தருமியின் கேள்வி: பால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள்?
இந்தக்கேள்வியை ஒரு இயந்திரவியல் பொறியாளரிடம் கேட்டால் 3 மணிநேரம் பேசுவார், ஒரு ஆசிரியரிடம் கேட்டால் 5 மணிநேரம் பேசுவார். இரண்டும் கலந்த என்னிடம் கேட்டால்? முடிவே இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பேன்:-)
முதலில் பேரிங்குகள்:
எந்த இயந்திரத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் இயங்கும், இயங்காப் பொருள்கள் (moving & Stationary) கலந்தே இருக்கும். மின்விசிறியை எடுத்துக்கொள்ளுங்கள் - அதன் பிளேடுகளும், பிளேடுகளைத் தாங்கும் மோட்டாரும் சுற்றுகின்றன, ஆனால் உத்தரத்தில் மாட்டியிருக்கும் ட்யூப் சுற்றுவதில்லை.. அல்லவா?
இயங்குபொருளுக்கும், இயங்காப்பொருளுக்கும் இடையே உள்ள ஒப்பு இயக்கம் (Relative Motion), உராய்வையும்(Friction), தேய்மானத்தையும் (wear) அதிகப்படுத்தும். கடினமானது (high Hardness) தேயாது, கடினம் குறைவானது (low Hardness) தேயும். தேய்மானம் காரணமாக மாற்றவேண்டிவரும்போது, அதன் விலை பயமுறுத்தும். எனவே, தேவை ஒரு குறைந்த விலையில் மாற்றப்படக்கூடிய ஒரு தியாகி (sacrificial material).
நூற்றுக்கணக்கான வகையில் பேரிங்குகள் இருந்தாலும், அவற்றை இரண்டு பெரிய வகைகளில் பிரிக்கலாம். உராய்வு வகை (friction), உராயா வகை(anti friction).
உராய்வு வகை பேரிங்குகள், இயங்கும் பொருளோடோ, இயங்காப் பொருளோடோ கச்சிதமாக (tight fit)இணைக்கப்பட்டு, மற்றதுடன் உராயும், அதன் மூலம் ஏற்படும் தேய்மானத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு
கடினம் குறைவானதாக இருப்பதால், இது மட்டுமே தேயும். ஆயுள் முடிந்தவுடன் மாற்றப்படும். இவ்வகை பேரிங்குகள் உய்வு எண்ணெய் (Lubricating Oil)இல்லாமல் இயங்காது. எஞ்சின்களில் உள்ள பெரும்பாலான பேரிங்குகள், புஷ்ஷிங்குகள் இவ்வகையைச் சார்ந்தனவே. (எனவேதான் எஞ்சினில் எண்ணெய் இல்லாமல் போனால் உடனடியாக - 2-3 நிமிடங்களுக்குள் பெரிய பழுது ஏற்பட்டு விடுகிறது).
உராயா வகை, சுற்றும் பொருளுடனும், சுற்றாப்பொருள் இரண்டுடனும் கச்சிதமாகப் (tight fit)பொருத்தப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட பேரிங்குகளில் மூன்று முக்கிய பாகங்கள் - இயங்குபொருளுடன் ஒரு பகுதி,(Inner Race) இயங்காப்பொருளுடன் இன்னொன்று(outer Race), இரண்டுக்கும் இடையில் தேய்வதற்கென்றே உள்ள பந்துகள் (Balls / Rollers)) (அல்லது உருளைகள் - இதிலும் பலவகைகள் உண்டு). இயக்கத்தின் சக்தி எந்தத் திசையிலிருந்து பாதிக்கும் என்பதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட பலவகைகள் - பால் பேரிங், டேப்பர் ரோலர் பேரிங், த்ரஸ்ட் பேரிங்.. என்றெல்லாம் பல வகைகள். படம் பாருங்கள்.
