Thursday, October 26, 2006

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி?

வெளிநாடு வாழ் மற்றும் வெளிமாநிலங்களில் தத்தம் சொந்த ஊரைப் பிரிந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆண்களைப் போலவே நானும் ஆரம்ப காலங்களில் சரியான சாப்பாடு இல்லாமல் திண்டாடியிருக்கிறேன். வீட்டில் இருந்த வரைக்கும் வெங்காய சாம்பார், மோர்குழம்பு, அவியல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று புகுந்து விளையாடிவிட்டு திடீரென்று வீட்டிற்கு வெளியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிப்பது மிக கடினம். அதுவும், நம் வீட்டில் இருந்தவரைக்கும் முந்திரி பருப்பு இன்னவகையற திருடித் தின்பதற்கு தவிர சமையல் அறை பக்கமே காலடி எடுத்துவைக்காமல் இருந்துவிட்டு நாமே சொந்தமாக சமைக்கவேண்டும் என்பது பெரிய இடிதான். பாட்டிகள் இருந்துவிட்டால் போதும், நிலைமை இன்னும் மோசம்.. "நல்லாருக்கு! ஆம்பிளைப் பசங்களுக்கு சமையல்கட்டுல என்ன வேலை"ன்னு discriminate பண்ணி வெளியே துரத்திவிடுவார்கள்.

இந்தியாவில் வேறு மாநிலத்திற்கு செல்வோர் நிலைமை ஒரு வகையில் பரவாயில்லை. ஏதொ ஒரு மெஸ்-ஸோ ஒன்றையோ கண்டுபிடித்து விடலாம். வெளிநாட்டில் வாழவோர்க்கு பிரச்சனைகள் சொல்லி மாளமுடியாது. மூன்று வேளையும் மெக்டோனால்ட்ஸில் சாப்பிட முடியுமா? கட்டுபடியாகுமா? அப்படியே ஆனாலும் மார்கன் ஸ்பர்லாக் போல் ஆவோமா என்று பயம் வேறு வரும். ஒரே நக்கட்ஸும், பிக் மாக்கும் எத்தன நாள் சாப்பிட முடியும்? சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே சமைக்கலாம் என்றால் வெண்டக்காயை நுனி உடச்சு வாங்கணும், தக்காளி அமுக்கிப் பாத்து வாங்கணும்கறது போன்ற ட்ரேட் ரகசியங்கள் தெரியவில்லையென்றால் தொலைந்தோம். சரி, அப்படியே ஏதாவது ஒரு காய்கறி வாங்கி மீனாட்சி அம்மாளின் 'சமைத்து பார்' வைத்து ஒப்பேத்தலாம் என்றால் அவர் குறிப்பிடும் வீசை, ஆழாக்கு போன்றவற்றிற்கெல்லாம் நிகழ்காலத்தில் equivalents இல்லை.

அப்போ? என்னதான் வழி? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. புதிதாய் நாம் இருக்கும் நாட்டிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது.

இன்னொன்று சுயமாக சமையல் கற்றுக்கொள்வது. சமையல் என்பது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை என்பதை உணர்த்தவே ஒரு குறிப்பை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த ரெசிபி எந்த காண்டினெண்டிலும், எந்த குக்கிராமத்திலும் செய்யலாம். ஏனென்றால், மூலப்பொருள் எல்லா இடத்திலேயும் பாகுபாடின்றி கிடைக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். இரண்டுவகை இன்ஸ்டண்ட் பசி மறக்கடிக்கும் ரெசிபிக்கள் இருக்கின்றன. அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு கிரேட் வாங்கிக்கொள்ளூங்கள். கார்ல்ஸ்பெர்க், ஹைனக்கென் என்று பலதரப்பட்ட பசி நிவாரணிகள் இருந்தாலும் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை கண்டுபிடிப்பதற்கு ஆரம்ப காலத்தில் சில சோதனைகள் செய்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இருபாட்டில்கள் என்பது சராசரி அவரேஜ். ஒரு கிரேட் வாங்கினால் ஒரு 2 நாட்களுக்கு பசியிலிருந்து விடுதலை.

