Monday, October 30, 2006

சட்டை மடிப்பது எப்படி !

சுலபமாக இரண்டு செகண்டில் சட்டை மடிப்பது எப்படி !


ஞாயிறு போற்றுதும் ன்னு எங்கத் தாத்தா ரொம்ப நாளுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிட்டார். நானும் தாத்தாச் சொல்லைத் தட்டாமல் ஞாயிறு ஆனா எந்த வேலையும் செய்யறது இல்லை. ஆனானப்பட்ட கடவுளே ஞாயிறு அன்னைக்கு ரெஸ்ட எடுத்தப்போது நாம் யாரு வேலை செய்ய.

ஆனாலும் பாருங்க, ஞாயிறுக்கிழமைதான் நமக்கு துணி துவைக்கும் நாள் ! வாஷரில் போட்டு ஒரு அரை மணி நேரம், அப்புறம் ட்ரையரில் போட்டு இன்னும் ஒரு முக்கா மணி நேரம். அப்புறம் அது எல்லாத்தையும் அயர்ன் பண்ணி, மடிச்சு வைக்க இன்னும் ஒரு மணி நேரம். இதுக்கே மூணு மணி நேரம் போச்சுதுண்ணா அப்புறம் எங்க ஞாயிறைப் போற்றுவது !

சமையலுக்கு அப்புறம் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணறது இந்த லாண்டிரிக்காத்தான். தமிழில்(?!!) எனக்கு பிடிக்காத வார்த்தை இந்த லாண்டரினு ஆயிப் போச்சு.


வலையில் அங்க இங்க மேய்ஞ்சப்போது, மிக எளிதாகதுணி மடிக்கும் இந்த வீடியோ மாட்டுச்சு. நிஜமாவே நல்ல டெக்னிக்த்தான். செய்துப் பாருங்களேன் எவ்வளவு சீக்கிரம் துணி மடிக்க முடியுது உங்களாலே என்று !


படத்தை கிளிக்கினால் படம் தெரியும் !


how to fold a shirt

23 comments:

said...

இது ரொம்ப கஷ்டமான வேலைங்க. முதல்ல போட்டு இருக்கற சட்டையை கழுட்டணும். அப்புறம் தோய்க்கணும் அதுக்கு அப்புறம் அதை எடுத்து உலர்த்தணும். ப்ரிபரேஷன் வேலை ரொம்ப இருக்குங்க இந்த மடிக்கறதுக்கு.

இருக்கட்டும் . இப்போ ஒரு முக்கியமான பொது அறிவு கேள்வி. மடிப்பு அம்சா வீட்டில் யாரு துணி மடிப்பாங்க?

said...

""""இப்போ ஒரு முக்கியமான பொது அறிவு கேள்வி. மடிப்பு அம்சா வீட்டில் யாரு துணி மடிப்பாங்க?
""""

தெரியாது...ஆனா இவங்க வீடு மடிப்பாக்கத்துல இருக்குன்னு நெனைக்கிறேன் ( மாடி பக்கத்துல இல்லை...காலை மாத்தி போட்டுராதீங்க...கோச்சுக்க போராங்க :)

said...

வாங்க சங்கர், கால் மாத்தி போடற அளவுக்கு அவங்க பழக்கம் இல்லைங்க. அதனால கவலை வேண்டாம்.

ஆனா இந்த காலை மாத்தறதுக்கு பதிலா ஒரேடியா விட்டுட்டா அது மடிப்பக்கம் ஆயிடும். அப்ப அடிவாங்க வேண்டியதா ஆயிடும். ஜாக்கிரதை.

said...

""காலை மாத்தறதுக்கு பதிலா ஒரேடியா விட்டுட்டா அது மடிப்பக்கம் ஆயிடும்."""

ஆஹா..கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாங்கையா...ஒரு காலை வச்சு இம்புட்டு சேட்டையா ?

said...

மடிப்பு அம்சாவா ?
அந்த அம்மா கல்யாணம் கட்டிகினு குடும்ப அம்சாவாகி ரொம்ப நாளாச்சே !
வேறயாரு மடிச்சு வைப்பா ? அவரை கல்யாணம் கட்டிகினவருதான் !

said...

//ஆஹா..கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாங்கையா...ஒரு காலை வச்சு இம்புட்டு சேட்டையா ?//

அட சங்கர், நீங்கதானே இந்த சேட்டையை ஆரம்பிச்சது!!

said...

hi hi

said...

பெருசு,

ஹிஹின்னு சிரிச்சிட்டுப் போறீங்களா அல்லது ஹாய் ஹாய்! சொல்லி நீங்க வந்துட்டதைச் சொல்லறீங்களா?

said...

அடப்பாவிங்களா, சட்டைய மடிக்கறத பத்திப் பேசச் சொன்னா, மடிப்பு அம்சாவை மடக்கறதைப் பத்தி இவ்ளோ பேசறீங்களே..

said...

பாத்தீங்களா? இதுக்குப் பேர்தான் பதிவை ஹைஜாக் பண்ணறதாம். மண்டபத்துல பேசிக்கறாங்க. நல்ல வேளை உங்களை மாதிரி நாலு பேர் வந்து பதிவை திரும்பி ட்ராக்கில் கொண்டு வந்துடறீங்க.

