முதல் பாகத்தில் உடல் நிறை அளவை கணிக்கும் ப்ளாஷ் எப்படித் தயாரிப்பது என்று பார்த்தோம். இந்த பாகத்தில், இந்தப்பதிவில் உள்ளது போல, ஜிகினா வேலைகள் சேர்த்து, மேம்படுத்துவது எப்படி என்றும், இடையூடாடும் தன்மையைச் சேர்ப்பதையும் பார்க்கலாம்.
அளவு சிறியதாக இருப்பதாய்த் தோன்றினால், முழுப்படத்தையும் இங்கே சென்று தரவிறக்கி (இளா பாணியில் தரையிறக்கி:-) பார்த்துக்கொள்ளலாம்.
கருத்துக்களை அவசியம் சொல்லுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நல்லா பாடம் நடத்தறீங்க சாமி!! :))
ஏன் இன்னொரு சாப்டர் சேர்த்து போட்டா சீக்கிரம் கத்துக்குவோம்னு கடுப்போ?
ஆனாலும் குசும்பை கடைசி வரியில வெச்சு இருக்கீங்க பாருங்க. அதுக்காகவே உமக்கு ஒரு பட்டம் "உப்புமா மாஸ்டர்"
நன்றி கொத்ஸ்.
இளா.. மொத்தம் 30 நிமிஷம்.. ஒரேயடியா கொடுத்தா போரடிச்சிடும்னுதான் இந்த செக்ஷன்ஸ். அடுத்த பாகத்துல இதை வலையில் ஏத்துறது பத்தி.. அத்தோட முடிஞ்சிடும்.
இதென்ன கலாட்டா.. உப்பா சக்கரவர்த்திக்கு உப்புமா மாஸ்டர்னு பட்டம் கொடுத்து டீ-கிரேட் பண்றீங்களே...
இதுவும் Rapid யிலா!
சரி, நாளை வரை காத்திருப்போம்.
வடுவூர் குமார்,
ரேபிட்ஷேர் ஒரே பைல்தான். முழுசா இப்பவே இருக்கு.
///உப்புமா மாஸ்டர்னு பட்டம் கொடுத்து டீ-கிரேட் பண்றீங்களே//
எங்க ஊர்ல எல்லாம் புரோட்டா போடுறவங்களை புரோட்டா மாஸ்டர்ன்னுதான் சொல்லுவோம்.
71 கிலோ தங்கமே..
இதெல்லாம் பினாத்தலா??
அருமையிலும் அருமை.
31 நிமிடங்கள் பாஸ் இந்த பக்கம் வரவில்லை. :-))
அது சரி இந்த "திரை பிடிப்பு" எப்படி, அதுவும் ஓரளவு துள்ளியமாக?எந்த மென்பொருள் உபயோகித்தீர்கள்.
நான் லினக்ஸில் பண்ணி .swf யில் இருந்து மாற்றும் போது என்னாலே படிக்கமுடியவில்லை.
இது,நிறைவாக இருந்தது.
ஜிகினா வேலை மட்டுமா இருந்தது? வலது பக்கத்தில் முகத்தையும் போட்டு அசத்திட்டீங்க.என்ன கருப்பு திரை வரும் போது மட்டும் அந்த இடத்தில் ஏதோ spinal cord மாதிரி தெரிகிறது.
பாடத்தை மட்டும் கவனித்தால் போர் அடிக்கும் தானே.
ரேபிட்ஷேர் உரல் சரியாக இல்லை எனச் சுட்டிக்காட்டிய வாஞ்சிநாதன் அவர்களுக்கு நன்றி.
உரல் (அதாங்க சுட்டி,URL என்பதை உரல் எனச் சொல்லி விட்டேன்) சரி செய்யப்பட்டு விட்டது.
வடுவூராரே..
71 கிலோ தங்கமா? இதென்ன தங்கத்துக்கு வந்த பங்கம்னு தங்கமணி பேசிக்கறாங்க ;)
அந்த வீடியோ மாற்றும் மென்பொருள்லே வரிசையா என்ன வேணும்னு கேட்டுகிட்டே வந்தப்ப எதாச்சும் போட்டோ மூலையிலே போடணுமான்னு கேட்டுது.. காசா பணமா, மூலையிலதானேன்னு என் போட்டோவை கொடுத்திட்டேன்.. திட்டமிட்ட பழிவாங்குதல் எல்லாம் இல்லைங்க!
சினிமாவுக்கு போறதுக்கு முன்னாடி விமர்சனம் படிக்கிறது போல பின்னூட்டம் பார்த்துட்டு படம் பார்க்க போறேன்.இப்பத்தான் கொத்தனாரின் வகுப்பிலிருந்து வர்ரேன்.திரு.சுரேஷ்க்கும் ஒரு தோள் தட்டலாமே என்று இங்கே.கொத்தனாரின் உரல் விளக்கம் நல்லாவே இருக்குது.அதை நிரந்தரமாவே உரல் படித்தினால் என்ன?
Post a Comment