Monday, October 08, 2007

மின்னலும் இடியும் சத்தமும்

நாகுவின் கேள்வி:



மின்னலைப் பார்த்ததிலிருந்து இடி சத்தம் கேட்கும்வரை இருக்கும் இடைவெளியை வைத்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று தோராயமாகக் கணிக்கிறார்கள் - ஐந்த(சரியாக நினைவில்லை) எண்ணினால் ஒரு மைல் தள்ளி, 10 எண்ணினால் இரண்டு மைல் தள்ளி.
ஒளி/ஒலி வேக வித்தியாசத்தினால் - சரியான விளக்கம்(சரியான எண்ணிக்கை) தரவும்.

பதில்: மின்னல் மனிதகுலத்துக்கு பலகாலமாகவே ஆச்சரியம் தந்து வந்த ஒரு சமாச்சாரம். மேகத்தில் இருக்கும் ஐஸ் கட்டிகளில் உள்ள ஸ்டேட்டிக் மின்சாரம் ஒன்றோடு ஒன்று உராய்வதால் மின்னல் உருவாகிறது என்று சுலபமாகச் சொல்லிவிட்டாலும், எங்கே, எப்போது உருவாகின்றது என்பதை வைத்து 15 வகை மின்னல்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள் இங்கே!

தோராயமாக 40 ஆம்பியர் மின்னோட்டத்துடனும், 500 மெகாஜூல் சக்தியுடனும் இருந்தாலும், சமயங்களில் 120 ஆம்பியர் வரை செல்லக்கூடியது. காட்டெருமை மாதிரி - எப்ப பாயும் எப்ப மேயும்னு சொல்ல முடியாது. மரக்கட்டிடம் எரியும் என்று பார்த்தால் பெரிய சேதம் எதுவும் இல்லாமல் விட்டுவிட்டும் போகும், இரும்புக்கத்தியை உருக்கி வழிந்தோடவும் விடும். 28000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வருமாம்.

மின்னலின் சத்தம்தான் இடி என்றாலும், இடிச்சத்தம் மின்னலைப்பார்த்தவுடன் வருவதில்லை. காரணம் மிகச்சுலபமானது. ஒலி செல்லும் வேகத்துக்கும் ஒளி செல்லும் வேகத்துக்கும் உள்ள வித்தியாசம்தான். ஒளியின் வேகம் ஏறத்தாழ ஒரு விநாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்கள்! ஒலியோ 21டிகிரி வெப்பத்தில் காற்றில்லாதபோது ஒரு செகண்டுக்கு 344 மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தை எட்டும். காற்றிருந்தாலோ, தடைகள் இருந்தாலோ, வெப்பம் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தாலோ இந்த வேகம் மாறுபடும்.

எனவே, மின்னலின் ஒளிக்கும் ஒலிக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்று கண்டுபிடிப்பது அவ்வளவு துல்லியமான முறை அல்ல.

இருந்தாலும் ஒரு தோராயத்துக்கு, வித்தியாசத்தை வைத்து தூரம் கண்டுபிடிக்க முடியும்.

கிழே உள்ள ப்ளாஷைப் பாருங்கள். இதில் ஒளி ஒலி வித்தியாசத்தை வைத்து எவ்வள்வு தூரத்துக்கு எத்தனை செகண்டு வித்தியாசம் வரும் என்பதை அறியலாம். (330 மீட்டர் விநாடிக்கு என்ற ஒலிவேகம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது).



14 comments:

said...

சில சமயங்களில் இடிச் சத்தம் கேட்டால் மின்னல் தெரிவதில்லை, அல்லது மின்னல் தெரிந்தாலும் இடிச் சத்தம் கேட்பதில்லை. அது ஏன்?

said...

நல்ல தகவல்கள் பினாத்தல்...

said...

//மின்னலின் சத்தம்தான் இடி என்றாலும//

//சில சமயங்களில் இடிச் சத்தம் கேட்டால் மின்னல் தெரிவதில்லை, அல்லது மின்னல் தெரிந்தாலும் இடிச் சத்தம் கேட்பதில்லை. அது ஏன்?//

இ.கொ உங்கள் கேள்விக்கும் பதில் இதில் வருகிறது.

மின்னலின் சத்தம் அல்ல இடி, காற்றின் ஒலி என சொல்லலாம் ,எப்படி என்று பார்ப்போம்.

