Sunday, March 11, 2007

தட்டு தட்டுன்னு தட்டணும் தட்டணும்!!!

நம்ம ஜெயசங்கர் இருக்காரு இல்லையா, என்னது அது யாரா?, அதாங்க நம்ம We the People ஜெயசங்கர். அவரு வந்து ஒரு கேள்வி கேட்டு இருக்காரு. நம்ம தினமும் யூஸ் செய்யும் இந்த கணிணி கீ போர்ட்ல ஏன் எல்லா எழுத்தும் கலச்சுப்போட்டிருக்காங்க? நேரா நம்ம கிட்ட வந்திருக்கலாமில்ல. அதை விட்டுட்டு அவரு நண்பர் அருள் கிட்ட போயி கேட்டு இருக்காரு. அவரும் முதலில் டைப் ரைட்டரை கண்டுபிடித்தவர், நம்ம மெதுவாக டைப் அடிக்கவேண்டும் என்பதற்காக தான் இப்படி கலைத்து போட்டதாகவும், காலப்போக்கில் அதை அப்படியே பின்பற்றுவதாகவும் சொல்லறாரு! இது உண்மையா அப்படின்னு நம்மளாண்ட வந்து கேட்டு இருக்காரு. இந்த கேள்விக்குப் பதில் சொல்லறதுக்கு முன்னாடி, இந்த விசைப்பலகையின் வரலாற்றைப் பத்தி கொஞ்சம் பார்க்கலாமா.

இந்த விசைப்பலகையை கண்டுபிடித்தவர் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் (Christopher Sholes) என்ற பத்திரிகையாளர். கண்டுபிடிச்சது இன்னைக்கு நேத்து இல்லை, 1860களில். சரியாச் சொல்லணுமுன்னா 1868. முதலில் இவரு எழுத்துக்களை எல்லாம் வரிசையாகத்தான் வெச்சிருந்தாராம். அப்புறம் எங்க டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் சுப்பராமன் சார் அவர் கனவில் வந்து இந்த மாதிரி இருந்தா நான் எப்படி asdfgf அப்படின்னு பசங்க விரலை எல்லாம் உடைக்க எனக் கேட்டு பயமுறுத்த அதனாலேயே இவர் இப்படி எழுத்துக்களை கலைத்துப் போட்டுவிட்டாராம். :)) இப்படி எல்லாம் ஸ்க்ரீன் ப்ளே வைக்க சான்ஸ் இல்லாமப் போச்சே. அவரு கலைத்துப் போட்டதுக்கு காரணம் வேறயாச்சே. அது என்னான்னு பார்க்கலாமா.

முதலில் இந்த எழுத்துகள் எல்லாமே ரெண்டு வரியில் வரிசையாத்தான் இருந்தது. அந்த காலத்தின் தொழில்நுட்பத்தில் அது ஒரு சின்ன ப்ராப்ளமாகிப் போச்சு. நம்ம எல்லாருமே டைப்ரைட்டரை பாத்து இருக்கோம். ஒரு எழுத்துக்கான பட்டனை அழுத்தினா அதற்குண்டான டைப்பார் (type bar) வந்து பேப்பரில் பட்டு அந்த எழுத்து பதிவாகுது. பக்கத்தில இருக்கற படத்தைப் பாருங்க. ஆனா அந்த விசைப்பலகையை கண்டுபிடிச்ச போது இப்ப உள்ள அளவு தொழில்நுட்பம் எல்லாம் இல்லாததுனால என்ன ஆச்சுன்னா இந்த டைப்பார்கள் வந்து அடுத்தடுத்து அடிக்கப்படும் பொழுது, ஒன்றோடு ஒன்று சிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதை எடுத்து விடறதே டைப் அடிக்கறவங்களுக்கு வேலையாப் போச்சு. அதுனால நம்ம கிறிஸ்டோபர் என்ன செஞ்சாருன்னா அடிக்கடி தட்டெழுத்தப் படுகின்ற எழுத்துக்களை எல்லாம் தள்ளித் தள்ளி வெச்சு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டு வந்தாரு.
சிலவங்க, இந்த டைப்பார்கள் சிக்காம இருக்கணும் என்பதற்காக தட்டெழுதுபவர்களின் வேகத்தைக் குறைப்பதற்காக இப்படி எழுத்துக்களை கலத்துப் போட்டதாக சிலர் சொன்னாலும், சிக்கிய டைப்பார்களை விடுப்பதில் செலவழிக்கும் நேரத்தை குறைத்து தட்டெழுதும் வேகத்தை அதிகப்படுத்துவதாகச் சொல்பவர்களும் உண்டு. ஆகவே இந்த விவாதம் நம்ம Coffee Toffee விளம்பரத்தில் சொல்ற மாதிரி The fight goes on!

