நான் குழந்தை நல மருத்துவரோ, இல்லை கண் பார்வை மருத்துவரோ இல்லை. நான் தேடிப் பார்த்தவரை, நிறைய மருத்துவர்களை விசாரித்த வரையில், ஃப்ளாஷ் போட்டு படம் எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும். அதனால் தைரியமாக ஃப்ளாஷ் உபயோகிக்கலாம்.
ஆனால் ஏன் ஃப்ளாஷ் உபயோகிக்க வேண்டாம் என்பதற்கு சில காரணங்கள்
- நேரடியான ஃப்ளாஷில் எடுக்கப்படங்கள் அழகு ரீதியாக நன்றாக இருக்காது, இயற்கை வெளிச்சத்தில் எடுப்பதே நல்லது.
- குழந்தைக்கு ஃப்ளாஷ் வெளிச்சம் எரிச்சலை ஏற்படுத்தும். அப்புறம் போஸ் குடுக்காமல் அழ ஆரம்பித்து விடக்கூடும்.
- குழந்தைகள் பெரியவர்களைப் போல அடிக்கடி கண் சிமிட்டுவதில்லை. ஃப்ளாஷ் வெளிச்சம் வெறுப்பபேற்றக்கூடும்.
- சிகப்பு கண்.
குறைந்த வெளிச்சத்தில் ஃப்ளாஷ் உபயோகித்தால், கண்கள் சிகப்பாய் படத்தில் தோன்றும். ( இது ஏன் என்று வேற விக்கிப் பதிவு போட்டு விடலாம் ! ). இப்ப வரும் நிறைய புது கேமராக்களில் இதை தவிர்க்க ஃப்ளாஷ் குறைந்த நேர இடைவெளியில் இரண்டு முறை அடிக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி பாப்பாக்களின் விழித்திரைகள் பெரியவர்களைப் போல அடிக்கடி மூடித் திறப்பதில்லை. அதனால் பாப்பாக்களை ஃப்ளாஷ் படம் எடுத்தால் சிகப்பு கண் வர வாய்ப்புக்கள் அதிகம்.
முடிந்தவரை ஃப்ளாஷ் போட்டு படம் எடுப்பதை தவிருங்கள். அப்படியும் முடியாமல் போனால், ஃப்ளஷின் மீது மெல்லிய துணி, டிஸ்யூ பேப்பர் போட்டு நேரடி வெளிச்சத்தை தவிருங்கள்.
இந்தப் பதிவு எழுதியது ஆனந்த் அவர்கள். புகைப்படக் கலை பற்றி பல பதிவுகளை தன் வலைப்பதிவில் எழுதியுள்ளார். இவர் எழுதும் புகைப்பட குறிப்புகள் மேலும் பல விக்கியில் வரும்.
14 comments:
ப்ளாஷ் போடலாம், ஆனா வேண்டாம் அப்படின்னு தெளிவாச் சொல்லிட்டீங்களே!!! :)))
குட்டி பாப்பாவுக்கும் மட்டும் இல்ல, ப்ளாஷ் போட்டு எடுத்தால் எல்லார் கண்ணகளும் ஒளிமயமா தான் வருது.
பகலில் ப்ளாஷ் போடாமால் எடுக்கலாம், இரவில் ப்ளாஷ் போட்டு எடுத்தா தான் நம்ம முகம் எல்லாம் படத்தில் வரும்.
பெரும்பாலும் இப்போதெல்லாம் backlight situationsகளிலும் portraitகளிலும் ப்ளாஷ் கண்டிப்பாக பயன்படுத்துகிறேன். இயற்கை ஒளி இருக்கின்ற போதும் ப்ளாஷ் முகத்தை பளீராக்கும். சினிமா ஷூட்டிங்கில் வெள்ளை அட்டையை சுற்றிலும் பிடித்துக்கொண்டு நிற்பார்களே!
நிறைய prosumer காமிராக்களின் ப்ளாஷின் சக்தியை மட்டுறுத்த முடியும். காமிராவை நோண்டிப்பாருங்கள். இருந்தால் இது ஒரு வரப்பிரசாதம்.
bounce flash வாங்க முடியாத என்னைப் போன்ற சாதா ஆட்கள் யூஸ் செய்வது தெர்மாக்கூல் அட்டைகள் தான். பத்துக்கு பத்து செ.மீ rectangle வடிவில் அட்டையை எடுத்துக்கொண்டு flash ஐ முற்றிலுமாய் மறைக்காமல் ஒரு 60* சாய்வாய் வைத்துக்கொண்டால் ஏழைக்கேத்த எள்ளுருண்டையாய் bleachedஆக இல்லாமல் சுமாரான பவுன்ஸ் எபெக்ட் கிடைக்கும். அப்போது subject இன் முகத்தில் கண்டிப்பாக ஒரு ப்ரோ (pro) லெவலுக்கான தேஜஸும் இருக்கும்.
