Monday, October 01, 2007

ஒரு பந்தில் எத்தனை ரன்?

நம்ம பசங்க 20-20 உலகக்கோப்பையை ஜெயிச்சுக்கிட்டு வந்துட்டாங்க. அவங்க பின்னாடியே ஆஸ்திரேலியா வீரர்கள் வந்தாச்சு. இப்படி சூடா கிரிக்கெட் ஜுரம் அடிக்கும் பொழுது நாம கிரிக்கெட் பத்தின ஒரு கேள்விக்கு பதில் சொல்லலாமா?

பொதுவா ஒரு பந்தில் அடிக்கக் கூடிய அதிகபட்ச ஓட்டங்கள் என்ன அப்படின்னு கேட்டா ஆறு ஓட்டங்கள் என்றுதான் நாம் சொல்லுவோம். ஆனா அவ்வளவுதான் அடிக்க முடியுமா? அதுக்கும் மேல் அடித்தது உண்டா என பார்ப்போமா?

போன வருடம் இங்கிலாந்தின் ஒரு ஆட்டத்தில் கெவின் பியட்டர்ஸன் ஒரு பந்தில் ஏழு ஓட்டங்கள் குடுத்த பெருமையைப் பெற்றாராம். ஒரு நோ பாலில் அப்பந்தினை எதிர்கொண்ட வீரர் ஆறு அடித்ததால் அப்பந்தில் ஏழு ஓட்டங்கள் எடுக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கும் மேல் அடிக்க முடியுமா?

அடிக்க முடியும் என்ன, அடித்து இருக்கிறார்கள். அதுவும் ஒரு முறை அல்ல மூன்று முறை. எவ்வளவு ஓட்டங்கள் தெரியுமா? எட்டு ஓட்டங்கள். எப்படி என்று பார்க்கலாமா?

1928-29ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடந்த டெஸ்ட் பந்தயம் ஒன்றில் இங்கிலாந்து அணியினைச் சேர்ந்த பேட்ஸி ஹெண்ட்ரன் என்பவர் பந்தினை அடித்துவிட்டு நான்கு ஓட்டங்கள் ஓடியே எடுத்தார். அப்பொழுது அப்பந்தினைத் தடுத்த ஆஸ்திரேலிய வீரர் பந்தினை விக்கெட் நோக்கி எறிய அது நேராக மைதானத்தின் எதிர் பகுதி எல்லைக் கோட்டினை தாண்டிச் சென்றது. ஆக பேட்ஸி பெற்றது எட்டு ஓட்டங்கள். ஒரு கொசுறு செய்தி, இந்த டெஸ்ட் போட்டியில்தான் டான் பிராட்மேன் அறிமுகமானார். (படத்தில் வலப்புறத்தில் இருப்பவர்தான் பேட்ஸி.)

இதன் பிறகு 1980 - 81ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் நியூஸிலாந்துக்கும் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே முறையில் நியூஸிலாந்தின் ஜான் ரைட் (நம்ம அணியின் பயிற்சியாளராக இருந்தாரே அவரேதான்) இதே முறையில் ஒரு பந்தில் எட்டு ஓட்டங்கள் பெற்றார். இவர் அடித்த பந்தினை பீல்டர்கள் எடுப்பதற்குள் நான்கு ஓட்டங்கள் ஓடி எடுத்து விட்டார். பீல்டர் எறிந்த பந்தினை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் ராட் மார்ஷ் அதனை விக்கெட் நோக்கி எறிய அது விக்கெட்டில் படாமல் எல்லைக் கோட்டினைத் தாண்டியதால் நான்கு ஓட்டங்கள் கூடுதலாகக் கிடைத்தது. இந்த இரு சம்பவங்களிலும் எட்டு ஆட்டங்கள் கொடுத்த அணியாக ஆஸ்திரேலியாவே இருந்தது ஆச்சரியம்தான் இல்லையா!

