Sunday, October 29, 2006

உனக்காக எல்லாம் உனக்காக....

... இந்த வலைப்பூவும் வரும் பதிவுகளும் உனக்காக!!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விபரங்கள் - கேள்வி பதிலாய்.

யார் இந்த விக்கிப்பசங்க?

சில சமயம் நாங்க (பக்கத்துலே Contributorsனு லிஸ்ட் இருக்கு பாருங்க), சில சமயம் நீங்க, எல்லா சமயமும் நாம்.

எதுக்காக இவங்க?

சமையல் பண்றதுலே ஆரம்பிச்சு, கோட் எழுதறது, பதிவு போடறது, பல் தேய்க்கறதுன்னு ஆளாளுக்கு ஆயிரம் சந்தேகங்கள். இதை யாருகிட்டே கேக்கறது, யாரு பதில் சொல்வாங்கன்னு தெரியாமலேயே தோல்வியை ஒப்புக்கொண்டு விடுகிறோம். சரி பதிவு எழுதாட்டா? அதனால ஒண்ணும் பிரச்சினையில்லைதான், நாடு நாசமாப் போயிடாதுதான். ஆனா பல் தேய்க்காட்டா? சுற்றுப்புற சூழல் பத்தி கவலைப்பட வேணாமா? அதனால தாராளமா எல்லாக் கேள்வியும் கேளுங்க!

எல்லாக்கேள்விக்கும் உங்களுக்கு விடை தெரியுமா?

எங்களுக்கு விடை தெரியாத கேள்வியே இந்த உலகத்திலே கிடையாதுங்க! என்ன, பல சமயம் விடை "தெரியாது"ன்னு இருக்கும். ஆனா, எப்படியாவது நாங்களோ, நீங்களோ தேடிக் கண்டுபிடிச்சு விளக்கிடுவோம்.

யார் பதிவு போடுவாங்க?

நீங்களும் போடலாம். கேள்விக்குத்தான் விடைன்னு இல்லாம, கேள்வியும் நானே, பதிலும் நானேன்னு ஒரு பதிவை உருவாக்கி எங்களுக்கு அனுப்பினீங்கன்னா அதை ஒரு முறை பார்த்துட்டு உங்க பேரோட பதிப்பிச்சிருவோம். பின்ன,ஆரஞ்சு ஜூஸ் குடிக்கறது எப்படின்னு ஆறுகோடித் தமிழர்களும் கொத்தனார்கிட்ட கேட்டாங்களா என்ன?

எப்படி கேள்வி கேக்கறது?

எப்படி வேணும்னாலும் கேக்கலாம். அதுக்காக ____ வலைப்பதிவருக்கு கிறுக்கு பிடித்தது எப்படி?ன்ற மாதிரி தனிநபர் சம்மந்தப்பட்ட கேள்வியக் கேட்டு எங்களைக் கஷ்டப்படுத்தாதீங்க. நகைச்சுவையான பதிலை வரவழைக்கற மாதிரி கேள்வியா இருந்தாலும் சரி, சீரியஸான பதிலை வரவழைக்கிற கேள்வியா இருந்தாலும் சரி - wikipaiyan AT gmail DOT com என்ற முகவரிக்கு தட்டி விடுங்க. உடனடியா கேள்விய போஸ்ட் பண்ணிடுவோம். விடை தெரிஞ்சவங்க, அல்லது கலாய்க்கிறதுன்னு முடிவு கட்டிட்டவங்க, போஸ்ட் ஆன கேள்விக்கு பதிவின் உரலைக் குறிப்பிட்டு பதில் போட்டிங்கன்னா அதையும் உடனடியா பதிஞ்சிடுவோம். (24 மணிநேரமும் எங்க ஆளுங்க வலையிலே உலாவிகிட்டு இருப்போமில்ல!)

பதில் யாரு சொல்லலாம்?

கேள்வி சம்மந்தப்பட்ட துறையாளர்களிடம் இருந்து, கூகுளாண்டவர் கிட்டே நேர்ந்துகிட்டு, எங்க கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நாங்க பதிலை வாங்க முயற்சி செய்வோம். அதே நேரத்தில படிக்கறவங்களுக்கு இந்த விஷயத்திலே வெளிச்சத்தை தூக்கிப் போடமுடியும்னு நம்பிக்கை இருந்தா அவங்களும் எழுதலாம்.

