Thursday, November 30, 2006

உலகத்திலேயே பெரிய கொட்டை எது?

நம்ம ஓகை நடராஜன் இருக்காரே, அவரு வந்து எதையோ சொல்ல வரும் போது எதையோ கேட்டு நம்மளை இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாரு. அவரு ஒரு பதிவில் பின்னூட்டமாய் சொன்னது இது

"இங்கே கேள்விகளைக் கேளுங்கள்" எனறு கொட்டை எழுத்துக்களில் (பனங்கொட்டை அளவில்) (ஒரு துணைக் கேள்வி - கொட்டைகளில் பெரிய கொட்டை எது?) போடுங்கள்."
இந்த துணைக்கேள்வி பார்க்க சுலபமா இருக்கே, இதுக்கு பதிலை சொல்லிடலாமேன்னு படிக்க ஆரம்பிச்சாத்தான் தெரியுது, மனுசன் நம்மளை எப்படி எசகு பிசகா மாட்டி விட்டு இருக்காருன்னு. முதலில் இந்த தலைப்பு. இதை வெச்சு நம்ம வ.வா.ச. பசங்க என்ன எல்லாம் கிண்டல் பண்ணப் போறாங்களோ. அதை விடுங்க.

முதலில் இந்த கொட்டை அப்படின்னா என்னான்னு பார்க்க போனா இரண்டு அர்த்தம் இருக்காம் - Nut மற்றும் Seed. அது மட்டுமில்லை "The term nut is sometimes used on seeds, but nuts and seeds are not the same thing. A nut is a seed, but not all seeds are nuts." இப்படி 'விசு'த்தனமா போகுது விஷயம். அதெல்லாம் ஆகாது. எங்க ஊரில் Nut, Seed எல்லாம் ஒண்ணுதான். அதுக்கு பேர்தான் கொட்டை அப்படின்னு ஒரு முடிவு எடுத்து, அதுக்கு அப்புறம்தான் நம்ம ஔவையார் சொன்னா மாதிரி 'பெரியது கேட்கின்' அப்படின்னு ஆரம்பிச்சோம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். செஷல்ஸ் நாட்டில் இரண்டே இரண்டு தீவுகளில் மட்டுமே வளரும் Coco de mer என்ற மரத்தின் கொட்டைதான் உலகிலேயே மிகப் பெரிய கொட்டையாம். இரட்டைத் தேங்காய் போல காட்சியளிக்கும் இது 50 செ.மி. சுற்றளவு வரை பருத்தும், 30 கிலோ எடை வரை வளரும். இதோ சில புகைப்படங்கள்.நன்றாக முற்றிய கொட்டைமரத்தில் இருக்கும் பொழுது

இந்த சிறு தீவுகளில் மட்டுமே இருக்கும் இவ்வகை மரங்கள் இப்பொழுது அழிவின் விளிம்பில் இருப்பதால் பாதுகாக்கப்படும் தாவரயினங்களின் பட்டியலில் உள்ளது. ஒரு விஷயம், Lodoicea callipyge என்ற இத்தாவரத்தின் விஞ்ஞான பெயரில் callipyge என்ற வார்த்தைக்கு பொருள் அழகான பின்பக்கம் என்பதாகும். மீண்டும் ஒரு முறை முதல் படத்தைப் பாருங்கள். :)

சரி, எல்லாவற்றிலும் பெரிதாக பார்த்துப் பழகிய அமெரிக்கர்கள் சும்மா இருப்பார்களோ? அவர்கள் பல விதமான கொட்டைகளின் பெருமையை பறைசாற்ற கட்டிய கான்க்ரீட் கொட்டைகளைப் பாருங்கள்.


வேர்க்கடலைக்காகPecan கொட்டைக்காக

இன்னும் விபரங்களுக்கு

சுட்டி 1
சுட்டி 2

சந்தேகம் தீர்ந்ததா ஓகையாரே! :-)

64 comments:

said...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருக்கும் ராஜமுந்திர் திரையரங்கம்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய சினிமா கொட்டகை! என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!

said...

தேங்காய் மாதிரி இருக்கு!

உலகில் பெரிய கொட்டை முந்திரிக் கொட்டைன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன் ஹிஹி..

said...

