Thursday, October 26, 2006

கொத்து பரோட்டா செய்வது எப்படி?

சென்ற வாரம் ஒரு நாள் சப்பாத்தியும் சாதமும் அலுத்துப் போச்சு. வேறேதாவது செய்யலாமே என சொல்லப்போக, வந்தது வினை. நீங்களே செய்யுங்களேன் என சீறிப் பாய்ந்தது ஒரு ஏவுகணை. நுணலும் தன் வாயால் கெடும் (சிலேடை எல்லாம் இருக்குங்க) என நொந்துகொண்டே என்ன செய்வது என யோசித்து பிரிட்ஜை குடையும்போது முன்பு வாங்கி வைத்திருந்த குளிருறைக்கப்பட்ட (அதாங்க frozen) பரோட்டா பாக்கெட் ஒன்று கண்ணில் பட்டது. சரிதான் இதை வைத்து எதாவது செய்யலாம் என முடிவு பண்ணி கையில் கிடைத்தவையெல்லாம் போட்டு செய்த பதார்த்தம்தான் கொத்ஸு பரோட்டா. நாங்க சாப்பிட்டோம் நல்லா இருந்தது, பக்கத்து வீட்டு நண்பர் கோபி வேற வந்து சூப்பரா இருக்குன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். ஆகவே மக்களே உங்களுக்காகவே கொத்ஸு பரோட்டா செய்முறை. நல்லா இருந்தா இங்க வந்து சொல்லுங்க, நல்லா வரலைன்னா உங்களுக்கு செய்யத் தெரியலை. என்கிட்ட மீண்டும் எப்படி செய்யணும்ன்னு கேளுங்க. சொல்லித்தரேன்.

முதல்ல என்ன வேணும்ன்னு ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • Frozen பரோட்டா - 1 பாக்கெட்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
  • வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
  • தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
  • முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
  • இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
  • கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க. இப்போ செய்முறை.

  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
  • பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
  • அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
  • வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
  • அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
  • இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
இதுக்கும் கொத்து பரோட்டாவிற்கும் என்ன வித்தியாசம், அது என்ன கொத்ஸு பரோட்டான்னு பேருன்னு கேட்கறவங்களே. கொத்து பரோட்டாவில் சால்னா விடணும் அது இல்லைன்னா செய்யறது கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. அதனாலதான் இந்த பேரு.

45 comments:

said...

என்னா சாமி திரும்பி ஆரம்பமா? பிரியலே

said...

//கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. ..

@%^$#$% &*(^$ &^ *()%$# - வஞ்சது புரிஞ்சிருக்குமே...அதனால, "நாட்டாம, தலப்ப மாத்து..."

said...

அது என்ன கொத்ஸு பரோட்டான்னு பேருன்னு கேட்கறவங்களே. //

இது தெரியாதா? கொத்தனார் செஞ்சா அது கொத்ஸு பரோட்டா..

அதானேங்க:)

said...

http://binarywaves.blogspot.com/2004_10_01_binarywaves_archive.html

Haahaa, my take on Kothu Parotta

said...

கால்கரி சிவா,
ஸ்டார்டிங்ல பழசெல்லாம் நல்லா கிளறி போட வேணாமா.. அதான்.

புது மேட்டரெல்லாம் இனிமே தான் ஆரம்பம்.. கொத்தனார் வந்து நல்லா விளங்குறாப்புல விளக்குவாரு.

said...

என்ன பெரீய்யப்பா,
மதுரைன்னு எங்கனாச்சும் போட்டிருந்தாலே அலார்ம் அடிக்குமா உங்க கணினியில? டாண்னு ஆஜராயிட்டீங்க.

ஒரு தடவை வாங்கினதுக்கப்புறம் தலப்ப மாத்தணும்னா உங்கூரு கடைக்காரங்க ஒத்துப்பாய்ங்களா?

said...

