Saturday, November 18, 2006

மைக்ரோவேவில் தண்ணீர் சுட வைக்கலாமா?

பல விதமான கதைகள் நமக்கு மெயிலில் வருவதுண்டு. இக்கதைகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை, வெறும் கட்டுகதைகளே. அது போன்று வந்த இந்த மெயிலைப் பாருங்கள்.

"சில நாட்களுக்கு முன் காப்பி போடுவதற்காக என் மகன் மைக்ரோவேவ் அவனில் தண்ணீர் சுட வைத்தான். சுட வைத்த நேரம் முடிந்த பின் அதனை எடுத்த பொழுது நீர் கொதிக்கவில்லையே என அவன் பார்க்கும் பொழுது , அந்த தண்ணீர் அப்படியே எரிமலை போல் பொங்கி அவன் முகத்தில் அடித்தது. அதில் அவனுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. நீங்களும் மைக்ரோவேவில் தண்ணீர் கொதிக்க வைக்கும் பொழுது ஜாக்கிரதையாய் இருக்கவும்."

இது உண்மைச் சம்பவமா, கட்டுக்கதையா எனத்தெரியவில்லை. ஆனால் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவம் நடக்கச் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா? அதைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு. வழக்கம் போல் ஒரு வரியில் பதில் சொல்ல வேண்டுமானால்,

இச்சம்பவம் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளது, ஆனால் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

இனி சற்று விபரமாகப் பார்க்கலாம். இது நடக்கக் காரணம் 'அதிசூடேற்றம்' (SuperHeating). அப்படின்னா ஒரு திரவம், அதன் கொதிக்கும் சூட்டை விட அதிகமாகச் சூடாக்கப்படுதல். இப்படி நடக்கும் பொழுது மிக விரைவில் அந்த திரவம் ஆவியாகி விடும். அது திடீரென வெளியேறும் பொழுது அந்த திரவம் வெடிப்பது போலத் தெரிகிறது. ஆனால் இப்படி நடக்க சூழ்நிலைகள் சரியாக அமைய வேண்டும். இந்தப் படத்தைப் பாருங்களேன்.



இது எப்படி நடக்கிறது? நீரை சுட வைக்கும் பொழுது அதன் மாலிக்யூல்களின் கட்டமைப்பு (துடிகள் - தமிழ்) உடைந்து ஆவியாக மாறுகிறது. இப்படி ஒரே சமயத்தில் பல மாலிக்யூல்கள் இடையேயான கட்டமைப்பு உடைந்தால்தான் ஒரு சிறு குமிழி போல் ஆவி சேர்கிறது. இதில் மேலும் மேலும் ஆவி சேர்ந்து பெரிதாகி அது தண்ணீரின் மேல் மட்டத்திற்கு வந்து வெடித்து காற்றில் சேர்கிறது. இதுதான் சாதாரணமாக நீர் கொதிப்பதின் ரகசியம்.

ஆனால் சில சமயங்களில் அந்த முதல் ஆவிக்குமிழிகள் உண்டாகாமல் போவதுண்டு. அந்த சமயங்களில் நீர் கொதிநிலையையும் தாண்டி மேலும் சூடாவதுண்டு. அந்நிலையின் பெயர்தான் 'அதிசூடேற்றம்' (SuperHeating). அப்படி இருக்கும் பொழுது அந்த பாத்திரத்தை ஆட்டினாலோ அல்லது அதில் சர்க்கரை, காப்பித்தூள் என எதையாவது போட்டாலோ அது இந்த ஆவிக் குமிழிகள் உண்டாக ஏதுவாகிறது. இப்படி ஒரேடியாக இக்குமிழிகள் உண்டாகி மேலே வருவதால், அது ஒரு வெடிப்பு போல தோன்றுகிறது. இது மைக்ரோவேவில் உண்டாக சாத்தியங்கள் அதிகம். ஏனென்றால் இங்கு தண்ணீர் இருக்கும் பாத்திரம் சூடாகாமல் மைக்ரோவேவ் கதிர்கள் நேராக தண்ணீரைச் சூடாக்குவதினால் இது போல ஆகலாம்.

