எனக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரிவதில்லை என்பதால் நான் அதற்குக் கண்ணாடி அணிகிறேன். ஆனால் கிட்டத்தில் இருப்பவைகளைப் பார்ப்பதற்கு கண்ணாடி தேவை இல்லை. இப்படி இருக்கையில் அருகில் இருக்கும் கண்ணாடியில் தொலைவில் இருக்கும் பொருட்களைக் காண்பதற்கு எதற்காக கண்ணாடி அணிய வேண்டி இருக்கிறது. அந்த கண்ணாடி அருகில்தானே இருக்கிறது?
வழக்கம் போல் இணையத்தை மேய்ந்து விட்டு அவருக்கு நான் தந்த பதில் இது. நீங்கள் அந்த கண்ணாடியை மட்டும் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் கண்களில் கண்ணாடி அணியத் தேவை இல்லை. ஆனால் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் தொலைதூர பொருள் ஒன்றின் பிம்பத்தைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு கண்ணாடி அணியத்தான் வேண்டும்.
அதற்குக் காரணம், நீங்கள் பார்க்கும் பிம்பம் அந்த கண்ணாடியின் மேற்புறத்தில் இல்லை. அந்த பிம்பமானது கண்ணாடியின் உட்புறத்தில் இருந்து பிரதிபலிக்கிறது. அந்த பிம்பம் கண்ணாடியின் உட்புறத்தில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்றால், அந்த பொருளுக்கும் கண்ணாடிக்கும் இருக்கும் தூரத்தின் அளவு உள்ளே இருக்கிறது. அதாவது அந்த பிம்பம் பிரதிபலிக்கும் வெளிச்சம் உங்கள் கண்களுக்கு வர பயணம் செய்ய வேண்டிய தூரம் உங்கள் கண்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் மட்டுமன்று. அது பயணம் செய்யும் மொத்த தூரம் அப்பொருளுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் + உங்கள் கண்ணுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம். அதாவது உங்கள் கண்ணில் இருந்து 1 மீட்டர் தொலைவில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் வழியாக 5 மீட்டர் தொலைவில் உள்ளதைப் பார்க்கவேண்டுமானால், உங்கள் கண்பார்வை 6 மீட்டர் வரை சுத்தமாக இருக்கவேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பொழுது நீங்கள் பார்க்கும் தூரம் உங்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரத்தில் இரு மடங்கு. அதாவது உங்கள் முகத்துக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பம் கண்ணாடியில் வர ஏதுவாக) + உங்கள் கண்ணிற்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பத்தைப் பார்க்க).
அதனால்தான் தொலைவில் இருக்கும் பொருட்களின் பிம்பத்தை அருகில் இருக்கும் கண்ணாடியில் பார்க்கும் பொழுது கூட நீங்கள் கண்ணாடியை அணிந்து கொள்ளத் தேவைப் படுகிறது.
படம் இணையத்தில் சுட்டது.
31 comments:
ஒரு சின்ன ப்ரேக்குக்கு அப்புறம் மீண்டும் விக்கி. வழக்கமான ஆதரவைத் தாங்கப்பா!!
//ஒரு சின்ன ப்ரேக்குக்கு அப்புறம் மீண்டும் விக்கி. வழக்கமான ஆதரவைத் தாங்கப்பா!! //
எவ்வித நிபந்தனையும் இன்றி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக்கிட்டு தானே இருக்கேன்... அப்புறம் என்ன? ;-)
மேட்டரு ஒரளவுக்கு ஏற்கனவே தெரிந்த விசயம் தான். ஆனா விளக்க சொன்னா அப்பீட்டு....
இனி யாரும் விளக்கம் கேட்டால் இந்த பதிவை கை காட்டலாம்.
தலைப்பை எல்லாம் நல்லா தான்ய்யா தேடி பிடிச்சு வைக்குறீங்க...
அட, நல்ல விளக்கம். சுட்டுப் போட்டதுக்கு நன்றி ;) !!
//எவ்வித நிபந்தனையும் இன்றி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக்கிட்டு தானே இருக்கேன்... அப்புறம் என்ன? ;-)//
புலி, உம்ம ஆதரவு இல்லாமலேயா!! அது பொதுவா எல்லாருக்கும் சொன்னது.
இந்த குணத்தால்தான் கண்மருத்துவர்கள் தற்காலங்களில் 6' அறைக்குள்ளேயே கண்சோதனையை முடித்துக் கொள்ளமுடிகிறது, நமக்குப் பின்புறம் உள்ள எழுத்துப்பலகையை முன்னால் உள்ள கண்ணாடி வழியாக பார்ப்பதினால். நான் சிறுவனாக இருந்த காலங்களில் கண்மருதுவரின் அறைகள் நீளமாக இருக்கும்.