பதில் சொல்றதுக்கு எதாச்சும் வரைமுறை இருக்குதுங்களா?

பெரிசா ஒண்ணும் கிடையாதுங்க. கலாய்க்கிற பதில்னா அதை ஒரு மூலையிலே குறிப்பிட்டுடுங்க.. அதைத் தனியா கட்டம் கட்டி போட்டுடுவோம். ஆனா சீரியஸான பதில்னா, எங்கே இருந்து பதில் வந்துதுன்னு ஒரு ஆதாரம், ஒரு சுட்டி, ஒரு நன்றி குறிப்பிட்டு வைக்கிறது உத்தமம். நன்றி கெட்டவங்கன்னு நம்மளை யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு சொல்லிடக்க்கூடாது பாருங்க.

"நமக்குத் தெரிஞ்ச விஷயம் மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்குத் தெரிஞ்சது நமக்குத் தெரியாம இருக்கலாம். அறிவு பகிர்வதால் கூடும்"அவ்வளவுதாங்க இந்த வலைப்பூவின் நோக்கம்.

எங்களுடைய வேலைன்னு பார்த்தா கேள்விகளை வாங்கறதும் பதில்களை வாங்கறதும் பதிப்பிக்கறதும் மட்டும்தான். இது ஒரு பொது வலைப்பூ.

இதன் வெற்றி, தோல்வி உங்க கையிலதான், சரி, உங்க கீ போர்ட்டில்தான் இருக்கு. மறந்திடாதீங்க.

42 comments:

said...

என்னபா வ. வா சங்கம் உடஞ்சிடுச்சா? அது சரி பசங்க லிஸ்டுல துளசி பேரூ எப்படி ;-))))

said...

என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க? மருத்துவர், பெனாத்தலார், நானு, சின்னவன், துளசி... ப.ம.க. வாசனைதனே அடிக்குது. இதுல அந்த சங்கம் எங்க வந்துது? அது மட்டுமா அங்க என்ன ஆப்பு வெச்சாலும் கேள்வியே கிடையாது. இங்க வெறும் கேள்வி பதில்தான். எல்லாம் சேர்ந்து இருந்துக்க வேண்டியதுதான்!

அப்புறமா நம்ம டீச்சர், அவங்க வாலிபி இல்லையா? அதான் இளமை இளமையோட சேர்ந்திருச்சு. நீங்களும் சேர்ந்துக்கிட்டு உங்க இள்மையை நிலைநாட்டிக்கறீங்களா? :-D

said...

//அது சரி பசங்க லிஸ்டுல துளசி பேரூ எப்படி ;-)))) //

நீங்க என்னக்கா துளசி பெயர் மட்டும் கேட்குறீங்க. நானே பசங்க லிஸ்டல ராம்ஸ் எப்படி, கொத்துஸ் எப்படி, பினாத்த்ஸ் எப்படினு யோசிக்கினு இருக்கேன்.....

சரி என்ன பண்ணறது. நம்ம பெருந்தலைகள் அவர்கள். அவர்கள் சொன்ன கேட்குக்க வேண்டியது தான்.

said...

//நானே பசங்க லிஸ்டல ராம்ஸ் எப்படி, கொத்துஸ் எப்படி, பினாத்த்ஸ் எப்படினு யோசிக்கினு இருக்கேன்.....//

இதுல யோசிக்க என்ன இருக்கு?!!

சரி புலி வாலைப் பிடிச்சாச்சு! இனி சுத்தி சுத்தி வாங்க. புரியுதா!

ஆமா உங்க ரெண்டு பேருக்குமே, இந்த பதிவைப் பத்தி ஒண்ணுமேவா சொல்லத் தோணலை?

said...

//என்னபா வ. வா சங்கம் உடஞ்சிடுச்சா? அது சரி பசங்க லிஸ்டுல துளசி பேரூ எப்படி //

உஷா மேடம்,

என்க யாராவது புதுசா கூட்டணி அமைச்சாலும் சங்கம் உடைஞ்சிடுச்சு என்பதுதான் காரணமா இருக்குமா என்ன?