சிபி,

நம்ம மருதை ஆட்கள் அவங்க ஊரு தங்கம்தான் ஆசியாவிலேயே பெருசு அப்படின்னு சொல்லுவாங்க. நீங்க வேற கதை சொல்லறீங்களே.

அவங்க வரட்டும்.கேட்டுருவோம்.

said...

//உலகில் பெரிய கொட்டை முந்திரிக் கொட்டைன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன் ஹிஹி..//

இவ்வளவு அவசரமா வந்து பின்னூட்டம் போட்ட உங்களை முந்திரிக் கொட்டைன்னு சொல்லலாமுன்னு பார்த்தா அங்கயும் சிபி முந்திக்கிட்டாரு. யானைப் பார்ட்டிங்களில் எங்க டீச்சர்தான் இனிமேலாவது டயட் பண்ணனும் அப்படின்னு உதார் விடுவாங்க. நீங்களும் அந்த கேஸ் அப்படின்னு கேள்வியே படலையே. ஹிஹி

said...

இது என்னா கொட்'டை இதாய்யா எம்மாம் பெரிசா இருக்கு. எனக்கு முதல் படம் பிடிச்சிருக்கு ;-) :-P

said...

தெக்கி,

ரொம்ப உணர்ச்சி வசப்படக்கூடாது. அதுதான் endangered species அப்படின்னு சொல்லியாச்சுல்ல. அப்புறம் என்ன செய்ய முடியும், சும்மா படத்தைப் பாத்துக்கிட்டு போயிக்கிட்டே இருக்கணும்.

(ஆமா, நீங்க ஆசையா வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்து வளர்க்கறதைப் பத்திதானே சொன்னீங்க? !)

said...

ஏன்னு தெரியாம சிரிப்பு வந்துருச்சி :)))

said...

எதுக்கெல்லாம் சிலை வைக்கிறாங்க பாருங்க..

இங்கயும் இருக்காங்களே..

said...

என்ன ரவி.. எதுக்கு சிரிப்பு வந்துச்சின்னு தனி மயில்ல சொல்லுங்களேன்..

நானும் சிரிச்சிக்குவேனில்ல?

said...

ஆமா நமக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் பல வருஷத்துக்கு முன்னாடி நமக்குத் தெரிஞ்ச இன்னொருத்தர் கிட்ட கேட்ட கேள்வி இது... பதில் சொல்லுறீங்களா..

ஞானப் பழத்துக்குக் கொட்டை இருக்கா இல்லையா???

said...

//ஏன்னு தெரியாம சிரிப்பு வந்துருச்சி :)))//

தனியா சிரிச்சா, அதுவும் ஏன்னு தெரியாம சிரிச்சா உங்களைப் பத்தி தப்பா நினைக்க போறாங்க.

அதனால கூட சேர்ந்து நானும் சிரிச்சு வைக்கறேன்!

said...

சில பதிவுகள் அதன் பின்னூடம் மூலம் மேலும் அழகுபெறும்.அந்த வகையில் சேர்த்தி "இது".

said...

//எதுக்கெல்லாம் சிலை வைக்கிறாங்க பாருங்க..

இங்கயும் இருக்காங்களே..//

ஆமாம் டி.பி.ஆர்.

என்னத்த சொல்ல. :-D

வருகைக்கு நன்றி.

said...

//என்ன ரவி.. எதுக்கு சிரிப்பு வந்துச்சின்னு தனி மயில்ல சொல்லுங்களேன்..//

அவருதான் சொல்லிட்டாரே. ஏன்னு தெரியாமலேயே இல்ல சிரிக்கறாராம்!!!

said...

//ஞானப் பழத்துக்குக் கொட்டை இருக்கா இல்லையா???//

ஏம்பா, ஜிரா கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை என் கிட்ட கேட்டா எப்படி? அவருதான் மயிலார் கிட்ட கேட்டு சொல்லுவாரு. நான் எங்க போக?

said...

//சில பதிவுகள் அதன் பின்னூடம் மூலம் மேலும் அழகுபெறும்.அந்த வகையில் சேர்த்தி "இது".//

ஹாஹ்ஹா ஹா....

குமார், ஒரு பின்னூட்டத்தில் பின்புலமே தெரிகிறதே!!!

நன்றி.

said...