இது நடந்த மூன்றாவது சம்பவம் 2004-05ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் பொழுது நடந்தது. மேற்கிந்திய தீவுகளின் ப்ரையன் லாரா பந்தை அடித்துவிட்டு மூன்று ரன்கள் ஓடி எடுத்தார். அப்பொழுது பந்தினைத் தடுத்த தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்கீப்பர் மார்க் பவுச்சர் அப்பந்தினை எறியும் பொழுது அது தரையில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டில் பட்டது. அதனால் ஐந்து அதிக ஓட்டங்கள் அளிக்கப்பட்டன. இப்படியாக ஒரே பந்தில் எட்டு ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. முன்பெல்லாம் இந்த ஐந்து ஓட்டங்கள் பேட்ஸ்மனின் எண்ணிக்கையில்தான் சேர்க்கப்பட்டன. ஆனால் இந்நிகழ்ச்சிக்கு முன் செய்யப்பட்டிருந்த விதிமுறை மாற்றத்தால் இது உபரி ஓட்டங்களாக கணக்கில் வைக்கப்பட்டது. இந்த விதிமுறை மாற்றத்தை ப்ரையன் லாரா சபித்து இருப்பார். காரணம் அந்த இன்னிங்க்ஸில் அவர் அவுட் ஆனது 196 ஆட்டங்களுக்கு!!

கிரிக்கின்போ தளத்தில் வாராவாரம் இது போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் தரப்படுகின்றது. நம் கவனத்தை ஈர்க்கும் சில பதில்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கு வழங்கப்படும்.

41 comments:

said...

வழக்கம் போல் படங்கள் இணையத்தில் இருந்து சுடப்பட்டவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

said...

எங்கோ படித்தது.
அடித்த பந்து மரத்தில் மாட்டிக்கொண்டு அதை எடுக்கும் வரை ரன் எடுத்தார்கள் என்று.
சுட்டி எல்லாம் கேட்காதீர்கள். :-)

said...

ஓஹோ!!??

said...

நல்லதொரு ரன் படம் பாடம்.
கொத்ஸ்,

ஜான் ரைட் ஏதோ சினிமா ஸ்டார் போல இருக்காரே.:)))

ரன் குவிக்கிறதுன்னா இதுதான் போலிருக்கு.
நம்ம சச்சினை விட்டுட்டீங்களே, எப்போ பார்த்தாலும் 98,97,96ன்னு அவுட் ஆகிறதும் இதனாலதானோ???

said...

இரண்டு கேள்வி கேட்டுவிட்டு,
அதில் ஒன்றுக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கீங்க கொத்ஸ்!

ஒரு நோபால்[1]+ அதிலோடி 4 ரன்கள்[4] ஓவத்ரோ[4] ஆக 9 ரன்கள் வரை சாதாரணமாக எடுக்க முடியும்.

இதையே ஒரு கத்துகுட்டி டீமோட எல்லையில்லாம சிலர் வந்து சொல்லவும் கூடும்!

ஆனால். 9 ரன்கள் எடுக்கக் கூடியதே!

said...

//வடுவூர் குமார் said...
எங்கோ படித்தது.
அடித்த பந்து மரத்தில் மாட்டிக்கொண்டு அதை எடுக்கும் வரை ரன் எடுத்தார்கள் என்று.
சுட்டி எல்லாம் கேட்காதீர்கள். :-)
//

குமார் / கொத்ஸ்,

பந்தை அடிக்கும் போது காக்கா தூக்கிக் கொண்டு சென்றுவிட்டால் பேட்டிங் அணி வென்றதாக பொருளா ?

:)

said...

இதையே, கொத்ஸ் சொன்ன ஹெல்மெட் 5உடனும் சேர்த்து 10 ரன்கள் எனவும் கொள்ளலாம்!

said...

