிக் இயக்கங்கள், கம்ப்யூட்டரால் கண்காணிக்கப்படும் எஞ்சின், கியர்பாக்ஸுகள் என்று உள்ளே பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நாளை, GPS உடன் இணைந்து ஆளில்லாமல் இயங்கவைக்கத் தேவையான அளவு தொழில்நுட்பம் இன்றே தயார்நிலையில் இருக்கின்றது.

எதோ, இதிலும் ஆராய்ச்சி, முன்னேற்றம் என்று கேடர்பில்லர், பிட்டெல்லி, போமாக், கேஸ், டெரக்ஸ் போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறதோ, சுரேஷ் போன்றவர்கள் அந்த முன்னேற்றங்களை வகுப்பில் எடுத்து இயம்புவதன் மூலம் அவர்கள் வீட்டிலும் அடுப்பு எரிகிறது!

படங்கள் உதவி - விக்கிபீடியா.

பி கு: சாலைத் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் பதிவர்கள் மேலதிகத் தகவல்களைச் சொன்னால் மகிழ்வோம்

24 comments:

said...

ரோடு ரோலர் ஓட்ட லைசன்ஸ் (இந்தியாவில்) தேவையில்லையாமே! உண்மையா?

- சிமுலேஷன்

said...

ஒரு கோடு போடச் சொன்னா ஒரு ரோடே போட்டுட்டீங்களே.... :))

said...

சாலையில் "ஓடாத" வண்டிகளுக்கு HEMM (Heavy Earthmoving Machinery) licence - என்று ஒன்று எடுக்கவேண்டும் - நியாயப்படி.

ஆனால், நானும் இதெல்லாம் எடுக்காமலே ரொம்ப நாள் ஓட்டிவிட்டேன், எனக்குத் தெரிந்த பல தொழில்முறை ஆபரேட்டர்களிடமும் இந்த லைசன்ஸ் இல்லை என்பது நிஜம்தான்.

தேவையில்லை என்பது தவறு, இருப்பதில்லை என்பது பெரும்பாலும் உண்மை:-))

said...

நன்றி கொத்ஸ்!

said...

ஸ்டீம் எஞ்சினால் ஓட்டப்பட்ட முதல் ரோலர் இப்படித்தான் இருந்தது. - என்று ஒரு படம் போட்டுருக்கீங்களே, அதத்தான் நாங்க பாத்துருக்கோம்; மிச்ச மீதி அந்த சின்னச் சின்ன வண்டிகள் எல்லாம் எந்த ஊர்ல இருக்கு - இந்தியாவில?

said...

"சுரேஷ் போன்றவர்கள் அந்த முன்னேற்றங்களை வகுப்பில் எடுத்து இயம்புவதன் மூலம் அவர்கள் வீட்டிலும் அடுப்பு எரிகிறது!"

அதே போல சமீபத்தில் 1983-ல் Eder என்ற ஜெர்மானிய மண் தோண்டும் கருவியையும் அதன் போட்டியான Poclain என்னும் பிரெஞ்சு கருவியையும் ஒப்பிட்டு நடந்த ஒரு ஆராய்ச்சியை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து டோண்டு ராகவனும் காசு பார்த்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

தருமி,

எல்லா வண்டியுமே இந்தியாவிலும் இருக்கு. தங்க நாற்கரத்துக்கு எங்க கம்பெனி சார்பாவே நூத்துக்கணக்குலே வித்தோம், போட்டிக்கம்பெனிங்க வேற!

ஆனா, பொதுவா, ஊருக்குள்ளே போடற ரோடுங்க முனிசிபாலிட்டி, கார்ப்பரேஷனுக்குச் சொந்தமா பிரிட்டிஷ் காலத்துலே வாங்கின வண்டிய வச்சே போட்டுருவாங்க!

said...

சமீபத்தில் 1983-ல் ரொம்ப லோ டெக்னாலஜி ஆச்சே.. ரொம்ப சுலபமா மொழிபெயர்த்துட்டு இருப்பீங்க;-))

இப்ப எல்லாத்துலேயும் இந்த கம்ப்யூட்டர் புகுந்துகிட்டு பண்ற தொல்லை தாங்க முடியலே!

said...