மின்னல் என்பது மின்னூட்டம் பாய்வதால் வருவது, அப்படி பாயும் போது அதிக வெப்பம் உருவாகும். அதீத வெப்பத்தின் விளைவாக மின்னல் செல்லும் பாதையில் வெகு வேகமாக காற்று விரிவடையும் , மின்னல் அருகே மட்டும் வெப்பக்காற்று கொஞ்சம் தள்ளி வெப்பம் இல்லாதக்காற்று இந்த மாறுபாட்டினால் விரிவடையும் காற்று ஏற்படுத்தும் ஒலி தான் இடி!

இடிசத்தம் என்பது மின்னல் கடந்த பின்னரே நம் காதில் விழும், எனவே தான் சத்தம் கேட்டுப்பார்த்தால் மின்னல் தெரியவில்லை.

அதே போல குறைந்த மின்னூட்டம் பாயும் மின்னல் உருவாகும் போது ஒளி மட்டும் இருக்கும் சத்தம் பலமாக இருக்காது எனவே கேட்கவில்லை அல்லது லேசாக வானம் முனகுவது போல சத்தம் வரும் கேட்டு இருப்பீர்கள்.

எனவே எல்லா மின்னலிலும் இடி முழக்கம் வரும் என சொல்ல முடியாது!

said...

கொத்தனார்,

வவ்வால் நல்லாவே பதில் சொல்லிட்டாரு.

நன்றி நாகை சிவா.

நன்றி வவ்வால்.

said...

உபயோகமான தகவல்கள், பினாத்தலாரே. மிக்க நன்றி.

said...

உபநோகமான தகவலுக்கு நன்றி பெனாத்தலாரே.

said...

இது .. இது... விக்கிபசங்க பதிவு.

வாழ்த்துக்களும் நன்றியும்

said...

நன்றி நாகு.. உங்கள் கேள்விதான் ஊக்குவித்தது.

நன்றி இளா.

ரொம்ப நன்றி தருமி.

said...

நல்ல தகவல்கள்..... :))

டாங்கீஸ் புரட்சி பிளாஷ்... :)

said...

அருமையான பதிவு. அருமையான கேள்வி. மிக அருமையான பதிவு.

said...

நன்றி ராம்..

நன்றி ரவி.

said...

எனக்கு மிகுந்த ஃபாசினேடிங்க் தகவல்:)

இது சம்பந்தப்பட்ட ஃபோபியா ஏதாவது இருக்கா.
உண்மையா நான் தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்.
கருத்த மேகங்கள்,
இடையே ஊடுறுவும் மின்னல், தொடரும் இடி
இவை அனைத்தும் பார்க்கும்போதே ஒரு பயம் பிடித்துக் கொள்கிறது.

உங்களால் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

said...

வாங்க வல்லிம்மா,

இது பத்தின போஃபியாக்கள் அப்படின்னு பார்த்தா

இடி மின்னலால் ஏற்படும் பயத்திற்கு
Astraphobia எனச் சொல்வார்கள். இதற்கு Brontophobia, Keraunophobia, Tonitrophobia, Astrapophobia என வேறு பெயர்களும் உண்டு. பொதுவாக சிறுவயதினருக்கே இது இருக்குமாம். இனிமே யாராவது வயசைக் கேட்டா எல்லாம் அஸ்ட்ரோபோபியா இருக்கும் வயசுதான், சும்மா போவியான்னு சொல்லிடுங்க. :))

கருத்த மேகங்களைப் பார்த்தால் பயம் என்பதற்குத் தனியாக ஒரு பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக மேகங்களைப் பார்த்தாலே வரும் பயத்திற்கு Nephophobia எனப் பெயர்.

மழைக்குப் பயப்படுவதை Ombrophobia or Pluviophobia என்று அழைப்பார்கள்.

எதாவது அதிக தகவல்கள் வேணுமானா கேளுங்க.

said...

கொத்ஸ் ரொம்ப நன்றி.

எப்படி பாராட்டறதுன்னே தெரியவில்லை.

அத்தனை பேருக்கும் ஒரு கேலி வந்துவிடும் நான் பயப்படும்போது.
என் குழந்தைகளும் கணவரும் தான் புரிந்து கொள்வார்கள்.

உங்கல் விக்கி யினால இந்த உணர்ச்சிக்கு ஒரு பெயரும் இருக்கிறது என்று தெரிகிறது.