ஒரு நோ பால்ல batsman ஓடி எடுக்கிற ரன்னோட சேர்ந்து fielder எறியும் பந்து விக்கெட்கீப்பரோட ஹெல்மெட்ல பட்டுதுன்னா... உபரியா ஒரு 6 ரன்கள் கிடைக்கும். அதுனால எல்லாம்... பேட்ஸ்மேன் ஓடற வேகத்தை பொறுத்தது.

technical-ஆ பாத்தா... பேட்ஸ்மேனோட ஓட்ட திறமையை வைத்து ஒரு பந்தில் எவ்வளவு ரன்கள் வேனுமானாலும் எடுக்கலாம். உதாரணமாக சூப்பர் மேனும் பேட் மேனும் ஆடினால் ஒரு பந்தில் 10 என்ன 100 ரன்கள் கூட எடுக்கலாம். ஹி...ஹி...!

said...

ஒரு பந்து என்றால் ஒரு முறை ஓடி வந்து வீசுவது மட்டும்தானா? லீகல் பந்து இல்லாமல் வைட் நோபால் கூட ஆட்டையில் சேர்த்தால், 500 ரன் கூட ஒரு பாலில் அடிக்கலாமே..

ஒரு நோபாலில் சிக்ஸர் அடிக்கிறார், அதற்கு 7 ரன், அடுத்ததும் நோபால், அதிலும் சிக்ஸர், 10 வைட் என்று போட்டால் .... :))

said...

எது சரியான விடை?
4,5,6,7,8,9,10??

இதற்கு மேலும் இருக்கலாம் ஓவர்த்ரோ மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தால்.

அதாவது ஒவ்வொரு முறையும் எல்லைக் கோட்டின் முன்னால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் ஓவர்த்ரோ. அப்படிச் செய்யும் பொழுது பேட்ஸ்மேன் 3 ரன்கள் ஓடி எடுக்க வேண்டும்.

said...

கொத்ஸ்...

இது போன்று அவ்வப்போது சிப்ஸ்களை கொறிப்பதற்கு அள்ளி வீசும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி..

said...

பெரும்பாலும் ஒரு பந்த வச்சு தானுங்க ஒரு இன்னிங்க்ஸ் முழுசா விளையாடுவாங்க... இப்ப தான் 35 ஒவர்களுக்கு அப்புறம் ஒரு பந்து மாத்தலாம் என்று சொல்லி இருக்காங்க... அதுனால் ஒரு பந்தை வச்சு எத்தனை ரன்கள் அடிக்கிறார்கள் என்பது பேட்டிங் செய்யும் அணியை பொருத்து இருக்கு... ;)

said...

//நம் கவனத்தை ஈர்க்கும் சில பதில்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கு வழங்கப்படும்//

நல்ல காரியம், செய்யுங்கள்....மொழி மாற்றம் செய்யாவிட்டாலும், நல்ல பதிவுகளை கில்லிமாதிரி கொடுத்தால் நலம்...எல்லாத்தையும் படிக்க வேண்டாமல்லவா?

//வழக்கம் போல் படங்கள் இணையத்தில் இருந்து சுடப்பட்டவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?//

சொல்லாட்டா தெரியாதா? :-)

நன்றி கொத்ஸ்....

said...

//நம் கவனத்தை ஈர்க்கும் சில பதில்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கு வழங்கப்படும்.//


தேவையில்லை என்பது என் கருத்து.

இதுவரை 'விக்கி பசங்க' தனக்கென ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தரத்திலிருந்து இப்புது முயற்சி விக்கி பசங்களைக் கீழே கொணரும் என்பது என் கருத்து.

ஆனாலும் இது உங்கள் ப்ளாக். என்ன எழுதணும் அப்டின்றதை நீங்கதான் முடிவு செய்யணும் அப்டின்றதும் எனக்குத் தெரியும். இப்பகுதியை விக்கிபீடியா தரத்திற்குக் கொணர ஏற்கெனவே உங்களைக் கேட்டுக் கொண்ட காரணத்திற்காகவும், இப்பகுதியின் வழமையான வாசிப்பாளன் என்பதாலும் என் கருத்தை
இங்கு சொல்கிறேன்.

