Wednesday, November 08, 2006

பெண்களே! நீங்க ப்ளஸ்ஸா? மைனஸா? -1

இந்த பதிவை எழுதியவர் கீதா சாம்பசிவம் அவர்கள்.


மஹேசனுக்கே தெரியாத விஷயம்!மக்கட் பிறப்புத் தான். வேறே என்ன? அது மட்டும் மஹேசனுக்கே தெரியாதாமே! ஆச்சரியமா இல்லை? ஆனால் அப்படித்தான் ஒரு பழமொழி எங்க அம்மா சொல்லுவார்கள். "மழை வரவும், மக்கட்பிறப்பும் மஹேசனுக்கே தெரியாது" அப்படின்னு. இப்போ மழை நல்லா வெளுத்துக் கட்டுது. ஒவ்வொரு வருஷமும் ஓரளவு மழை வெளுத்துக் கட்டுது. எது தப்பினாலும் இது மட்டும் தப்பாது. காலா காலத்தில் வந்துடும். ஆனால் குழந்தை பிறப்பு. அது மட்டும் நம்ம பூர்வ ஜென்ம புண்ணியம். கல்யாணம் ஆனா உடனேயே எல்லாரும் கேட்கும் கேள்வி விசேஷம் ஏதும் உண்டாங்கறது தான்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,செல்வக்களஞ்சியமே"ன்னு கொஞ்சவோ அல்லது "சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?"னு கேட்டுக் கொஞ்சவும் எல்லாருக்கும் ஆசைதான். ஆனால் எல்லாருக்கும் அது நிறைவேறுதா? இல்லை.

சிலருக்கு நிறைவேறாமல் போகிறது. உடலில் குறைபாடுகள் இல்லாதவர்களுக்குக் கூடக் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது. "டெஸ்ட் ட்யூப் பேபி" கூட முயன்றாலும் எல்லாருக்கும் சாத்தியம் ஆவது இல்லை. அதே மாதிரி வாடகைத் தாயும் இப்போ பிரபலம் ஆகி வருகிறது. அதிலேயும் எல்லாருக்கும் பலன் கிடைப்பது இல்லை. உண்மையில் பார்த்தால் இறைவன் விதித்தவருக்குத் தான் கொடுக்கிறான். அதில் மாற்றம் இல்லை இது வரை. கிடைக்கிறவங்களுக்கும் சரியான விதத்தில் குழந்தை பிறக்குதா?

அதுக்கும் சில பிரச்னைகள் இருக்கே? அதிலே ஒண்ணுதான் ரத்தப் பொருத்தம். அதைப் பத்தி மட்டும் ஓரளவுக்கு நாம் இப்போ பார்க்கப் போறோம்.

எனக்குப் படிக்கிற நாளிலேயே என்னோடது "ஓ" குரூப் ரத்தம்னுதெரியும். ஆனால் அப்போ அது Rh+ அல்லது - என்பது பற்றி எதுவும் தெரியாது. பின்னால் சில நிகழ்வுகள் மூலம் Rh- என்றால் குழந்தை பிறப்பில் பிரச்னை என்று தெரிய வந்தாலும் அது எல்லாம் சொந்தம் மூலம் கல்யாணம் ஆகிக் குழந்தை பெற்றுக் கொண்டவர்களாய்ப் போய் விட்டார்கள். ஆகவே இதில் பெரிய விஷயம் ஏதுவும் இல்லைனு யோசிச்சுப் பார்க்கவே இல்லை.