சங்கம் எல்லாம் உடையலை.

said...

சரி கேள்விகளை நான் ஆரம்பிக்கட்டுமா? நீங்கள் ஆரம்பிக்கிறீர்களா?

said...

//சங்கம் எல்லாம் உடையலை.//

அதானே! பேரில் 'கம்' இருக்கும்போது அவ்வளவு சீக்கிரம் உடையுமா?

said...

//சரி கேள்விகளை நான் ஆரம்பிக்கட்டுமா? நீங்கள் ஆரம்பிக்கிறீர்களா?//

யோவ் சிபி, உமக்கெல்லாம் பதில் சொல்லி மாளாது, அதனால கேள்வியை நீரே கேட்டுக்கிட்டு, அதுக்கு பதிலையும் சேர்த்து எழுதி அனுப்பும். இங்க உம்ம பேரைச் சொல்லி போட்டுடலாம்.

(அப்பாடா, உஷாக்கா கேட்ட கேள்வி, சிபி கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் டக்கு டக்குன்னு பதில் சொல்லியாச்சு!)

said...

பசங்க லிஸ்டுலே துளசி பேரு எப்படியா?

அய்யோ உஷா, உங்களுக்குப் புரியலையா? (-:

ரகசியம் சொல்லவா?

இந்த 'வாலுங்களை'க் கட்டி மேய்க்க ஆளு வேணாமா?

அதான்:-))))))

said...

என்ன டீச்சர் நீங்க? வாலிபின்னு சொன்னா, அதை கேட்க்காம இப்படி சொ.செ.சூ. வெச்சுக்கறீங்களே!

said...

ஒரு கேள்வி கேக்க எவ்வளவு ரூவா தருவீங்க?

said...

விக்கிபிடிய்யா?

ஏன் விக்கிறீங்க.. எதை பிடிய்யான்னு சொல்லுறீங்க?

said...

தலச் சொல்ல சொன்னாரு...

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா....

said...

இளா கேக்கச் சொன்னார்...

"விக்கிபிடிய்யாப் பசங்க ஆளும் கட்சியா? இல்ல எதிர் கட்சியா?

(அவுட் ஆப் சாய்ஸ் ஆன்சர் நாட் அக்சப்டட்.)

said...

பாண்டியின் கேள்வி இது

விக்கிபீடியா பசங்க மாதிரி என்சைட்லோபிடியா.. ச்சே என்சைக்லோப்பிடியா பொண்ணுங்க அப்படின்னு ஒரு பதிவு எதிர்காலத்துல்ல வருமா?

said...

இப்போ நான் கேக்குறேன்...

இந்தியா எப்போ கிரிக்கெட் மேட்ச்ச்ல்ல ஜெயிக்கும்?

said...

//ஒரு கேள்வி கேக்க எவ்வளவு ரூவா தருவீங்க?//

தேவு தம்பி, பதிவை சரியா படிக்கலையா? நாங்க உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு கேட்கலை. வெறும் கேள்விகள்தான். அதனால காசெல்லாம் கிடையாது.

said...

//ஏன் விக்கிறீங்க.. எதை பிடிய்யான்னு சொல்லுறீங்க?//

நீங்க எல்லாம் கேள்வி கேட்டா நாங்க பயப்பட மாட்டோமா? பயந்தா விக்கல் வராதா? என்னய்யா கேள்வி கேட்கற?

ஆமாம் நாங்க எங்க பிடிய்யான்னு சொன்னோம்? வேற எதாவது போட்டி வலைபதிவு படிச்சீறா?

said...

//கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா....//

யப்பா, ராசா, இது நாங்க மட்டும் கிளம்பி ஆகப் போற வேலை இல்லை. கொஞ்சம் நீங்களும் வாங்கப்பா.

said...

//"விக்கிபிடிய்யாப் பசங்க ஆளும் கட்சியா? இல்ல எதிர் கட்சியா? //

நாங்க என்னக்குமே ஆளும் கட்சிதான். அதிலென்ன சந்தேகம்?

said...

