
ரோமன் செய்ததை நானும் செய்வேன்!
பண்டைய ரோமானியர்களின் சாலையில் வாகனங்கள் இடதுபுறம் தான் சென்றன என்று ஒரு ரோமானிய குவாரிக்கு செல்லும் சாலையில் இருந்த தடங்களிலிருந்து கண்டுபிடித்துள்ளார்கள். அதற்குப்பின்னர் பிரிட்டனில் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அதாவது Middle Ages இல் குதிரையில் செல்வதோ நடப்பதோ சாலையின் இடதுபுறத்தில் தான். இதற்கு மிகவும் ப்ராக்டிக்கலான காரணம் ஒன்று சொல்கிறார்கள். நம்மைப்போலவே அப்போதும் பெரும்பாலனவர்கள் வலதுகை பழக்கத்தை உடையவர்களே. கத்தி பிடிக்கும் கை வலதுகை. மிகவும் ஆபத்தான, சட்டம் ஒழுங்கற்ற காலமாயிருந்த மிடில் ஏஜஸில் நாம் சாலையில் செல்கையில் எதிரில் வருபவர் எதிரியாக இருந்து திடிரென தாக்கினால், சட்டென்று தற்காப்புக்காக இடுப்பிலிருக்கும் கத்தியை வலதுகையால் தானே உருவ முடியும் அல்லவா? கேட்பதற்கு சற்று காமெடியாக இருந்தாலும் இது உண்மையாக இருக்கலாமென்றே எனக்குத்தோன்றுகிறது.
சட்டம் ஒரு இருட்டறை:
1300ல் முதன்முதலில் போப்பாண்டவர் சாலையில் இடதுபுறமாகத்தான் செல்லவேண்டுமென்று டிக்ரி ஒன்று அறிவித்ததாக சொல்லப்படுகின்றது. எப்படியோ 1756 ஆம் ஆண்டில் தான் அதிகாரப்பூர்வமாக லண்டன் பாலத்தின் மேலுள்ள சாலையின் இடதுபுறம் தான் செல்லவேண்டுமென்று சட்டம்

என் வழி தனி வழி:
வலதுபக்கம் 3.5 பில்லியன் செல்கின்றனரே? அதற்கும் ஒரு விந்தையான காரணம் இருக்கிறது. 1700-கள் அமெரிக்காவில் பண்ணைகளிலிருந்து வந்த சோளம், கோதுமை போன்றவற்றை பிரம்மாண்டமான wagon களில் ஏற்றி போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பெரிய வண்டிகளை ஆறேழு குதிரைகள் இழுத்தன. ஓட்டுநருக்கென்று தனியே கேபின் இல்லாததால் அவர் இடது ஓரமாக இருந்த குதிரையில் ஏறிக்கொண்டார். ஏன்? அப்போதுதானே வலதுகையக் கொண்டு சாட்டையால் குதிரைகளை வாகாக விரட்ட முடியும்? அதனால் அமெரிக்கா வலதுபுறம் செல்ல ஆரம்பித்தது. பிரான்சில் குடிமக்கள் வலதுபுறத்திலும், nobles இடது புறத்திலும் சென்றனர். ஆனால் எதிலுமே புரட்சி என்று சொல்லிவந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர் வழி ஏற்பார்களா? பிரஞ்சுக்காரர்களும் 1794-புதிய சட்டத்தின் மூலம் வலதுபுறம் செல்ல ஆரம்பித்தனர்.
ஏன் இந்தக் குதிரையை சாட்டையால் விளாசும் பிரச்சனை பிரிட்டனில் இல்லையா என்றால், அங்கே ஒட்டுநருக்கென்று நடுநாயகமாக ஒரு தனி இருக்கை இருந்தது. அதனால் அவருக்கு வலதுபுறம் செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை.
இப்போது வலது புறம் செல்லும் நாடுகளுக்கே மறுபடி வருவோம். 1792-ல் பென்சில்வேனியா மாகாணம் சில குறிப்பிட்ட சாலைகளில் வலதுபுறம் செல்லவேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது. இதுதான் முதல் படி. அதன் பின்னர், 1804-ல், நியு யார்க் மாகாணத்தில் எல்லா சாலைகளிலும் எல்லா வாகனங்களும் வலதுபுறமே செல்லவேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமெரிக்க மாகாணங்களும் வலதுபுறத்தையே

இப்போது ஐரோப்பா. ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா, டென்மார்க், போர்ச்சுகல் என நெப்போலியனின் கீழ்சிக்காத நாடுகள் அனைத்தும் இடதுபுறமே பயன்படுத்தின. டென்மார்க் மட்டும் 1793-ல் மாறியது. ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆப்பிர்க்கா (எகிப்தைத் தவிர), ஆஸ்திரேலியா, இந்தியத் துணைக்கண்டம் ஆகியவற்றில் அதன் வழியே பின்பற்றப்படுகிறது. இப்படியே தொடர்ந்து சுமார் நூறு வருடங்களுக்கு status quo.