படங்களுடன் நல்ல தகவல்கள் சுரேஷ். நன்றிகள்.

பெனாத்திக்கிட்டு இருக்கிறவர் விவரமான ஆளுதான்னு உங்களோட இன்னொரு பரிமாணத்தைப் பார்த்துட்டேன் இப்ப. :-)

said...

நன்றி குமரன்.

ஏகதேசம் பினாத்திகிட்டேவும் இருக்க முடியாதில்லையா?;-))

said...

நல்ல கேள்வி
நல்ல பதில்
நல்ல பதிவு

ரோடு ரோலர் ஏன் மெதுவாகவே போகிறது?

அதன் வேகம் மற்றவாகனங்கள் போல் இருக்காதா?

said...

நல்ல பயனுள்ள பதிவு பெனாத்தலார்.

ஆனால் நம்ம ஊர் மாடல் இங்க படங்கள்ல காணோமே..

said...

"இப்ப எல்லாத்துலேயும் இந்த கம்ப்யூட்டர் புகுந்துகிட்டு பண்ற தொல்லை தாங்க முடியலே!"
அது என்னவோ உண்மைதான். நேற்றுகூட வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு போய் ஆன்லைன் பிரெஞ்சு ஆங்கில மொழிபெயர்ப்பு நடந்தது. A0 சைஸ் வரைபடம் கணினி திரையில் காட்டியிருந்தனர். (Vis mockup) ஒரு பூதக் கண்ணாடி ஐக்கான் போட்ட கருவியால் தேவையான இடத்தை சுற்றி பெரிதாக்கி மென் பொருள் உதவியோடு நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பை பிரெஞ்சு வாக்கியம் பக்கத்திலேயே தட்டச்சு செய்ய வேண்டும். மொத்தம் இரண்டு நாள் டிரில் வாங்கியது வேலை. ஆனாக்க செம துட்டு தராங்களே, பின்ன என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

யோவ் சுரேசு, 2007ஆம் வருசம் வந்திருச்சாமில்ல. நீர் என்னமோ 2006லயே இருக்கீரு. பாக்கற மக்கள்ஸ் எல்லாம் நமட்டு சிரிப்பு சிரிக்காங்கல்ல. கொஞ்சம் சாக்கிரதையா இருவே....

said...

//அது என்னவோ உண்மைதான். நேற்றுகூட வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு போய் ஆன்லைன் பிரெஞ்சு ஆங்கில மொழிபெயர்ப்பு நடந்தது. A0 சைஸ் வரைபடம் கணினி திரையில் காட்டியிருந்தனர். (Vis mockup) ஒரு பூதக் கண்ணாடி ஐக்கான் போட்ட கருவியால் தேவையான இடத்தை சுற்றி பெரிதாக்கி மென் பொருள் உதவியோடு நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பை பிரெஞ்சு வாக்கியம் பக்கத்திலேயே தட்டச்சு செய்ய வேண்டும். மொத்தம் இரண்டு நாள் டிரில் வாங்கியது வேலை. ஆனாக்க செம துட்டு தராங்களே, பின்ன என்ன?//
ஆனா இப்போ நெட்டுல இலவசமா translate பண்ணலாமே?..

said...

பயனுள்ள பதிவு. படங்களுடன் விளக்கியுள்ள விதம் அருமை. இந்த விஷயத்துல நான் வேல்யூ ஆட் பண்ணக் கூடிய ஒரு தகவல் "தார் ரோடு" பத்துனது. தார் ரோடுன்னு சொல்றது தப்பாம். பிட்டுமென் ரோடு(Bitumen layered road) அப்படிங்கிறது தான் சரியாம். ஹைவே இஞ்சினியரிங்ல எங்க மாஸ்டர் சொல்லிக் குடுத்தது.
:)

said...

"ஆனா இப்போ நெட்டுல இலவசமா translate பண்ணலாமே?.."
ஆமா பண்ணுமே, ஆனா என்ன, Out of sight, out of mind" மாதிரி வாக்கியங்களை invisible idiot ங்கற ரேஞ்சில் மொழி பெயர்க்கும், பரவாயில்லையா?