//
நம்ம மருதை ஆட்கள் அவங்க ஊரு தங்கம்தான் ஆசியாவிலேயே பெருசு அப்படின்னு சொல்லுவாங்க. நீங்க வேற கதை சொல்லறீங்களே.
//

வந்துட்டோம்ல ... சரியாதான்யா சொல்லியிருக்கீங்க ....

http://answers.yahoo.com/question/index?qid=20061004003001AAONUzQ

http://www.hinduonnet.com/thehindu/mp/2004/03/01/stories/2004030101630100.htm

said...

//வந்துட்டோம்ல ... சரியாதான்யா சொல்லியிருக்கீங்க ....///

பாருங்க சிபி, இதுதான் ஊர் பாசம், இம்புட்டு தூரம் வந்துட்டு நம்ம பதிவைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம அவிங்க ஊரைப் பத்தி மட்டும் பேசிட்டு போறாரு பாருங்க!

நல்ல வேளை நான் சொன்னது சரியாப் போச்சு. இல்ல பொலி போட்டு இருப்பாங்க போல. :))

said...

வெத்தலைப் பாக்கு என்ன விலை என்றால் கொட்டைப்பாக்கு மூணு பணங்கற மாதிரியில்ல இருக்கு ? அவர் கேட்ட கொட்டை எழுத்து Largest Font இல்ல ?

கொட்டகாசமான பதிவு!

said...

மணியன், அவர் சொன்னது எழுத்துக்களின் அளவைப் பற்றிதான். ஆனால் "கொட்டைகளில் பெரிய கொட்டை எது?" என ஒரு துணைக் கேள்வி கேட்டார் பாருங்கள். அதற்குத்தான் இது பதில்.

said...

//
இம்புட்டு தூரம் வந்துட்டு நம்ம பதிவைப் பத்தி *ஒரு வார்த்தை*//

கலக்கல்.

:-)

said...

கொத்ஸ் சரியாதான் சொல்லீருக்கீங்க. தங்கம் கொட்டாயீதான் ஆசியாவிலே பெரிசு. ஆனா இப்போ ஏதோ பேய்படத்திலே வர்ற பில்டிங் மாதிரி கெடக்கு.

said...

மணிலாவுக்கு அமெரிக்காவில் சிலையா?

எனிவே இந்தப் படங்கள் "How hard it will be to crack these cracked nuts" என்கிற "உண்மை" யை "விடுதலை" செய்கின்றன!

said...

not able to type in Thamiz.

thnx a lot Koths.

Seed or nut
Local big is coconut
Isn"t it?

said...

இ.கோ!
தலைப்பைப் பார்த்துவிட்டது. பல தடவை இதைப் தொலைக்காட்டியில் பார்த்ததை நினைத்து விட்டு; ஆனாலும் ;உங்கள் பதிவு என்ன???சொல்லுதெனப் பார்த்தால்....பெயர்;படமென அருமையான தகவல்கள்
"எப்படி" களுக்குள் ஓர் உருப்படியான பதிவு. தொடரவும்.
யோகன் பாரிஸ்

said...

//
அதெல்லாம் ஆகாது. எங்க ஊரில் Nut, Seed எல்லாம் ஒண்ணுதான். அதுக்கு பேர்தான் கொட்டை அப்படின்னு ஒரு முடிவு எடுத்து, அதுக்கு அப்புறம்தான் நம்ம ஔவையார் சொன்னா மாதிரி 'பெரியது கேட்கின்' அப்படின்னு ஆரம்பிச்சோம்.
//

seed என்றால் வித்து இல்லையா ? அல்லது விதை ?

//
எல்லாவற்றிலும் பெரிதாக பார்த்துப் பழகிய அமெரிக்கர்கள் சும்மா இருப்பார்களோ? அவர்கள் பல விதமான கொட்டைகளின் பெருமையை பறைசாற்ற கட்டிய கான்க்ரீட் கொட்டைகளைப் பாருங்கள்.
//

அவிங்க இந்தக் கொட்டைய மட்டுமா கான்கிரீட்ல செஞ்சு வெச்சிருக்காங்க..?

said...

அண்ணாச்சி,
Drupe, Berry, Pome இதெல்லாம் ஞாபகம் வந்துடுச்சிங்க. முதல்ல போட்டுருக்கற மிகப்பெரிய ட்ரூப்பை(தேங்காயைப்) பாத்ததும்.

