Sunday, December 17, 2006

RTP என்றால் என்ன?

ஆஹா தமிழ்மணத்துல கர்நாடக சங்கீதம் பற்றி இவ்வளவு பேச்சு இருக்கே, நாம மட்டும் இதைப் பற்றி பேசாம இருக்கோமே அப்படின்னு கை அரிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல நம்ம வ.வா.ச. பசங்க நல்லத்தனமா ஒரு கேள்வியைக் கேட்டாங்க. இதுதான் சான்ஸ் அப்படின்னு சொல்லி போட்டாச்சு இந்த பதிவு. ஒரு பெரிய பதிவாப் போட்டு 50 பின்னூட்டம் வாங்கின அவங்க கேள்வி இதுதான் - இராகம் தானம் பல்லவி என்றால் என்ன? (பசங்களா, அது ராகம் தானம் பல்லவி, நீங்க கேட்ட மாதிரி ராகம் தாளம் பல்லவி இல்லை, புரியுதா?)

தெலுங்குல ரா அப்படின்னா ஆங்கிலத்தில் கம்.அதனால ராகம் அப்படின்னா வா வான்னு கூப்பிடறது, தானம் அப்படின்னா தேர்தலுக்கு முன்னாடி ஒரு வேண்டுதல் வெச்சு ஜெயிச்ச பின்னாடி அடுத்தவங்க காசுல இலவசமா பொருட்களை குடுக்கறது, பல்லவின்னா குரங்கு எல்லாம் வளர்த்தாங்களே அந்த அக்கா அப்படின்னு வெவகாரமா எழுத தயாரா இருந்த பெனாத்தலாரை 'அடங்குடா மவனே' அப்படின்னு அடக்கிட்டுத்தான் இந்த பதிவு வருது. என்னை வெச்சு அந்த சங்க பசங்க காமெடி எதாவது பண்ணினாங்க அப்புறம் அவரை ரிலீஸ் பண்ணிடுவேன். ஜாக்கிரதை. சரி, இனி மேட்டர்.

அறிமுகம்

இராகம், தானம், பல்லவி (கொஞ்சம் விஷயம் தெரிஞ்சா மாதிரி காட்டிக்கணமுன்னா RTP) என்பது கர்நாடக சங்கீதத்துல பாடுற பல முறைகளில் ஒண்ணு. பொதுவா கச்சேரிகளின் இரண்டாம் பாதியில் பாடப்படும் ஒரு விஷயம் இது. அந்த சமயத்தில்தான் பாடகரின் குரல் உச்சத்தில் இருக்கும். அத்தோடு ரசிகர்களோடு ஒரு நல்ல கனெக்ஷனும் இருக்கும். பல மணி நேரங்கள் கூட பாடக்கூடிய அளவு பாடகருக்கு சந்தர்ப்பம் தரக்கூடிய ஐட்டம் இது. இன்று பெரும்பாலும் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுகிறார்கள். பெயருக்கு ஏற்ப ராகம், தானம், பல்லவி என மூன்று பகுதிகளாகப் பாடப் படுகிறது.

ராகம்

கர்நாடக சங்கீதத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு ராகத்தில் பாடப்படுவது தெரிந்ததே. ஒரு பாடலின் வரிகளைப் பாடுமுன் அந்த ராகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு, அதன் ஸ்வரங்களைக் கொண்டு அந்த ராகத்தின் கட்டமைப்பையும் அழகையும் வெளிக் கொணர்வதுதான் ராகம் பாடுவது எனப்படும். ஸ்வரங்களை விடுத்து ஆ,நா, என்றெல்லாமும் பாடப்படுவதும் உண்டு. ஒரு ராகத்தின் அழகை பாடகர் தன் பாணியில் பாடிக் காட்டும் பொழுது அவரின் கற்பனாசக்தி தெரிய வரும். எடுத்துக் கொண்ட ராகத்தை பல்வேறு வேகங்களில் பாடுவார்கள். பாடகர் ராகம் பாடி முடித்ததும் பக்கவாத்தியமான வயலினில் வயலின் வாசிப்பவர் அவரது கற்பனைப்படி ராக ஆலாபனை செய்வார். இது போன்று பாடகரும் வயலினிஸ்டும் பல முறை மாறி மாறி ராக ஆலாபனை செய்வார்கள். ராக ஆலாபனையின் பொழுது தாள வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா போன்றவை உடன் இசைக்கப் படுவது இல்லை.