ரொம்ப நன்றி கணேசரே. இந்த மாதிரி அப்பப்ப வந்து தலையில் குட்டுங்க. அப்பவாவது உருப்படறதுக்கு எதாவது வழி தெரியுதான்னு பாக்கலாம்.

said...

//உருப்படறதுக்கு எதாவது வழி தெரியுதான்னு பாக்கலாம். //

அது எப்படி தெரியும்... நாம வாங்கி வந்த வரம் அப்படி. பீல் பண்ணாதீங்க விடுங்க கொத்துஸ்....

மடிப்ப replace யாருமே வரலையே ஏன்?

said...

"""அட சங்கர், நீங்கதானே இந்த சேட்டையை ஆரம்பிச்சது!! ""

அட நம்ம கால்தானா அது...இதுதான் போட்டு வாங்குறதா?

said...

பெண்களை இழிவாய் பேசும் இத்தகைய பதிவுகளுக்கு என் எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன். டீச்சர் இதெல்லாம்
கண்டிக்கிறது இல்லையா :-)
( இவ்வளவு விலாவாரியாய்
பேசுவதால் மடிப்பு அம்சா ஒரு நடிகையாய்தான் இருக்க வேண்டும். சரியா? அவங்க எந்த படத்துல வருவாங்க. சஸ்பென்ஸ் தாங்கலை)

said...

மடிப்பு அம்சாவை யாரெனக் கேட்ட உஷாவிற்கு தமிழ் கூறும் கோடனு கோடி வாலிப வயோதிக அன்பர்களின் சார்பாக எங்களின் கண்டணத்தை பதிவு செய்கிறோம்....

பங்காளி(கள்)

said...

சாமிகளா, அது டி-சர்ட் மடிப்பது. முழுக்கை மடிப்பது எப்படின்னு படம் காட்டுங்கப்பா

said...

>>>>மடிப்ப replace யாருமே வரலையே ஏன்?

சிவா
ஒரு சூரியன் ஒரு நிலா மாதிரி தமிழ் சினிமாவுக்கு ஒரு மடிப்புதான். அது காலத்தால் அழிக்க முடியாத ஒரு கதாப்பாத்திரம் !

said...

>>>Yarunga athu madippu amsaa

>>>அவங்க எந்த படத்துல வருவாங்க. சஸ்பென்ஸ் தாங்கலை

ம்ம. இந்த ரேன்ஞில் போனா

"மடிப்பு அம்சா. ஒரு வாழ்க்கை வரலாறு
விக்கி பதிவு போடனும் போல இருக்கே !

said...

பங்காளி
நீர்தான்யா நம்ம சோக்காளி !
மடுப்பு அம்சாவை தெரியாதோர் இந்த மண்ணுலகில் இன்னும் உளரோ என்று என் நெஞ்சம் பதறுகிறது !

said...

அந்த டி-சர்ட்டை எப்படி மடிப்பதுன்னு கத்துகிட்டேன்...

ஆனா என்கிட்ட இருக்க மத்த டி-சர்ட்டையெல்லாம் எப்படி மடிப்பது?? :D

said...

இப்போ என்னப்பா..

மடிப்பு அம்சா சட்டைய மடிக்கற வீடியோவ போடுவீங்களா இல்லியா? இன்னும் எத்தினி நாள் வெயிட் பண்ணுறது?

said...

இன்னும் என் கேள்விக்கு பதில் வரவில்லையே? மீண்டும் கேள்வியை தொடருகிறேன்
மடிப்பு அம்சா யார்? சுருக்கமாய் விளக்குக

said...

// மடிப்பு அம்சா வீட்டில் யாரு துணி மடிப்பாங்க?
//
ரொம்ப முக்கியம்!!!!

//மாடி பக்கத்துல இல்லை...காலை மாத்தி போட்டுராதீங்க...கோச்சுக்க போராங்க :) //
- கொடுமை.. வடிவேலு படத்துல வர வசனங்களே தேவலாம்!

//ஆனா இந்த காலை மாத்தறதுக்கு பதிலா ஒரேடியா விட்டுட்டா அது மடிப்பக்கம் ஆயிடும்.//
ஓ, பாக்யராஜ் லெவலுக்கு வந்தாச்சா! அடுத்தென்ன?

//வேறயாரு மடிச்சு வைப்பா ? அவரை கல்யாணம் கட்டிகினவருதான் ! //
ஓகே, இது எஸ்ஜே சூர்யா பின்னூட்டமா!

வாழ்ந்தது இந்த விக்கிபசங்க பதிவு! தயவு செஞ்சு என் பதிவு எதையும் இதுல மீள் பதிஞ்சிடாதீங்க! எனக்கு High BP, Heart attack எல்லாம் வந்துடும் !

said...

உஷா அக்கா,
அம்சாபுரியில் உள்ள "அம்சா இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் மடிப்பு ரிசர்ச்" (டீம்ட் யுனிவர்சிடி)- யிடமிருந்து கையோட பதில் வாங்கிவர கொத்தனாரு போயிருக்காரு.

ஆனாலும் தமிழ்த்திரையுலகத்தில் ஒரு இடிவெள்ளியைப் பத்தி இதுவரை நீங்கள் தெரிந்து கொள்ளாதது துரதிருஷ்டம் தான். :)