இசை என்பது எல்லாத்தையும் தீர்த்துவைக்கும் ஒரு நிவாரணி! எப்பவாது மனசு சஞ்சலத்தோட இருக்கிறப்பவும், இல்லை மகிழ்ச்சியிலே குதுகுலிக்கிறப்பவும், அந்த வேளைகளில் கிடைக்கும் இசை, பாடல்களை கேட்டுப்பாருங்க, அதைவிட ஒரு பெரிய ஆறுதல் எதுவும் இருக்க முடியாது. அது மாதிரி எத்தனை காலமானாலும் பழைய பாடல்களை கேட்கும் பொழுது அந்த பாடல்கள் புதுசா வந்த காலகட்டத்திலே நமக்கு நடந்த பல நிகழ்ச்சிகள் நம் மனசிலே அசை போடும்! ஆகா நாம் வாழ்ந்த அந்த காலங்கள் பொற்காலங்கள்னு தோணும். என்னதான் பழைய போட்டாக்களை நாம் பார்த்து நினைவு கூர்ந்தாலும், நம்மலுடய பிம்பங்களே பிரதிபலித்தாலும், அவ்வளவா நினைவுகளை அசைபோட முடியாது.
ஆனா பாடல்கள், அந்த காலத்திலே காற்றிலே கீதமா வந்த பாடல்கள், அதை கேட்டு அப்போழுது நடந்த சம்பங்களை நினைச்சு சுலபமா கோர்வையாக்கி நினைவு கொள்ள முடியும்! அப்படி இருக்கும் இந்த இசைக்கும் அதனுடன் கூடிய ராகங்களுக்கு நோய் தீர்க்கும் குணம் உண்டுன்னு நான் படிச்சப்ப, அது ஆச்சிரியமில்லை, உண்மைன்னு தான் தோணுச்சு! அதுக்காக ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு இன்னன்ன ராகங்கள் இன்னன்ன நோய்களை குணப்படுத்தும்னு போட்டிருந்தாங்க, சரி அதை பத்தி ஆராய்ச்சி பண்ணி பதிவு கம் பாட்காஸ்ட் போடலாமேங்கிற எண்ணத்திலே வந்த முயற்சி தான் இது!
அதுக்காக கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கிட்டு, ராகங்களின் தொடர்புடைய பாடல்களை தேடி கண்டுபிடிச்சு, அதையும் அந்த பாடல்களின் பின்னனி, அப்பறம் எனக்கு நினைவுக்கு வந்த சம்பங்களை வச்சு இதை ஒரு அழகான பாட்காஸ் போடுவோமேன்னு தான்!
முதல்ல நான் எடுத்துக்கிற ராகம் 'பிலஹரி' என்ற ராகம். இந்த ராகத்துக்கும் காதலுக்கும் தொடர்புண்டுன்னு சொல்றாங்க! அதாவது 'நாஜீவதாரா' என்ற தியாகராஜ் கீர்த்தனை ரொம்பவும் பிரசித்து பெற்ற ஒன்று, இந்த ராகத்திலே அமைந்த ஒன்னு! அதாவது அந்த அந்த காலத்திலே வயித்து வலியால துடிச்சவனுக்கு மருந்தா இந்த ராகத்திலே பாடி குணப்படுத்தினதா சொல்றாங்க! ஆக இந்த 'பிலஹரி' ராகத்திலே பாடி கடவுளை கூப்பிட்டு 'ஏ கோபாலா, கருணைகாட்டு, வயத்து வலிதீர்த்து, என்றும் உன் புகழ் பாட அருள் பாலிப்பாயா'ன்னு பாடி இந்த ராகத்திலே குணப்படுத்துவாங்களாம்!