//விக்கிபீடியா பசங்க மாதிரி என்சைட்லோபிடியா.. ச்சே என்சைக்லோப்பிடியா பொண்ணுங்க அப்படின்னு ஒரு பதிவு எதிர்காலத்துல்ல வருமா?//

யப்பா பாண்டி, இப்படி ஒரு கேள்விக்குள்ள 10 கேள்வி கேட்கறியேப்பா.

சரி, முதலில் இது விக்கி பசங்க. எங்க இருந்து பீடியா வருது?

உங்க சைட் (ஜே)லோ வா இருக்கலாம். அதை நாங்க பிடிச்சா நல்லாவா இருக்கும்? அதனால இந்த மாதிரி என் - சைட் -லோ-பிடியா ன்னு எல்லாம் கூவக் கூடாது.

ஆம்பிளைப் பசங்க, பொம்பிளைப் பசங்கன்னு கேட்டது இல்ல? பசங்கன்னா இருபாலரும்தான். அதுக்காக நாளைக்கு அப்படி ஒரு வலைப்பூ வந்தா தடுக்கவா முடியும். வாழ்த்தி வரவேற்று கூட்டணி வெச்சுக்க வேண்டியதுதான்.

said...

தேவ் அண்ணா! முதல் போணிக்கு நன்றி. இங்கே பாருங்க உங்க கேள்விக்கு விடையை!

said...

http://wikipasanga.blogspot.com/2006/10/30-oct-06.html - இங்கேன்னு சொல்ல வந்தேன்.. இந்தக்கொத்தனாரோட சேந்தாலே பி கயமை அதுவா வருது!

said...

//ஆனா, எப்படியாவது நாங்களோ, நீங்களோ தேடிக் கண்டுபிடிச்சு விளக்கிடுவோம்.//
பல்லைத்தானே?

said...

ஒந்து தினா ராத்ரியலி
கண்டே கனசொந்து
பண்ண பண்ணதா பெளக்கலி கண்டே
திவ்யக ரூப ஒந்து
===========================
விரஹா நூறு நூறு தரஹா
விரஹா ப்ரேம காவ்யதா கஹி பரஹா
===========================
கற்பூரத கொம்பே நானு
மிஞ்ச்சண்த்தே பளி பந்தே நீனு
நின்ன ப்ரேம ஜ்வாலே
ஹோகி நன்ன மேலே
கரகி கரகி நீறாதே நானே
============================
மெல்லுசிரி சவி கானா
யதே ஜல்லனே ஹூவின பாணா
============================
எந்தெந்தோ நின்னது மறது நானிரலாரே
=============================
ஜனரிந்த நானு மேலே பந்தே
ஜனரெல்லா நன்ன தேவரந்தே
=============================
நாவாடுவ நொடியே கன்னட நொடி
நாயிருவா நாடிது கந்தத குடி
கந்தத குடிசி கந்தத குடிவி
ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹே ஹே ஹே

(நனகு ஈத்தரா மாடியிருவ ஈ விக்கிப்பசங்களனு சும்னே பிடபாரது. ஒதே கொடலே பேக்கு.)

said...

இளா, பல்லை விலக்கணும், புரியாததை விளக்கணும்..

எங்கே சொல்லுங்க - வி-ள-க்-கி-டு-வோ-ம்..

108 முறை சொல்லுங்க!@

said...

அய்யா ஜிரா.. இது தமிழ் விக்கி..

இப்படியெல்லாம் பண்ணீங்கன்னா விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுடுவோம்..

உடனடியா கோனார் உரையுடன் இடம் சுட்டி பொருள் விளக்குக.
4-5 பின்னூட்டமானாலும் பரவாயில்லை.

said...

//இளா, பல்லை விலக்கணும்,//

என்ன சுரேஷ், ரொம்ப கடுப்பாயிட்டீங்களா? அவரு பல்லை விலக்கற லெவலுக்குப் போயிட்டீங்க. ஒரு ஆட்டோ அனுப்பி அப்படியெல்லாம் செஞ்சீங்க, அப்புறம் உங்களை பல் கொண்டான் பினாத்தலார் அப்படின்னு அடைமொழியோட கூப்பிட வேண்டியதுதான். :)

said...