ஆனால் பாருங்க, அந்த டைப்பார் தொழில் நுட்பம் எல்லாம் தாண்டி வந்த பின்னும் இந்த விசைப்பலகைதான் நிலைச்சு நிக்குது. எல்லாம் First Mover Advantageதான். இதைத்தாண்டி DVORAK, AZERTY என்றெல்லாம் வேறு விசைப்பலகைகள் வந்தாலும் உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாலே மாற்றம் காணாமல் இந்த QWERTY விசைப்பலகை நம்மோடு இருக்கிறது.

சில ருசிகரத் துணுக்குகள்
  • TYPEWRITER என்ற வார்த்தையை விசைப்பலகையின் முதல் வரியில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே தட்டச்சு செய்ய முடியும்.
  • முதலில் தட்டெழுதுவது பெண்கள் செய்யும் வேலை என்றிருந்தாலும் முதலில் உபயோகப்படுத்தியவர்கள் ஆண் ரயில்வே கிளார்க்குகள்தான்
  • தனது கண்டுபிடிப்பை கிறிஸ்டோபர் 1873ஆம் ஆண்டு ரெமிங்டன் நிறுவனத்தாருக்கு விற்றுவிட்டார்
  • முதல் விசைப்பலகைகளில் Uppercase (Capital) எழுத்துக்கள் மட்டுமே இருந்தது.
  • பின்னர் Lowercase எழுத்துக்கள் கொண்டு வருகையில் அதற்காக டைப்பாரை மாற்றும் பட்டனுக்கு Shift எனப் பெயர் வைத்தார்கள். இன்று அப்படி எதுவும் மாற்றப்படவில்லை என்றாலும் அந்த பெயரே நிலைத்து விட்டது. இதுவே இது வரை விசைப்பலகை டிசைனில் நடந்த ஒரே ஒரு பெரிய மாற்றம். கீழ படத்தில் இருப்பதுதான் ரெமிங்டன் 2 என்ற அந்த டைப்ரைட்டர்.
  • முதலில் வந்த டைப்ரைட்டர்கள் பெரிய வெற்றி அடையவில்லை. இந்த மாற்றத்திற்குப் பின்னரே வெற்றிப் பெற்றது.

இப்போ இவ்வளவு பெருமை இருக்கிற விசைப்பலகையைத் தட்டி எல்லாரும் கருத்து சொல்லுங்க பார்க்கலாம்!


சுட்டி 1
சுட்டி 2

33 comments:

said...

என்னப்பா இது? பதிவு தமிழ்மணத்தில் தெரிய மாட்டேங்குது? இதுக்கு விக்கிபசங்களைத்தான் கேட்கணும் போல! :)

said...

தெரியுதுங்கோவ்...

சென்ஷி

said...

//என்னப்பா இது? பதிவு தமிழ்மணத்தில் தெரிய மாட்டேங்குது? இதுக்கு விக்கிபசங்களைத்தான் கேட்கணும் போல! :) //

தெரியுது. சுட்டிய சுட்டினா இத்தாலி மொழியில் திட்டுது. அப்புறம் விக்க பசங்கள தான் திறந்து தான் படிக்க முடிந்தது.

நீங்க சொன்ன இதே கதைய(!!!) நானும் ஏற்கனவே கேட்டுக் இருக்கேன்.

said...

//இப்போ இவ்வளவு பெருமை இருக்கிற விசைப்பலகையைத் தட்டி எல்லாரும் கருத்து சொல்லுங்க பார்க்கலாம்!
//
நானும் தட்டிட்டேங்கோவ்

said...

முதல் 2 படங்கள் தெரியவில்லை எனக்கு.
எப்படி இருந்தா என்ன ?ஒத்தை விரலால் அடிக்கும் என் போன்றவர்களுக்கு!!

said...

நானும் பல வருடமாக தட்டுறேன்.ஆனால் இதற்கு பின்னால் உள்ள வரலாறு தெரியமால் போச்சே!இப்போ உங்கள் புண்ணியத்தில் அதுவும் தெரிந்து விட்டது.

said...

26 ஆங்கில எழுத்துகளும் வரும் பின் வரும் வாக்கியங்களை அந்தக் காலத்தில் (சமீபத்தில் ? :-) ) தட்டச்சு பயில்பவர்கள் பயிற்சி செய்திருப்பார்கள்.

