Monday, October 30, 2006

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிப்பது எப்படி? (30 Oct 06)

தேவ் அண்ணன் அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டு இந்த விக்கி வலைப்பூவுக்கு போணி செய்து வைத்திருக்கிறார். அவருக்கு விக்கிப்பசங்க சார்பா ஒரு ஓ!

இந்தியா கிரிக்கெட்லே ஜெயிக்கறது அவ்வளோ ஒண்ணும் கஷ்டம் கிடையாது சார். கொஞ்ச நேரம் என் மூளையைக் கசக்கி யோசிச்சதிலேயே பல மெத்தட்ஸ் கிடைச்சுது. அவை உங்கள் பார்வைக்கு. யாராவது இதை ICC, BCCI க்கு எடுத்துப் போயி சொன்னாலும் எனக்குப் பிரச்சினையில்லை. காப்பிரைட் அப்படின்னெல்லாம் எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டேன்.

முறை ஒன்று: ஹர்ஷா போங்ளே முறை (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கிடையாது)

நான் சின்னவயசிலே ஊர்லே புளியந்தோப்புலே கிரிக்கெட் ஆடினப்ப எங்க டீம் எல்லா டீமையும் வெற்றிவாகை சூடியதுக்கு முக்கியமான காரணம் எங்க பேட்டிங் பௌலிங் எல்லாம் கிடையாது. எங்கள் ஆஸ்தான ஸ்கோரர் ராஜா தான். நாங்கள் ஆடும்போது வந்த டாட் பாலெல்லாம் அவன் கைநடுக்கத்துலே(?!) 1 ஆகும். ரஜினி படத்தைப்பத்தியும் ஓணான் வாத்தியாரையும் பத்தி பேசிக்கிட்டே மூணு ஓவருக்கு முன்னே அடிச்ச 1 - 4 ஆகும். எப்படின்னே தெரியாம எல்லா மேட்சிலேயும் 20 - 30 ரன்னுலே ஜெயிச்சுடுவோம். அவனை எப்படியாவது லொக்கேட் பண்ணனும். இந்தியா டீமுக்கு ஸ்கோரர் ஆக்கணும்.

முறை இரண்டு: ஷோலே முறை

முறை ஒண்ணு கஷ்டம்னு நெனைச்சீங்கன்னா, ராம்கோபால் வர்மா மாதிரி ஷோலே ரீமேக் பண்ணிடலாம். எல்லாத்தையும் பண்ணாட்டாலும், அந்தக் காயினை மட்டுமாவது ரீமேக் பண்ணி டாஸுக்கு உபயோகப்படுத்தலாம். என்ன, டாஸிலே வின் பண்ணா மட்டும் போதாதுன்றதாலே, இந்த முறையைத் தனியா பயன்படுத்த முடியாது.

முறை மூன்று: Do or Dice முறை

தாயக்கட்டம் ஆடும்போது தாயம் போடாம முன்னேற முடியாது இல்லையா? அதே போல சிக்ஸர் அடிக்கறதுக்கு முன்னே எதிர் டீம் எவ்வளவு ரன் அடிச்சாலும் கணக்குலே சேராதுன்னு ஒரு அமெண்ட்மெண்ட் கொண்டு வந்துடலாம். இந்தியாக்கு அப்ளை ஆகாதுன்னு சொல்லவேண்டியதில்லை.

முறை நான்கு: விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

என்ன அநியாயம் சார் இது? 2 கோடி ஜனத்தொகை உள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து 11 பேர்தான் ஆடறாங்க, 110 கோடி உள்ள நம்ம நாட்டிலேயும் 11ஏ பேர்தானா? அவங்களுக்கு 11 பேர்னா நமக்கு 605 பேர், இல்ல நமக்கு11 பேர்னா அவங்களுக்கு 2 பேர் - இதான நியாயமா இருக்கும்? அதே போல பீல்டர், ஒவர் எல்லாத்துலேயும் வி.பி முறைய கொண்டுவந்தா எந்த டீம் நம்ம முன்னாலே நிக்க முடியும்?