தானம்

ராகம் பாடிய பின் அடுத்த கட்டம் தானம் பாடிவது. தானத்தின் போதும் தாளக் கருவிகள் இசைக்கப் படுவதில்லை என்றாலும் முன்பு பாடிய ராகத்தின் தாள லயங்கள் நன்றாக வெளிவரும்படி பாடும் முறை இது. பொதுவாக 'அனந்தம்' என்ற சொல்லாடலை எடுத்துக் கொண்டு பாடுவார்கள். அந்தம் என்றால் முடிவு, அனந்தம் என்றால் முடிவில்லாமல் எனப் பொருள். அனந்தந்தந்தந்த என முடிவில்லாமல் ஒரு ராகத்தைப் பாட முடியும் என உணர்த்தவே இது. ராக ஆலாபனை போன்று பாடகர் பாடி முடித்த பின் வயலினிஸ்ட் இசைப்பார். பொதுவாக இடைப்பட்ட வேகத்தில் (வி.தெ.மா.கா. - மத்திம காலம்) தானம் பாடுவார்கள்.

பல்லவி

ராகம் தானம் பாடி முடித்தவுடன் வருவது பல்லவி. பல்லவியில்தான் புனையப்பட்ட வரிகளைப் (வி.தெ.மா.கா - சாஹித்யம்) பாடுவார்கள். இவ்வரிகள் பொதுவாக பல்லவி பாடுவதற்கென்றே இயற்றப் பட்ட வரிகளாக இருக்கும். பல்லவி என்பதே 'ப' - பதம் (பாடல்), ல - லயம் (தாளம்), வி - வின்யாசம் (வேறுபாடுகள்) என்பதன் ஆக்கம் என்றே கூறுவர். அதாவது தாளலயத்தோடு ஒரு பாடலை பல்வேறு விதங்களில் பாடுவது என்று பொருள். இப்படிப் பாடும் பொழுது எடுத்துக் கொண்ட ராகத்தில் மட்டுமல்லாது வேறு பல ராகங்களிலும் அதே வரிகளை ராகமாலிகையாகப் பாடுவார்கள். பல ராகங்களில் பாடுவது போல் பல தாளங்களிலும் பாடுவதுண்டு. இதை தாளமாலிகா என்பார்கள். இதன் முடிவில் தாள வாத்தியக்காரர்கள் அவர்களது திறமையைக் காண்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள். இதற்குத் தனியாவர்த்தனம் எனப் பெயர்.

மொத்தத்தில் ராகம், தானம், பல்லவி பாடுவது என்பது பாடகரின் ஞானத்தையும் அவரது கற்பனா சக்தியின் பிரதிபலிப்பாக விளங்குகிறது என்றால் மிகையாகாது. இது ஒரு அறிமுகம்தான். சிமுலேஷன், திரச போன்றோர் மேலதிக தகவல்கள் தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சாம்பிளுக்கு ஜேசுதாஸ் அவர்கள் பாடிய, தோடி ராகத்தில் அமைந்த 'கலைவாணியே கருணை புரிவாயே' என்ற ராகம் தானம் பல்லவி.

62 comments:

said...

போட்டு இருக்கிற பாட்டு கொஞ்சம் பெரிசா போச்சு. ஒரு சின்ன ரா.தா.ப. இருந்தா தேடிப் பார்த்து போடறேன். வெயிட் ப்ளீஸ். :)

said...

எங்க ஊர்ல [ராலே, வட கரோலினா] RTP-ன்னு ஒண்ணு இருக்கு!

Research Triangle Park!

அதுவோன்னு ஒரு நிமிஷம் திகைச்சுப் போய் வந்தா,....
ம்ம்ம்ம்....இதுவும் எனக்குப் பிடித்த விஷயம்தான்!

நல்ல பதிவு!

said...

அருமையானப் பதிவு கொத்ஸ் கர்னாடக சங்கீதத்தின் அடிப்படைகளை வெகு எளிமையான வார்த்தைகளில் புரியும் படி சொல்லியிருக்கிறீர்கள்.

இவ்வளவு நாள் தாளம்ன்னு தான் நெனச்சிகிட்டு இருந்தேன்.. தகவலுக்கு மிக்க நன்றி..

வ.வா.சங்கத்தின் கேள்விக்கு மிகவும் சிறப்பானப் பதில் கிடைச்சிருக்கு, அதுக்கு இன்னொரு நன்றி.

said...

ஆமாம் எஸ்.கே. கூகிளாண்டவரைக் கேட்டா என்னென்னமோ சொல்லறாரு. அதுல நீங்க சொல்லற இடம்தான் ரெண்டாவது சுட்டி! ஆனா உள்ள போய் பார்க்காததுனால உங்க ஊருன்னு தெரியாமப் போச்சு. இல்லைன்னா அதையும் பதிவுல சேர்த்து இருக்க மாட்டோம்!

said...