The five boxing wizards jump quickly.

All questions asked by five watch experts amazed the judge.

Woven silk pyjamas exchanged for blue quartz.

Six big devils from Japan quickly forgot how to waltz.

Jackdaws love my big sphinx of quartz.

pack my box with five dozen liquor jugs - நாட்டாமைக்காக :-)

said...

//தெரியுதுங்கோவ்...

சென்ஷி//

தெரியுற மாதிரி இருந்தது, இப்போ மறுபடியும் தெரிய மாட்டேங்குதே!

said...

//தெரியுது. சுட்டிய சுட்டினா இத்தாலி மொழியில் திட்டுது. அப்புறம் விக்க பசங்கள தான் திறந்து தான் படிக்க முடிந்தது.//

என்ன கொடுமையோ. மறுமொழிகள் திரட்டப்படற மாதிரி தெரியலையே! :(

said...

//நானும் தட்டிட்டேங்கோவ்//

நன்றி உலகக் கோப்பையாரே!

said...

//முதல் 2 படங்கள் தெரியவில்லை எனக்கு.//

மீண்டும் முயன்று பாருங்கள் குமார், எனக்கு சரியாத் தெரியுதே!

//எப்படி இருந்தா என்ன ?ஒத்தை விரலால் அடிக்கும் என் போன்றவர்களுக்கு!//

அட நமக்குத்தான் வரிசையா இருக்கணும். தேடித் தேடி அடிக்க கஷ்டமா இருக்கே!!

said...

//இப்போ உங்கள் புண்ணியத்தில் அதுவும் தெரிந்து விட்டது.//

அதுக்குத்தாங்க இந்தப் பதிவே. இன்னும் எதாவது தெரியணுமுன்னா, நம்ம கேள்வியின் நாயகனே பதிவில் போய் கேளுங்க. சொல்லறோம்.

said...

//26 ஆங்கில எழுத்துகளும் வரும் பின் வரும் வாக்கியங்களை அந்தக் காலத்தில் (சமீபத்தில் ? :-) ) தட்டச்சு பயில்பவர்கள் பயிற்சி செய்திருப்பார்கள்.//

பாலராஜன், ரொம்ப பாப்புலரான வாக்கியத்தை விட்டுட்டீங்களே!! அது

The quick brown fox jumps over the lazy dog !!

இதுக்கெல்லாம் பேரு Pangram. இதைப் பத்தி சொல்லணுமுன்னா இன்னும் ஒரு பதிவு போடணும்.

said...

இன்னிக்கு தெரியுது

said...

நல்ல தகவலுங்க. இதே போல தமிழுக்கான முதல் டைப்ரைட்டரை வடிவமைத்தவர் யார் தெரியுமா? அவர் எந்த ஊர் தெரியுமா?

// இலவசக்கொத்தனார் said...
என்னப்பா இது? பதிவு தமிழ்மணத்தில் தெரிய மாட்டேங்குது? இதுக்கு விக்கிபசங்களைத்தான் கேட்கணும் போல! :) //

உங்க பதிவும் அப்படித்தானா? இன்னைக்கு போட்ட பதிவு வந்துச்சு...போச்சு. வந்துட்டுப் போச்சு. அப்புறம் வந்துருச்சு. நாங்கூட நம்மள தமிழ்மணத்துல இருந்து தூக்கீட்டாங்களோன்னு நெனைச்சேன்.

said...

Ergonomics என்று ஒரு வார்த்தை இவர்களிடம் படும் பாட்டினால்தான் இப்படிப்போட்டு குழப்பி வச்சுருக்காங்க! எங்கள் மெஷின்களில் முக்கியமாக பார்க்கவேண்டிய Gauges, controls எல்லாவற்றையும் கைக்கடக்கமான தூரத்தில் வைப்பதற்கும் அதே காரணம்தான்!

said...

//நாமக்கல் சிபி said...

இன்னிக்கு தெரியுது //

இது என்ன விளையாட்டுன்னு தெரியலை. வருது போகுது. என்ன நடக்குது இங்க?

said...