முறை ஐந்து: ஜனநாயக முறை

அது என்ன சார்? மூணே முணு அம்பயராம், அதுவும் எதோ பேனலாம் அங்கே இருந்துதான் வருவாங்களாம்! இந்தியாலே நடக்குற அத்தனை மேட்ச்லேயும் எல்லா பார்டர் டெசிஷனும் மக்கள்கிட்டே கருத்துக் கணிப்பு நடத்தி அதன்படி நடந்தாத்தானே ஜனநாயகத்தைக் காப்பாத்த முடியும்? மெட்ராஸ்மாதிரி சில இடங்கள்லே இந்த முறைபேக்பயர் ஆனாலும், ஜம்ஷெட்புர், கல்கத்தாலே யோசிச்சுப்பாருங்க!

நீங்களும் முறைகளை யோசிச்சுச் சேருங்க!

பிற்சேர்க்கைகள்:

podakkudian முறை: என்னை கேட்டால் திமுக விடம் இந்திய அணியை ஒப்படைத்தால் வெற்றி நமதே
உபயம்: உள்ளாட்சி தேர்தல்

சின்னவன் முறை: அப்பிடியே நம்ம அஜீதை ( இது இந்திப் பட வில்லன் அஜீத்) விட்டு ஃபான்டிங்கோட பொண்டாடியையும், மெக்ராத்தின் பிள்ளைகளையும் கடத்த சொல்ல வேண்டியதுதான்.

இலவசக்கொத்தனார் முறை: பாக்கிஸ்தானோட கூட்டணி வெச்சுக்கலாம். ஜெயிச்சா கப்பை எடுத்துக்கிட்டு வந்திடலாம். தோத்தா 'பச்சை' துரோகம் அப்படின்னு கூப்பாடு போடலாம்.

மாயக்கூத்தன் கிருஷ்ணன் முறை: பேசாம நம்ம கைப்புள்ளய ஆட விடலாம்..நன்மைகள் சில

முதல் பால்ல அவுட் ஆனா 'அது போன பால்' அப்படின்னு சாமளிக்கலாம்..

'கிரிக்கெட் விரனுக்கு அழகு சிக்ஸரோ விக்கெட்டோ எடுப்பது அல்ல..எத்தனைதடவை அவுட்டானாலும் கீரிசையும்,டீமிலிருந்து போகமல் இருப்பதுதான்.' அப்படின்னு சவுன்டு விடலாம்.(இது தற்சமயம் உள்ள வீரர்களுக்கும் பொருந்தும்).அதையும் மீறி யாரவது கேட்டால்..
'இங்க பாருங்கப்பா..இவன் எத்தனை பெளன்ஸர் போட்டாலும் நம்ம டிராவிட் மாதிரி உடம்புலயும்,காலிலும் அடி வாங்கி ரொம்ப பொறுமையா இருக்கன்ப்பா' அப்படின்னு ஒருசிம்பத்தி கிரியேட் பண்ணாலாம்..

பெளலர் ஒடி வரும் போது நம்ம கைப்பு பேட்டோ பெளலர நோக்கி ஒடனும்..பெளலர் அதைப் பார்த்து அலறி ஓட நம்ம கைப்புக்கு ரன்னும் கிடைக்கும்,அவுட்டும் ஆகாமல் இருக்கலாம்.

கடைசியா ஒரே வழி கண்டிப்பா எப்பவும் ஜெயிக்கற வழி..பேசாம நம்ம ப ம க(பச்சோந்தி மக்கள் கட்சி) தலையை ஆட விடலாம்..கண்டிப்பா ஜெயிக்கிற கட்சிலதான் இருப்பாரு..