இ.கொ,
எனக்குச் சங்கீதம் எல்லாம் தெரியாது. RTP என்றால், நான் அறிந்த வரையில் இதுதான்:

RTP = Required To Prove

முந்தி, கணக்குப் பாடத்தில் இப்படிப் பாவித்த ஞாபகம். :))

said...

விக்கிப் பசங்களா.. நல்லாத் தான் பதில் சொல்லியிருக்கீங்க.ஆனா இது அந்தக் கைப்புள்ளக்குப் புரியும்ன்னு நினைக்கிறிங்க..!!!!????.

கைப்புள்ளக்குப் புரியோதோ இல்லையோ சங்கீதம் தெரிஞ்ச மக்கள் தெரிஞ்சிக்க ஆசப் படற மக்கள் கண்டிப்பா உங்களை வாழ்த்துவாங்க...

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவ்.

said...

வெற்றி, தெரிஞ்சுக்கத்தானே இந்தப் பதிவு!

நீங்க சொல்லற RTP எப்போ பாவிப்பீங்க? நாங்க எல்லாம் கணிதத்தில் சமன்பாடுகளை நிரூபித்த பின் QED அப்படின்னு போடுவோம். Quad Erad Demonstrandum என்ற லத்தீன் மொழி பதத்திற்கு பொருள், எது நிரூபிக்கப்பட வேண்டுமோ அது நிரூபிக்கப் பட்டுவிட்டது. இது பற்றி மேலும் தெரிய வேண்டுமானால் ஆங்கில விக்கிக்கு இங்கே செல்லுங்கள்.

said...

பஞ்ச், என்னங்க நீங்க பஞ்ச் டயலாக் பேச வேண்டிய நீங்க பொடி வெச்சுப் பேசறீங்க? :)))

அவருக்கு புரிய மாதிரி எளிய நடையில்தானே இருக்கு. கூட இருக்கிற அப்பரசண்டிங்க எல்லாம் சொல்லி குடுப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்!

வருகைக்கு நன்றி.

said...

RTP - ஓகே!
PAS - ன்னா என்னாங்க? அதுவும் கர்நாடிக் மீசிக்ல தான்! :-)

said...

///PAS - ன்னா என்னாங்க? அதுவும் கர்நாடிக் மீசிக்ல தான்! :-)//

பல்லவி, அனுபல்லவி, சரணம் - சரியா?! அந்த பெயரிலும் தியேட்டர் இருக்கே, தெரியாம போயிடுமா! :))

ஆமாம் பாஸ்டனில் இருந்து வந்தாச்சா? மாநாடு எல்லாம் எப்படிப் போச்சு? ஒண்ணும் நியூசே இல்லையே.

said...

PAS-Pallavi, AnuPallavi, Saranam

RTP இல் உள்ள பல்லவிக்கும்
PAS இல் உள்ள பல்லவிக்கும்
ஏதாச்சும் ஒற்றுமை வேற்றுமை இருந்தாலும் சொல்லுங்க கான கலாதார வித்வான் ஐயா!

"பல்லவி" என்பதைக் கவனமாகப் படிக்கவும்; "பல்வலி" என்று படித்து விடாதீர்கள்! :-)

said...

கொத்தனாரே,சப்புன்னு போச்சுங்க...நீங்க என்னமோ நம்ம ஏரியாவுல (real time transfer protocol) ஏதோ சொல்லப்போறீங்கன்னு ஏமாந்துட்டேன்...

said...

தெய்வமே, இதென்ன சோதனை.

ப்ளாகருக்கு மாறிட்டேன். தமிழ்மணத்துல சேரமாட்டேகுது.

யாராவது காப்பாத்துங்கப்பா.

சென்ஷி

said...

அருமையான பதிவு. ராகம் தானம் பல்லவி வாசிப்பதற்கு வீணை அருமையான வாத்தியம்.

I want this quoestion to be answered on an emergency basis.

"WHAT IS A GENDER TEST AND WHAT EXACTLY WENT WRONG WITH SHANTHI?"

said...

அருமையான பதிவு கொத்தனாரே.. எங்கள் தல கைப்புள்ள சந்தேகத்தே தீர்த்து வைத்ததுக்காக ஆயிரம் பொற்காசுகள் தல தன்னுடைய சேமிப்புலிருந்து விரைவில் Money Transfer பண்ணுவாரு.... :-))))

said...

//RTP இல் உள்ள பல்லவிக்கும்
PAS இல் உள்ள பல்லவிக்கும்
ஏதாச்சும் ஒற்றுமை வேற்றுமை இருந்தாலும் சொல்லுங்க கான கலாதார வித்வான் ஐயா!//

கே.ஆர்.எஸ். இது உங்களுக்கே நியாயமா இருக்கா? எதோ நாலு பேரைக் கேட்டு பதில் சொன்னா, அதுக்கு பட்டமா? பாடறவங்க எல்லாம் வந்து உதைக்கப் போறாங்க.