க்ரிக் இன்போவுக்கென்றே ஒரு தனித் தமிழ்ப்பதிவு போடுங்களேன்.

said...

நான் சிறுவயதில் விளையாடும் பொழுது ஒரே பந்தில் 10 ரன்கள் எடுத்தேன். நான் அடித்த பந்து சாக்கடையில் விழுத்து விட்டதால் அதனை யார் எடுப்பது என்ற குழப்பத்தில் எதிரணி இருக்க, நானும் என் நண்பனும் 10 ஓட்டங்கள் எடுத்து விட்டோம். இந்தச் சாதனைய ஐ.சி.சி. ஏற்றுக் கொள்ளுமா?

said...

//ஜான் ரைட் ஏதோ சினிமா ஸ்டார் போல இருக்காரே//

இல்லையா பின்னே? நியூஸி ஆளாச்சேப்பா:-))))

said...

YouTube - Shahid Afridi gets 12 runs off ONE BALL!

Shahid Afridi - Wikipedia, the free encyclopedia: "the first ever 12 in power cricket in 2002, where Afridi successfully hit the roof."

Cricket-Online: The fastest 150 partnership: "in Australia, an invasion of locusts made visibility so difficult at a match that the game had to be abandoned. The most runs off one ball, in the days before limits were placed, also happened in Australia. Victoria, playing against Western Australia, scored 286 runs off one hit, the first delivery in the match. The ball was hit into the a branch of a very tall tree. The umpire disallowed the claim for "lost ball" because the ball was visible. While the batsmen were running, the players sent for an axe to cut down the tree but none was found. The ball was eventually shot down by one of the players using a rifle, but in the excitement nobody thought of catching the ball."

however, the most runs off one ball without overthrows or penalties was equalled many times today - it's only six."

said...

வடுவூர் குமார் சொன்னதை நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.
மொத்தம் 66 ரன்கள், காண்டெர்பரி விளையாட்டு மைதானத்தில் ஒரு கவுண்டி போட்டிக்காக என்று நினைக்கிறேன்.
இணையத்தில் தேடி அதாரம் தர சோம்பேரித்தனமாக உள்ளது!!
வெட்டியாக யாராவது இருந்தால் முயற்சி செய்ய்யவும்!! :-)

said...

//அடித்த பந்து மரத்தில் மாட்டிக்கொண்டு அதை எடுக்கும் வரை ரன் எடுத்தார்கள் என்று.
சுட்டி எல்லாம் கேட்காதீர்கள். :-)//

பின்னாடி பாருங்க. பாபா எம்புட்டு கஷ்டப்பட்டு சுட்டி தந்திருக்காரு. :))

said...

//Radha Sriram said...

ஓஹோ!!??//

ராதாக்கா, ஓஹோன்னா? என்ன சொல்ல வரீங்க?

said...

//நல்லதொரு ரன் படம் பாடம்.//

நன்றி வல்லிம்மா.

//கொத்ஸ்,

ஜான் ரைட் ஏதோ சினிமா ஸ்டார் போல இருக்காரே.:)))//

ஓவர் டு துளசி டீச்சர்.

//ரன் குவிக்கிறதுன்னா இதுதான் போலிருக்கு.
நம்ம சச்சினை விட்டுட்டீங்களே, எப்போ பார்த்தாலும் 98,97,96ன்னு அவுட் ஆகிறதும் இதனாலதானோ???//

அது விதி. அம்பையர் ரூபத்தில் வந்து விளையாடுது. :(

said...

//ஆனால். 9 ரன்கள் எடுக்கக் கூடியதே!//

9 என்ன 10த்தே எடுக்கலாம். அல்லது இரவி சொல்லறதைப் பாருங்க எம்புட்டு வேணாலும் எடுக்கலாம். எடுத்துக்கிட்டே இருக்கலாம். :)

said...