\n \n
இப்போது, கேள்விக்கு வருவோம். பேரிங் எப்படித் தயாரிக்கப்படுகிறது? மூன்று பாகங்களும் தனித்தனியாக தயாரிக்கப்படுகிறது. வெளி உருளை(outer race), உள் உருளை(inner race) இரண்டும் பழைய காலத்தில் லேத், போரிங் மெஷின் போன்றவற்றில் தயாரிக்கப்பட்டன. இப்போதெல்லாம் இதற்கென தனிப்பட்ட ப்ரொக்ரெஸிவ் ப்ரோச்சிங் (progressive Broaching) இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. நீளமான ஒரு கருவி, மூலப்பொருளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து ஒரே இழு..தேவையான ஷேப் வந்துவிடும். படம் பாருங்கள்.
பிறகு வெப்பம் ஏற்றி இறக்கி விளையாடி(Heat Treatment) தேவையான கடினப்பதத்தையும் (Hardness) மற்ற குணங்களையும் (ductility, malleability) கொண்டுவந்துவிடுவார்கள்.
பால் தயாரிப்பது மிகவும் சுலபம். இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, நீளக்கம்பியில் பாலுக்குத் தேவையான அளவு இரும்பை வெட்டி எடுக்கும் ஒரு இயந்திரம், அதை மேலே ஒரு அரைவட்ட டை(Die), கீழே ஒரு அரைவட்ட டை.. கரப்பான் பூச்சியை புத்தகத்தால் அடிப்பது போல ஒரே அடி.. பால் வந்து விழுந்துவிடும் (forging). இன்னொரு முறையில், உருக்கிய இரும்புக்குழம்பை சுற்றும் கலனிலிருந்து (centrifuge) சொட்டுச்சொட்டாக விடுவார்கள். சுற்றுவதாலும், வேகமாகக் குளிர்வதாலும் பந்து போல் ஆகிவிடுகிறது. (உலகம் கூட இப்படித்தான் உருண்டையானதாச் சொல்றாங்க.. நான் அதைப்பாத்ததில்லை, இதைப்பாத்திருக்கேன்:-)
இப்படி தனித்தனியா தயாரிக்கப்பட்ட பொருள்கள், இயந்திரத்தால் கோர்க்கப்பட்டு, மேலே கீழே தகடுகளை வைத்து ரிவெட் அடித்துவிட்டால் பால் பேரிங் தயார்.
பால் பேரிங்குகளின் அடையாளம் அதன் மேல் பொறிக்கப்பட்டுள்ள நான்கெழுத்து எண். இந்த எண், அதன் உள்வட்ட அளவு, வெளிவட்ட அளவு மற்றும் தடிமன் ஆகியவற்றைக் குறிப்பது. இந்தக் குறியீடு SKF எண் என்று சொல்லப்படுகிறது. வேறு பல நிறுவனங்களும் பேரிங் தயாரித்தாலும், SKF தான் உலகின் பெரிய பால்பேரிங் தயாரிப்பாளர் என்பதால் முதல் மரியாதை!
Wednesday, November 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
உள்ளேன் ஐயா ! நல்ல தகவல்கள்.
சூப்பரா விளக்கி இருக்கீங்க...மறுபடியும் காலேஜ் போய்டு வந்த எபக்ட்...எங்க Mech HOD தங்கமாமா ஞாபகத்துல வந்துட்டு போனாரு..(நல்ல மனுசன் அதுனாலதான் அந்த பேரு) :-)
நல்ல விளக்கம் வாத்தியாரே!
வாத்தியார்ன்னா வாத்தியார்தான்!
நன்றி நிர்மல்.
நன்றி மணியன்.
நன்றி ஸ்யாம். என்னையும் தங்க மாமான்னு கூப்பிடாம இருந்தா சரி.
நன்றி கொத்தனார்.
ஒரு விஷயம் விட்டுப்போய் விட்டது. தகவல் சேகரித்த தளங்கள் பற்றிய குறிப்பு. பல தளங்களிலிருந்தும் சேர்த்ததாலும், காபிரைட் பிரச்சினை வர வாய்ப்பில்லாத பொதுத் தகவல் என்பதாலும் அதை விட்டுவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். படங்களை கூகுளிலிருந்து கிடைத்த இடத்திலிருந்து சுட்டதில் எங்கும் குறிப்பெடுத்துக்கொள்ளவில்லை என்பதும் ஒரு காரணம். அசைபடத்துக்கு காபிரைட் நானேதான் என்பதால் பிரச்சினையில்லை.