பின்னால் எனக்குக் கல்யாணம் ஆகி உடனே குழந்தை உண்டாகாதபோதும் இது பற்றிக் கவனம் செலுத்தவில்லை. அதுக்கு அப்புறம் குழந்தை உண்டாகிக் குழந்தை பிறந்து 3-ம் நாள் குழந்தை மஞ்சள் என்றால் அப்படி ஒரு மஞ்சளாக இருக்கவே எல்லாருக்கும் சந்தேகம் ஏன் இப்படி? என்று. ஆனால் என் கணவருக்கு அந்தச் சமயம் மஞ்சள் காமாலை நோய் இருந்த காரணத்தால் வீட்டில் இருந்த பெரியவர்கள் அதன் காரணமாய் இருக்கலாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் டாக்டர் வந்து பார்த்து விட்டு நான் Rh-குரூப், அதன் விளைவுதான் என்று உறுதிப் படுத்தினார். ஆனால் அவர் வந்து பார்த்து உறுதிப் படுத்துவதற்குள் குழந்தை பிறந்து 4 நாளுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. ஆகவே எனக்கு அப்போது உடனே போட வேண்டிய ஊசி போடமுடியாத நிலை. குழந்தைக்கு மட்டும் மருத்துவம் செய்தார்கள். தினமும் காலை வெயிலில் குழந்தையைப் போட்டுக் கொண்டு என் அம்மா உட்காருவார்கள். நான் எங்கேயோ ரூமில் இருப்பேன். குழந்தையின்ஆகாரத்தில் இருந்து அது குளிப்பது வரை எல்லாம் கட்டுப் பாடு. கிட்டத் தட்ட 45 நாள் இம்மாதிரிக் குழந்தையை வளர்த்து விட்டு ஒரு மாதிரியாக நானும் புக்ககம் வந்து விட்டேன். அப்புறம் எல்லாம் மறந்தும் போச்சு.

அதுக்கு அப்புறம் சில வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தை உண்டான சமயம் நாங்கள் ராஜஸ்தானில் இருந்த காரணத்தால் என் கணவர் முன்கூட்டியே என் பெற்றோரை வரவழைத்து என்னை அனுப்பி விட்டார். இஷ்டம் இல்லாமல்தான் போனேன் அப்போது, குழந்தை பிறந்த சமயம் விடிகாலை ஆதலால் அப்போது ஒண்ணும் தெரியவில்லை. அப்புறம் நல்ல சூரிய வெளிச்சம் வந்ததும் குழந்தையைப் பார்த்தால் ஒரே மஞ்சள் நிறம். துணி எல்லாம் மஞ்சள். உடனேயே எனக்குள் ட்யூப் லைட் எரிய நான் முதல் குழந்தைக்கும் வந்திருந்தது என்று சொன்னேன். நல்லவேளையாகக் குடும்ப டாக்டர் என்பதால் முதல் பிரசவமும் அதே ஆஸ்பத்திரி, அவங்களுக்கும் நினைவு இருந்தது. உடனேயே ரிஜிஸ்டரைப் பார்த்து விட்டு முன்னால் வந்த அதே குழந்தை நல சிறப்பு மருத்துவரை வரவழைத்தனர். அவர் பார்த்து விட்டு உடனேயே பழைய கதையும் தெரிந்ததும் இது Rh- விளைவுதான் என்று சொன்னார். உடனேயே முதல் பிரசவத்தில் ஊசி ஏன் போடவில்லை என்று கேட்டதற்குக் குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்கு மேல் ஆனதால் போட்டாலும் பயன் இல்லை என்று போடவில்லை என்று சொன்னார்கள். மஞ்சள் காமாலையுடன் பெரிதுபட்ட கல்லீரலுடன் (enlarged liver) பிறந்த என் குழந்தை அந்த ஆஸ்பத்திரியிலேயே ஒரு காட்சிப் பொருள் ஆனான். இதன் காரணம் என்னோட 'O' Rh Negative வகை ரத்தம் தான். இது ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை என்றாலும் இதைத் தடுக்க நிறையத் தற்காப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை நாளை தொடரும்.

DISCLAIMER; மருத்துவம் பற்றிய பதிவு என்பதால் முதலில் என் கணவர் யோசித்தார். மருத்துவம் தெரியாமல் எழுதுவது சரியாய் வருமான்னு. ஆனால் நான் பொதுவாய் எழுதுவதாயும், மற்றபடி வேறு மருத்துவ சம்மந்தமான குறிப்புக்கள் எல்லாம் வராது என்றும் சொல்லி இருக்கிறேன். ஆகவே இந்த ரத்தக் குறைபாடு உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியத் தகவல்கள் மட்டுமே நாளை கொடுக்கப் படும்.