நீங்க கேட்ட ஒற்றுமை வேற்றுமை பத்தி தெரியலையே. நீங்களே சொல்லுங்களேன்.

said...

கொத்ஸ் தயவுனால நான் கச்சேரி பண்ணறதை இனி யாராலும் தடுக்க முடியாது. இனிமே நானும் ஒரு இசை கலைஞன். "பாட்டும் நானே...பாவமும் நானே....". இப்பவே ஆரம்பிச்சாச்சுங்க.
:)

said...

//எங்க ஊர்ல [ராலே, வட கரோலினா] RTP-ன்னு ஒண்ணு இருக்கு!

Research Triangle Park!//

அதே மாதிரி நம்ம பொழப்புல RTPன்னா Returnable Transport Packaging.

said...

அப்படியே இந்த ஆரோகணம் அவரோகணம் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்கண்ணா. ராகத்துக்கும் அதுக்கும் என்ன தொடர்பு?

said...

//I want this quoestion to be answered on an emergency basis.

"WHAT IS A GENDER TEST AND WHAT EXACTLY WENT WRONG WITH SHANTHI?"//


"ஓகை" அவர்கள் எழுப்பியுள்ள வினாவிற்கு, கிழே காணும் ஆங்கில விளக்கத்தைப் படிக்கவும்.

இது பொதுவாக ஒப்புக்கொள்ளாத, 100% சந்தேகத்து இடமின்றி எனச் சொல்ல முடியாத ஒன்றுதான் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

விளையாட்டுப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடும் சில பெண்களுக்கு, சில ஆண்தன்மைகள் வர வாய்ப்புகள் அதிகம்!

இதனை மட்டும் வைத்தே, முடிவு கட்டுதல் சரியில்லை எனவே படுகிறது!

குறைந்த பட்சம், தமிழக அரசாவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல், இக்கட்டுரையில் கூறியிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், முறையாகப் போராட வேண்டும், சாந்திக்காக, என நினைக்கிறேன்.

அந்த 15 லட்சத்தையும் திருப்பி எடுத்துக் கொள்ளக் கூடாது!

அவருக்கு ஏதவது சிகிச்சை தேவையெனின், அதையும் செய்து தருவது, "இது மக்கள் அரசு" எனச் சொல்லிக் கொள்வோரின் கடமை!

இனி, கட்டுரையைப் படியுங்கள்!

மேல்விளக்கம் வேண்டுமெனின், கேட்கவும்!

Gender verification
Gender verification emerged as an issue in sporting competition 30 years ago when the International Olympic Committee (IOC) first began testing the ‘sex’ of athletes in the Olympic games. The IOC was responding to concerns that some athletes from then Communist countries of Eastern Europe were actually men masquerading as women.

The very first tests, which were invasive and controversial gynaecological examinations, were conducted in 1966. Then came the sex chromotin test at the Mexico Olympic Games which relied on the biological fact that all the cells of most female mammals contain two X chromosomes, while cells from males have one X and one Y chromosome.

Officials who test athletes take a sample of cells from the inside of the cheek, in a process known as the buccal smear test, then examine them under a microscope for the presence of these chromosomes. Until 1991, each woman competing internationally needed a gender verification card which contained a photograph and statement that she had passed the chromosome sex test used by the IOC.

While the notion of a sex test to find men disguised as women may seem a reasonable idea, the trouble is that it misses some hereditary disorders whereby women may have chromosomal abnormalities that cause them to ‘fail’ a test, while men with chromosomal abnormalities could theoretically ‘pass’ the test.

If a female athlete ‘fails’ a test, she undergoes a physiological examination. A negative test can cause incredible distress to women whose gender is suddenly called into question and there are many documented cases where women’s lives have undergone massive change because of sudden public scrutiny.

One such woman was Polish sprinter Eva Klobukowska who, at the European Championships in Budapest in 1966, passed a gynaecological examination. One year later, after the introduction of sex chromatin testing, she was found to have one chromosome too many to be declared a woman for the purposes of athletic competition. Despite having a rare XXY condition that gave her no advantage over other athletes, she was forced to return her Olympic and other medals and retired from competition surrounded by controversy.

Until 1990, the International Amateur Athletic Federation had relied on the buccal smear test, but following repeated discrepancies in test results, the federation abandoned the process and returned to physical examinations. These examinations became general health checks of both male and female athletes, a component of which for females was a physical examination for gender. They were to be conducted by national federations and any athletes holding an International Amateur Athletic Federation femininity certificate would not be exempt from further examinations (although no athlete would be tested more than once a year). Athletics Australia and other federations chose to advise their athletes that tests would be conducted by a doctor of the athlete’s choice should a random test be needed.