வெளியூர் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
கண்ணாடி போட்டுக் கழட்டிவிட்டால் படிக்கக் கூட முடியாது. இந்த அழகில் கண்ணாடியில்லாமல் கண்ணாடியில் பார்க்கணும்னால் கொஞ்சம் ஆட்டம்தான்.
விக்கி விளக்கத்துக்கு நன்றி.
என்ன பார்வை உந்தன் பார்வை!!
பலருக்கும் தெரிந்த தகவல்தான் என்றாலும் மிகப்பலருக்கு இதில் தெளிவு இருப்பதில்லை.
ஒரு பிரபலமான புதிர்;
நிலைக்கண்ணாடியில் உங்கள் முழு உருவத்தையும் பார்க்க எவ்வளவு பெரிய கண்ணாடி வேண்டும்?
பதில்: உங்கள் உயரத்தில் பாதி இருந்தால் போதும். இந்த விடையும் நீங்கள் படத்தில் விளக்கியிருக்கும் அடிப்படையிலேயே இருக்கிறது.
//வழக்கமான ஆதரவைத் தாங்கப்பா..//
நாங்கல்லாம் ஆதரவை கையிலேயே வச்சுக்கிட்டுக் காத்துக்கிட்டேதான் இருக்கோம் .. உங்களத்தான் ரொம்ப நாளா ஆளே காணோம். உப்புமா கிண்ட போய்ட்டீங்களோ?
நல்ல ப்பதிவுங்க கொத்ஸ்
//நீங்கள் பார்க்கும் தூரம் உங்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரத்தில் இரு மடங்கு//
ஆஹ்ஹ்ஹ் இப்பவே கண்ண கட்டுதே
//வழக்கமான ஆதரவைத் தாங்கப்பா!! //
வழக்கமே அதிரும், ஸ்பெஷலா குடுத்தா?
கிட்டப்பார்வை மட்டும் தான் லேசர் சிகிச்சைல குணப்படுத்தமுடியுமா. சாளேஸ்வரம் (அ) வெள்ளெழுத்தை குணப்படுத்த முடியுமான்னு தெரிஞ்சா அதைப்பத்தி சொல்வீங்களா??
அருமையான தகவல். உண்மையிலேயே யோசிக்க வெக்கிற கேள்வி. அதுக்கேத்த விடை. எளிமையா படமெல்லாம் போட்டுச் சொல்லீருக்கீங்க. நன்றி.
//இன்னும் சொல்லப் போனால் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பொழுது நீங்கள் பார்க்கும் தூரம் உங்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரத்தில் இரு மடங்கு//
எளிமையாச் சொல்லி இருக்கீங்க கொத்ஸ்! குட்!
கண்ணாடி அணிந்து கொள்பவர்கள் ஷேவ் செய்யும் போது, கொஞ்சம் கிட்டக்க நின்று கொண்டு ஷேவ் செய்வதும் இதனால் தான் போலும்! :-)
/மேட்டரு ஒரளவுக்கு ஏற்கனவே தெரிந்த விசயம் தான். ஆனா விளக்க சொன்னா அப்பீட்டு....//
இங்கவும் அதுதான் நடந்தது. அவரு ஏன்னு கேட்ட உடனேதான் பொறி தட்டிச்சு.
//தலைப்பை எல்லாம் நல்லா தான்ய்யா தேடி பிடிச்சு வைக்குறீங்க...//
அது மட்டும்தானே தமிழ்மணத்தில் வருது. அதான் இப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு.
//அட, நல்ல விளக்கம். சுட்டுப் போட்டதுக்கு நன்றி ;) !!//
கதிரவன், படம் மட்டும்தான்யா அப்படியே சுட்டுப் போட்டது. விளக்கம் எல்லாம் பல இடங்களில் போய் தேடி எடுத்து எழுதியது! :))
//இந்த குணத்தால்தான் கண்மருத்துவர்கள் தற்காலங்களில் 6' அறைக்குள்ளேயே கண்சோதனையை முடித்துக் கொள்ளமுடிகிறது, நமக்குப் பின்புறம் உள்ள எழுத்துப்பலகையை முன்னால் உள்ள கண்ணாடி வழியாக பார்ப்பதினால். நான் சிறுவனாக இருந்த காலங்களில் கண்மருதுவரின் அறைகள் நீளமாக இருக்கும்.//
ஆமாங்க. நான் கூட இதை யோசிக்கவே இல்லை. இப்போ எல்லா கண் டாக்டர்களுமே இப்படி கண்ணாடி வழியாகத்தானே டெஸ்ட் பண்ணறாங்க.
//
//தலைப்பை எல்லாம் நல்லா தான்ய்யா தேடி பிடிச்சு வைக்குறீங்க...//
அது மட்டும்தானே தமிழ்மணத்தில் வருது. அதான் இப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு.