//முதலில் இந்த தலைப்பு. இதை வெச்சு நம்ம வ.வா.ச. பசங்க என்ன எல்லாம் கிண்டல் பண்ணப் போறாங்களோ. அதை விடுங்க//
எதுக்கு பண்ணப் போறாங்க? அப்படி ஒன்னும் இதுல இல்லியே?

said...

//இம்புட்டு தூரம் வந்துட்டு நம்ம பதிவைப் பத்தி *ஒரு வார்த்தை*//

கலக்கல்.//

யப்பா ராசா, இன்பா, ஒரு வார்த்தைன்னா ஒரே ஒரு வார்த்தையா சொல்லறது? சரி நாமளும் உம்மை அந்த பாட்டு பாடற பார்ட்டி ரேஞ்சுக்கு கொண்டு போறேன். எங்கே இப்பொழுது இரண்டு வார்த்தைகள்.

ஒன்று இரண்டு என வரிசைப்படுத்திப் (பின்னூட்டம்) போடு பார்க்கலாம். :)

said...

//கொத்ஸ் சரியாதான் சொல்லீருக்கீங்க. தங்கம் கொட்டாயீதான் ஆசியாவிலே பெரிசு. ஆனா இப்போ ஏதோ பேய்படத்திலே வர்ற பில்டிங் மாதிரி கெடக்கு.//

ராயலு, உனக்கும் இன்பாவுக்குச் சொன்னதுதான். பதிவப் படிச்சீரா இல்லையா?

said...

ஹரிஹரன், வருகைக்கு நன்றி.

said...

//not able to type in Thamiz.

thnx a lot Koths.

Seed or nut
Local big is coconut
Isn"t it?//

ஓகை, ஈகலப்பை இல்லாத நேரங்களில் நம்ம வசந்தன் போன்றோரின் பதிவில் இருக்கும் மொழிமாற்றியைத்தான் நான் உபயோகிக்கின்றேன். நீங்களும் செய்யலாமே.

நம்ம ஊரில் தேங்காயை விட பெரிய கொட்டை இருப்பதாகத் தெரியவில்லை.

said...

யோகன் ஐயா,

//தலைப்பைப் பார்த்துவிட்டது. பல தடவை இதைப் தொலைக்காட்டியில் பார்த்ததை நினைத்து விட்டு; //

தப்பா ஒண்ணும் இல்லையே. கொஞ்சம் ஆர்வம் வர வைக்க இந்த மாதிரி வேலைகள் செய்ய வேண்டியதா இருக்கு.

வருகைக்கு நன்றி.

said...

வஜ்ரா,

//seed என்றால் வித்து இல்லையா ? அல்லது விதை ?//

அதுதான் பிரச்சனை. Seed வித்துதான். ஆனா Nut என்பதற்கு என்ன? பருப்பு என வைத்துக் கொண்டால், அப்பொழுது துவரம் பருப்பும் உளுத்தம் பருப்பும் Nuts இல்லையே.

அது மட்டுமில்லாமல் "The term nut is sometimes used on seeds, but nuts and seeds are not the same thing. A nut is a seed, but not all seeds are nuts." இப்படி எல்லாம் இருக்கே. அதான் ஐயாம் தி எஸ்கேப் அப்படின்னு ஓடிட்டேன்.

said...

//Drupe, Berry, Pome இதெல்லாம் ஞாபகம் வந்துடுச்சிங்க. //

தல என்னென்னமோ சொல்லறீங்க. இத பத்தி எல்லாம் கூட எழுதி இருந்தது. நமக்குத்தான் புரியலை. கொஞ்சம் விவரமாத்தான் சொல்லுங்களேன்.

//எதுக்கு பண்ணப் போறாங்க? அப்படி ஒன்னும் இதுல இல்லியே?//

இல்லைன்னா சரிதான்.

said...

ருத்திராட்சை கொட்டையை பத்தி சொல்லலியா??

said...

கொத்ஸ், சேவன்னா இது சேவை. (நம்ம சேமியா சேவைய சொல்லல) வெளியூர்ல மேய்மய்யத்துல அல்லாடுர்ற மனுசனுக்கு இன்னா மாரி ஒரு சுட்டி குடுத்து வாழவக்கிறய்யா! உம் சேவை வாழ்க!(இதும் சேமியா இல்லை)

said...