This new approach created problems including disquiet about the need for an intrusive examination, questions about those selected to conduct the examination and the difficulty for individuals who have attributes of both sexes. In 1992, the IOC decided to introduce more sophisticated tests which looked even more closely at the genetic make-up of the Y chromosome. Called the polymerase chain reaction test, this still did not eliminate all the issues surrounding the accuracy of the test. At the 1996 Atlanta Olympic Games, officials again reverted to the buccal smear test. About one in 400 females in Atlanta tested male, but all were cleared by subsequent physical examinations.

In late 1999, the IOC Medical Commission reviewed its medical code and agreed to change the requirement for gender verification tests from mandatory for all female athletes, to random.

said...

சரி, மீண்டும் RTP பதிவுக்கே திரும்புவோம்!

நீஙள் சரியாக "T" என்று குறியிட்டுக் காட்டியபடி இது thaanam ; dhaanam அல்ல!


நன்றி!

said...

அலர்ஜியான சங்கதியாச்சே என்னும் மிரட்சியுடன் படிக்க ஆரம்பித்தேன். எளிமையான, பயனுள்ள விளக்கம். மிக்க நன்றி!

எங்க பேட்டையில் ஆர்.டி.பி. என்றால் ரியல் டைம் ப்ரைசிங் ; )

said...

நல்ல பதிவ கொத்ஸு.

கே.ஜே.ஒய் என்று சொன்னதால் சுட்டியைத் திறக்க கூட இஷ்டமில்லை! :))

RTP னு ஒரு TLA வச்சு விளையாட்டு ஆரமிக்க முயற்சிகள் நடக்கறாப்போல இருக்கு. என் பங்குக்கு.

RTP - Residency Training Program

said...

//கொத்தனாரே,சப்புன்னு போச்சுங்க...நீங்க என்னமோ நம்ம ஏரியாவுல (real time transfer protocol) ஏதோ சொல்லப்போறீங்கன்னு ஏமாந்துட்டேன்...//

என்னங்க புலிப்பாண்டி இப்படிச் சொல்லிட்டீங்க? நான் என்னமோ சரிகமபதநி அப்படின்னு போகுமுன்னு நினைச்சா சப்புன்னு போச்சுன்னு சொல்லிட்டீங்களே.

சரி போகட்டும். உங்க RTP பத்தி ஒரு பதிவு எழுதிக் குடுங்க. போட்டுட்டா போச்சு!

said...

ராகம் தானமா தாளமா? தாளம் என்றே பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். தெலுங்கு வாடைக்காரர்கள் தானம் என்றும் கன்னட மலையாளிகள் தாளமென்றும் வழங்கும் இம்மூன்றுக்கும் விளக்கம் சொல்லியிருக்கின்றீர்கள். அது சரி...அனுபல்லவி பத்திச் சொல்லலையே ஹி ஹி

said...

//தெய்வமே, இதென்ன சோதனை.

ப்ளாகருக்கு மாறிட்டேன். தமிழ்மணத்துல சேரமாட்டேகுது.

யாராவது காப்பாத்துங்கப்பா.

சென்ஷி//

சென்ஷி, அதான் தமிழ்மண முகப்பில் விபரங்கள் போட்டு இருக்காங்களே. அதெல்லாம் பண்ணிப் பார்த்தீங்களா? இல்லை, நம்ம பொன்ஸுக்கு ஒரு பின்னூட்டம் தட்டி விடுங்க.

said...

ஓகை,

வருகைக்கு நன்றி. உங்க அடுத்த கேள்விக்கு நம்ம எஸ்.கே பதில் சொல்லிட்டாரு பாருங்க.

said...

//எங்கள் தல கைப்புள்ள சந்தேகத்தே தீர்த்து வைத்ததுக்காக ஆயிரம் பொற்காசுகள் தல தன்னுடைய சேமிப்புலிருந்து விரைவில் Money Transfer பண்ணுவாரு.... :-))))//

நன்றி நன்றி.

இப்படிக்கு
பொற்காசுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்

விக்கி பசங்க

said...

//"பாட்டும் நானே...பாவமும் நானே....". இப்பவே ஆரம்பிச்சாச்சுங்க.
:)//

என்ன கைப்ஸ், பாட்டு நீங்கன்னா கேட்கறவங்கதானே பாவம். ஒருவேளை அவங்க கொதிச்சு எழுந்து உங்களை போட்டுத் தாக்கப் போறதை நினைச்சு நீங்கதான் பாவமும் அப்படின்னு முடிவு பண்ணிட்டீங்களா? :))))

said...