டாக்டர்கள் என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் சிபாரிசு செய்வார்கள், நாம் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பொதுவான விஷயங்கள் மட்டும் இடம் பெறும்.

30 comments:

said...

எங்கள் வேண்டுகோளை ஏற்று பதிவு தந்து சிறப்பித்தமைக்கு கீதா அவர்களுக்கு நன்றி. இந்த பதிவின் இரண்டாம் பகுதி நாளை வெளி வரும்.

இது தகவலுக்கான ஒரு பதிவுதான். உங்கள் மருத்துவருடன் கட்டாயம் கலந்தாலோசியுங்கள். உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். எங்களால் முடிந்த அளவு சொல்கிறோம்.

said...

எனக்கும் ஓ நெகட்டிவ்தான் பிளட் குரூப்.

நீங்க சொல்ற பிரச்சனை ஓ- உள்ளவங்களுக்கு மட்டுந்தானா? இல்லை ஏ,பி,ஏபி- உள்ளவங்களுக்கும் வருமா?

said...

இது என்ன, நானும் O-ve தான். O -ve இருந்தால் தமிழ்பதிவர்களாகும் வாய்ப்பு அதிகமோ ;))
ஆண்களின் இரத்தவகை இந்த பிரச்சினைகளை உருவாக்காது, பெண்களுக்கு இருந்தால்தான் என நினைக்கிறேன்.

said...

நல்ல பதிவு கீதா. விக்கியில் இதுபோன்ற பதிவுகளும் வரச்செய்ய ஒரு முன்மாதிரி ஆகி விட்டீர்கள்.

ஜிரா, ஒரு பிரபல டாக்டர் இந்தக்குழப்பங்களைத் தீர்க்க வந்துகிட்டே இருக்கார். வெயிட்டீஸ்!

said...

ராகவனுக்கும், திரு மணியனுக்கும் ஒரு தகவல்,. ஆண்களுக்கு நெகட்டிவ் குரூப் இருந்தால் பிரச்னை இல்லை. பெண்களுக்கு நெகட்டிவும், ஆண்களுக்குப் பாசிட்டிவ் வகையாயும் இருந்தால் முன்னாலே கவனித்தல் நலம்.

said...

எனக்கும் ஓ நெகட்டிவ்தான் ப்ளட் குரூப். என் அக்காவுக்கும், அம்மாவுக்கும் அதேதான் ஆனால் குழந்தை பிறப்பில் எந்த பிரச்சினையும் இல்லையே!


//என்னோடது "ஓ" குரூப் ரத்தம்னுதெரியும். ஆனால் அப்போ அது Rh+ அல்லது - என்பது பற்றி எதுவும் தெரியாது. பின்னால் சில நிகழ்வுகள் மூலம் Rh- என்றால் குழந்தை பிறப்பில் பிரச்னை என்று தெரிய வந்தாலும்//

நீங்க சொல்ற இதுதான் எனக்கு புரியலை!

யாராவது தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்க!

said...

ஆண்களுக்கு நெகடிவ்-ஆக இருந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. (ஆண்கள் பேச்சு அம்பலம் ஏறுமா??! :)) )

இந்த Rh பாக்டர் குழந்தைகளை எப்படி / ஏன் பாதிக்கிறது என்பது விரிவாக அடுத்த பதிவில் வரும். அதில் இன்னும் தெளிவாக புரியும்.


நன்றி.

பதிவினை இட்ட கீதா சாம்பசிவத்திற்கு நன்றி.

said...

//என் அக்காவுக்கும், அம்மாவுக்கும் அதேதான் ஆனால் குழந்தை பிறப்பில் எந்த பிரச்சினையும் இல்லையே!//

தம்பி, அது மட்டுமில்லை இங்க பிரச்சனை.

அவங்க புருஷன் ரத்த வகையை பார்க்கணும். அவங்க பாஸிடிவ் வகையா இருந்தாதான் பிரச்சனையே. ஆனால் அது மட்டுமல்ல, பிறக்கப் போகும் குழந்தையின் ரத்தவகையைப் பார்க்கவேண்டும். அதுவும் பாஸிடிவாக இருந்தால் இந்த குழப்பங்கள் வர சாத்தியம்.

said...