இப்படி ஆக வேண்டும் என்றால், தண்ணீர் கொதிக்க வைக்கப்படும் பாத்திரம் கண்ணாடிப் பாத்திரங்கள் போல் மிக வழவழப்போடு இருக்கவேண்டும். தண்ணீர் சாதாரணமாக கொதிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட அதிக நேரம் சுட வைக்கப் பட வேண்டும். பாத்திரத்தில் ஒரு சிறிய கீறல் இருந்தால் கூட இது போல் நடக்காது.

இது போல் நடக்காமலிருக்க
  • தண்ணீரை கொதிக்க வைக்கும் பொழுது அதற்குண்டான நேரத்தை விட அதிகம் வைக்க வேண்டாம்.
  • மைக்ரோவேவிலேயே ஒரு நிமிடம் விட்டு விட்டு, அதன் பின் எடுங்கள்.
  • வெளியே எடுத்த பின் அதில் காப்பி, சர்க்கரை போன்றவற்றை போடும் பொழுது முடிந்த அளவு விலகி நின்று கொள்ளுங்கள்.
  • ஒரு மரத்தாலான கலப்பான் (அதாங்க Stirrer) ஒன்றை தண்ணீரில் போட்டு அதன் பின் கொதிக்க வையுங்கள்.

கேள்வியை முன் வைத்த Sridhar Venkat அவர்களுக்கு நன்றி.

மேலும் விபரங்களுக்கு

சுட்டி 1
சுட்டி 2
சுட்டி 3

44 comments:

said...

முதல் தடவையா விடியோ எல்லாம் முயன்று இருக்கேன். சரியா வருதான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா.

said...

கவனமா இருந்தா பிரச்சனை இல்லை.
நீங்க கொடுத்த குறிப்புகள் பயனுள்ளவை.

பால் சிலசமயம் இப்படி ஆகும் ச்சான்ஸ் இருக்கு.



வீடியோ வருது

said...

கொத்ஸ்,
உண்மையாலுமே பயனுள்ள தகவல்..

இந்த மாதிரி மெயிலில் ஃபார்வேர்ட்கள் எதையுமே நான் பெரும்பாலும் நம்புவதில்லை... அதனால் இதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமலிருந்தேன்.

இனி உஷாராக இருப்பேன் :-)

said...

வீடியோ சூப்பரா வொர்க் ஆகுதுங்க கொத்ஸ்! பாவம் மனுஷன் ஏதோ கப்புக்குள்ளே போட்டாரு! பொங்கிடுச்சு போங்க!

நல்ல குறிப்பு கொடுத்திருக்கீங்க!
அதுவும் சின்ன புள்ளைங்கெல்லாம் அம்மா வீடு வருவதற்குள் மைக்ரோவேவ் ஆபரேட் செய்யும் இந்த காலத்துல, விக்கிப் பையனின் குறிப்பு, அனைவருக்கும் பயனுள்ள ஒன்று! நன்றி!

said...

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.

said...

பெரும்பாலும் சோம்பேறித்தனத்தால் மைக்ரோவேவில் இருக்கும் preset Quick cook menu பொத்தான்களில் Pizza/Defreeze/popcorn என்பதில் ஏதாவது ஒன்றினை ஒருமுறை அழுத்தி தண்ணீரை சூடாக்குவது வாடிக்கையாக பெரும்பாலோர் செய்வது.

இந்த preset Quick cook menu எல்லாமே குறைந்தது 3நிமிடங்கள் கொண்டது.

ஒருகப் தண்ணீருக்கு 40 செகண்ட் போதும். ஆனால் வேறுசிந்தனையிலோ/ பேச்சுவாக்கிலோ மறந்து விடுகின்ற போது கூடுதல் நேரம் தண்ணீர் சூப்பர் ஹீட் செய்யப்படுவது நிகழும் வாய்ப்பு இருக்கிறது.

கீ பேட் வழியே 40 செகண்ட் இன்புட்டினால் இன்புறலாம்!

மை 2 சென்ட்ஸ்

said...

நன்றி! பயனுள்ள தகவல் கொத்ஸ்

said...