1900-களில் கார்களின் புழக்கம் அதிகரித்தபோது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் வலதுபுறத்தில் சென்றாலும், ஓட்டுநர் வலதுபக்கமே அமர்வது (அதாவது இடதுபுற config) போன்றே வடிவமைக்கப்பட்டன. 1915-ல் போர்ட் வெளியிட்ட மாடல் - T ய்ல் தான் முதன் முதலில் வலதுபுறம்
நான் ஒரு தடவ சொன்னா:
1938-ல் ஹிட்லர் ஆஸ்திரியாவை கைப்பற்றி ஒரே இரவில் அனைவரும் சாலையின் இடதிலிருந்து வலதுக்கு மாறவேண்டுமென்று உத்தரவு போட்டான். இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளம். வியன்னாவே ஸ்தம்பித்துப்போனது இந்த முன்னறிவிப்பற்ற உத்தரவால்.
மாத்துங்கடா தீர்ப்ப:
1940களில் சீனாவும் கொரியாவும் வலதுக்கு மாறின. 1960களில் பாகிஸ்தானில் வலதுக்கு மாறவேண்டும் என்ற குரல் வலுப்பட்டது. ஆனால் இரவில் சாலைகளில் ஓட்டுநர்கள் தூங்குகையில் ஒட்டகங்கள் தாமாகவே இடதுபுறமே செல்லப்பழக்க படுத்தப்பட்டிருந்தன. அவற்றிற்கு புதிதாக வலதுபுறம் செல்ல பழக்கப்படுத்துவது மிகவும் கடினமான காரியம் என்பதால் ஐடியாவே கைவிடப்பட்டது.
கடைசியாக இடதிலிருந்து வலதிற்கு ஓடிய நாடு ஸ்வீடன் 1960களில் அவர்கள் நாட்டில் தயாரான வோல்வோக்களும், சாப்களும் வலதுபுற configurationஇல் இருந்ததாலேயே இந்த மாற்றம். அதோடு கூட அத்தனை சிறிய நாட்டை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் வலதுக்கு மாறிவிட்ட நிலையிலும், நீண்டு வளைந்த சாலைகளில் எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாமல் பல இடங்கள் இருக்கையில் பயணிகளின் குழப்பத்தை தீர்க்கவும் வலதுக்கு மாறியது.
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன?
ஸ்வீடன் இடதிலிருந்து வலதுக்கு மாறியபின் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது என்ற சொல்வதுண்டு. அதில் உண்மையும் உண்டு. காரணம் இத்தனை நாள் இடதிலேயே ஓட்டி வந்தவர்கள் திடீரென வலதுக்கு மாறச்சொன்னதால் மிகுந்த எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். அதனால் விபத்துகள் குறைந்திருக்கலாம்.
ocular dominance என்ற ஒன்றைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதாவது நம் கைகளில் வலதுகைப்பழக்கம் இருப்பது போல் கண்களில் வலதுகண் பழக்கம். இதனால் இடதுபுறத்தில் ஓட்டுபவர்களுக்கு வலதுகண்ணே பிரதானம் என்பதால் அது ஒரு ப்ளஸ்ஸாக இருக்கலாம்.

இடதுக்கு ஆதரவாய் இதைவிட ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. எந்தவித thoughtsஉக்கும் நேரம் இல்லாத எமர்ஜென்சி நிகழ்வின் போது instinctive ஆக மனிதன், எதிர்வரும் ஆபத்தை தவிர்க்க, சட்டென்று இடதுபுறமே திரும்புவான். இடதுபுறம் சாலையில் செல்லும் வாகனங்களில் அத்தகைய ஆபத்து நிகழும்போது ஒட்டுநர் விபத்தை தவிர்க்க இடதுபுறத்தில் சாலைக்கு வெளியே வண்டியை திருப்பி head on collisionஐ தவிர்ப்பான். வலதுபுறத்தில் ஓட்டுபவர்களோ எதிரெதிர் மோதிக்கொள்வார்கள். ஆகவே சாலையில் இடதுபுறத்தில் செல்வதே கொஞ்சம் அதிகப்படியாக பாதுகாப்பானது எனலாம்.
இப்போதைய நிலவரம்
எங்கே செல்லும் இந்தப்பாதை?