கைப்புள்ளைக்குத் தோனுன கொஞ்சம் கடுமையான, காட்டுத் தனமான ஐடியா - ஆட்டத்துல ஜெயிச்சிட்டு வந்தாத் தான் ராத்திரி சோறு கெடைக்கும்ன்னு ஒரு கண்டிஷன் போடலாம். தோத்துட்டு வந்தா காலையிலயும் மதியானமும் சாப்புட்டதுக்குக் காசைக் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன் போடனும்(காசு இல்லன்னா பாத்திரம் தேய்ச்சு குடுக்கனும், துணி தோய்ச்சு போடனும்).

30 comments:

said...

கலக்கல் ப்பா... இதுல ஒன்னு மட்டும் க்ளிக்கானா போதும், இந்த வோர்ல்ட் கப் மட்டுமல்ல அடுத்து வரும் எல்லா வோர்ல்ட் கப்பும் இந்திய கப்பாகவே அமையும்.

said...

இது கொல கூத்தால் இருக்கு........

உங்கள தட்டிக் கேட்க ஆள் இல்ல...

:)))))))))

said...

வாங்க இன்பா.. வலம்புரி ஜான் சொந்தமா நீங்க?

நன்றி நாகை சிவா.

said...

இவ்வளவும் செஞ்சும் இந்தியா ஜெயிக்குமா???? :-)))

said...

ராம்,

நல்ல கேள்வி..

ஆனா வி பி முறை நிச்சய வெற்றி தரும்:-)))

said...

இந்திய அணிக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவரவேண்டும் என்பதில் என்னுடைய தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு ஒரு கோடி பேரிடம் ஆதரவுக் கையொப்பம் பெறும் இயக்கத்தையும் தொடங்க இருக்கிறேன்.

said...

சிபி,

அது என்ன பிசாத்து ஒரு கோடி பேர்? 110 கோடி பேருகிட்டேயும் கைநாட்டு வாங்கிடலாமா சொல்லுங்க!

said...

நான் கோடி பேரிடம் கையொப்பம் வாங்குகிறேன்.

இப்படி 11 பேர் சேர்ந்து வாங்கினால் 11 கோடி கையொப்பம்/கைநாட்டு ஆயிற்று!

(கள்ள ஓட்டு பட்டியலில் பார்த்தால் இன்னும் கூட நிறைய கிடைக்கும்)

said...

ஸ்கோரர் மெத்தேட் சரி கிடையாது. அப்பவே அந்த ஆளு காக்கா கடி கடிச்ச கால் மாங்காய்க்காக கணக்கை தப்ப எழுதுனவரு. அதனால வேண்டாம்.

டாஸ் வின் பண்ணுனா மேட்ச் வின் பண்ணுவோமா? அதனால ஷோலேவும் அவுட்டு.

இந்த தாயமும் சரி வராது. நம்ம ஆளுங்க சிங்கமுல்ல. மொத பந்துல ஆறு ரன் அடிக்க முடியலைனாலும் குடுப்போமில்ல.

இந்த நாலு, ஐஞ்சு மேட்டர்தாங்க சரியான மேட்டர்.

//மெட்ராஸ்மாதிரி சில இடங்கள்லே இந்த முறைபேக்பயர் ஆனாலும், //

அதெல்லாம் அப்போ. இப்போ அந்த கவலை எல்லாம் வேண்டாம். காவல் துறை பாதுகாப்போட வெள்ளை டாட்டா சுமோ நாலஞ்சை ஸ்டேடியத்தில் இருக்கிற ஒரு ஒரு ஸ்டாண்டுக்கும் அனுப்பிட மாட்டோம்? :)

said...

/இந்த வோர்ல்ட் கப் மட்டுமல்ல அடுத்து வரும் எல்லா வோர்ல்ட் கப்பும் இந்திய கப்பாகவே அமையும்./

/வலம்புரி ஜான் சொந்தமா நீங்க?/

இது கலக்கல் பதில்.

said...

என்னை கேட்டால் திமுக விடம் இந்திய அணியை ஒப்படைத்தால் வெற்றி நமதே
உபயம்: உள்ளாட்சி தேர்தல்

said...