//ருத்திராட்சை கொட்டையை பத்தி சொல்லலியா??//

எதனா முக்கியமா இருந்தா நீங்களே சொல்லிருங்க. இதுக்கும் மேல நான் எதாவது கொட்டையைப் பத்தி ஆராய்ச்சி பண்ணினேன்னா அடிதான் விழப் போகுது.

said...

//கொத்ஸ், சேவன்னா இது சேவை. (நம்ம சேமியா சேவைய சொல்லல) வெளியூர்ல மேய்மய்யத்துல அல்லாடுர்ற மனுசனுக்கு இன்னா மாரி ஒரு சுட்டி குடுத்து வாழவக்கிறய்யா! உம் சேவை வாழ்க!(இதும் சேமியா இல்லை)//

ஒகையாரே,

என் கடன் சேவை (இதும் சேமியா இல்லை) செய்து கிடப்பதே அப்படின்னு சொல்லட்டுமா? :))

said...

//
யப்பா ராசா, இன்பா, ஒரு வார்த்தைன்னா ஒரே ஒரு வார்த்தையா சொல்லறது? சரி நாமளும் உம்மை அந்த பாட்டு பாடற பார்ட்டி ரேஞ்சுக்கு கொண்டு போறேன். எங்கே இப்பொழுது இரண்டு வார்த்தைகள்.

//

நன்றாக இருக்கிறது.

கொத்ஸ் இதோட முடிச்சிக்குவோம். பார்க்குறவங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க. அடுத்த பின்னூட்டத்துல ஆய்வு கட்டுரையே போட்டுறேன். :-)

said...
This comment has been removed by a blog administrator.
said...

இன்பா,

ரொம்ப நன்றி. இதே மாதிரி எல்லா பதிவுக்கும் வாங்க. ஆனா வெறும் ஒன்று இரண்டு வார்த்தைகளோட நிறுத்தக் கட்டாயம் இல்லை. :)

said...

எல்லாம் பழம் தின்னு 'கொட்டை' போட்ட ஸ்டைலில்
இருக்குப்பா வர்ற பின்னூட்டமெல்லாம்:-))))

said...

விதையிலிருந்தே விருட்சம்...!
முதிர்ந்த விசயம் !

said...

எஸ்.கே., விலங்கியல் பற்றிய பதிவு போடும் பொழுது போட வேண்டிய பின்னூட்டம் போல இருக்கிறது. இங்கு பதிவின் போக்கை மாற்றிவிடும் என்பதால் அதனை வெளியிடவில்லை. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறோம். மன்னிக்கவும்.

said...

டோண்டு சார், தங்கள் பின்னூட்டத்தினால் இப்பதிவு திசை திருப்பப்படக்கூடும் என்பதால் அதனை இங்கு அனுமதிக்கவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறோம். தங்கள் வருகைக்கு நன்றி.

said...

பரவாயில்லை கொத்ஸ். அதை சும்மா கலாய்த்தலுக்காகப் போட்டேன். உங்கள் நிலையைப் புரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

Botany வகுப்பு எல்லாம் கட் அடிச்சிட்டு பரீட்சையில கற்பனைய கலந்து அடிச்சி தப்பி வந்த எங்கள மாதிரி ஆட்களுக்கு இப்படி ஒரு சோதனையா பதிவப் போட்டுட்டிங்களே, எப்படி கேள்வி கேக்கறதுனு யோசிச்சிட்டு இருக்கும்பொழுது (பின்ன விக்கி(ப்) பசங்க பதிவுக்கு வந்திட்டு கேள்விக் கேக்காம திரும்பி எப்படி போகிறது) மாட்டிச்சு இந்த வரி....

//என் கடன் சேவை (இதும் சேமியா இல்லை) செய்து கிடப்பதே அப்படின்னு சொல்லட்டுமா? :))
//

1. இது சேமியா சேவை இல்லை என்றால் எந்த வகை சேவை என்று சொல்லவும். vermicilli-a?