இடதுபுறம் செல்வதுதான் பெட்டர் என்னைப்பொருத்தவரை. ஏன்னா, அட் லீஸ்ட் ரவுண்டானாவை சுற்றி வருகையில் பிரதக்ஷ்ணமாவாவது வரலாமே! அப்பிரதக்ஷ்ணமாக வருகிற பாவம் வேறு எதற்கு?? :))
C&Pக்கு உதவிய தளங்கள்
1. http://en.wikipedia.org/wiki/Driving_on_the_left_or_right
2. http://www.fhwa.dot.gov/infrastructure/right.htm
3. http://www.i18nguy.com/driver-side.html
28 comments:
ஆஹா! எத்தனையோ பேருக்கு இருக்கும் சந்தேகத்தை இப்படி தனி ஒருவனாகத் தீர்த்து வைத்து விட்டீர்களே!
சபாஷ்!
நல்ல பதிவு இராமநாதன்.
எதோ ஒரு பழமொழி வருமே.. வலம் போனா என்ன, இடம் போனா என்ன, மேலே விழுந்து புடுங்காம இருந்தா சரின்னு, அதான் ஞாபகம் வருது.
நீங்கள் தேடிப்பிடித்து போட்டிருக்கும் காரணங்கள் நம்பும்படியாக இருக்கின்றன.
இப்போதைய நிலவரத்தை கொஞ்சம் விளக்கினால் - விழுக்காடுகளோடு - நன்றாக இருக்குமே!
எல்லாம் சரி, ஆனா அந்த மழை வெள்ள படம் எதுக்கு? அதான் புரியலை!
இதுதான் அந்த இடவலப் பிரச்சனையா! நல்லவேளை இப்பிடி வெளக்கமாச் சொன்னீங்க.
அந்தக் குதிரைல இருந்து கத்தி உருவுற கற்பனை உண்மையிலேயே சிறப்பு. நம்மூர்லயும் அப்படித்தான் இருந்திருக்கனும்னு நெனைக்கிறேன். ஆனா நம்மூர்ல நடுவுல போறதுதான எப்பவுமே ஃபேஷன். அதுனால எதுத்தாப்புல யாரும் வந்தா மட்டும் ஒதுங்கிக்குவாங்கன்னு நெனைக்கிறேன்.
//எல்லாம் சரி, ஆனா அந்த மழை வெள்ள படம் எதுக்கு? அதான் புரியலை!//
மழை வெள்ளத்துக்கு இடதில்லை வல்முமில்லை. மேட்டிலிருந்து பள்ளம் தான் என்று சூசகமாக சொல்லுகிராரோ!
அற்புதமான தகவல்கள் கொண்ட அருமையான பதிவு.
டாக்டரு நல்லபதிவுங்க......
இராம்ஸ். இதென்ன வம்பா போச்சு? ரவுண்டானாவை வலம் வரணும்ங்கறதுக்காகத் தான் நாம இடப்பக்கம் ஓட்டறோம்ன்னு சொல்லிடுவீங்க போலிருக்கே. :-)
நல்ல கட்டுரை.
ரவுண்டானாவுலே ஒரு சாமியைக் கண்டிப்பா வைக்கணும்.
இல்லேன்னா பிரதட்சிணம் வந்து 'பயன்' இல்லை:-)
தமிழ்ச் சினிமாவுலெ கவனிக்கறதில்லையா? சாலையில் நட்ட நடுவா
பிரிக்கும்கோடு போட்டுருப்பாங்களெ அதுமேலே ஓட்டிக்கிட்டு போறதை(-:
நண்பர் ரவி எழுதிக் கொண்டது
நீண்ட நாளைய சந்தேகம் தீர்ந்தது. நன்றி.
கொத்ஸ்,
நன்னி நன்னி! ஆயிராம் பொற்காசுகள் எங்கே?
பெனாத்தலார்,
//மேலே விழுந்து புடுங்காம இருந்தா சரின்னு, //
ஹி ஹி. எப்பவும் எல்லாரையுமே சீண்டிகிட்டே இருக்க முடியுமா? முடியும் போல..யாருக்குன்னு என்ன கேக்கப்படாது!
பெரீய்யப்பா,
இப்போதைய நிலவரத்ததான் மேப்பா போட்டுருக்கேனே!
நம்பரா வேணுமா? தேடி இன்னிக்கு போடறேன். சரியா?
கொத்ஸு,
எல்லாத்துக்கும் சட்னு எரியிற பல்ப் ஆப் ஆயிருச்சா?
மழை வெள்ளத்துல ரைட்ல போனா என்ன? லெப்ட்ல போனா என்ன? பதிவுல இருக்கற எல்லாப்படமுமே ஒருமாதிரிதான்! சிம்பாலிக்கா சொல்லணும்!