இலவசம், நானும் சில நாட்களுக்கு முன்னடி சில ஃபார்வர்ட் மெயில் பார்த்தேன் இதை பத்தி.. உங்க குறிப்புகள் பயனுள்ளதா இருக்குங்க இலவசம்

said...

நல்ல தகவல்தான் கொத்ஸ். மைக்ரோவேவில் வெறுந்தண்ணி வெக்கக்கூடாது மட்டுமில்லை...முட்டையையும் அப்படியே வெக்கக் கூடாது. வெச்சா...படார்தான். அப்புறம் மைக்ரோவேவைத் கழுவ வேண்டியதுதான்.

அதே போல உருளைக் கெழங்கையும் அப்படியே வைக்கக் கூடாது. வெச்சா? அத வெச்சு அடுத்தவங்க மண்டைய ஒடைக்கலாம்.

said...

நல்ல ஆராய்ச்சி கொத்ஸ்.

said...

//பால் சிலசமயம் இப்படி ஆகும் ச்சான்ஸ் இருக்கு.//

பால் நல்லா நுரைக்குமே. அதுல கூடவா இப்படி ஆகும்?

said...

//இந்த மாதிரி மெயிலில் ஃபார்வேர்ட்கள் எதையுமே நான் பெரும்பாலும் நம்புவதில்லை... அதனால் இதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமலிருந்தேன்.//

வெ.பை, நானும் அப்படித்தான். ஆனால் சில சமயம் கொஞ்சம் கூகிளாண்டவரிடம் கேட்கறது. அவரு ஜாக்கிரதையா இருன்னு சொன்னா இருந்துக்கவேண்டியதுதானே!

said...

//பாவம் மனுஷன் ஏதோ கப்புக்குள்ளே போட்டாரு! பொங்கிடுச்சு போங்க!//

அட இவரு தெரிஞ்சேதான் பண்ணறாருங்க. அவரு போட்டது ஏதோ மாயப் பொடி எல்லாம் இல்லை. நம்ம நெஸ்கபேதான். அதுக்கே எப்படிப் பொங்குது பாருங்க.

//அதுவும் சின்ன புள்ளைங்கெல்லாம் அம்மா வீடு வருவதற்குள் மைக்ரோவேவ் ஆபரேட் செய்யும் இந்த காலத்துல,//

அதுக்குதாங்க இந்த குறிப்பு. ஒரு மரக்கலப்பான் ஒண்ணு போட்டு கொதிக்க வைக்க சொல்லிக்குடுத்துட்டா பிரச்சனையே இல்லை பாருங்க. பசுமரத்தாணி!

said...

//பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி. //

நன்றி கணேசன்!

said...

//ஒருகப் தண்ணீருக்கு 40 செகண்ட் போதும். //

ஹரிஹரன், நீங்க சொல்வது சரிதான். ஒண்ணே ஒண்ணு. இந்த 40 செகண்ட் அப்படிங்கறது அந்த அவனின் சக்திக்கேற்ப மாறுபடும். அதனால அந்த தயாரிப்பாளர் கொடுத்து இருக்கும் குறிப்புகளை நல்லா படிக்க வேண்டியது அவசியம்.

said...

நன்றி திரு. திரு அவர்களே!

(உங்களை திருதிரு என திட்டவில்லை. ஒரு ஜாலிக்குதான். :-D !)

said...

நன்றி வைசா! வாய்ப்பு குறைவுதான். ஆனால் இதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது எனத் தெரிந்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவே இந்தப் பதிவு.

said...

நன்றி கார்த்திகேயன்!

said...

//நல்ல தகவல்தான் கொத்ஸ். //

நன்றி ஜிரா.

//மைக்ரோவேவில் வெறுந்தண்ணி வெக்கக்கூடாது மட்டுமில்லை...//

யப்பா ராசா, நான் தண்ணி வைக்கக்கூடாதுன்னா சொன்னேன்? கொஞ்சம் நல்லா படிங்கய்யா. கொஞ்சம் எச்சரிக்கையோட இருங்கன்னு சொல்லி இருக்கேன். அதுக்கு தேவையான நேரத்தை விட அதிகம் வைக்க வேண்டாம் எனத்தானே சொன்னேன்.