//இதே போல தமிழுக்கான முதல் டைப்ரைட்டரை வடிவமைத்தவர் யார் தெரியுமா? அவர் எந்த ஊர் தெரியுமா?//

ஜிரா, நீங்க கேட்கும் விதத்தைப் பார்த்தா உங்களுக்குத் தெரியும் போல இருக்கே. தெரிஞ்சா சொல்லிடுங்க. இல்லைன்னா தேடிக் கண்டுபிடிக்கணும்.
(அவரு நம்மூருதானோ?) :)

//உங்க பதிவும் அப்படித்தானா? இன்னைக்கு போட்ட பதிவு வந்துச்சு...போச்சு. வந்துட்டுப் போச்சு. அப்புறம் வந்துருச்சு. நாங்கூட நம்மள தமிழ்மணத்துல இருந்து தூக்கீட்டாங்களோன்னு நெனைச்சேன்.//

என்ன நடக்குதுன்னே புரியலை. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒண்ணுமே புரியலை மணத்துல, தமிழ் மணத்துல!

said...

//Ergonomics என்று ஒரு வார்த்தை இவர்களிடம் படும் பாட்டினால்தான் இப்படிப்போட்டு குழப்பி வச்சுருக்காங்க! //

உண்மையில் சுரேஷ், இதுல ஒரு எர்கனாமிக்கும் இல்லை. நான் சொன்ன மேட்டர்னாலதான். உண்மையில் சொல்லப் போனா இப்போ இருக்கிற விசைப்பலகை டிஸைனில் பெரும்பாலான ஆங்கில எழுத்துக்கள் இடது கையால்தான் தட்டச்சப் படுகின்றன, உலகில் பெரும்பான்மையோர் வலக்கை வழக்கம் கொண்டவர்களாகவே இருந்தும். இதில் எங்க எர்கனாமிக்ஸ்? அதனால்தான் கார்பல் டனல் சிண்ட்ரோம் அது இதுன்னு கையை உதறிக்கிட்டு இருக்கோம்.

said...

வரலாறு தந்த விக்கியே
நீ(விர்)வாழ்க
நின் கொற்றம் வாழ்க
நின் குடை வாழ்க.

இன்னும் என்னெல்லாம் இருக்குன்னு தெரியலை.

அதெல்லாம்கூட வாழ்க:-)))

நல்ல பதிவு.

said...

STEWARDESs என்கிற வார்த்தையும் கீ போர்டின் இடது பக்கத்திசுள்ள எழுத்துக்களை மட்டுமே வைத்து தட்டச்சு செய்யப்படுவது.

said...

//
The quick brown fox jumps over the lazy dog !!

இதுக்கெல்லாம் பேரு Pangram.
//
இது மாதிரி தமிழ்ல இருக்கா?

said...

// Chinna Ammini said...
STEWARDESs என்கிற வார்த்தையும் கீ போர்டின் இடது பக்கத்திசுள்ள எழுத்துக்களை மட்டுமே வைத்து தட்டச்சு செய்யப்படுவது. //

இன்னும் சில :-)

aftereffects
reverberates
desegregated
decerebrated
extravagates
reaggregated
devertebrated
sweaterdresses

கூகிளில் words that can be typed using left hand only என்று தேடியபோது கிடைத்த சில சுட்டிகள் :

http://members.aol.com/gulfhigh2/words2.html

http://www.fun-with-words.com/word_records.html

http://www.rinkworks.com/words/oddities.shtml

for unix lovers http://blog.binnyva.com/2006/10/left-handed-words-the-finale/

said...

I wud like to give my reasoning for placing alphabets in such form. The letters placed in middle row ie asdfghjkl are used very oftenly. the top row placed qwertyuiop are used less oftenly and the bottom row placed zxcvbnm are used rarely. This is what my Typewriting teacher told me as the reason.

said...

தகவல்களுக்கு நன்றி கொத்தனார் சார்!

ஆனா பாருங்க நீங்க போட்ட ரெண்டு படமும் வரலை?? :(

அதையும் கொஞ்சம் கவனியுங்க சார், மறுபடியும் வந்து பார்க்கிறேன்!

உங்க நேரத்தை ஒதுக்கி என் கேள்விக்கு பதில் பதிவு அளித்தமைக்கு நன்றி!

said...

//நல்ல பதிவு.//

ஆஹா! டீச்சரே நல்ல பதிவுன்னு சொல்லிட்டாங்க. இந்த தேர்வுல நான் வெற்றி. (இந்த டெஸ்டுல நான் பாஸ் அப்படின்னு தமிழில் சொல்லப் பார்த்தேன்.) :)

said...