எஸ்கே, உடனடி பதிலுக்கு மிக நன்றி.
ஆனாலும் அடிப்படை சந்தேகங்கள் விலகவில்லை. இதை இந்தப் பதிவில் விவாதிப்பதும் சரியில்லை.

said...

//Research Triangle Park!//

அதே மாதிரி நம்ம பொழப்புல RTPன்னா Returnable Transport Packaging.//

ஒரு RTPக்கு எவ்வளவு பொருள் இருக்கு பாருங்க. இன்னும் எவ்வளவு வருது பார்க்கலாம்.

said...

//அப்படியே இந்த ஆரோகணம் அவரோகணம் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்கண்ணா. ராகத்துக்கும் அதுக்கும் என்ன தொடர்பு?//

இதுக்கும் தேவ் கேட்டதுக்கும் சம்பந்தம் இருக்கு. அதுக்கு இராகங்கள் பத்திய தனிப்பதிவுதான் போடணும். கொஞ்ச நாள் போகட்டும் போடலாம்.

said...

பதிவைப் படிச்சு நிறைய தெரிஞ்சுகிட்டேன் கொத்ஸ். நன்றி.

ஜேசுதாஸ்ன்னு சொன்னதால தான் நான் பாட்டைக் கேட்டுக்கிட்டு இருக்கேன். இராமநாதன் கிட்ட சொல்லுங்க. :-)

said...

விக்கி பசங்க சங்கீதத்திலயும் புகுந்து விளையாடறது மகிழ்ச்சியா இருக்கு. எளிமையா விளக்கியிருக்கீங்க.

said...

//இனி, கட்டுரையைப் படியுங்கள்!//

எஸ்.கே. மிகவும் பயனுள்ள கட்டுரை. உடனுக்குடன் தந்ததிற்கு நன்றி.

said...

//சரி, மீண்டும் RTP பதிவுக்கே திரும்புவோம்!//

நன்றிங்க. அந்த விஷயத்துக்கு வேணா தனிப்பதிவு போட வேண்டியதுதான். :)

//நீஙள் சரியாக "T" என்று குறியிட்டுக் காட்டியபடி இது thaanam ; dhaanam அல்ல!//

ஆமாம் Dhaanam, Thaanam என ஒரு சின்ன வார்த்தை விளையாட்டு நடத்தியது சும்மா விளையாட்டுக்குத்தான். இந்த ராகம் தானம் பல்லவியில் வருவது Thaanam தான்.

said...

/அலர்ஜியான சங்கதியாச்சே என்னும் மிரட்சியுடன் படிக்க ஆரம்பித்தேன். எளிமையான, பயனுள்ள விளக்கம். மிக்க நன்றி!//

பாபா, வருகைக்கு நன்றி.

said...

//கே.ஜே.ஒய் என்று சொன்னதால் சுட்டியைத் திறக்க கூட இஷ்டமில்லை! :))//

இதுக்கு என்ன அடி வாங்கப் போறீரோ தெரியலையே.

//RTP னு ஒரு TLA வச்சு விளையாட்டு ஆரமிக்க முயற்சிகள் நடக்கறாப்போல இருக்கு. என் பங்குக்கு.//

இந்த ஆட்டம் எங்க போய் முடியப் போகுதுன்னு பார்க்கலாம்.

said...

//ராகம் தானமா தாளமா? தாளம் என்றே பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். //

ஜிரா, ராகம் தானம் பல்லவிதான். தாளம் இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமில்லை, வேற எந்த பாஷையில் சொன்னாலும் தானம்தான்.

தானம் வேற, தாளம் வேற. தாளத்தைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சா, இன்னிக்கு முடியாது. அதைப் பத்தி வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.

//அது சரி...அனுபல்லவி பத்திச் சொல்லலையே ஹி ஹி//

அதுவும் வேற ரூட்டு. பல்லவி, அனுபல்லவி, சரணம் அப்படின்னு போகும். அதுவும் வேறொரு சமயம்தான். :))

said...

//எஸ்கே, உடனடி பதிலுக்கு மிக நன்றி.
ஆனாலும் அடிப்படை சந்தேகங்கள் விலகவில்லை. இதை இந்தப் பதிவில் விவாதிப்பதும் சரியில்லை.//

ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் ஒரு தனிப்பதிவு போடுங்க. இதைப் பத்தியும் விரிவா பேசி தெரிஞ்சுக்கலாம்.

said...

பதிவைப் படிச்சு நிறைய தெரிஞ்சுகிட்டேன் கொத்ஸ். நன்றி.//

டாங்க்ஸ் குமரன். :)

//ஜேசுதாஸ்ன்னு சொன்னதால தான் நான் பாட்டைக் கேட்டுக்கிட்டு இருக்கேன். இராமநாதன் கிட்ட சொல்லுங்க. :-)//

உங்க ரெண்டு பேர் நடுவில நாந்தான் மாட்டினேனா? மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி. அதனால நான் இந்த ஆட்டத்துக்கு வரலை. நீங்க ரெண்டு பேரும் டைரக்ட்டா பேசிக்குங்க. :)

said...