//முட்டையையும் அப்படியே வெக்கக் கூடாது. வெச்சா...படார்தான். அப்புறம் மைக்ரோவேவைத் கழுவ வேண்டியதுதான்.//

ஆமாம். முட்டை சூடாகும் பொழுது அதன் ஓடு சூடாகாமல் அதன் உள் இருக்கும் திரவங்கள் மட்டும் சூடாகிறது. அதில் வரும் ஆவி வெளியே போகாமல் வெடித்து விடுகிறது. ஆனால் இப்பொழுது முட்டை வேக வைக்க தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட பாத்திரங்கள் கிடைக்கிறது தெரியுமா?

//அதே போல உருளைக் கெழங்கையும் அப்படியே வைக்கக் கூடாது. வெச்சா? அத வெச்சு அடுத்தவங்க மண்டைய ஒடைக்கலாம். //

இல்லை. நீங்கள் சொல்வது சரியில்லை. உருளைக்கிழங்கை வேக வைக்கலாம். கத்தியாலோ அல்லது ஒரு ஊசியாலோ பல முறை கிழங்கைக் குத்திவிட்டு வேக வையுங்கள் நன்றாக வேகும். முட்டைக்கு கூறியது போல் ஆவி வெளியில் வர இது வகை செய்யும். உருளைக்கிழங்கும் நன்றாக வேகும்.

said...

நன்றி குமரன். :)

said...

இந்த வெறுந்தண்ணி இருக்கே அது டெஞ்சர் தான்

அதோட சோடா, தம்ஸப் போன்றவைகளை கலந்தால்தான் டேஸ்ட் அண்ட் சேப்

எதாவது தப்பா சொல்லிட்டேனா இங்கே )))))

said...

நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டம் ஒன்று அளித்துள்லார்.

//நீரை சுட வைக்கும் பொழுது அதன் மாலிக்யூல்கள் (துடிகள் - தமிழ்) உடைந்து ஆவியாக மாறுகிறது. //

இது சரி இல்லை. மாலிக்யூல்கள் இடையே உள்ள ஹைட்ரஜன் இணைப்புகள்தான் ஆவியாகின்றன. அந்த மாலிக்யூல்கள் உடைவதனால் இல்லை என கூறியிருக்கிறார்.

இதனைத் திருத்திப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவலை அனுப்பிய நண்பர் அவர் பெயரையோ அவரது பின்னூட்டத்தையோ வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதனால் வெளியிடவில்லை. (அவர் ஏன் வெளியிட வேண்டாம் எனச் சொன்னார் என்பதும் தெரியவில்லை.)

இது போன்ற தவறுகள் இல்லாமல் பதிவுகள் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். கட்டாயம் எங்களால் ஆன அளவு முயல்வோம் என சொல்லிக் கொள்கிறேன். அதே சமயம், இந்த தளமே அனைவரும் வந்து பங்கு பெற்று சரியான தகவல்கள் பரிமாறிக் கொள்ளத்தான். அதனால் தவறுகள் இருந்தால், சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம்.

நண்பர் மெயில் ஐ.டி. அளித்தார் என்றால் தொடர்பு கொள்கிறோம்.

said...

//எதாவது தப்பா சொல்லிட்டேனா இங்கே ))))) //

நீங்க தப்பா சொல்லுவீங்களா? ரொம்பவே சரியாத்தான் சொல்லி இருக்கீங்க! :-D

said...

அதெல்லாம் சரி விக்கி, மைக்ரோ வேவ் பயன் படுத்துறதுனால புற்று நோய் வருவத்றகு வாய்ப்புகள் இருக்கு சொல்றாங்களே, அப்படியா?

என்ன இருந்தாலும், நான் அதிகபட்சம் அதனைப் பயன் படுத்துவதை குறைத்துக் கொள்கிறேன்...

said...