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,

தாயின் ரத்த வகை நெகடிவ்வாகவும், பிறக்கப் போகும் குழந்தையின் ரத்த வகை பாஸிடிவாகவும் இருந்தால் இந்த பிரச்சனை வர சாத்தியம்.

இப்படி ஏதுவாக கணவரின் ரத்த வகை பாஸிடிவாக இருந்தால்தான் நடக்கும். ஆகவே கணவரின் ரத்த வகை பாஸிடிவாகவும் மனைவியின் ரத்த வகை நெகட்டிவாகவும் இருந்தால் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

said...

We had the same problem.. but Dr. had diagonsed it well before.. so My wife had that shot immediately after she gave birth to our kid...

Now every dr. does this blood check as a regular routine...So all we need to do is, go for regular check up.. better to be with a same Dr for better understanding..

said...

நல்ல பதிவு. இதைப்பற்றி முன்பு சிவசங்கரி ஒரு கதையில் எழுதியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். சமீபத்தில் எனது தங்கைக்கு RH -ve மற்றும் தங்கை கணவருக்கு RH +ve இருந்ததால் ரொம்பவே ஜாக்கிரதையாகத்தான் மருத்துவர்கள் பேறு காலத்தின் போது கவணித்துக் கொண்டார்கள்.

தொடரட்டும் விக்கிப் அங்கிள்/ஆண்ட்டி'ஸ் பணி. (கொத்ஸே சொல்லிட்டார்... நீங்கள் எல்லாம் மனசளவுளதான் பசங்கள்-ஆம்)

நன்றி

said...

நல்ல பதிவு கீதா மேடம். அதை இட்ட கொத்ஸுக்கும் பாராட்டுகள்.

ஓ நெகட்டிவ் கெடைக்கறதுக்கு ரொம்ப கஷ்டமான குரூப்னு கேள்வி பட்டுருக்கேன். இங்கே வந்து பாத்தா வலைப்பதிவாளர் ஆகனும்னா ஓ நெகட்டிவ் வேணும்னு சொல்ற அளவுக்குக் கொட்டிக் கெடக்குதேய்யா? ஒரு பதிவுக்கு வர கமெண்டுகள்லேயே இத்தனை ஓ நெகட்டிவ் குரூப் கொண்டவர்களா? எல்லாரோட பேரும் ஊரும் வாங்கி வச்சிக்கங்க கொத்ஸ். எப்பவாச்சும் உபயோகப்படும்.
:)

said...

பொதுவாக, இது போன்ற Rh பாக்டர் விழிப்புணர்வு மிகவும் குறைச்சலே நம்மிடத்தே.

ரொம்ப தெளிவாக இருக்கிறது இந்த பதிவு. இங்கு கொணர்ந்தமைக்கு நன்றி!!

said...

//kalpanapari said...

very informative post! //

நன்றி கல்பனா பாரி அவர்களே.

said...

//We had the same problem.. but Dr. had diagonsed it well before.. so My wife had that shot immediately after she gave birth to our kid...//

பிரச்சனை என்பதை விட இது ஒரு சிக்கல் எனச் சொல்லலாம். (A complication rather than a problem.) தக்க சமயத்தில் தெரிந்து கொண்டதால் உடன் சரிவர கவனிக்க முடிந்தது. மருத்தவர்கள் செய்யவில்லை என்றால் கூட அதற்கான பரிசோதனைகளை செய்ய நிர்பந்தப்படுத்துங்கள். அதுதான் நல்லது.

said...

//சமீபத்தில் எனது தங்கைக்கு RH -ve மற்றும் தங்கை கணவருக்கு RH +ve இருந்ததால் ரொம்பவே ஜாக்கிரதையாகத்தான் மருத்துவர்கள் பேறு காலத்தின் போது கவணித்துக் கொண்டார்கள்.//

இந்த விழிப்புணர்வு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.