ஜோசப் சார்,
//கொத்தனார் செஞ்சா அது கொத்ஸு பரோட்டா..
//
வேணாம்.. கொத்தனாரையே அவங்க தங்கமணி செஞ்சாலும் கொத்ஸு பரோட்டா தானே? இத அவர்கிட்ட தான் கேக்கணும்.

said...

சடையப்பா,
என்ன சொல்ல வர்றீங்கன்னே புரிய மாட்டேங்குதே. ரொம்ப உள்குத்தா இருந்தா எனக்கெல்லாம் லைட் அவ்ளோ பளிச்னு எரியாது.

said...

இளா,
எல்லாரும் கொத்துபரோட்டாவ take away னு சொல்லி லவட்டிடீங்கன்னா, செஞ்சு வச்சு உக்காந்திருக்கிற கொத்ஸு விரல் சூப்ப வேண்டியதுதானா?

said...

என்ன இராமநாதன்,

இது கொத்ஸ் தளமா ஒங்க தளமான்னு தெரியாத அளவுக்கு ஒங்க புகைப்படமாருக்கு!

டேக் ஓவர் பண்ணிட்டீங்களா என்ன:)

said...

ஜோசப் சார்,
பரோட்டா எப்படி செய்யுறதுன்னு சொல்ற இந்தப்பதிவே கூட்டு வச்சப்புறந்தான் வந்ததுன்னு நீங்க கவனிக்கலியா சார்??? :))

அது ஒண்ணுமில்ல, தனித்தனியா பி.க பண்ணி கட்டுபடியாகல, அதான் கூட்டணி அமைச்சாச்சு! வெளியில இருந்தாலும் தொடர்ந்து ஆதரவு கொடுங்க.

said...

//கொத்து பரோட்டாவில் சால்னா விடணும் அது இல்லைன்னா செய்யறது கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. //

கொத்துஸ் அது எல்லாம் அவங்க ஊரில. நம்ம ஊரில் கொத்து புரோட்டாவே தனி. நீங்க சொன்ன அனைத்து மேட்டரையும் நல்லா வதக்கிட்டு, புரோட்டா மாவை நல்லா வீசி வதக்கின மேட்டர உள்ள வச்சு, கொஞ்சம் எண்ணெய்(நெய்) பொறிக்கவிட்டு பின்ன கொத்த ஆரம்பிப்ப்பாங்க பாருங்க. ஆஹா என்ன ஒரு தேவராகம். அந்த தேவராகம் முடிந்தவுடன் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து கொண்டு வந்து கொடுப்பாங்க பாருங்க. ஆஹா அமிர்தம் மாதிரி இருக்கும். அதுக்கு பேரு கொத்து புரோட்டா....

said...

ராம்ஸ்,
உங்க ஊரில டால்டா புரோட்டா கிடைக்குமே. அந்த கடை இன்னும் இருக்கா. சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. இன்னும் அப்படியே மெயிண்டன் பண்ணுறாங்களா?

லஸியும் கிடைக்குதா?

said...

கஷ்டபட்டு நீங்க சொன்ன முறையில பரோட்டா செஞ்சு வச்சிருக்கேன்.

அதை எப்படி சாப்பிடரது என ஒரு பதிவு (சப்ப பதிவு) போட்டால் உதவியாக இருக்கும்.

said...

கொத்ஸ், என்ன மீள்பதிவேல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க .....

said...

ஒருத்தர் கொத்தினாலே தாங்காது, இதுல கூட்டணி வெச்சுக்கிட்டு கொத்தினா அவ்வளவு தான்.

:-)

said...

Enga veettula innaikku kotthu parotta:-)

said...

கொத்ஸ்,
நாங்க வாங்கர பரோட்ட (Paratha) ஒரு பாக்கெட்ல 5 பரோட்டா இருக்கும்... கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும்..

பரோட்டா போடனுமா இல்லை பராத்தா (2 வெரைட்டி இருக்காமே) போட்டா பரவாயில்லையா?

நீங்க சொன்னது ஒரு பாக்கெட்டுக்கு தானே...