என்ன வெட்டி குறிப்பு கொடுத்து டபாய்க்கிறன்னு பாப்பவங்களுக்கு, இதோ உருப்படியான குறிப்பு. அதே சூப்பர் மார்க்கெட்டில் பழரச செக்ஷனுக்குப் போனீர்களானால், 2 லிட்டர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்கும். அந்த பாக்கெட்டை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துவந்து (காசுகொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சாமர்த்தியம்) ஒரு டேபிளின் மேல் செட் செய்து கொள்ளவும். பத்திரமாக டெட்ராபாக்கை பிரித்து ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட/மூன்று நாள் முந்திய கிளாஸ் எடுத்து அதில் ஒரு 500 மில்லி ஊத்தவும். மிக ஜாக்கிரதையாக வாயருகில் கொண்டு சென்று அருந்தவும். பாதி கிளாஸ் குடித்து முடித்தபின் ஏன் முதல்வகை பசிநிவாரணி வாங்கவில்லைன்னு சுய இரக்கம் வரும். பெரும்பாலான ஆண்களுக்கு வரும் உணர்ச்சிதான் இது, அதனால் பதட்டப்பட தேவையில்லை. எவ்வளவு ஜூஸ் வேணுமோ குடித்து முடித்து, மூடி பிர்ட்ஜுக்குள் வைப்பது நலம். கொஞ்சம் adventurous ஆன வாசகர்கள் ஜ்ஸ் பாக்கை சரியாக மூடாமல் டேபிள் மேலேயே முன்று நாட்கள் வைத்தால் ஆரஞ்சு சுவையுடன் கூடிய mushroom ஜுஸும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.

இந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிட்டு தூக்கம் வரவில்லையென்று சொல்வோர் மேற்சொன்ன முதல்வகை நிவாரணிகளை பரிட்சித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

32 comments:

said...

சாமியோவ் வந்ததிலிருந்து மார்கரீட்டா, பினகொலடா, தக்கீலா ஒரே வாடா போடா வாலா போலா அய்டங்கதான். நல்லா இருக்குப்பா ஆஸ்டினு

said...

கொத்துஸ், நம்ம அனுபவிச்ச எல்லா கொடுமையையும் நீங்க அனுபவிச்சு இருக்கீங்க. அது வரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோஷம். :))))))))

said...

இதுல ஆரஞ்சு ஜுஸ்சாச்சும் பரவாயில்லை. மற்ற வகைகள் இருக்கே, கோவா, பீச், காக்டெயினு கொடுமையடா சாமி. நொந்து போய் இதுக்கு தண்ணி குடிச்சே உயிர் வாழ்ந்திடலாம் என்று இருந்தது.

said...

கால்கரி,
நீங்க என்ன கனடால இருக்கீங்களா? இல்ல கால்கரிங்கறது ஏதாவது பாரா?

ஆஸ்டினுக்கு யார் போனாங்க?

said...

புலியாரே,
அப்பா.. என்ன ஒரு பரந்த மனசு. எனக்கே விக்கி விக்கி அழுவாச்சியா வருது.

ஆமா, மிக்ஸட் ப்ரூட் நெக்டர் தான் இதுல டாப். கஷாயம் தோத்துச்சு போங்க. கண்றாவியா இருக்கும்.

said...

/////அப்போ? என்னதான் வழி? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. புதிதாய் நாம் இருக்கும் நாட்டிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது.

இன்னொன்று சுயமாக சமையல் கற்றுக்கொள்வது. ///////

நாய்னா...மூணாவதா ஒரு வழி இருக்குது...நல்லா சமைக்கத் தெரிந்த பெண்ணா பாத்து கண்ணாலம் கட்டி செட்டிலாகுறது...அத்த உட்டுட்டு டகால்பாஜி ஐடியாவா "இலவசமா" குட்துக்குனேக்கிரியே? :)

said...

என்னய்யா நடக்குது இங்கே?

என்கவுண்டர்ல போட்டுத் தள்ளப் போறாய்ங்க உங்களை எல்லாம்.

said...

//ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி? //
வாயைத்திறந்து..

said...

//சாமியோவ் வந்ததிலிருந்து மார்கரீட்டா, பினகொலடா, தக்கீலா ஒரே வாடா போடா வாலா போலா அய்டங்கதான். நல்லா இருக்குப்பா ஆஸ்டினு//

பாத்து கால்கரியாரே, உங்க தங்கமணி நம்ம பதிவை எல்லாம் படிச்சா நீங்க காலி.

புதரகம்ன்னா சும்மாவா? எஞ்சாய். (மனசுக்குள்ள நோ தங்கமணின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நான் பொறுப்பில்லை) :)

said...

//
//ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி? //
வாயைத்திறந்து..
//

அதுக்கு முன்னாடி பாட்டில யாரு தொறக்குறது ?

இப்புடியே வெத வெதைக்கிறவறக்கும் கூட கேள்வி கேட்டுக்கிட்டே கேள்வி ஞானம் மூலமா ஞான மார்க்கம் வழியா பரப்பிரம்மத்தை அடையல்லாம்...!

சாரி...தப்பான பதிவில் பின்னூட்டம் போட்டுட்டேனா இல்ல ஹாங்கோவரா...?

..

ஏங்க இ.கொ.,
...உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு வாகமாமா பற்றியெல்லாம் சொல்லி வேஸ்ட் பண்ணிட்டேனே...! இப்படி கவுத்துவீங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்ல.