//பந்தை அடிக்கும் போது காக்கா தூக்கிக் கொண்டு சென்றுவிட்டால் பேட்டிங் அணி வென்றதாக பொருளா ?//

கண்ணன், இதுக்கு எல்லாம் விதிகள் இருக்கு. இங்க போய்ப் பாருங்க. அதுனால காக்கா தூக்கிக்கிட்டு போனா உண்ணாவிரதம் எல்லாம் இருக்க முடியாது! :))

said...

//ஒரு நோ பால்ல batsman ஓடி எடுக்கிற ரன்னோட சேர்ந்து fielder எறியும் பந்து விக்கெட்கீப்பரோட ஹெல்மெட்ல பட்டுதுன்னா... உபரியா ஒரு 6 ரன்கள் கிடைக்கும். அதுனால எல்லாம்... பேட்ஸ்மேன் ஓடற வேகத்தை பொறுத்தது.//

ஹெல்மெட்டில் பட்டா 5 ரன்கள். இதுதானே கணக்கு?!

//உதாரணமாக சூப்பர் மேனும் பேட் மேனும் ஆடினால் ஒரு பந்தில் 10 என்ன 100 ரன்கள் கூட எடுக்கலாம். ஹி...ஹி...!//

சூப்பர்மேன் எல்லாம் வேண்டாம். நண்பர் இரவி சொன்னா மாதிரி பீல்டிங் அணி முடிவு செஞ்சா எம்புட்டு ரன் வேணா எடுக்கலாம்.

said...

//ஒரு பந்து என்றால் ஒரு முறை ஓடி வந்து வீசுவது மட்டும்தானா? //

ராசா, ஒரு பந்து அப்படின்னா ஒரு முறை ஓடி வந்து வீசுவது மட்டும்தான்.

said...

//இதற்கு மேலும் இருக்கலாம் ஓவர்த்ரோ மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தால். //

அதனாலதான் hypotheticalஆ எம்புட்டு எடுக்க முடியும் எனப் பார்க்காமல் எவ்வளவு எடுக்கப் பட்டிருக்கிறது எனப் பார்த்தேன்.

said...

//இது போன்று அவ்வப்போது சிப்ஸ்களை கொறிப்பதற்கு அள்ளி வீசும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி..//

தல, தருமி என்ன சொல்லறார் பாருங்க. இப்போ நான் என்ன செய்ய? :)

said...

//அதுனால் ஒரு பந்தை வச்சு எத்தனை ரன்கள் அடிக்கிறார்கள் என்பது பேட்டிங் செய்யும் அணியை பொருத்து இருக்கு... ;)//

புலி - பொருத்து இருக்கா, பொறுத்து இருக்கா? :)))

கொழுப்புல உமக்கு உடம்பு பெருத்து இருக்கு. இதுல எந்த கன்பியூஷனும் இல்லை! :))

said...

//நல்ல காரியம், செய்யுங்கள்....மொழி மாற்றம் செய்யாவிட்டாலும், நல்ல பதிவுகளை கில்லிமாதிரி கொடுத்தால் நலம்...எல்லாத்தையும் படிக்க வேண்டாமல்லவா?//

மதுரையம்பதி - செய்யறேன் அப்படின்னு சொன்னா தருமி கோபப்படறார். நான் எந்தா செய்யு?

அப்புறம் அதுக்குத்தான் கில்லி இருக்கே, அப்புறம் விக்கிப் பசங்க எதுக்கு?

said...

//இதுவரை 'விக்கி பசங்க' தனக்கென ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தரத்திலிருந்து இப்புது முயற்சி விக்கி பசங்களைக் கீழே கொணரும் என்பது என் கருத்து.//

தருமி ஐயா, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? விளையாட்டு பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூடாதா அல்லது வெறும் கிரிக்கெட் மட்டும்தான் நாட் அலவுட் லிஸ்டா?