//தொடரட்டும் விக்கிப் அங்கிள்/ஆண்ட்டி'ஸ் பணி. (கொத்ஸே சொல்லிட்டார்... நீங்கள் எல்லாம் மனசளவுளதான் பசங்கள்-ஆம்)//

யப்பா சாமி. நாங்க எல்லோருமே மனத்தள்வில் மட்டும்தான் என்றா சொன்னேன். எதோ ராமநாதன் மாதிரி பெருசுகள் இருப்பதால் அப்படிச் சொன்னேன். அவ்வளவுதான். :-D

said...

//நல்ல பதிவு கீதா மேடம். அதை இட்ட கொத்ஸுக்கும் பாராட்டுகள்.//

கீதா மேடத்துக்கு சொல்லுங்கள் போதும். அப்படியே சொன்னாலும் விக்கி பசங்களுக்குச் சொல்லுங்கள். எனக்கு என்ன தனியா...

//ஓ நெகட்டிவ் கெடைக்கறதுக்கு ரொம்ப கஷ்டமான குரூப்னு கேள்வி பட்டுருக்கேன்//

இங்க இருக்கிற எண்ணிக்கையைப் பார்த்தால் பாஸிடிவா இருக்கா? இந்தியாவில் இருப்பவர்கள் சேர்ந்து ஒரு ரத்ததான குழு ஆரம்பிக்கலாமே. இல்லை. இல்லை என் பெயர் எல்லாம் வைக்க வேண்டாம். நமக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது. :D

said...

//ரொம்ப தெளிவாக இருக்கிறது இந்த பதிவு. இங்கு கொணர்ந்தமைக்கு நன்றி!!//

நட்சத்திர வாரத்திலும் சிறிது நேரம் எடுத்து இங்கு வந்து பாராட்டியதற்கு நன்றி, தெக்கி.

said...

//DISCLAIMER; மருத்துவம் பற்றிய பதிவு என்பதால் முதலில் என் கணவர் யோசித்தார். மருத்துவம் தெரியாமல் எழுதுவது சரியாய் வருமான்னு.//

மிகவும் சரியாத் தான் வந்திருக்கு கீதாம்மா! விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு! பாராட்டுக்கள்!!

இப்பெல்லாம், சென்னையில் இந்தத் தகவல்களைப் பேறு காலத்திலேயே வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று என் தங்கை (மருத்துவர்) கூறினாள்! இப்படிச் செய்வதால் டெலிவரி முடிந்த உடனேயே, இயல்பாக அது system-க்குள் வந்து விடுகிறது! தவற விட்டோமோ என்ற பேச்சே எழ வாய்ப்பில்லை!

இங்கு அமெரிக்காவில் இது போல் முன்கூட்டிய நடவடிக்கை உண்டா என்று தெரியவில்லை!

கொத்ஸ்,
- பதிவுக்கு ஒர் + குத்து! :-)

said...

மணியன் சொன்னதுபோல வலைப்பதிவாளர் ஆகும் தகுதி எனக்கும்
இருக்கு. :-)

ஓ நெகெடிவ்தான் நாங்க ரெண்டு பேரும்.

சீக்கிரம் கோபாலை ஒரு பதிவு ஆரம்பிக்கச் சொல்லணும்:-)

said...

//மிகவும் சரியாத் தான் வந்திருக்கு கீதாம்மா! விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு! பாராட்டுக்கள்!!//

இந்த மாதிரி எழுதி எங்களை ஊக்குவிக்க இன்னும் நிறையா பேர் வரணும். அதாங்க எங்க ஆசை.

//தவற விட்டோமோ என்ற பேச்சே எழ வாய்ப்பில்லை!//

மிகவும் ஆரோக்கியமான முன்னேற்றம் இது. வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

//இங்கு அமெரிக்காவில் இது போல் முன்கூட்டிய நடவடிக்கை உண்டா என்று தெரியவில்லை!//

இங்க எல்லாம் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவின் வாரிசுகள். இதெல்லாம் செய்யாமலா இருப்பார்கள்? வழக்குக்குகளுக்குப் பயந்தாவது செய்து விடுவார்கள். தும்மினாலே ஸ்கேன் எடுக்கும் ஆட்கள் அல்லவா...