அப்பிடியே நம்ம அஜீதை ( இது இந்திப் பட வில்லன் அஜீத்) விட்டு ஃபான்டிங்கோட பொண்டாடியையும், மெக்ராத்தின் பிள்ளைகளையும் கடத்த சொல்ல வேண்டியதுதான்.

said...

பாக்கிஸ்தானோட கூட்டணி வெச்சுக்கலாம். ஜெயிச்சா கப்பை எடுத்துக்கிட்டு வந்திடலாம். தோத்தா 'பச்சை' துரோகம் அப்படின்னு கூப்பாடு போடலாம்.

எப்படி ஐடியா?

said...

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும் ஜனநாயக முறையும் சூப்பர்.. :-)

said...

//ஒரு கோடி பேரிடம் ஆதரவுக் கையொப்பம் பெறும் இயக்கத்தையும் தொடங்க இருக்கிறேன்//

சிபி,
என் ஆதரவுக் கையொப்பம் இதுல நிச்சயம்.

:)

said...

சூப்பருங்க.... அந்த வி.பி தானுங்க டாப்..... எப்படிங்க "வக்காந்து" யோசிப்பீங்களோ :-)

சரி.... சரி.... இலவசத்துக்கு "ரெட்" கார்டு கொடுங்கப்பா.... சத்தமில்லாம அரசியல புகித்திடுறாரு....

:-)

said...

நாலாவது கைநாட்டு நம்மளுது.

said...

நீங்க சொன்ன மாதிரி ஸ்கோரர் நம்மூர்லயும் உண்டு. அனுப்பி வைக்கட்டுமா? அவன் இல்லாம நாங்க ஜெயிச்சது கொறவுங்கோ... :)

said...

கொத்தனார்.. 4ம் 5ம் மட்டும்தான் சரிவருமுன்றீங்க! அதுக்கு ஏன் டாட்டா சுமோ எல்லாம்? நான் பயந்த சுபாவம் .. தெரியாதா உங்களுக்கு?

said...

நன்றி கடல் கணேசன்.

பொதக்குடியான், சின்னவன், உங்க ரெண்டு பேர் கமெண்டுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன:-))

கொத்தனார், பச்சை மஞ்சள் னெல்லாம் இந்த வலைப்பூவுக்கு கலர் அடிக்கணுமா.. யோசிங்க?

said...

நன்றி மனதின் ஓசை, தேவ், நன்மனம்.

said...

நன்றி ஆவி அண்ணாச்சி.. அக்கா எங்கே/?

லொடுக்கு.. ஊருக்கு ஒருத்தர் இருப்பாங்க போல! சுஜாதா கதை ஒண்ணுலே கூட இப்படி ஒரு கேரக்டர் படிச்சிருக்கேன். என்ன பிரயோஜனம்? சேக்க மாட்டேங்கறாங்களே!

said...

பேசாம நம்ம கைப்புள்ளய ஆட விடலாம்..நன்மைகள் சில

1)முதல் பால்ல அவுட் ஆனா 'அது போன பால்' அப்படின்னு சாமளிக்கலாம்..

2)'கிரிக்கெட் விரனுக்கு அழகு சிக்ஸரோ விக்கெட்டோ எடுப்பது அல்ல..எத்தனைதடவை அவுட்டானாலும் கீரிசையும்,டீமிலிருந்து போகமல் இருப்பதுதான்.' அப்படின்னு சவுன்டு விடலாம்.(இது தற்சமயம் உள்ள வீரர்களுக்கும் பொருந்தும்).அதையும் மீறி யாரவது கேட்டால்..
'இங்க பாருங்கப்பா..இவன் எத்தனை பெளன்ஸர் போட்டாலும் நம்ம டிராவிட் மாதிரி உடம்புலயும்,காலிலும் அடி வாங்கி ரொம்ப பொறுமையா இருக்கன்ப்பா' அப்படின்னு ஒருசிம்பத்தி கிரியேட் பண்ணாலாம்..