பரோட்டாவை முதல்ல தவால போட்டு ரெடி பண்ணிக்கனுமா?

இன்னைக்கு ராத்திரி இதுதான் செய்ய போறேன்... நல்லா வருதானு செஞ்சிட்டு சொல்றேன் :-)

said...

மத்தவங்களுக்கு அப்புறம் பதில் சொல்லறேன். முதல்ல வெட்டிப்பையனுக்கு.

//பரோட்டா போடனுமா இல்லை பராத்தா (2 வெரைட்டி இருக்காமே) போட்டா பரவாயில்லையா?//

பரோட்டாதான் நல்லா இருக்கும். அது கிடைக்குதுன்னா பராத்தாவை போடுங்க. விதி வலியது யாரு மாத்த முடியும்? :)

//ஒரு பாக்கெட்ல 5 பரோட்டா இருக்கும்..//

பரோட்டான்னா ஒரு பாக்கெட் போடுவேன். எங்க வீட்டுக்கு சரியா வரும் (நான்,மனைவி,மகன்). பராத்தான்னா ஒரு 3 போடுங்க. எவ்வளவு பேர் சாப்பிட. அதைச் சொல்லவே இல்லையே.

//பரோட்டாவை முதல்ல தவால போட்டு ரெடி பண்ணிக்கனுமா?//

பரோட்டாவை முதலில் மைக்ரோவேவில் சூடு பண்ணிக்கிட்டு பிச்சு வைச்சுக்குங்க.

//நல்லா வருதானு செஞ்சிட்டு சொல்றேன் :-)//
நமக்கு ஒரு பார்ஸேல்ல்ல்ல்ல்....

said...

//என்னா சாமி திரும்பி ஆரம்பமா? பிரியலே//

கால்கரியாரே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. திங்கள்கிழமை புரியும்.

said...

//அதனால, "நாட்டாம, தலப்ப மாத்து..."//

சரி. கொத்ஸு பரோட்டான்னே இருந்துட்டுப் போகட்டும்.

said...

//@%^$#$% &*(^$ &^ *()%$# - வஞ்சது புரிஞ்சிருக்குமே//

அதுக்காக இப்படி எல்லாமா திட்டறது?

said...

//இது தெரியாதா? கொத்தனார் செஞ்சா அது கொத்ஸு பரோட்டா..

அதானேங்க:)//

அதே அதே. :-D

said...

//Wife: இலவசக்கொத்தனார் pondaatti kodutthu vaithaval!.

Husband: How many பேரு இதுவரைக்கும் விக்கிச்சு போயிருக்காங்க theriyuma?.//

யப்பா சடையப்ப வள்ளலே, என்ன சொல்ல வறீங்க? குடும்பத்தில குழப்பம் பண்ணாதீங்கப்பா.

said...

//http://binarywaves.blogspot.com/2004_10_01_binarywaves_archive.html

Haahaa, my take on Kothu Parotta//

என்னாது இது? ஒரே இங்கிலிபீஸா இல்ல இருக்கு. அடியாத்தி, இந்த ஆளு என்ன சொல்லறாரு?

said...

//என்ன இராமநாதன்,

இது கொத்ஸ் தளமா ஒங்க தளமான்னு தெரியாத அளவுக்கு ஒங்க புகைப்படமாருக்கு!

டேக் ஓவர் பண்ணிட்டீங்களா என்ன:)//

என்ன ஜோசப்சார், இந்த மாதிரி எங்களுக்குள்ள சிண்டு முடியறீங்களே. இது நியாயமா?

இருக்கறதுல அவரு மூஞ்சி நல்லா இருந்தது. அதான் அவரு போட்டோ போட்டோம். அதுக்குப் போயி...

என்னாது, அப்ப மூணு பதிவும் என் பேருல ஏன் வந்ததா? பாருங்க இப்படி எல்லாம் பேசப்பிடாது. அளுதிருவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்...

said...