//என்ன எழுதணும் அப்டின்றதை நீங்கதான் முடிவு செய்யணும் அப்டின்றதும் எனக்குத் தெரியும். //

எங்க ஆசைக்கு எழுதத்தான் தனித்தனி வலைப்பூக்கள் இருக்கே. இது உங்களை மாதிரி படிக்கிறவங்களுக்காத்தான். அதனால கருத்துக்களை வெளிப்படையா சொல்லுங்க.

//க்ரிக் இன்போவுக்கென்றே ஒரு தனித் தமிழ்ப்பதிவு போடுங்களேன்.//
அதுக்கு எல்லாம் நிறையா பேரு வருவாங்க. நான் சொன்னது எல்லாம் என் கண்ணில் சுவாரசியமான கேள்வி பதில்கள் மட்டுமே இங்கு வரும் என்பது மட்டும்தான்.

அவை இல்லாமல் வழக்கம் போல் கேள்வி பதில்கள் தொடரும். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

இப்போ ஓக்கேவா?

said...

//இந்தச் சாதனைய ஐ.சி.சி. ஏற்றுக் கொள்ளுமா?//

ஏற்றுக் கொள்ளாது ராபின் ஹூட், அதற்கு முதலில் இது பி.சி.சி.ஐ. ஏற்றுக் கொள்ளப்பட்ட போட்டியாக இருக்க வேண்டும்.

அதனால் அடுத்த முறை சின்னப் பசங்களை ஏமாற்றும் முன், சாரி, விளையாடும் முன், ஒரு வார்த்தை சரத்பவாரிட்ம் சொல்லிடுங்க!! :))

said...

//இல்லையா பின்னே? நியூஸி ஆளாச்சேப்பா:-))))//

நியூஸி ஆளுங்க எல்லாமே சினிமா ஆக்டருங்களா டீச்சர்? :P

said...

பாபா,

முதலில் சுட்டி மழைக்கு நன்றி.

அப்புறம் அது என்ன கூரையில் பட்டா 12 ரன் ஆட்டம்? சரியான போங்கு ஆட்டமா இருக்கே.

ஒரு பந்தில் 286 ரன்களா? அத்தனையும் ஓடியே எடுத்தாங்களா? அவங்களை விடுங்க. அதைச் சரியா எண்ணிச் சொன்னான் பாருங்க ஒருத்தன் அவனுக்குப் போடணும் மாலையை! இல்லையா!! :))

நன்றி தல!

said...

//மொத்தம் 66 ரன்கள், காண்டெர்பரி விளையாட்டு மைதானத்தில் ஒரு கவுண்டி போட்டிக்காக என்று நினைக்கிறேன்.//

இது உங்க ஊர் கதை போல. பாபா உங்க பக்கத்து ஊர் கதை ஒண்ணு சொல்லி இருக்கார் பாருங்க.

//இணையத்தில் தேடி அதாரம் தர சோம்பேரித்தனமாக உள்ளது!!//

ஆதாரம், சோம்பேறி என எழுதக்கூட சிரமமா இருக்கு போல!! நல்லா இருங்கடே!!

//வெட்டியாக யாராவது இருந்தால் முயற்சி செய்ய்யவும்!! :-)//

இது என்ன பாபா மேல் நேரடித் தாக்குதல்? :))

said...

நல்ல சேதி சொன்னதுக்கு நன்னி

said...

ஸ்டாண்டேர்ட் பின்னூட்டம் போட்ட இளாவிற்கு நன்னி. :))

said...

பந்துல எப்படிங்க ரன் எடுக்குறது? ரப்பர் எடுக்கலாம்...லெதர் எடுக்கலாம்..கார்க் எடுக்கலாம்...ரன் எப்படி எடுக்குறது? :))) சரி. சரி. ஸ்டாப்பிங்.