3)பெளலர் ஒடி வரும் போது நம்ம கைப்பு பேட்டோ பெளலர நோக்கி ஒடனும்..பெளலர் அதைப் பார்த்து அலறி ஓட நம்ம கைப்புக்கு ரன்னும் கிடைக்கும்,அவுட்டும் ஆகாமல் இருக்கலாம்.

கடைசியா ஒரே வழி கண்டிப்பா எப்பவும் ஜெயிக்கற வழி..பேசாம நம்ம ப ம க(பச்சோந்தி மக்கள் கட்சி) தலையை ஆட விடலாம்..கண்டிப்பா ஜெயிக்கிற கட்சிலதான் இருப்பாரு..

பின் குறிப்பு:
அடுத்த தடவை யாரவது மாயா அவர்களேன்னு ஆரம்பிச்சங்கனா..தைரியாமா சொல்லுங்க உங்களுக்கு என்னை தெரியும்னு....'என்க்கும் சொல்லத் தோனுகிறது' அப்படீன்னு பூடகமா சொல்லதீங்க..


அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

said...

பேசாம நம்ம கைப்புள்ளய ஆட விடலாம்..நன்மைகள் சில

முதல் பால்ல அவுட் ஆனா 'அது போன பால்' அப்படின்னு சாமளிக்கலாம்..

'கிரிக்கெட் விரனுக்கு அழகு சிக்ஸரோ விக்கெட்டோ எடுப்பது அல்ல..எத்தனைதடவை அவுட்டானாலும் கீரிசையும்,டீமிலிருந்து போகமல் இருப்பதுதான்.' அப்படின்னு சவுன்டு விடலாம்.(இது தற்சமயம் உள்ள வீரர்களுக்கும் பொருந்தும்).அதையும் மீறி யாரவது கேட்டால்..
'இங்க பாருங்கப்பா..இவன் எத்தனை பெளன்ஸர் போட்டாலும் நம்ம டிராவிட் மாதிரி உடம்புலயும்,காலிலும் அடி வாங்கி ரொம்ப பொறுமையா இருக்கன்ப்பா' அப்படின்னு ஒருசிம்பத்தி கிரியேட் பண்ணாலாம்..

பெளலர் ஒடி வரும் போது நம்ம கைப்பு பேட்டோ பெளலர நோக்கி ஒடனும்..பெளலர் அதைப் பார்த்து அலறி ஓட நம்ம கைப்புக்கு ரன்னும் கிடைக்கும்,அவுட்டும் ஆகாமல் இருக்கலாம்.

கடைசியா ஒரே வழி கண்டிப்பா எப்பவும் ஜெயிக்கற வழி..பேசாம நம்ம ப ம க(பச்சோந்தி மக்கள் கட்சி) தலையை ஆட விடலாம்..கண்டிப்பா ஜெயிக்கிற கட்சிலதான் இருப்பாரு..

பின் குறிப்பு:
அடுத்த தடவை யாரவது மாயா அவர்களேன்னு ஆரம்பிச்சங்கனா..தைரியாமா சொல்லுங்க உங்களுக்கு என்னை தெரியும்னு....'என்க்கும் சொல்லத் தோனுகிறது' அப்படீன்னு பூடகமா சொல்லதீங்க..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

said...

மாயா!

பின்குறிப்பிலே குத்தறீங்களே..

ஆனாலும் கைப்புள்ள வின்னர்தாங்க! அருமையான ஐடியாக்கள்!

ஆமா எங்க ப ம க தலைய நாங்களே ரொம்ப நாளா தேடிகிட்டிருக்கோமே.. எப்படி அவரை கிரிக்கெட்டுக்கெல்லாம் அனுப்பறது!

said...

ஹர்ஷா போங்ளேயும்(சூப்பர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்...ஒரு வார்த்தையிலயே எல்லாம் அடக்கமாயிடுச்சு), விகிதாச்சாரமும் அருமையான ஐடியாக்கள்.