இந்த "விலக்குதல்", "விளக்குதல்" பத்தி ஒரு "விளக்கம்" கொடுக்கலாம்னு நெனைக்கிறேன்!!

பல் விலக்குதல், பல் விளக்குதல்.....இது ரெண்டுல எது சரி?

ரெண்டுமே சரிதான்!

பல்லுல இருக்கற அழுக்கை நீக்கறதுக்காக ஒரு காரியம் பண்ணி, அந்த அழுக்கை பற்பசை போட்டு துலக்கி நீக்கினீங்கன்னா, அது "பல் விலக்குதல்"

ஆட்டோல வந்து உங்க பல்லை சில பேரு விலக்குவாங்க!

அது இதுல சேத்தி இல்ல!

அது வேற!
இது வேற!

'விளக்குதல்'னா சுத்தம் பண்றதுன்னு ஒரு அர்த்தமும்......ஐயைய்ய்யோ.....குமரன் அடிக்க வரப் போறாரு!.....பொருளும் இருக்கு!
சுத்தம் பண்றதுன்னு ஒரு பொருளும் இருக்கு!

அப்படிப் பாத்தா, 'பல் விளக்குதல்' கூட சரிதான்!

விலக்கமோ, விளக்கமோ, வில[ள]க்காம இருக்காதீங்க!

நாறிப் போயிடும்!

நா வர்ர்ட்டா!

ஒரு மூணு வாரம் என் தொல்லை இருக்காது!

இந்தியா போறேன்!!

சொ.செ.சூ. !!??

தெரியாது!

:)
:((
:))

said...

நல்ல பசங்க.. சமத்தா பதில் சொல்லி பேர் வாங்க வாழ்த்துக்கள்.

said...

கணேசரே, அப்படி எல்லாம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. உங்க ஏரியா கேள்வி வரும் போது அப்படியே அனுப்பிடுவோம். பதில் போடறது உங்க வேலைதான். ஆமா. இப்பவே சொல்லிட்டேன். :)

said...

ஏங்க எஸ்.கே.

//பல்லுல இருக்கற அழுக்கை நீக்கறதுக்காக ஒரு காரியம் பண்ணி, அந்த அழுக்கை பற்பசை போட்டு துலக்கி நீக்கினீங்கன்னா, அது "பல் விலக்குதல்"//

அப்போ பல்லையா விலக்கறீங்க? அழுக்கைத்தானே விலக்கறீங்க? அப்புறம் அது எப்படி பல் விலக்குதல்?

நம்ம அகராதி சொல்லறதைப் பாருங்க.

Cologne Online Tamil Lexicon: Search Results

1 விலக்கு 02 1. prohibition, injunction not to do a thing, dist fr. viti ; 2. seclusion; 3. rule of exception; 4. hindrance, obstruction; 5. activity of a warrior in warding off arrows aimed at him, one of pan1ca-kiruttiyam , q.v.; 6. menses; 7. error, fault

2 விளக்கு 02 1. lamp, light; 2. lustre, band of rays; 3. brightening; 4. the 15th naks2atra

3 விலக்குதல் 01 1. to turn aside; to divert; to avert, prevent; to cause to leave; to put out of the way; 2. to forbid, prohibit; 3. to check, retard, obstruct; 4. to inset, fix; 5. to change; 6. to dismiss, as from a post; 7. to eschew, discard, remove; 8. to repudiate; to controvert; 9. to separate

4 விளக்குதல் 01 1. to make clear; to explain, elucidate; 2. to make illustrious; 3. to clean, brighten, polish; 4. to purify; 5. to distribute, serve; 6. to sweep, clear up; 7. to solder

5 விளக்குதல் to enlarge (TLS)

எனக்கென்னவோ பல் விளக்குதல் என்பதே சரி எனத் தோன்றுகிறது.

said...

உங்க கிட்ட போய் சொல்ல வந்தேன் பாருங்க, என் புத்தியை.......!!

பல் விலக்குதல்னா பல்லில் இருக்கும் அழுக்கை விலக்குதல்னு ஒரு இலக்கிய விதி இருக்கு!