//விக்கி பசங்க சங்கீதத்திலயும் புகுந்து விளையாடறது மகிழ்ச்சியா இருக்கு. எளிமையா விளக்கியிருக்கீங்க.//

சேது, நன்றி! (அதான் சொல்லி இருக்கோமில்ல, எதைப் பத்தி வேணாலும் பதிவு வரும் அப்படின்னு, அதனால இதுக்கெல்லாம் அசந்துற கூடாது!)

said...

ஜேசுதாஸின் குரல் சங்கீதத்துக்கானது இல்லை என்பது என் தனிப்பட்ட எண்ணம். அதனால அவர் பாடறார்னா காத தூரம் ஓடிடுவேன்.

'அவருக்கு சினிமா பாட்டே சரியா வராத போது சங்கீதம் எங்கே வரப்போகுது' னு கேட்கலாம்.

ஆனா நான் கேட்கலை.! :P

என்ன குமரன் சரிதானே?

said...

இது வரை வந்திருக்கும் RTP விளக்கங்கள்.

1)Raagam Thaanam Pallavi
2)Research Triangle Park
3)Required To Prove
4)Realtime Transfer Protocol
5)Returnable Transport Packaging
6)Real Time Pricing
7)Residency Training Program

அட இன்னும் 10 கூட வரலையா? மக்கள்ஸ், வேக் அப்.

said...

சங்கீத சீசனில் பொருத்தமான சங்கதியை விவரித்திருக்கிறீர்கள் :)
RTP என்று தலைப்பிட்டு சங்கீதம் என்றால் காத தூரம் ஒடுபவர்களையும் இழுத்திருக்கிறீர்கள்.
எல்லாம் சரி, இராகம்னா என்னவென்று சொல்லவில்லையே :(
இது இந்த இராகம் என்று எப்படி கண்டுபிடிக்கிறார்கள் ?

said...

// //எஸ்கே, உடனடி பதிலுக்கு மிக நன்றி.
ஆனாலும் அடிப்படை சந்தேகங்கள் விலகவில்லை. இதை இந்தப் பதிவில் விவாதிப்பதும் சரியில்லை.//

ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் ஒரு தனிப்பதிவு போடுங்க. இதைப் பத்தியும் விரிவா பேசி தெரிஞ்சுக்கலாம்.//

ஐயோ! எனக்கு கேக்கத்தான் தெரியும்.
அவருதான் மருத்துவர். அவர்தான் போடனும்.

said...

// போட்டு இருக்கிற பாட்டு கொஞ்சம் பெரிசா போச்சு. ஒரு சின்ன ரா.தா.ப. இருந்தா தேடிப் பார்த்து போடறேன். வெயிட் ப்ளீஸ். :) //


சின்ன ரா.தா.ப. உங்களுக்கு கிடைப்பது அரிது. ரா.தா.ப. என்பது ஒரு இராகப் பொய்கையில் இறங்கி ஆசை தீர திளைத்து வெளிவருவது போன்றதொரு அனுபவம். பாடுபவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்.

மூன்று பகுதிகளையும் விரிவாகப் பாடுவதற்கு வெகு நேரம் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் மேடைக் கச்சேரிகள் இரண்டு மணிநேரமே நடக்கின்றன. அதனாலேயே ரா.தா.ப. பாடுவது அரிதாக இருக்கிறது.

ரா.தா.ப. வுக்கு ஒரு மணி நேரம் என்பதையே குறைவான நேரம் என்று கருதுபவர்களில் நானும் ஒருவன்.

said...

கொத்ஸ்,

விரைவில் எனது இரண்டணாவும் உண்டு.

அதுக்குள்ளே நம்ம பதிவிலே (http://simulationpadaippugal.blogspot.com/2006/12/blog-post_19.html) வந்து ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது...

- சிமுலேஷன்

said...

எனக்காவே 50 வெயிட்டிஸ் போலே..... :)

said...

நண்பர் ரவியின் கருத்து....

இலவசக்கொத்தனாரே, நீர் நம்ம ஊருப் பாட்டுக்காரன்னு நிரூபிச்சுட்டீங்க. செமையான விளக்கம். தனியாவர்த்தனத்தைப் பற்றி தனியாக் கொஞ்சம் சேர்த்து இருக்கலாமே.

said...

நல்ல லகுவாக விளக்கி இருக்கிறீங்க.....

said...