தெர்மாக்கூல் கிடைக்காதவர்கள் ஒரு A4 காகிதத்தை அவரவர் ப்ளாஷின் சக்திற்கேற்ப மடித்துக்கொண்டும் இதே முறையில் பயன்படுத்தலாம். நிற்க இது பெரியவர்களுக்கான டெக்னிக்.
அசௌகரியங்கள்:
1. ட்ரைபாட் இல்லாத சமயங்களில் ஒரே கையில் காமிராவை ஆபரேட் செய்யவேண்டும். ஷேக் ஆக வாய்ப்புகள் அதிகம். அதற்கு நான் செய்வது self timer. க்ளிக்கிவிட்டு கிடைக்கும் பத்துநொடிகளில் ஸ்டெடியாகிக்கொள்வது.
2. பெரும்பாலும் கூடவே அமைந்திருக்கும் autofocus sensorகளை மறைக்காமல் போகஸ் கிடைத்தவுடன் சாய்வாக அட்டையை பிடித்துக்கொள்ளலாம்.
3. சர்டிபைட் nerd என்று பட்டம் கிடைக்கும். பெருசா ஐநூறு டாலர் காமிரா வச்சுருக்கான் பாரு. அட்டை வச்சாதான் படம் வருமாம்னு கமெண்ட்ஸ் விதவிதமா வரும். :)))
ஆனால் இதற்கு மாற்று ஏகப்பட்ட பணம் கொடுத்து பவுன்ஸ் ப்ளாஷ் வாங்குவது. :))
குழந்தைகளிடம் ரொம்பவே இதெல்லாம் ரொம்ப கஷ்டம். ஆனந்த் சொல்வது போல ப்ளாஷ் போடாமல் எடுப்பது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் slow lens உள்ளவர்கள் shoot mode இல் burst ஆக வைத்துக்கொணடு ஒரு படத்திற்கு பதில் சில படங்களை எடுத்தால் Best Shot ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ப்ளாஷ் போடாத்தால் ஏற்படும் blur களை தவிர்க்கலாம். subjectஇனது ரியாக்ஷன்ஸும் naturalஆக இருக்கும்.
ஆனந்துக்கு நன்னி.
நல்ல பதிவுங்க. ஆனா எல்லாரும் பட்டையைக் கிளப்பும் இந்த நேரத்தில், யாராவது வந்து ப்ளாஷ் அடிச்சாத்தான் இந்த பதிவை எல்லாரும் படிப்பாங்க. :)))
//ஆனந்த் சொல்வது போல ப்ளாஷ் போடாமல் எடுப்பது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் slow lens உள்ளவர்கள் shoot mode இல் burst ஆக வைத்துக்கொணடு ஒரு படத்திற்கு பதில் சில படங்களை எடுத்தால் Best Shot ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ப்ளாஷ் போடாத்தால் ஏற்படும் blur களை தவிர்க்கலாம். subjectஇனது ரியாக்ஷன்ஸும் naturalஆக இருக்கும்.///
இந்த செய்முறை நல்ல ஐடியாவாகத்தான் இருக்கு என நினைக்கிறேன்.
புகைப்பட வல்லுநர்களிடம் ஒரு doubt கேட்டுக்கறேன்::
flash போட்டு படம் எடுக்கும்போது, (சிலருக்கு மட்டும்), கண் மூடி விடுகிறதே, ஏன்? ஒரு கண் மட்டும், கண்ணடித்தாற்போல் பாதி மூடிவிடும். சில காமராக்களில் flash போடும்போது எந்த பாதிப்பும் இல்லை, சில காமராக்கள்ளில் மட்டும் தான் கண் மூடிவிடுகிறது. சில காமராக்களில் Red-eye reduction போட்டால் கண் மூடுவது இல்லை. யாராவது தெரிந்தவர்கள் விளக்கினால் - மாற்று யோசனை சொன்னால் - உபயோகமாக இருக்கும்.
TIA.
நல்ல பதிவு...தொடர்ந்து இது போன்ற புகைப்படக்கலைப்பற்றியக்
குறிப்புகள் எதிர்பார்க்கிறேன்.
கிராமத்துல எங்க பெரிம்மாவை போட்டொ எடுத்தேன் வெய்யில்ல வாசல் திண்ணைல உக்காரவச்சி என் டிஜிடல் காமிரால. அவங்க அதுல ஃப்ளாஷ் அடிக்காததினால நான் போட்டோவே எடுக்கலயாம் டப்பா காமிராவாம்..ஒரு பளிச் ஒளி கண் சிமிட்டினாதான் காமிராவுக்கே மதிப்பு போல?:)
இங்கு அளித்த தகவல்கள் உபயோகமானவை நன்றி Anand.