//
நீரை சுட வைக்கும் பொழுது அதன் மாலிக்யூல்கள் (துடிகள் - தமிழ்) உடைந்து ஆவியாக மாறுகிறது
//

Free mason (இ.கொ இங்கிலீசில்!!),

மூலக்கூறுகள் உடைவதில்லை, மூலக்கூறுகள் கட்டமைப்பு தான் உடைகிறது.

மூலக்கூறுகள் உடைந்தால் அனு தான் மிஞ்சும்.

said...

மாலிக்யூல் உடைவது என்பது தவறு. இங்கு வேதியியல் மாற்றம் எதுவும் நிகழ்வதில்லை. குறிப்பிட்ட அளவுக்குமேல் (வெப்ப)சக்தி ஊட்டப்பட்டபின் தண்ணீரால் திரவநிலையில் இருக்க முடியாது. அதன் அடுத்த நிலையான வாயு நிலையில்தான் இருக்க முடியும்.(எல்லா பொருளுக்கும் இது பொதுவாக பொருந்தும். பொருளுக்கு ஏற்றவாறு வெப்பநிளை மாறுபடும்) ஆனால் சில விதப்பான காரணங்களால் திரவநிலையிலே தொடர்வதை super heated condition என்கிறோம். இது சாதாரண முறையில் சூடேற்றும்போது நிகழ்வதில்லை. நுன்னலை அடுப்புகளில் அரிதாக நிகழ்கிறது.

பொங்குவதற்குக் காரணம், வாயுநிலைக்குப் போவதற்கு வழி கிடைத்தபின் எல்லா குமிழிகளும் ஒரே நேரத்தில் வெளியேற முயல்வதுதான்.

எல்லோருக்கும் பாதி பின்னூட்டத்தைப் படிக்கும்போதே தூக்கம் வந்திருக்குமே!

said...

1.குளிப்பதற்கு வெந்நீர் போட முடியுமா?

2.பெரிய அளவில் ஓவன்கள் உள்ளனவா?

said...

//மைக்ரோ வேவ் பயன் படுத்துறதுனால புற்று நோய் வருவத்றகு வாய்ப்புகள் இருக்கு சொல்றாங்களே, அப்படியா?//

இந்த மாதிரி நிறையா பேச்சு இருக்கு. நான் படித்த அளவில் விஞ்ஞானபூர்வமாய் இதுக்கு ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

உபயோகிப்பதில் தவறெதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.

said...

//மூலக்கூறுகள் உடைவதில்லை, மூலக்கூறுகள் கட்டமைப்பு தான் உடைகிறது.

மூலக்கூறுகள் உடைந்தால் அனு தான் மிஞ்சும்.//

வஜ்ரா, வருகைக்கு நன்றி. மற்றொரு நண்பர் ஒருவர் இதனை குறிப்பிட்டு சொன்னார். அதனை பதிவு செய்து விட்டேன். இப்பொழுது பதிவிலும் மாற்றுகிறேன்.

எல்லா பதிவுக்கும் வாருங்கள். தப்புகள் இருந்தால் திருத்துங்கள். அனைவரும் கற்றுக் கொள்ளலாம். நன்றி.

said...

//எல்லோருக்கும் பாதி பின்னூட்டத்தைப் படிக்கும்போதே தூக்கம் வந்திருக்குமே!//

இல்லை ஐயா. நன்றாக விளக்கி இருக்கிறீர்கள். மாலிக்க்யூல்கள் உடைவதென்றால் அது ஒரு வேதியல் நிகழ்வு. அதாவது Chemical Reaction. அது இங்கு நிகழ்வதில்லை. இங்கு தண்ணீர் சூடேறி திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுகிறது. இது மாலிக்யூல்கள் இடையேயான கட்டமைப்பு கலைவதால் நிகழ்வது. என் புரிதல் சரிதானே?

said...

1.குளிப்பதற்கு வெந்நீர் போட முடியுமா?

போட முடியும். ஆனால் அது பற்றி குளிப்பவர்கள் அல்லவா கவலைப்பட வேண்டும். உமகென்ன?

2.பெரிய அளவில் ஓவன்கள் உள்ளனவா?
அதை உச்சரிக்கும் பொழுது அவன் எனச் சொல்ல வேண்டும் ஓவன் எனச் சொல்வது சரியல்ல. உங்கள் கேள்விக்குப் பதில் உள்ளன. ஆனால் எவ்வளவு பெருசு என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் தெரியாது. :)

said...