கல்யாணத்துக்கு முன்னாடி breakfast Tuborg, லஞ்சுக்கு Heineken, டின்னருக்கு Carlsberg! இது தானா உங்க Steady state configuration ?

said...

//கொத்துஸ், நம்ம அனுபவிச்ச எல்லா கொடுமையையும் நீங்க அனுபவிச்சு இருக்கீங்க. அது வரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோஷம். :))))))))//

ரொம்ப சந்தோஷப்படதீங்க. அது நான் எழுதினது இல்லை. திருடினது. ஆமாம். அது எழுதினது நம்ம ராமநாதந்தான்.

நமக்கு நல்லாவே சமைக்கத் தெரியும் (அட்லீஸ்ட் நம்ம வீட்டுல அப்படித்தான் சொல்லறாங்க.) அதனால ப்ராஜெக்ட் அப்படின்னு வெளியூர் போனாக்கூட நம்ம பசங்க தலைவா நீங்க வீட்டுக்கு போய் சமைச்சிடுங்க, உங்க வேலையையும் நாங்களே பண்ணறோம் அப்படின்னு சொல்லுவாங்க.

அதனால இளவட்டங்க நீங்க இதைப் பத்தி எல்லாம் பேசிக்குங்க.

said...

//மற்ற வகைகள் இருக்கே, கோவா, பீச், காக்டெயினு கொடுமையடா சாமி.//

எல்லாத்தையும் குடிக்கக் கத்துக்குங்க. உடனே எங்க கிளம்பறீங்க. நான் சொன்னது வெறும் பழரசம்தான்.

பழசான பழரசம் அலவுடான்னு கேட்கற பையன் கிளாஸை விட்டுட்டு வெளிய போகலாம்.

said...

//ஏங்க ,நீங்க "ஆரஞ்சு லைட் " ஜுஸ் குடிச்சதில்லையா? கொஞ்சம் நல்லா இருக்கும்.//

இதை நைட்டு குடிக்கக் கூடாதா?

இல்லை லைட் இருக்கறதுனால நைட்டுதான் குடிக்கணுமா?

said...

//அத்த உட்டுட்டு டகால்பாஜி ஐடியாவா "இலவசமா" குட்துக்குனேக்கிரியே? :)//

கல்யாணம் ஆன ஒருத்தன் அந்த வழியை பத்தி சொல்லாம இருக்கேன் இல்ல. அப்பவே தெரிய வேண்டாம்..... ;)

said...

//என்னய்யா நடக்குது இங்கே?//

வாங்க கும்ஸ். வர திங்கள்கிழமை இந்த பதிவைப் பத்தி ஒரு அறிமுகம் குடுக்கறேன். வெயிட் பண்ணுங்க.

said...

//
மூணாவதா ஒரு வழி இருக்குது...நல்லா சமைக்கத் தெரிந்த பெண்ணா பாத்து கண்ணாலம் கட்டி செட்டிலாகுறது...அத்த உட்டுட்டு டகால்பாஜி ஐடியாவா "இலவசமா" குட்துக்குனேக்கிரியே? :)
//

போய்யா...

சோத்துக்கு ஒருத்திய கட்டிக்கலாம்னா அவ சமைக்கிறது புடிக்காமப் போயிருச்சுன்னா மாத்த முடியுமா...?
வாழ்க்கையே இருண்டுபோயிருமேய்யா...

இந்த ஐடியாவெக் கொடுக்குறதுக்குத்தான்...வந்தீங்களாக்கும்..?

நானே சமைக்கக் கத்துக்குறேன்.....அது தான் எனக்கும் என் வயிற்றிற்கும் மற்ற பெண்கள் வயிற்றிற்கும் நல்லது...

said...

//சாரி...தப்பான பதிவில் பின்னூட்டம் போட்டுட்டேனா இல்ல ஹாங்கோவரா...?//

நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை.

//உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு வாகமாமா பற்றியெல்லாம் சொல்லி வேஸ்ட் பண்ணிட்டேனே...! //

மேல புலிக்குச் சொன்ன பதிலை கொஞ்சம் பாரு ராசா!

//கல்யாணத்துக்கு முன்னாடி breakfast Tuborg, லஞ்சுக்கு Heineken, டின்னருக்கு Carlsberg! இது தானா உங்க Steady state configuration ?//

அது என்ன கல்யாணத்துக்கு முன்னாடி? நாங்க எப்பவுமே ஸ்டெடி.

said...

//வாயைத்திறந்து..//

யோவ் வெவசாயி, ஸ்ட்ரா இருந்தா எதுகய்யா வாய திறக்கணும்?

said...