2. ஏன் கடன் சேவை வாங்குறீங்க? காசு கொடுத்து வாங்க வேண்டியதுதானே? என்ன கஷ்டம்? ஒரு வேளை கடனட்டையில வாங்குறதினால அப்படிச் சொல்றீங்களா?
3. சேவை சேவை செய்திட்டு சாப்பிட வேண்டியதுதானே? அல்ல அடுத்தவங்களுக்கு பரிமாற வேண்டியதுதானே? அது ஏன் 'கிடத்தறீங்க'? ஒருவேளை 'பார்வைக்கு' கிடத்தறீங்களோ? எப்போ சாப்பிடப் போறீங்க? நீங்கப் செய்த சேவையை நீங்களே சாப்பிட தயக்கமா?

அப்புறம் அது என்ன எஸ் கே ஐயா மற்றும் டோண்டு ஐயா அவர்களின் பின்னூட்டங்கள்? எங்களுக்கும் சொன்னால் நாங்களும் இந்தப் பதிவு எப்படி எல்லாம் திசை திரும்ப வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்து கொள்வோம் இல்லையா? (யாருப்பா அது - இப்ப மட்டும் இந்தப் பதிவு என்ன நேர் வழியிலா போயிட்டு இருக்கு-னு சவுண்ட் விடறது)


'இலவச' குருவாய நமஹ!!! :-))))

said...

புரிதலுக்கு நன்றி டோண்டு சார்.

said...

விக்கி பசங்க பதிவில் பின்னூட்டங்கள் மூலமாக திசை திருப்புதல் பலருக்கும் பிடிப்பதில்லை. அதனால் அதனை குறைத்துக் கொள்ள முயல்கிறோம். அதற்கு வருகை தரும் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.

அதே சமயம் பதிவு தமிழ்மண முகப்பில் வந்தால்தான் அனேகம் பேர் பார்க்கும் வகையில் இருக்கும். அதனால் பதிவின் நோக்கம் மாறாத வண்ணம் பின்னூட்டம் இடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

வருகை தாருங்கள், பதிவில் கூறப்பட்டிருக்கும் தலைப்பிற்கு ஏதான பின்னூட்டம் இடுங்கள்.

said...

ஸ்ரீதர், அருமையான கேள்விகள் கேட்பவர் நீங்கள், போன பின்னூட்டத்தில் சொன்னது பொதுவான ஒரு அறிவிப்புதான். தாங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றே நம்புகிறோம். புரிதலுக்கு அட்வான்ஸ் நன்றி.

said...

என்ர வலைப்பக்கத்தில இருக்கிற எழுத்துருமாற்றிப் பெட்டி சின்னது.
பெரிசுதானே நல்லது?
சுரதாவின்ர பக்கம் பாவிக்கலாம்.
அல்லது தமிழ்ச்சங்கமம்1 என்ற பக்கத்தைப் பாவிக்கலாம்.

said...

மணியன் ஐயா,

வருகைக்கு நன்றி. நான் உங்கள் பெயர் ஞாபகத்தில் இருப்பதல் நேராக அங்கு வந்து விடுவது. அப்படியே உங்கள் பதிவு எதேனும் விட்டுப் போயிருந்தால் படித்து விடலாமல்லவா!

நீங்கள் தந்திருக்கும் கூடுதல் சுட்டிக்கு நன்றி. சுரதாவின் சுட்டி இதுதானே?

இது சுரதாவின் புதிய மொழி மாற்றியின் சுட்டி.

said...

ஐயா கேள்விகளை எங்கே கேட்பது என்று கொட்டை எழுத்தில் என் போன்ற ஆட்களுக்காகப் போட்டு வைக்கலாமில்லை?

இந்தாங்க என் கேள்வி:

நண்பர்களே, பி.டி.எஃப் கோப்புகளை ஒரு கணினியில் மட்டும் பயன்படுமாறு வடிவமைப்பது எப்படி என்று யாரேனும் சொல்ல முடியுமா? அதாவது பதிவிறக்கம் செய்யும் பயனாளர் வாசிக்கலாமே ஒழிய விநியோகம் செய்யும் வசதி மறுக்கப்படவேண்டும்.

said...

வசந்தனாரே, உம்பட பொட்டிதானுங்க நாம பாவிச்சத்து. சின்ன பின்னூட்டத்துக்கு சின்ன பொட்டி பரவாயில்லைங்கோ. ரொம்ப நன்றிங்கோ. நம்மட வலைபக்கத்திலியும் அந்தமாரி பொட்டி ஒன்னு போடமான்னு இருக்கன். வெளியூர் போன ரொம்ப உபயோகமா இருக்குங்கோ.

said...