//கொத்துஸ் அது எல்லாம் அவங்க ஊரில. நம்ம ஊரில் கொத்து புரோட்டாவே தனி. நீங்க சொன்ன அனைத்து மேட்டரையும் நல்லா வதக்கிட்டு, புரோட்டா மாவை நல்லா வீசி வதக்கின மேட்டர உள்ள வச்சு, கொஞ்சம் எண்ணெய்(நெய்) பொறிக்கவிட்டு பின்ன கொத்த ஆரம்பிப்ப்பாங்க பாருங்க. ஆஹா என்ன ஒரு தேவராகம். அந்த தேவராகம் முடிந்தவுடன் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து கொண்டு வந்து கொடுப்பாங்க பாருங்க. ஆஹா அமிர்தம் மாதிரி இருக்கும். அதுக்கு பேரு கொத்து புரோட்டா....//

இந்த மேட்டர் புதுசா இருக்கே. செஞ்சு பார்க்க வேண்டியதுதான்.

said...

//கஷ்டபட்டு நீங்க சொன்ன முறையில பரோட்டா செஞ்சு வச்சிருக்கேன்.

அதை எப்படி சாப்பிடரது என ஒரு பதிவு (சப்ப பதிவு) போட்டால் உதவியாக இருக்கும்.//

ஆஹா! அதுக்குத்தான் நம்ம ஒரிஜினல் பதிவுல ஒரு வரி போட்டேன். இங்க விட்டுப் போச்சு. அது இதுதான்.

"ஆங். சொல்ல மறந்துட்டேனே. தொட்டுக்க சில்லுன்னு kingfisher வாங்கி வச்சுக்குங்க மாமோவ்."

இது இருந்ததுன்னா உங்களுக்கே எப்படி சாப்பிடணமுன்னு தெரியும்.

said...

//கொத்ஸ், என்ன மீள்பதிவேல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க .....//

விஷயம் இருக்குங்க ஜெயஸ்ரீ. இந்த வாரம் வரை சஸ்பென்ஸ். திங்கள்கிழமை வாங்க. விஷயத்தைச் சொல்லறேன். :-D

said...

//ஒருத்தர் கொத்தினாலே தாங்காது, இதுல கூட்டணி வெச்சுக்கிட்டு கொத்தினா அவ்வளவு தான்.//

உங்க நல்ல மனசுக்கு.....

ஓண்ணும் ஆகாதுன்னு ஓப்பனா பொய் சொல்லலை. ரொம்ப ஆனாலும் வலிக்காதுன்னு வேணா சொல்லறேன். ;-D

said...

//Enga veettula innaikku kotthu parotta:-)//

நமக்கும் பார்ஸல் அனுப்புங்கண்ணா. இல்லைன்னா வந்து எப்படி இருந்ததுன்னாவது சொல்லுங்க.

said...

கொத்சு...எனக்கு ஒரு சந்தேகம்...இந்தப் பதிவை ஏற்கனவே படிச்சிப் பின்னூட்டம் போட்ட மாதிரி "நெஞ்சம் மறப்பதில்லை"! என்ன நடக்குதுன்னு உண்மையச் சொல்லீருங்க. இது ஏற்கனவே போட்டதுன்னா....என்னோட பின்னூட்டம் எங்க? யாருக்கு பயந்துக்கிட்டு என்னோட பின்னூட்டத்த அழிச்சீங்க? உண்மையச் சொல்லீருங்க.

said...

//கொத்சு...எனக்கு ஒரு சந்தேகம்...இந்தப் பதிவை ஏற்கனவே படிச்சிப் பின்னூட்டம் போட்ட மாதிரி "நெஞ்சம் மறப்பதில்லை"!//

அண்ணா, இது மீள்பதிவுதான். அது வேற பிளாக், இது வேற. நீங்க முன்ன போட்ட பின்னூட்டம் எல்லாம் அங்க பத்திரமா இருக்கு.

எதுக்கு இந்த வலைப்பூ என்ற மேட்டர் திங்களன்று சொல்லப்படும். உங்களுக்கும் இதில் வேலை உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான்.

said...