ஷைலஜா
நாகை சிவா
இரவில் எடுத்தாலும் கூட நல்ல விளக்கு வெளிச்சத்தில் எடுங்கள், எதுக்கு ப்ளாஷ் போட்டு அப்புறம் சிவந்த கண்களோட இருக்கணும் ! :-)
இராம்ஸ்
இன்னொரு டெக்கின்க்கும் இருக்கு. பிலிம் வரும் வெள்ளை டப்பாவையை கொஞ்சம் கிழித்து ப்ளாஷ் மறித்தாலும் நல்ல பவுன்ஸ் ப்ளாஷ் கிடைக்கும். இது ரொமபவே சிறிய எள்ளுருண்டை !
சொக்காயி
அடுத்த பதிவு உங்களின் கேள்விகளுக்கு பதிலாய் போட்டு விடலாம்
முத்துலெட்சுமி ஷைலஜா
நன்றி.
நல்ல பதிவுதான்.
நம்ம கேமெராலே flash sl ன்னு ஒண்ணு வருது.
அதுலே என்ன மாதிரி பயன்னு சொல்லுங்க.
மேனுவலைப் படிக்கப் பொறுமை இல்லை(-:
//நிறைய prosumer காமிராக்களின் ப்ளாஷின் சக்தியை மட்டுறுத்த முடியும்//
மருத்துவரே, இது என்ன, பின்னூட்ட மட்டுறுத்தல் போலவா? :-))
ஆனந்த் சொல்லிட்டாருல்ல, இனி பேப்பரை மடித்து வைத்து, ஃப்ளாஷ் போட்டே எடுத்துறலாம்.
மருத்துவர் சொல்வதில் முற்றிலும் உடன் படுகிறேன். ஃப்ளாஷ் இல்லாவிட்டால் தேஜஸ் குறைகிறது. அப்புறம் போட்டோஷாப் கடை போட்டு, தேஜஸைக் கூட்ட வேண்டியுள்ளது.
குட்டிப் பாப்பாவுக்கு வேணும்னா, slow shutter sync, burst என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்!
சொக்காயி,
//lash போட்டு படம் எடுக்கும்போது, (சிலருக்கு மட்டும்), கண் மூடி விடுகிறதே, ஏன்? ஒரு கண் மட்டும், கண்ணடித்தாற்போல் பாதி மூடிவிடும்.//
இது கண்மூடுபவர்களோட பிரச்சனை.. காமிராவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
மாற்றுயோசனை...?
கண் சிமிட்டாதீங்கன்னு படம்பிடிக்கப்படுகிறவர்ட சொல்லலாம்கறத தவிர வேற எதுவுமே தோணலை..
சில சமயங்கள்ல எடுக்கப்படும் ஆங்கிளப் பொறுத்தும் கண் இமைகள் மூடியிருப்பதுபோலவும் விரிந்திருப்பது போலும் தோணலாம்னு நினைக்கிறேன்.
ஆனந்த்,
எள்ளுருண்டை நல்லாருக்கு.. ஆனா பிலிம் ரோல் வாங்கி கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாச்சு.. இனிமே எங்கேயாவது அட்டை கிடைக்குதான்னு பாக்கணும்... :)))
அக்கா,
//நம்ம கேமெராலே flash sl ன்னு ஒண்ணு வருது. //
அநேகமா Flash Slow Sync ஆகத்தான் இருக்கணும். சிம்பிளா சொல்லனும்னா நேரடியா ப்ளாஷ் போட்டு எடுக்கறதில என்ன பிரச்சனை எடுக்கப்படற ஆளோட முகம் bleach அடிச்சா மாதிரி இருக்கும். அவருக்கு பின்னாடி என்ன இருக்குன்னு பெரும்பாலும் தெரியாது. அதாவது depth இருக்காது. ஏதோ உயிரற்று அப்படியே உறைஞ்சா மாதிரி இருக்கும். இது ப்ளாஷோட குறை.
இதுக்கு மாற்று என்னன்னா Slow Sync.. இதுல ரெண்டு டைப் இருக்கு. Front and Rear Curtain. உங்க காமிரால இருக்குமே Party Mode or Night Mode அல்லது extreme Bulb Mode. அதாவது Long Exposure and flash.
Rear Curtain ஓட வேலை என்னன்னா.. நீங்க க்ளிக் அமுக்கினவுடனே ஒரு குட்டி ப்ளாஷ் விடும். அப்புறம் exposure time முடியறச்சே இன்னொரு ப்ளாஷ் விடும். இதுல என்ன நடக்கும்னா சப்ஜெக்டுக்கு பின்னாடி இருக்கறது ஓரளவுக்கு தெரியும். அதேபோல அதிக நேர எக்ஸ்போஷர்னாலே சப்ஜெக்டும் கொஞ்சம் dynamicஆ இருப்பாரு.
இத எழுத்துல விவரிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். உதாரணம் பார்க்கவாவது இந்த பக்கத்த க்ளிக்குங்க.
Flash ஓட பயன்பாடுகள் குறித்து விரிவாவே சொல்லிருக்காங்க.
Post a Comment