//ஐயா கேள்விகளை எங்கே கேட்பது என்று கொட்டை எழுத்தில் என் போன்ற ஆட்களுக்காகப் போட்டு வைக்கலாமில்லை?//

நிலாக்கா நீங்களா வந்திருக்கிறது? ஆச்சரியமா இருக்கே?

சரி. இந்த வார்ப்புருவை நல்ல பாத்தீங்களா? அம்மாம் பெரிய கேள்விக்குறி படம் போட்டு இருக்கே. அதை சொடுக்கினீங்கன்னா, நீங்க கேள்வி கேட்கும் பதிவுக்குப் போக முடியுமே..

(பழைய பதிவெல்லாம் படிக்கலைன்னு நல்லா தெரியுது!)

said...

I came to know that video can be uploaded only through your blog. Please visit my blog and tell me how to pep with. The Blog address www.mgrroop.blogspot.com
Yours
Roop

said...

ஓகையாரே,
அதற்கென்ன? போட்டாப்போச்சு.
maathahal@yahoo.com க்கு தனிமடல் ஒன்று அனுப்புங்கள். நான் நிரலியையும் அதை எங்குச் சேர்க்க வேண்டுமென்பதையும் அனுப்புகிறேன்.

சிலர் ஏற்கனவே கேட்டுப் பெற்று அந்த வசதிகளைப் பாவிக்கிறார்கள்.
மேலும் சிலர் அவ்வப்போது இப்படிக் கேட்பதும் நான் தனிமடலிடச் சொன்னபின் காணாமற்போவதும் நடக்கின்றன.

said...

இதுல புளியாங்கொட்டை இல்லியா?

said...

ரன் ரேட் பத்தாது.

அடுச்சு ஆடுங்க! சென்சுரி பொட்டுட்டு கிளம்புவோம்.

said...

ரூப் அவர்களே,
வருகைக்கு நன்றி. அது பற்றிய பதிவு ஒன்றைப் போடுகிறோம்.

said...

//நான் நிரலியையும் அதை எங்குச் சேர்க்க வேண்டுமென்பதையும் அனுப்புகிறேன்.//

வசந்தன் ஐயா, உங்களுக்கு விருப்பமானால் இதை ஒரு பதிவாகப் போட்டு விக்கி பசங்க வலைப்பூவிற்கு நீங்கள் தரலாமே?

நான் தனி மடலும் அனுப்புகிறேன்.

said...

உங்க வலைப்பதிவ என் கூகுள் ரீடரில் வைத்திருக்கிறேன். பிடித்த இடுகைகளை பொதுப்பார்வைக்கும் வைத்திருக்கிறேன். தொடர்ந்து கலக்குங்க

said...

தலைவரே,
என்னோட "தமிழில் டைப் செய்ய" பதிவுக்கு Link கொடுத்ததுக்கு நன்றி.

said...

இதென்னாது..முப்பது கிலோவா!!!! அடேங்கப்பா! தேங்கா போலத்தான் இருக்கு. இதுக்கு வழுக்கை இருக்குமா? இத எதுக்குப் பயன்படுத்துறாங்க?

// இலவசக்கொத்தனார் said...
//ஞானப் பழத்துக்குக் கொட்டை இருக்கா இல்லையா???//

ஏம்பா, ஜிரா கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை என் கிட்ட கேட்டா எப்படி? அவருதான் மயிலார் கிட்ட கேட்டு சொல்லுவாரு. நான் எங்க போக? //

கொத்ஸ், தேவ் இப்பிடிக் கேட்டுட்டாரேன்னு பயப்படாதீங்க. இதுக்கெல்லாம் மயிலாரைக் கேக்க வேண்டியதில்லை. எனக்கே தெரியும். ஞானப்பழத்துக்குக் கொட்டை உண்டு. எப்படீன்னு கேக்குறீங்களா? இந்தப் பதிவப் போய்ப் பாருங்க. பாத்துட்டு நான் சொன்னது சரியான்னு சொல்லுங்க.
http://gragavan.blogspot.com/2005/12/blog-post_09.html