//மத்தவங்களுக்கு அப்புறம் பதில் சொல்லறேன். முதல்ல வெட்டிப்பையனுக்கு.
//
தன்யனானேன் :-)

//பரோட்டாதான் நல்லா இருக்கும். அது கிடைக்குதுன்னா பராத்தாவை போடுங்க. விதி வலியது யாரு மாத்த முடியும்? :)
//
அப்ப நான் பரோட்டாவே வாங்கி செய்யறேன்... நல்லா இல்லைனா இத சொல்லி எஸ்ஸாயிடுவீங்க ;)

//பரோட்டான்னா ஒரு பாக்கெட் போடுவேன். எங்க வீட்டுக்கு சரியா வரும் (நான்,மனைவி,மகன்). பராத்தான்னா ஒரு 3 போடுங்க. எவ்வளவு பேர் சாப்பிட. அதைச் சொல்லவே இல்லையே.//
நாங்க 2 பேர்... இருந்தாலும் 1 பாக்கேட் காலி பண்ணிடுவோம்னு நம்பிக்கை இருக்கு :-)

//பரோட்டாவை முதலில் மைக்ரோவேவில் சூடு பண்ணிக்கிட்டு பிச்சு வைச்சுக்குங்க.//
சரி... இதையே ஃபாலோ பண்றேன் ;)

//நமக்கு ஒரு பார்ஸேல்ல்ல்ல்ல்.... //
பாஸ்டன் வாங்க... எதுக்கு பார்ஸல் எல்லாம் ;)

நான் உங்க ஊருக்கு கடந்த 6 மாசத்துல 3 தடவை வந்திருக்கேன் ;)

நியு இயர் கூட நியுயார்க்லத்தான்னு நினைக்கிறேன் :-)

said...

இலவசம்,

ஏன் இந்த சமையல் சமாசாரமெல்லாம்,
நாங்கதான் ஏதோ வயித்துபொழப்புக்கு கிடைக்கறத சாப்பிட்டுகிட்டு உயிர் பொழச்சிகிட்டு இருக்கோம். உங்களுக்கு என்ன வந்தது?

//இது தெரியாதா? கொத்தனார் செஞ்சா அது கொத்ஸு பரோட்டா..//

அப்போ
நாத்தனாரு..
சித்தாலு...

இவுக எல்லாம் செஞ்சா?

said...

//அப்ப நான் பரோட்டாவே வாங்கி செய்யறேன்... நல்லா இல்லைனா இத சொல்லி எஸ்ஸாயிடுவீங்க ;)//

அதுக்குத்தான் பதிவை சரியா படிக்கணும்.

பதிவிலிருந்து...

//நல்லா இருந்தா இங்க வந்து சொல்லுங்க, நல்லா வரலைன்னா உங்களுக்கு செய்யத் தெரியலை. என்கிட்ட மீண்டும் எப்படி செய்யணும்ன்னு கேளுங்க. சொல்லித்தரேன்.//


//நான் உங்க ஊருக்கு கடந்த 6 மாசத்துல 3 தடவை வந்திருக்கேன் ;)//
நான் கூடத்தான் உங்க ஊருக்கு ரெண்டு மூணுதடவை வந்தாச்சி. அடுத்த முறை மீட்டிங்தான். அதுக்குள்ள போண்டா போட கத்துக்குங்க.

said...

//ஏன் இந்த சமையல் சமாசாரமெல்லாம்,//

அட என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. சமைக்கத் தெரிஞ்சது எவ்வளவு இடத்தில கை கொடுத்து இருக்கு தெரியுமா?

//
அப்போ
நாத்தனாரு..
சித்தாலு...

இவுக எல்லாம் செஞ்சா?//

அவங்க எல்லாம் சரியா செஞ்சா நமக்கு எதுக்கு இவ்வளவு கஷ்டம். விடுங்க. இதையெல்லாம் பப்ளிக்குல பேசிக்கிட்டு. :)

said...