//STEWARDESs என்கிற வார்த்தையும் கீ போர்டின் இடது பக்கத்திசுள்ள எழுத்துக்களை மட்டுமே வைத்து தட்டச்சு செய்யப்படுவது.//

என்ன //வார்த்தையும்// அப்படின்னு சொல்லிட்டீங்க? நாம இதைப் பத்தி பேசவே இல்லையே! இருந்தாலும் இதுவும் நல்ல பாயிண்ட்தான். நான் சொல்லி இருக்கேன் பாருங்க. பல சொற்கள் இடது கையாலேயே அடிக்கிற மாதிரி வருதுன்னு. அதுக்கு இதே நல்ல எடுத்துக்காட்டுதான்.

said...

//இது மாதிரி தமிழ்ல இருக்கா?//

ஏங்க ப்ளோரியாரே. அங்க வெறும் 26 எழுத்துக்கள்தான், ரொம்ப சுலபமா எழுதிட்டாங்க. நமக்கு இது ஆவற காரியமா?

அதுவும் ஞௌ, ணௌ என்றெல்லாம் வந்தா என்ன பண்ணறது? அப்படியும் நம்ம ஆளுங்க யாராவது போட்டு இருந்தாங்கன்னா சொல்லுங்க. தெரிஞ்சுக்கறோம்.

said...

//இடது பக்கத்திசுள்ள எழுத்துக்களை மட்டுமே வைத்து தட்டச்சு செய்யப்படுவது. //

இன்னும் சில :-)//

ஆமாம் பாலா, இந்த மாதிரி நிறையா வார்த்தை விளையாட்டுக்கள் இருக்கு.

குமரன் இதைப் படிச்சீங்கன்னா உங்களுக்கு ஒரு கேள்வி - வார்த்தை விளையாட்டு நல்ல எதுகை மோனையோட வருது. சொல் விளையாட்டு நல்லாவே இல்லையே. இதுக்கு எதாவது மாற்று இருந்தா சொல்லுங்களேன்.

said...

//I wud like to give my reasoning for placing alphabets in such form. The letters placed in middle row ie asdfghjkl are used very oftenly. the top row placed qwertyuiop are used less oftenly and the bottom row placed zxcvbnm are used rarely. This is what my Typewriting teacher told me as the reason.//

தேசிகதாசன், அதெல்லாம் இல்லைங்க. நீங்க ரொம்ப கேள்வி கேட்கறீங்கன்னு உங்க டீச்சர் அப்படிச் சொல்லி இருப்பாங்க. ஆங்கிலத்தில் மிக அதிகமாக பயன்படுத்தக் கூடிய எழுத்து E. அது மாதிரி அதிக அளவில் I O U என்ற vowelsகளையும் பயன் படுத்துகிறோம். இவை அனைத்துமே இருப்பது மேல் வரிசையில். (தாய்குலமே, நான் இங்க சொன்னது தமிழ் மேல். நீங்க பாட்டுக்கு நம்ம profiling படி ஆங்கில male அப்படின்னு நினைச்சு ஆப்படிக்க கிளம்பாதீங்க! :))

அதனால அவங்க சொன்னது சரி இல்லை. இந்த டைப்பார் மேட்டர்னாலதான் இப்படி எழுத்தெல்லாம் கலைந்து கிடக்கு அப்படின்னு நான் நினைக்கறேன்.

said...

தகவல்களுக்கு நன்றி கொத்தனார் சார்!//

கேள்வி கேட்டதுக்கு எங்க நன்றி ஜெயசங்கர்.

//ஆனா பாருங்க நீங்க போட்ட ரெண்டு படமும் வரலை?? :( அதையும் கொஞ்சம் கவனியுங்க சார், மறுபடியும் வந்து பார்க்கிறேன்!
//

போட்டது மூணு படம். எடுத்துட்டு மறுபடி போட்டு இருகேன். வருதான்னு பார்த்துச் சொல்லுங்க.

//உங்க நேரத்தை ஒதுக்கி என் கேள்விக்கு பதில் பதிவு அளித்தமைக்கு நன்றி!//

கேள்விகள் கேளுங்க. கட்டாயம் முயற்சி பண்ணிப் பதில் சொல்லறோம். சில சமயங்களில் கொஞ்ச நேரம் ஆகுது. அதை மட்டும் பொறுத்துக்குங்க.

said...

ஆல்ஃபபெட்டிகல் லேங்குவேஜஸ் (alphabetical languages) கொண்ட ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப் படாமல், ஒலியையே எழுத்தாகக் கொண்ட இந்திய மொழி பேசும் பகுதியிலோ அல்லது சீனா ஜப்பான் மொழி போல் logographicக் மொழி பேசும் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

said...

இ.கொ,
அருமையான தகவல்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.