//
நல்ல பதிவு. தலைப்பு முக்கியம்னு கரெக்டா சொன்னீங்க கொத்ஸ்.
நல்ல கேள்வி.
நல்ல விளக்கம்.
கலக்குங்க!
//வெளியூர் சுதந்திர தின வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லிம்மா.
//கண்ணாடி போட்டுக் கழட்டிவிட்டால் படிக்கக் கூட முடியாது. இந்த அழகில் கண்ணாடியில்லாமல் கண்ணாடியில் பார்க்கணும்னால் கொஞ்சம் ஆட்டம்தான்.//
கண்ணாடி இல்லாம படிக்க முடியாதுன்னா அதுக்குக் காரணம் வேற. அது பத்தி தனியா பேசலாம்.
//விக்கி விளக்கத்துக்கு நன்றி.//
நன்றிக்கு நன்றி.
//இரவி said...
என்ன பார்வை உந்தன் பார்வை!//
பார்வை ஒன்றே போதுமே!
//பலருக்கும் தெரிந்த தகவல்தான் என்றாலும் மிகப்பலருக்கு இதில் தெளிவு இருப்பதில்லை.//
ஓகை, உண்மையில் நண்பர் கேள்வியைக் கேட்ட பின் தான் தேடிப் பார்த்துப் பதில் அறிந்து கொண்டேன். தேடும் பொழுது நீங்கள் கேட்ட கேள்வியும் பதிலும் கூட கண்ணில் பட்டது. நன்றி.
//நாங்கல்லாம் ஆதரவை கையிலேயே வச்சுக்கிட்டுக் காத்துக்கிட்டேதான் இருக்கோம் .. உங்களத்தான் ரொம்ப நாளா ஆளே காணோம். உப்புமா கிண்ட போய்ட்டீங்களோ?//
இல்லை தருமி சார். குழுவில் எல்லாருக்கும் ஒரே சமயத்தில் ஆணி புடிங்ககல்ஸ் அதிகமாயிட்டு. யாரு வேணும்னாலும் பதிவெழுதி அனுப்பலாம் அப்படின்னு சொன்னாலும் ரொம்ப வரக் காணும். :(
//ஆஹ்ஹ்ஹ் இப்பவே கண்ண கட்டுதே//
ஏம்பா விவ்ஸ்?
//கிட்டப்பார்வை மட்டும் தான் லேசர் சிகிச்சைல குணப்படுத்தமுடியுமா. சாளேஸ்வரம் (அ) வெள்ளெழுத்தை குணப்படுத்த முடியுமான்னு தெரிஞ்சா அதைப்பத்தி சொல்வீங்களா??//
சின்ன அம்மணி - எனக்குத் தெரிந்த வரையில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் அஸ்டிக்மேட்டிசம் என்ற மூன்று வகை கண் குறைபாடுகளுக்கு மட்டுமே லேசிக் என்ற லேசர் சிகிச்சை செய்கிறார்கள்.
மருத்துவர்களிடம் கேட்டு பதில் சொல்கிறேன்.
//உண்மையிலேயே யோசிக்க வெக்கிற கேள்வி.//
ஆமாம் ஜிரா. கேட்ட உடனே பதில் தெரிஞ்சாக வேண்டும் என்ற கேட்டகரி கேள்வி. பதில் சொன்ன பின்னாடிதான் சாப்பாடே இறங்கிச்சு. :))
//எளிமையாச் சொல்லி இருக்கீங்க கொத்ஸ்! குட்!//
தேங்க்ஸ்! :))
//கண்ணாடி அணிந்து கொள்பவர்கள் ஷேவ் செய்யும் போது, கொஞ்சம் கிட்டக்க நின்று கொண்டு ஷேவ் செய்வதும் இதனால் தான் போலும்! :-)//
அது ஒழுங்காக செய்திருக்கிறோமா எனப் பார்க்க. அதற்குத்தான் இப்பொழுது ஸ்பெஷலாக பெரிது படுத்திக் காட்டும் கண்ணாடிகள் வந்துவிட்டனவே.
//நல்ல பதிவு. தலைப்பு முக்கியம்னு கரெக்டா சொன்னீங்க கொத்ஸ்.//
ஆமாங்க சதங்கா. பெயர் மட்டும் கொஞ்சம் ஆர்வத்தைத் தூண்டும் விதமா வெச்சா வந்து பாக்கிறவங்க எண்ணிக்கை அதிகமாத்தான் இருக்கு. :))
//நல்ல கேள்வி.
நல்ல விளக்கம்.//
நன்றி சர்வேசன்.
//கலக்குங்க!//
எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான். :)
в итоге: отлично!! а82ч
Post a Comment