அம்மா, பொன்ஸ், வந்து என்னை காப்பாத்துங்க!

இதுக்கு மறை ஆகு பொருள்னோ என்னவோன்னோ சொல்லுவாங்க.

பசி ஆறுதல்னா உணவு உண்ணுதல்னு பொருள் இல்லியா அது போல, கிட்டத்தட்டன்னு வெச்சுக்கோங்க!
வேற உதாரணம் சட்டுன்னு மினைவுக்கு வரலை!

said...

நல்ல விலக்குறீங்க. அட சட். விளக்குறீங்க. ஆனா சாமி பல் விலக்குதல் அப்படின்னு இலக்கியத்துல எங்கயாவது இருக்கா? சும்மா நீங்களும், பினாத்தலாரும் முன்னாடி எழுதினதை எல்லாம் காட்டக்கூடாது.

said...

SK,

விளக்குவது என்பதே சரியாக இருக்கும் என நானும் நினைக்கிறேன்.

பாத்திரம் விளக்குவது - இன்னொரு உதாரணம்.

பல் விலக்குவது - பல்லில் உள்ள அழுக்கை(பல்லை இல்லை) விலக்குவது இலக்கணப்படி சரியாக வர வேண்டுமானால் ஆகுபெயராகவோ அல்லது உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகவொ (தேவையா இது -) ) இலக்கணக்குறிப்பு வரைய வேண்டும்.

said...

i.ko.,
நானும் உங்களுடந்தான் உடன் படுகிறேன்.

விளக்குதல்தான் சரி.

ஆனால், விலக்குதல் கொஞ்சம் இலக்கிய நயம்!

விளங்குதா?

:))

said...

SK,


உங்கள் சார்பில் இன்னொரு உதாரணம்
வீடு கூட்டினாள் என்று சொல்கிறோம்

கூட்டுதல் என்றால் ஒன்று திரட்டுதல் என்று தானே பொருள்.

வீட்டைக் கூட்டுதல்- வீட்டையா கூட்டுகிறோம், வீட்டில் உள்ள குப்பையைத்தானே ...

வீட்டின் கண் உள்ள குப்பை - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை .

said...

வாங்க ஜெயஸ்ரீ.

//உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகவொ (தேவையா இது -) )//

இதான் நானும் கேட்கறேன். தேவையா இதெல்லாம்? ஏற்கனவே ஒருத்தர் கன்னட பாட்டு பாடறாரு, இப்போ இது வேற.

said...

//விளக்குதல்தான் சரி.

ஆனால், விலக்குதல் கொஞ்சம் இலக்கிய நயம்!//

ஆஹா. நமக்கு சப்போர்ட் வந்தாச்சின்னு பதுங்கறாரே. இருக்கட்டும் இருக்கட்டும்.

said...

//SK,
உங்கள் சார்பில் இன்னொரு உதாரணம்
வீடு கூட்டினாள் என்று சொல்கிறோம்//

ஐய்யய்யோ, இது என்ன கட்சி மாற்றம்? இந்த லேடீஸ் எப்ப என்ன பண்ணுவாங்கன்னு புரிஞ்சுக்கவே முடியலையே! :-D

//ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை .//

இது மட்டும் தேவையா?

said...

//ஐய்யய்யோ, இது என்ன கட்சி மாற்றம்? இந்த லேடீஸ் எப்ப என்ன பண்ணுவாங்கன்னு புரிஞ்சுக்கவே முடியலையே! :-D //

கட்சி மாற்றம் எல்லாம் இல்லை.

பல் விளக்குதல் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

குப்பையை- கூட்டுதல் பொருத்தமாக உள்ளதுபோல்
(பல்லில் உள்ள)அழுக்கை -விளக்குதல் அவ்வளவு பொருத்தமாக இல்லை
இது என் தாழ்மையான கருத்து .... )

said...

//பல் விளக்குதல் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். //

ஜெயஸ்ரீன்னா ஜெயஸ்ரீதான். :-D

பல்லில் அழுக்கு மட்டும் எடுப்பதில்லை. அதை வெண்மையாக்கவும் செய்வதால் விளக்குதல் என்பதே சரியான பாவிப்பு இல்லையா?