நன்றி ஓகை.
அந்த பிரமிப்பு இன்னும் விலகலை.
விளக்கத்துக்கு நன்றி.
ரிவெட் எல்லா பேரிங்கிலும் இருக்காதோ?
நன்றி தருமி.
ரிவெட் எல்லா பேரிங்குக்கும் அவசியம் இல்லை. நான் சொல்ல விட்டுப்போன இன்னொரு வகை பேரிங் நீடில் பேரிங்.. அதில், inner race, outer race எதுவுமே இல்லாமல், சின்னச்சின்ன உருளைகளை மட்டுமே கிரீஸில் வைத்து இயங்கும் இயங்காப்பொருள்களுக்கு இடையே அழுத்தி விடுவார்கள். ரிவெட், ரீட்டெய்னர் இல்லாத பால் பேரிங்கும் உண்டு (பெரிய சைஸ்களில் மட்டும்). இடத்துக்கேற்றது போல டிஸைன் செய்துகொள்வார்கள்.
நன்றி சுரேஷ்..
நிறைய சிரமப்பட்டு இருப்பீர்கள் படங்கள், தகவல் சேகரிக்க..
பேரிங் தயாரிப்புமுறை பற்றியும் விளக்கம் தெரிந்து கொண்டேன். மிக அழகாக, படங்களுடன் விளக்கியிருப்பதற்கு நன்றி..
நமது சைக்கிளிலில் முன் பின் சக்கரங்களில் இருப்பதும் பால் பேரிங்குகள்தான்.
மோட்டார் சைக்கிளில் முன் பின் சக்கரங்களிலும் எஞ்சினுக்கு உள்ளேயும் வேறு சில இடங்களிலும் உபயோகிக்கப்படும் பால் பேரிங்குகள் சுரேஷ் விவரித்ததைப் போன்றவை. ஆனால் சைக்கிள் பால் பேரிங்குகள் வேறு விதமானவை.
சைக்கிள்களில் சக்கரத்தின் அச்சில் இந்த பால் பேரிங்குகளின் ஒரு பகுதி ஒருங்கிணைந்திருக்கும். சிறு இரும்புப் பந்துகள் தனியாக இருக்கும். அச்சைக் கழற்றினால் அவை கிழே விழுந்து சிதறி ஓடிவிடும். கோன் என்று சொல்லப்படும் இன்னொரு பகுதியை இந்த பந்துகளை தன் இருப்பிடத்தில் வைத்திருக்க நுனுக்கமாகப் பொருத்தியிருப்பார்கள்.
இவ்வகை பேரிங்குகள் எப்பவும் ஒரு அச்சசில் இரட்டையாகவே வரும்.
ஒரு சைக்கிள் கடையில் இவை பொருத்தப்படும்போது பார்த்தால் பால் பேரிங்குகளின் செயல்பாட்டை மிக விவரமாக அறிய முடியும்.
ஆட்டுக்கல்லில் அரிசியும் உளுந்தும் அரைக்கும்போது அரிசியும் உளுந்தும் பால் பேரிங்கில் பந்துகள் செய்யும் வேலையையோ அல்லது புஷ் பேரிங்கில் உயவு எண்ணெய் செய்யும் வேலையையோ செய்கின்றன. சுரேஷ் கொடுத்திருக்கும் முதல் படத்தைப் பார்க்கவும். பிறகு அவை தம் இன்னுடலைத் தியாகம் செய்து இட்லியாகவோ தோசையாகவோ மாறுவது தனி கதை.
What is the percentage of oxygen in the air? என்பதையும் அது ஏன் இடத்திற்கு இடம் தட்ப வெட்பநிலை (Temperature)மாறுபடுவதைப் போல மாறுபடுவதில்லை என்பதையும் கொஞ்சம் விஞ்ஞானபூர்வமாக விள்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
நண்பர் ரவி மடலில் எழுதியது
பாமர மக்களுக்கும் புரியும்படி சொன்ன அழகே அழகு. சேவை தொடரட்டும்.
nice info. padathudan vilakkam arumai..
புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி பொறியாளர்/வாத்தியார் ஐயா.
Post a Comment