ஜிரா,
ரொம்ப நன்றி.
என் கற்பனை இல்லை. இப்படியும் இருக்கலாம்னு வரலாற்றுக்காரர்கள் சொல்கிறார்கள். வரலாறே கற்பனை, திரிப்புனு சொல்றீங்களா? நான் வரல இந்த வெளாட்டுக்கு! ;)
ஓகை,
கரெக்டா பாயிண்ட பிடிச்சுட்டீங்க. அதேதான்.
ரொம்ப நன்றி.
இராம்,
ரொம்ப நன்றி.
குமரன்,
அந்த தியரி கூட நல்லாருக்குல்ல. நிஜமாவே ரவுண்டானா நடுவுல ஒரு பிள்ளையார வச்சா "போற வழிக்கு" புண்ணியமும் கிடைக்குமே! :))
அக்கா,
கரெக்ட்.. ஐடியா நல்லாருக்குல்ல.
ஆமா.. காக்க காக்க சூர்யா கூட அந்த பாட்டுல ஜீப்ப நட்ட நடு ரோட்ல தான் ஓட்டிட்டு போவார்
நண்பர் ரவிக்கு நான் எழுதிக்கொள்வது,
ரொம்ப நன்றி
போஸ்ட் பாக்ஸ் நம்பர்:03118144128803029623
நல்ல பதிவு இராமநாதன், எனக்கென்னமோ இங்க வந்து வடாமெரிக்காவிலே ஓட்டினோன்ன, இந்த வலது பக்கம் ஓட்றது தான் சேஃபுன்னு சொல்வேன். ஆனா நம்ம ஊருக்கு வலம்னா என்னா இடம்னா என்னா, பூந்து பூந்து போறதிலே தான் கிக், அதுவும் ரொம்ப டிராபிக் உள்ள டெல்லி சாலைகளில் உங்களுக்கு அந்த அசாத்திய திறமை வேணும், இல்லைன்னா அரை மணி நேரத்திலே போகவேண்டிய தூரம் கடக்க மூணுமணி நேரமாகும், 'Might is right', அங்கே!
எத்தனையோ நாளாக யோசித்த விஷயத்துக்கு நல்லா விளக்கம் சொன்னீங்க.
கொஞ்ச நாளாச்சு இந்த ஊரு சட்டம் பிடிபட. பின்னாலே உட்கார்ந்து காரை ஓட்டற வழக்கம்
நமக்கு இல்லை.அதனால் தப்பினேன்.:-)
நானும் இடவலம் என்றதும் வேற ஏதோனு நினைச்சேன்.
வெளிகண்டநாதர்,
ஆமா. நீங்க சொல்றது சரிதான். நம்ம ஊர்ல் keep center. இதுல கார்காரங்கள விடுங்க. இந்த டூ வீலர் இருக்காங்க பாருங்க.. அப்பப்பா பெரிய ஈக்கூட்டம் மாதிரி மொய்ச்சுட்டு போய்டுவாங்க. இதப்பத்தி தனியா பதிவெழுதலாம். ஆனா எனக்கு எதுனாச்சும் முத்திரை குத்திடுவாங்களோன்னு வெயிட் செய்யறேன்.!
வல்லிசிம்ஹன்,
//பின்னாலே உட்கார்ந்து காரை ஓட்டற வழக்கம்
நமக்கு இல்லை.அதனால் தப்பினேன்.:-)
.//
சொல்லப்போனா புதுசா இடமிருந்து வலமோ வலமிருந்து இடமோ மாறி ஓட்டுபவர்களுக்கு, பின்னாடிலேர்ந்து யாராவது back seat driving பண்ணச்சொல்லுங்கன்னே அட்வைஸ் செய்யுறாங்க.
//நானும் இடவலம் என்றதும் வேற ஏதோனு நினைச்சேன்/
நீங்க வேற என்ன நினச்சீங்க?
ஆளை விடுங்க.:-0)
நன்றி ஹை!!
http://www.desipundit.com/2007/02/25/leftorright/
வல்லிசிம்ஹன்,
ஆளை விட்டுட்டாக்க அப்புறம் பி.க செய்ய நாங்க எங்க போறது? இருக்கற வரைக்குமாவது புல்லா யூஸ் பண்ணிக்கவேணாம்?? :))
டுபுக்கு,
தேசிபண்டிட்ல சேர்த்ததுக்கு நன்றி!
ஹை சொன்னதன் பின்னணியிலுள்ள அரசியல் என்னன்னு சொன்னா புண்ணியமாப்போகும்.
Post a Comment