"என்னம்மா கண்ணு சௌக்கியமா என்பதை" what mother eye, how are you ன்னு கூட மொழி பெயர்க்கலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

இது என்னோட அனுமானம்.
முதலில் இந்த பிட்டுமன் எனப்படுகிற தார் மற்றும் ஜல்லி கொஞ்சம் மணல் சேர்க்கப்பட்ட கலவையானது ரோடு போடும் இடத்துக்கு வரும் போது குறைந்த பட்சம் 140 டிகிரி C இருக்க வேண்டும்.இது தரக்கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்று.
இந்த பிட்டுமனை சமப்படுத்து இயந்திரம் போன பிறகு 15~45 நிமிடங்களுக்குள் சிறிய மற்றும் பெரிய இயந்திரங்களால் ஓட்டிவிடவேண்டும்.அப்போது தான் சரியாக கீழே இருக்கும் ஜல்லி மற்றும் பேஸ் கோர்ஸ் எனப்படும் லேயரில் சரியாக பிடிக்கும்.
சிறிய இயந்திரமாக இருந்தால் அவ்வளவு பெரிய பரப்பளவை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க முடியாது.
நேரம் மற்றும் இயந்திரத்திம் எடை முதலியவற்றை மனதில் வைத்து இதை இந்த அளவில் வைத்திருக்கவேண்டும்.
உபரிக்குறிப்பு: இப்படி இந்த இயந்திரத்தை ஓட்டிய பிறகு 45 நிமிடத்திலேயே வண்டி ஓட அனுமதிக்கலாம்.(பொதுவாக வெளிநாடுகளில்)

said...

நன்றி மதுமிதா.

ராமநாதன், சிட்டிக்குள்ளே தேடினா கிடைக்காது. அத்துவானக்காட்டுலே தேடுனா இந்த மெஷினும் தெரியும், பின்னாடியே பினாத்தல் மாதிரி பாவப்பட்ட ஜீவன்களும் தெரியும்;-((

said...

டோண்டு, உங்களுக்காச்சும் நல்ல துட்டு தராங்களே;-((

இலவசம், நாங்க நன்றி விசுவாசம் மறக்காதவங்க! சிலசமயம் ஜூன் வரைக்குமே போன வருஷம் போடுவேன், இப்ப 4 நாள்தானே ஆயிருக்கு?;-)) சரி சரி, நாளைக்கு திருத்தி, ஒரு முன்னூட்டக்கயமை பண்ணிடலாம்;-))

said...

நாடோடி, வருகைக்கு நன்றி, டோண்டு பதில் சொல்லிட்டாரு போல!

கைப்ஸ், தார்னு சொல்றது தப்புதான். பிட்டுமென் தான் சரி. இப்போ கான்கிரீட் போடற மாதிரியே பிட்டுமென்னையும் கான்கிரீட்டையும் கலந்து கொட்டி காம்பாக்ட் பண்ணிடறாங்க. வீட்டு வாசல்லே ஒரு ரோடு போடறாங்க, அங்கே கிடைக்கிற ஞானம்தான்:-))

வடுவூர் குமார், உங்களையும் எதிர்பார்த்தேன். நன்றி. பிட்டுமென் தடிமன் அதிகமா இருந்தா ரோடு ஸ்மூத்தா இருக்கும், லைப் இருக்காது. காம்பாக்ஷன்லே அதிக கவனம் செலுத்தி பிட்டுமென் தடிமனை ரொம்பக் கம்மி பண்ணிடறாங்க, 45 நிமிஷத்துலே ரேடி!

said...

நண்பர் ரவி சொன்னது

பயனுள்ள பதிவு. விக்கி பசங்க நல்லாவே ரோடு போடறீங்களே!!!

said...

என்னோட கேள்விக்கு(ம்) பதில் சொல்லி என்னோட ரொம்ப நாள் சந்தேகத்தைத் தீர்த்து வெச்சீங்க! அதுக்கொரு நன்றி!

அப்படியே இன்னொரு சந்தேகம்!
இந்த ரோடு போட்டு முடிஞ்சவுடனே வேற டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க வந்து ரோட்டை நோண்டுறாங்களே! அதுக்கு ஏதாச்சும் விஸேஷமான காரணம் உண்டா?

said...

நாமக்கல் சிபி கேட்ட கேள்விக்கு காரணம் இருக்கு..
திரும்ப ரோடு போடனுமில்ல!!