அப்படி பட்ட இந்த ராகத்திலே வந்த சில சினிமா பாடல்களை நம்ம எல்லாம் இனகொள்ள வேண்டுமென்ற முயற்சியில் இதோ! கொஞ்சும் சலங்கையிலே வரும் 'ஒருமையுடன் நினது திருமலரடி' என்ற பாடல் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய பாடல் அப்பொழுது பிரசித்து பெற்ற ஒன்று, அதற்கு பின் கல்யாணப்பரிசு திரைப்படத்தில் வந்த 'உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட' என்ற பாடல் சுகமாகவும் சோகமாவும் ஒலித்த ஒன்று! A M ராஜா இசையிலே ஸ்ரீதர் இயக்கத்திலே வந்தப்படம்! இந்த படத்திலே தங்கவேலு காமடியும் ரொம்பவும் பாப்புலர்! பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்த அகத்தியர் படத்திலே வரும் 'தலைவா தவப்புதல்வா வருகவே' என்ற பாடல், பிறகு இந்த ராகத்திலே நம்ம இளையராஜா 'உன்னால் முடியும் தம்பி என்ற படத்திலே இசை அமைச்ச 'நீ ஒன்று தானா என் சங்கதீம்' என்ற பாடல்!
இது மட்டுமில்லாது ஹிந்தியில் வந்த ஆராதனா என்ற படத்தில் வரும் 'கோரா காஹஸ்' என்ற மற்றொரு அருமையான பாடல்!
இதோ இதனுடய தொகுப்பாக இந்த பாட்காஸ்ட்டை கேட்டு மகிழுங்கள்! இனி இது ஒவ்வொரு பாட்காஸ்ட்டா தொடர்ந்து வரும்! கேட்பதற்கு எப்படி இருந்ததுன்னும், மேற்கோண்டு என்னென்ன முன்னேற்றங்களை செஞ்சா நல்லா இருக்கும்னு உங்க பின்னோட்டங்களை போடுங்க!
தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வெளிகண்டநாதர்: அமெரிக்காவில் இசை வழி சிகிச்சை மிகவும் பிரபலமாகி கொண்டே வருகிறது. மன நல விடுதியில், தீய பழக்கங்கள், போதை அடிமைத்தனம் ஆகியவற்றீல் இருந்து மீட்க இசை பயிற்சி சிகிச்சை முறை பயன் படுத்தப்படுகிறது. இசைக்கலஞர்கள் குறிப்பாக வயலின் வாசிப்பவர்கள் இதில் ஆராய்ச்சியும் செய்து வருகிறார்கள். பிலஹரி என்றதும் மார்த்தாண்டம்பிள்ளைதான் நினைவுக்கு வருகிறார். சில ராகமாலிகைகளில் பிலஹரி முக்கியமான இராகம் இல்லையோ?
முன்பே கேட்டுட்டேன்.. இருந்தாளும் விக்கிப் பதிவுக்கொரு உள்ளேன் ஐயா சொல்லணும்ல.
வெளிகண்ட நாதரே, அந்த பதிவிலேயே படித்து விட்டேன். பாடல்களையும் கேட்டுவிட்டேன். நன்றி.
எல்லாம் இன்ப மயம் படத்தில் வரும்
மாம(ன்) வூடு மச்சு வூடு
பரிசம் போட்டது குச்சு வூடு
என்ற இளையராஜ இசையமைத்த பாடல் பிலஹரி ராகம்தான்.
அன்பு விநோத்,
இசையைப் போல மனதை அமைதிப்படுத்தி, வாழ்வின் சோகங்களையெல்லாம் மறக்க வைத்து உற்சாகம் தரும் அருமருந்து வேறில்லை. இறைவன் இசைவடிவானவன் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மை. தங்கள் முயற்சி மிகவும் பலனளிக்கக்கூடியது. இசை எனும் பாற்கடலில் மூழ்கிவிட்டால் துன்பமேதும் நம்மை அண்டாது. ராகங்களை ஆராய்கையில் அது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து காண்பது மிகவும் பயனுள்ளதாயிருக்கும். ஜெயா தொலைக்காட்சியில் பிரதி ஞாயிறு அதிகாலை வயலின் வித்துவான் குன்னக்குடி வைத்தியநாதன் ஒவ்வொரு ராகமாக எடுத்துக்கொண்டு அந்த ராகத்தில் உடனிருக்கும் பல பாடகர்களை ஆளுக்கொரு பாடல் பாடச்சொல்லி ராகத்தின் குணங்களையும் பாடும் விதம் மற்றும் பிற விவரங்களை விளக்குகிறார்.
மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆகிரா
Post a Comment