//இந்த ஐடியாவெக் கொடுக்குறதுக்குத்தான்...வந்தீங்களாக்கும்..?//

மேல நான் சொன்ன பதிலை கொஞ்சம் பாரு ராசா!

said...

நல்ல வேளை உங்கல மாதிரி ஒரு ரூம்மேட்டை எப்பொழுதுமே கூட வெச்சிகிட்டு இருப்பதினால் சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்ல :)). அது சரி விக்கி பசங்கன்னு பேரை வச்சிகிட்டு ஒரே அடல்ஸ் வாலிபர்களா இருக்காங்க பேரை மாத்துங்கப்பா :))

said...

//
அது என்ன கல்யாணத்துக்கு முன்னாடி? நாங்க எப்பவுமே ஸ்டெடி.
//

எப்பவுமே ஸ்டெடின்னா....இப்பவுமா...வீட்டுக்காரம்மா சமைக்கிறத சாப்பிடுறதில்லையா?

said...

//ஆமாம். அது எழுதினது நம்ம ராமநாதந்தான். //

அதனால அவருக்கு சமைக்கத் தெரியாதுன்னு நினைக்காதீங்க. நல்லா சமைப்பாரு. போன பாஸ்தா பதிவு கூட அவருக்கிட்ட சுட்டதுதான்.

said...

//எப்பவுமே ஸ்டெடின்னா....இப்பவுமா...வீட்டுக்காரம்மா சமைக்கிறத சாப்பிடுறதில்லையா?/

சாப்பாடு வேற. ஸ்டெடி வேற. கன்பியூஸ் ஆக கூடாது. சாந்து குழைக்கணுமுன்னா தண்ணி வேண்டாமா? (ரொம்ப தொழில் சம்பந்தப்பட்ட எடுத்துக்காட்டோ?)

said...

இந்த மிக்ஸ்டு ப்ரூட் ஜூசுனு ஒண்ணு இருக்கும்பாருங்க அத குடிச்சா அதில என்ன வாசம் வருதுன்னே தெரியாது.
அது வாசமா இல்ல மோசமான்னே கண்டுபுடிக்க முடியாது!

said...

//அது வாசமா இல்ல மோசமான்னே கண்டுபுடிக்க முடியாது!//

அதெல்லாம் மூக்கைப் பொத்திக்கிட்டு கப்புன்னு அடிச்சிட்டு ஒரு விரலில் ஊறுகாய் எடுத்து நாக்கில் வெச்சா.....


என்னது??? மிக்ஸ்டு ப்ரூட் ஜூஸா? சாரி. ராங்க் நம்பர்.

said...

எய்யா.............என்னது இது..........நாலு நாள் வெளியூர் போயிட்டு வந்தா........இப்படியெல்லாம் ஆயிருக்கே! என்ன வெவரம்?

said...

//என்ன வெவரம்?//

ஜிரா, எல்லாம் விவரமாத்தேன். இப்போதான் உங்களுக்கு பரோட்டா பதிவில் பதில் சொன்னேன். அதுவே இங்கயும்.

//அண்ணா, இது மீள்பதிவுதான். அது வேற பிளாக், இது வேற. நீங்க முன்ன போட்ட பின்னூட்டம் எல்லாம் அங்க பத்திரமா இருக்கு.

எதுக்கு இந்த வலைப்பூ என்ற மேட்டர் திங்களன்று சொல்லப்படும். உங்களுக்கும் இதில் வேலை உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான்.//

said...

என்ன கொத்துஸ், திங்கள் கிழமை பாரு பாரு ஒவர் சீன் போடுறீங்க....

உங்க சிஷ்ய புள்ள நான் மட்டும் சும்மா இருக்கலாமா, நீங்களும் திங்கள் கிழமை பாருங்க

உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

//என்ன கொத்துஸ், திங்கள் கிழமை பாரு பாரு ஒவர் சீன் போடுறீங்க....//

இப்படியெல்லாம் செஞ்சாத்தானே ஆள் வரவைக்க முடியும். என்ன எழுதணமுன்னு யோசிக்கவும் கொஞ்சம் டைம் வேணுமில்ல.

அதுக்காக நீ ஒண்ணியும் டென்சனாவாதே. இந்த பதிவு எல்லாம் இருக்கில்ல, வந்து பின்னூட்டிக்கிட்டு இரு.

said...

இதோ எங்க ஊர்ல திங்கக் கெழம வந்தாச்சு. இன்னா விஸ்யம்? கபால்னு சொல்லுங்கப்பா.

said...

என்னங்க இவ்வளவு காலங்கார்த்தால கேட்கறீங்க. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நேரம்.

இதோ வந்துக்கிட்டே இருக்கு.

said...

/தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது/

சூப்பர் ஐடியா.. இது மாதிரி இன்னும் நெறைய சொல்லுங்க தலைவா..