ஒரு கேள்விக்குன்னே வெச்சுக்கிருவோம். பந்து மட்டைல பட்டு ரெண்டாத் தெரிச்சி..ஒங்கு இங்குட்டும் ஒன்னு அங்குட்டும் போயிருச்சுன்னா என்ன செய்வாங்க?

said...

///G.Ragavan said...
பந்துல எப்படிங்க ரன் எடுக்குறது? ரப்பர் எடுக்கலாம்...லெதர் எடுக்கலாம்..கார்க் எடுக்கலாம்...ரன் எப்படி எடுக்குறது? :))) சரி. சரி. ஸ்டாப்பிங்.

ஒரு கேள்விக்குன்னே வெச்சுக்கிருவோம். பந்து மட்டைல பட்டு ரெண்டாத் தெரிச்சி..ஒங்கு இங்குட்டும் ஒன்னு அங்குட்டும் போயிருச்சுன்னா என்ன செய்வாங்க?

///

idhukku wikkipasanga kitta vidai irukka???? :-))))

said...

இந்த கிரிக்கெட் விவரம் எல்லாம் சலித்து போன ஒன்றாகவே இருக்கு(ஏற்கனவெ கேள்விப்பட்ட ஒன்றாக)

ஆனால் ராகவன் கேட்டது கிரிக்கெட் விதிகளில் உள்ளது,

//ஒரு கேள்விக்குன்னே வெச்சுக்கிருவோம். பந்து மட்டைல பட்டு ரெண்டாத் தெரிச்சி..ஒங்கு இங்குட்டும் ஒன்னு அங்குட்டும் போயிருச்சுன்னா என்ன செய்வாங்க?//

அப்படி பந்து பிஞ்சு போய் புடிச்சா அதிகப்பட்சமான அளவுள்ள பகுதியை பிடித்தால் மட்டுமே அவுட். பந்தின் அளவில் சதவீதக்கணக்கில் சொல்லி இருக்கிறார்கள் அனேகமாக 60-65 சதம் பந்தின் சிதறிய பகுதியை பிடிக்க வேண்டும் அந்த அளவு சரியாக நினைவு இல்லை.

அதே போல ஜீனியர் , சீனியர், பெண்கள் கிரிக்கெட்டுக்கு என பந்துகளின் எடை, அளவு மாறு படும்.

பீல்டர்கள் மேல் பட்டு எத்தனை பௌன்ஸ் ஆகி வந்தாலும் பிடித்தால் அவுட் தான்.

அப்படி 3 பௌன்சில் கேட்ச் பிடித்துள்ளார்கள்.

விக்கெட் கீப்பர் மேல் பட்டு , அது அடுத்த சிலிப் பீல்டர் மேல் பட்டு கீழ விழும் முன் காலால் ஒரு உதைக்கொடுத்து பின்னர் மீண்டும் ஒரு வர் கேட்ச் பிடித்தார், அவர் இங்கிலாந்தின் கிரகாம் கூட்ச்(ரஜினி ஸ்டைல்)

அதே போல அடித்த பந்து பேட்ஸ்மேன் பேடில் சிக்கிக்கொண்டு இருக்கும் போது அவர் எத்தனை ரன்கள் ஓடினாலும் கணக்கில் வரும்!(பீல்டர் போய் ஓடும் பேட்ஸ்மேனை நிறுத்த கூடாது அது ரன் எடுப்பதை தடுப்பதாகும் விதிப்படி தவறு) அப்படியும் அதிக ரன்கள் எடுத்துள்ளார்கள் முதல் தர கிரிக்கெட்டில்(சுட்டிலாம் கேட்க கூடாது)

said...

நண்பரே ! நான் கணினிக்கு புதிது. HTML Edit செய்வது எப்படி என்று சொல்லி உதவ முடியுமா ?

said...

ரூல்ஸ் தெரியாத வயசில் நான் அடித்த பந்து என்கேயோ போய் விழ நான் எடுத்த ரன்னுக்கு முன்னாடி ......
தேவா.