எனக்கு தோனுன கொஞ்சம் கடுமையான, காட்டுத் தனமான ஐடியா - ஆட்டத்துல ஜெயிச்சிட்டு வந்தாத் தான் ராத்திரி சோறு கெடைக்கும்ன்னு ஒரு கண்டிஷன் போடலாம். தோத்துட்டு வந்தா காலையிலயும் மதியானமும் சாப்புட்டதுக்குக் காசைக் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன் போடனும்(காசு இல்லன்னா பாத்திரம் தேய்ச்சு குடுக்கனும், துணி தோய்ச்சு போடனும்).

said...

//காசு இல்லன்னா பாத்திரம் தேய்ச்சு குடுக்கனும், துணி தோய்ச்சு போடனும்//

தலை, உங்களுக்கு வேணா இதுல எல்லாம் அனுபவம் இருக்கு! (வின்னர்)

இந்திய அணியினருக்கு இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரிஞ்சா இதையே ரெகுலரா செய்ய ஆரம்பிச்சுடுவாங்க!

:))

said...

என்க்கு முன்னாடி mailலில் வந்த ஒரு பாயிண்ட்.
(சத்தியமா சொந்த கருத்து இல்ல)

ரன் எடுப்பதில் இடஒதுக்கீட்டு முறைய அமல் படுத்தலாம்.
அதாவது ஒரு பிற்படுத்தபட்ட வீரர் 4அடித்தால் அது 6ஆக கொள்ளபடவேண்டுமாம்.
அதே வீரர் பந்து போடும் போது... என்று வரும் .

அந்த மெயில் இருந்தால் தேடி பின்னூட்டம் இடுகிறேன்.

அதையும் BCCக்கு,ICCக்கு அனுப்பிவைப்போம்.

said...

//இந்திய அணியினருக்கு இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரிஞ்சா இதையே ரெகுலரா செய்ய ஆரம்பிச்சுடுவாங்க!

:))//

ஹிஹி டாங்ஸ் தள! இன்னும் ஒரு சர்வாதிகார ஐடியாவும் இருக்கு. அடிக்கிற ஒவ்வொரு ரன்னுக்கும்/எடுக்கற ஒவ்வொரு விக்கெட்டுக்கும் இவ்வளவு கிராம் அரிசி, இவ்வளவு பருப்பு, இவ்வளவு கிராம் கோதுமை மாவு, இவ்வளவு கிராம் காய்கறி அப்படின்னு ஒரு சார்ட் தயாரிக்கனும். நாலு ரொட்டி, ஒரு கிண்ணத்துல சோறு, பருப்பு, காய்கறி இல்ல சிக்கன்னு சாப்பாடு வேணும்னா எத்தனை ரன் அடிக்கனும் எத்தனை விக்கெட் எடுக்கனும்னு வெளையாடறவங்களே முடிவு பண்ணிக்கலாம்.
:)

said...

கைப்புள்ள!

அருமையான யோசனைகள்! ஆனா அந்த வேலைகளைச் செய்யறதுக்கும் ஸ்பான்ஸர் பிடிச்சுடுவானுங்களே நம்ம ஆளுங்க:-))

நாடோடி:

சரிதான்.. என்னடா இந்த பாயிண்ட இன்னும் காணோமேன்னு பார்த்தேன். நானும் ஏற்கனவே மெயில்லே இதைப் பார்த்திருக்கேன். ஆனா பதிவோட நோக்கம் கடத்தப்பட்டுடக்கூடாதுன்னு இதைச் சேர்க்கலை. (இப்பவும் பயமாத்தான் இருக்கு:-))

சிபி:

அதேதான் நானும் நெனைக்கிறேன்.

மறுபடி கைப்புள்ள:

என்ன அது பி சி சி ஐயா இல்லை ரேஷன் கடையா?