கொத்ஸ்,
அட்டகாசமா வந்திருந்தது...
கொஞ்சம் காரம்தான் கம்மியா இருந்துச்சி. அடுத்த தடவை பச்சைமிளகாய் ரெண்டு சேர்த்துக்கறேன்... ஆஹா இப்பதான் நியாபகம் வருது மிளகு பொடி மறந்திட்டேன்...
இருந்தாலும் நல்லாதான் வந்துச்சு...

//நான் கூடத்தான் உங்க ஊருக்கு ரெண்டு மூணுதடவை வந்தாச்சி. அடுத்த முறை மீட்டிங்தான். அதுக்குள்ள போண்டா போட கத்துக்குங்க. //
போண்டாதானே... எப்படி செய்யனும்னு நம்ம புலிய கேட்டுக்கலாம்...

சரி.. இந்த மாதிரி சிம்பிளா செய்யற மேட்டர் எதுவாது இருந்தா சோல்லுங்க... பயனுள்ளதா இருக்கும்

said...

//அட்டகாசமா வந்திருந்தது...//

வெ.பை, நீர்தான்யா முதல் சர்டிபிகேட். வாழ்க வளமுடன். :) உங்க ரெண்டு பேருக்கு ஒரு பாக்கெட் சரியா இருந்ததா?

//இந்த மாதிரி சிம்பிளா செய்யற மேட்டர் எதுவாது இருந்தா சோல்லுங்க...//

அதான் அடுத்தது பாஸ்டா போட சொல்லியாச்சே. புகுந்து விளையாடுங்க.

said...

//உங்க ரெண்டு பேருக்கு ஒரு பாக்கெட் சரியா இருந்ததா?
//
படுபாவிங்க... நாங்க வாங்கன பாக்கெட்டுக்குள்ள வேற ஒரு கம்பெனி பாக்கெட் வெச்சிட்டானுங்க... அதுல 5க்கு பதிலா 3 தான் இருந்துச்சு...

முட்டையெல்லாம் போட்டு பண்ணதால சரியா இருந்துச்சு... அடுத்த தடவை இன்னும் சூப்பரா செஞ்சிடலாம்னு நம்பிக்கை இருக்கு...

//அதான் அடுத்தது பாஸ்டா போட சொல்லியாச்சே. புகுந்து விளையாடுங்க//
அது இடாலியன் சாப்பாடாச்சே... நமக்கு காரமா இருந்தாதான் பிடிக்கும் :-)

said...

//அது இடாலியன் சாப்பாடாச்சே... நமக்கு காரமா இருந்தாதான் பிடிக்கும் :-)//

யோவ் போயி பதிவை படிப்பா. நம்ம ஊர் நாக்கைப் பத்தி நமக்குத் தெரியாதா? மசாலாப் பொடி, மிளகாய் எல்லாம் போட்டுத்தான் பண்ணச் சொல்லி இருக்கோம். :)

said...

சடையப்பரே, இன்னும் ரெண்டு தடவை வந்து விளக்கம் சொன்னாலும் புரியப் போறது மாதிரி தெரியலை. என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணாம இருந்தா சரிதான்.

said...

பரோட்டாவ விடறதா இல்லையா கொத்தனாரே? எப்ப சாம்பார், பிரியாணி ப்ரமோசன்லாம்? btw, பணியாரம்லாம் கூட இருக்கு உலகத்துல. :)

said...

//பணியாரம்லாம் கூட இருக்கு உலகத்துல.//

பிரேமலதா அக்கா, திங்கள் வரை இருங்க. அப்புறம் பணியாரம், சுசியம் என்ன வேணாலும் வரும்.

said...

வாகனத்தின் ரிவர்ஸ் கியர் எப்படி வேலை செய்கிறது என்று அறிய ஆவல். அதைப் போட்டவுடன் ஜீபூம்பா போல் எப்படி வண்டி பின்னால் நகர்கிறது? தயவு செய்து ஒரு புதிய பதிவு போடவும்.