கடையில போயி காபி வாங்கி குடிக்கறது பெட்டரு.

இவ்ளோ ரிஸ்க் எடுத்து ஒரு காபி குடிக்கத்தான் வேணுமா?

சரி உங்களுக்காக ஒரு கேள்வி காத்துகிட்டு இருக்கு.

http://umakathir.blogspot.com/2006/11/blog-post_21.html

ஒரு நல்ல வழி காட்டுங்க பசங்களா(???) புண்ணியமா போகும் உங்களுக்கு!

said...

வீடியோவும் நன்றாக வந்திருக்கிறது.நீங்கள் சொல்லவந்த தகவலும் அழுத்தமாக நன்றாக வந்திருக்கிறது

said...

பின்னூட்ட விளையாட்டில் காலத்தை வீணடித்துக் கொண்டிருந்தவரிடமிருந்து வலைபதிவுலகிற்கு ஒரு நல்ல பரிசு இந்த தளம். உங்கள் மெனக்கெடல், கூகுளாண்டவர் அருள் இருந்தாலும், பாராட்டுக்குறியது. விக்கிபீடியா போல அனைவரும் பங்கேற்றால் பிழைகள் வேகமாக களையப்படும்.அதனை இப்பதிவில் காண மகிழ்ச்சி.

said...

தம்பி, சொல்லிடீங்க இல்ல. கவலையை விடுங்க. நம்ம ஆளுங்க உங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்லுவாங்க.

அதுக்காக ஒரு தனி பதிவு போடறது கொஞ்சம் ஓவராத் தெரியலை?

said...

சுப்பையா சார்வாள், வந்து இந்த மாதிரி பாராட்டுகள் தந்து ஊக்குவித்ததற்கு நன்றி. எல்லாப் பதிவுக்கும் இந்த மாதிரி வாங்க.

said...

//பின்னூட்ட விளையாட்டில் காலத்தை வீணடித்துக் கொண்டிருந்தவரிடமிருந்து வலைபதிவுலகிற்கு ஒரு நல்ல பரிசு இந்த தளம்.//

மணியன், நம்மளை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே?! அந்த மாதிரி பின்னூட்ட விளையாட்டு விளையாடும் பொழுதும் இந்த மாதிரி நல்ல விஷயங்கள் நிறையா சொல்லி இருக்கோம். அங்க இருந்து வந்ததுதான் இது.

All work and no play makes Jack a dull boy. Jack மட்டுமில்லை. நாமளும்தானே. அதான் அந்த மாதிரி ஒரு விளையாட்டுக்குள்ள நம்ம சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லறது.

said...

//உங்கள் மெனக்கெடல், கூகுளாண்டவர் அருள் இருந்தாலும், பாராட்டுக்குறியது. //

அவர் அருள் இன்றி அணுவும் அசையாதே. அவரை நம்பித்தானே இந்த தளமே.

//விக்கிபீடியா போல அனைவரும் பங்கேற்றால் பிழைகள் வேகமாக களையப்படும்.அதனை இப்பதிவில் காண மகிழ்ச்சி. //

அதாங்க எங்க ஆசையும். இந்த மாதிரி நிறையா பேர் வந்து அவங்களுக்குத் தெரிஞ்சதைச் சொன்னா எல்லாருக்கும் புதுத் தகவல்கள் கிடைக்கும்.

நன்றி மணியன்!

said...

இலவசக்கொத்தனார்!

மிகப் பயனுள்ள தகவல். பரிமாற்றத்துக்கு மிக்க நன்றி.

said...

நன்றி மலைநாடான். மற்ற பதிவுகளையும் படிச்சு கருத்து சொல்லுங்க.

said...

// இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசா, நான் தண்ணி வைக்கக்கூடாதுன்னா சொன்னேன்? கொஞ்சம் நல்லா படிங்கய்யா. கொஞ்சம் எச்சரிக்கையோட இருங்கன்னு சொல்லி இருக்கேன். அதுக்கு தேவையான நேரத்தை விட அதிகம் வைக்க வேண்டாம் எனத்தானே சொன்னேன். //

அட...அப்படி மெனக்கெட்டு மைக்ரோவேவ் ஓவன்ல தண்ணி வெச்சு என்ன நடக்கப் போகுது. தண்ணிக்கெல்லாம் ஸ்பெஷலைஸ்டு சாமாங்கள் வந்தாச்சுல்ல.

// ஆமாம். முட்டை சூடாகும் பொழுது அதன் ஓடு சூடாகாமல் அதன் உள் இருக்கும் திரவங்கள் மட்டும் சூடாகிறது. அதில் வரும் ஆவி வெளியே போகாமல் வெடித்து விடுகிறது. ஆனால் இப்பொழுது முட்டை வேக வைக்க தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட பாத்திரங்கள் கிடைக்கிறது தெரியுமா? //

தெரியாதே...முட்டைய வேக வெக்கிறத விட...ஆம்லெட் போடனும். வேக வெச்சாச்சுன்னா கொழம்புல போடனும்...அப்பத்தான் ஒரு அது..அது அது..

// //அதே போல உருளைக் கெழங்கையும் அப்படியே வைக்கக் கூடாது. வெச்சா? அத வெச்சு அடுத்தவங்க மண்டைய ஒடைக்கலாம். //

இல்லை. நீங்கள் சொல்வது சரியில்லை. உருளைக்கிழங்கை வேக வைக்கலாம். கத்தியாலோ அல்லது ஒரு ஊசியாலோ பல முறை கிழங்கைக் குத்திவிட்டு வேக வையுங்கள் நன்றாக வேகும். முட்டைக்கு கூறியது போல் ஆவி வெளியில் வர இது வகை செய்யும். உருளைக்கிழங்கும் நன்றாக வேகும். //

கொத்சு...நான் என்ன சொல்லீருக்கேன். அப்படியே வெக்கக் கூடாதுன்னுதான. குத்தி வெக்கக் கூடாதுன்னா சொல்லீருக்கேன். என்னதான் ஃபோர்க் வெச்சி உருளைய குத்தி வெச்சாலும்...ஓவன்ல செஞ்ச உருளக்கெழங்கு சுமார்தான்.

கோழி வெக்கும் போது கன்வென்ஷனும் கிரில்லும் பயன்படுத்துறது நல்லது. குறிப்பா டிரை ஐட்டங்கள் செய்றப்போ. ஏன்னா...எலும்பு பக்கத்துல மொதல்ல வேகும். வெளிய நேரமாகும். சரியா கவனிக்கலைன்னா..வெளிய வெந்தும்..உள்ள சவ்வுன்னும் இருக்கும்.

said...

ஆமாம் ஜிரா, பொதுவாகவே எனக்கு சாதரண அவனில்தான் சமைக்கப் பிடிக்கும். சூடு பண்ணவும் வேக வைக்கவும்தான் மைக்ரோவேவ் அவன். அதுலயும் அப்பளம் எல்லாம் எண்ணெய் இல்லாம செய்யலாம். அம்புட்டுதான்.

said...

இலவசனாருக்கு,

தாமதமாக வந்ததற்காக முதலில் எனது மன்னிப்புகள். இந்தப் பதிவை நான் இப்பொழுதுதான் கவனித்தேன் (இட்லி வடையார் வழியாக).

மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். மைக்ரோவேவ்-இன் பயன்பாடு அதிகரித்திருக்கும் இந்த கால கட்டத்தில் இந்த மாதிரி தகவல்கள் / விளக்கங்கள் மிகத் தேவை.

இன்னும் நிறைய கேள்வியோடு வருகிறேன் மீண்டும்.

மிக்க நன்றி!!!

said...

ஸ்ரீதர் வெங்கட்,

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க இல்ல, அதான் வேணும்.

இந்த பக்கத்தை புக்மார்க் பண்ணி வெச்சுக்குங்க.

கேள்விகளுக்குன்னு தனி பக்கம் ஒண்ணு போட்டாச்சு பாருங்க.