சரியான நேரத்தில் பொருத்தமான பதிவு. எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள்.


தாளம் மற்றும் பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்றவற்றையும் விளக்கி இதுபோலவே பதிவிட்டால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

said...

என்னைப் போன்ற ஞானசூனியங்களுக்கும் விளங்குமாறு தெளிவாக எழுதியதற்கு நன்றி

said...

@கொத்ஸ் அநாவசியமா என் பேரை இதுலே சேர்த்து விட்டுட்டே ஏதோ எனக்கு சங்கீதம் தெரிஞ்சமாதிரி.எனக்கு சங்கீதம் மட்டும்தான் தெரியாதுன்னு நினைச்சேன் ஆனா இப்போ பாரு இங்கிதமும் தெரியாததாலே நானே வந்து மாட்டிக்கினேன்.

said...

@கொத்ஸ் ராகம் தானம் பல்லவி பதிவு போட்டு என்னை வேறே இழுத்து விட்டு இருக்கே.எனக்கு சங்கீதத்தைப் பற்றி ஓன்னும்தெரியாதுங்குற விஷயத்தை போட்டு ஒடைக்கறதுன்னு தீர்மானம் பண்ணிட்டே.சரி ஆனாது ஆகட்டும்
மொத்த சங்கீதமே ஸ்வரங்களால் ஆனதுதான்.அதுதான் அஸ்திவாரம். ராகமோ தானமோ பல்லவியோ எதுவானாலும் ஸ்வரம் இல்லாம பாடமுடியாது.
ஒவ்வொரு ராகத்திற்கும் தனி ஸ்வரங்கள் உண்டு அதில் ஆரோகணம் என்பது கிழே இருந்து மேலே செல்லும். அவரோகணம் என்பது கிழேதொடங்கி மேலே போகும்.அதில் ஒரு ஸ்வரத்தை மாற்றினாலோ அல்லது விட்டு விட்டலோ ரகமே மாறி புது ராகமகிவிடும்.தோடி ராகத்தின் ஆரோகணம் ச ரி க ம ப த நி ச அவரோகணம் ச நி த ப ம க ச ரி ச. இதையே ச ரி க ப த ச/ச த ப க ரி ச என்று பாடினால் பூபாள ராகம் வந்துவிடும்.ராகம் பாடும்போது பாடகர்களின் மனோதர்மத்திற்கு ஏற்ற மாதிரி திறமையைக் காட்டலாம்.ராகம் பாடும்போது தாளம் கிடையாது ஆனாலும் நாதஸ்வரவித்வான்கள் ராகம் படும்போது மட்டும் தவில் வித்வான் இடை இடையே எதோ ஒரு தாளம் தட்டிக்கொண்டு இருப்பார்.ராகம் தானம் பல்லவி பாடும் போது ராகத்தை 4 காலங்களில் விரிவாக பாடுவார்கள்

said...

பதிவுக்கு ஜோரா ஒரு கைத்தட்டல்!

said...

VeRRi:
>>RTP = Required To Prove<<
If that is the requirement, when it is proved (in Mathematics) they write QED at the end. Right?
QED= Quite Easily Done. Right? Yes and No.
QED= Quod erat demonstrandum (that which is to be demonstrated)
In RTP in North Carolina, the answer is QED
= Quite (an) Educational Destination
In RTP= rAgam tAnam pallavi,
QED= Quite (an) Entertaining Delineation

said...

>> SK said...
எங்க ஊர்ல [ராலே, வட கரோலினா] RTP-ன்னு ஒண்ணு இருக்கு!<<

By the way, SK, almost all Indians who live in North Carolina and elsewhere pronounce Raleigh as "ராலே". I don't know where they learned that pronunciation. The Thamizh sangam when they did the FETNA vizhA in 2007 they put it in big letters as ராலே.
But it has to be pronounced "ராலீ". When I hear Indians in NC pronounce it as ராலே, I am a little embarrassed. When in Rome follow the Romans!

said...

Free (ilavasa) Mason (kottanAr):
Are you really a Free Mason? What is your Masonic Lodge membership number?
Good, crisp write-up. I happened to see this blogpost only today through Jeeva's blogpost on RTP in his
en vAcagam".

said...

Infatuation casinos? examine this untested [url=http://www.realcazinoz.com]casino[/url] exemplar and wing it trivialize online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also all over our fresh [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] mastery at http://freecasinogames2010.webs.com and seize realized lolly !
another oratory [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] more is www.ttittancasino.com , in fast sod german gamblers, sweep unrestrained online casino bonus.

said...

Making money on the internet is easy in the undercover world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat guide[/URL], You are far from alone if you have no clue about blackhat marketing. Blackhat marketing uses alternative or not-so-known methods to generate an income online.