//கொத்ஸ்,
- பதிவுக்கு ஒர் + குத்து! :-)//

யப்பா சாமிங்களா, இது விக்கி பசங்க பதிவுப்பா. இதை இந்த மாதிரி நம்ம பதிவா ஆக்கிடாதீங்க. வர ஜனமும் வராம போயிடப் போகுது. குத்துக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

said...

மிகவும் பயனுள்ள ஒரு தகவலை சொந்த அனுபவத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்திய கீதா மேடம் நன்றிக்குறியவர்கள்..

தொடரட்டும் விக்கிப்பசங்க பணி

said...

//ஓ நெகெடிவ்தான் நாங்க ரெண்டு பேரும்.//

ஆனா இவ்வளவு பாஸிடிவ்வான ஆளா இருக்கீங்க! :)

கோபால் சார் பதிவு ஆரம்பிச்சா என்ன நடக்கும் தெரியுமில்ல. (எங்களுக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சிடும்.ஆமா. ஜாக்கிரதை)

said...

//தொடரட்டும் விக்கிப்பசங்க பணி//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேசன். எப்ப எங்களுக்கு ஒரு பதிவு எழுதித் தரப் போறீங்க? :)

said...

// மணியன் said...
இது என்ன, நானும் O-ve தான். O -ve இருந்தால் தமிழ்பதிவர்களாகும் வாய்ப்பு அதிகமோ ;)) //

மணியன் same sweet எங்க? :-)

// சுரேஷ் (penathal Suresh) said...
ஜிரா, ஒரு பிரபல டாக்டர் இந்தக்குழப்பங்களைத் தீர்க்க வந்துகிட்டே இருக்கார். வெயிட்டீஸ்! //

வந்துட்டாரே பெனாத்ஸ். அதையும் படிச்சிட்டேனே!!!!!!!!!!

// கைப்புள்ள said...
ஓ நெகட்டிவ் கெடைக்கறதுக்கு ரொம்ப கஷ்டமான குரூப்னு கேள்வி பட்டுருக்கேன். இங்கே வந்து பாத்தா வலைப்பதிவாளர் ஆகனும்னா ஓ நெகட்டிவ் வேணும்னு சொல்ற அளவுக்குக் கொட்டிக் கெடக்குதேய்யா? ஒரு பதிவுக்கு வர கமெண்டுகள்லேயே இத்தனை ஓ நெகட்டிவ் குரூப் கொண்டவர்களா? எல்லாரோட பேரும் ஊரும் வாங்கி வச்சிக்கங்க கொத்ஸ். எப்பவாச்சும் உபயோகப்படும்.
:) //

கைப்ஸ்...உண்மையிலேயே ஓ நெகட்டிவ் அரிய வகைதான். நானும் மணியனும் கீதாவும்தானே ஓ நெகட்டிவ் என்று சொல்லியிருக்கிறோம். முன்பெல்லாம் இரத்ததானம் செய்வேன். ஆனால் சொரியாசிஸ் வந்ததில் இருந்து இரத்ததானம் செய்வதில்லை.

said...

O +ve

said...

//கைப்ஸ்...உண்மையிலேயே ஓ நெகட்டிவ் அரிய வகைதான். நானும் மணியனும் கீதாவும்தானே ஓ நெகட்டிவ் என்று சொல்லியிருக்கிறோம். முன்பெல்லாம் இரத்ததானம் செய்வேன். ஆனால் சொரியாசிஸ் வந்ததில் இருந்து இரத்ததானம் செய்வதில்லை.//

நானும் ரெகுலரா ரத்ததானம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். இங்க வந்து எல்லாம் போச்சு. அந்த கதையை தனி பதிவா போடறேன்.

said...

மதுமிதாக்கா

நீங்களுமா? நானும்தான். நாமளெல்லாம் யூனிவெர்சல் டோனர்ஸ். கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் எங்கள் கரம்....:)

said...

என் ஏபி நெகடீவ் கதை படிச்சீட்டீங்களா? டாக்டர் ஐயா பதிவுல போட்டுட்டேன்

said...

இப்பதான் படிச்சேன் உஷாக்கா, அங்கயே கருத்து சொல்லறேன். :)