Thursday, November 02, 2006

சுடோகு போடுவது எப்படி?

அதென்னய்யா சுடோகு என்பவர்களுக்குத்தான் இந்த பதிவு. சுடோகு தெரியாதா இவன் என்னமோ எழுத வந்துட்டான் என பேசும் வீம்பிகள் இத்தளத்தில் தினமும் வரும் இலவச புதிரை போட பாருங்களேன்.

சுடோகு ஒரு ஜப்பானிய புதிர் விளையாட்டு. ஆனால் இதன் மூலம் நம்ம பாரதம்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சேதி. நமது முன்னேர்கள் குருகுலத்தில் கிளாசெல்லாம் கட்டடிக்காமல் சரியாக படித்து பல வித்தைகளை அறிந்து வைத்திருந்தனர். கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்பொழுது பலவிதமான மாயக்கட்டங்களை கண்டுபிடித்திருந்தனர். அதில் ஒருவகைதான் இந்த சுடோகு.

9x9 சதுரங்களைக் கொண்டது சுடோகு கட்டம். இதில் இட வல வரிசைகளை R1-R9 ஆக குறித்துக் கொள்வோம். மேல்-கீழ் வரிசைகளை C1-C9 ஆகவும், தடித்த கோடுகளால் காட்ட பெற்றிருக்கும் 3x3 உட்கட்டங்களை B1-B9 ஆகவும் குறித்துக் கொள்வோம்.



விதிகள்
1. ஒவ்வொரு இட-வல வரிசையிலும் (R1-R9), ஒவ்வொரு மேல்-கீழ் வரிசையிலும் (C1-C9) 1-9 என்ற எண்களை தலா ஒரு முறையே வருமாறு கட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இவைகளில் மட்டுமல்லாது, ஒவ்வொரு உட்கட்டத்திலும் (B1-B9) இவ்வெண்கள் ஒரு முறைக்கு மேல் வரக்கூடாது.
3. தொடக்கத்தில் சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
4. காலியாக இருக்கும் கட்டங்களை மேற்கூறிய விதிகளுக்கிணங்கி நிரப்ப வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு புதிர்


இந்த புதிரை எப்படி முடிப்பதென்று பார்ப்போம்.
உள்கட்டம் B4-ல் 1 இருக்கிறது. 2 எந்த கட்டத்தில் வரும்? R4-ல் ஏற்கனவே ஒரு 2 இருப்பதால் அங்கு இன்னுமொரு 2 வராது. எனவே மீதமிருக்கும் இரண்டு கட்டங்களில் எதாவது ஒன்றில்தான் வர வேண்டும். அதிலும் C2விலும் 2 இருப்பதால், வரக்கூடிய இடம் ஒன்றே ஒன்றுதான். அது C1,R5.


அடுத்து உள்கட்டம் B5-ல் பார்த்தீர்களானால் R4, R5 ஆகிய இரண்டு வரிசைகளிலும் 2 இருக்கிறது. எனவே C6,R6 என்ற கட்டத்தில்தான் 2 வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 4. வரிசை R5-ல் ஏற்கனவே 4 இருப்பதால், C4,R4 என்ற கட்டத்தில்தான் வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 5. இது மீதி இருக்கும் கட்டமான C5,R5 என்ற கட்டத்தில்தான் வரும்.


இதைப்போன்று அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தால் விடை கீழ் காணும் படத்திலிருப்பது போல இருக்கும்.


இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்ததுதானே. மேலும் பல புதிர்களுக்கு மேற்கூறிய வலைத்தளத்திற்கு செல்லுங்கள். எடுத்துக்காட்டாக உபயோகித்த புதிர் இத்தளத்திலிருந்து எடுத்ததுதான். இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகளும் உண்டு.

சுடோகுவின் வரலாறு, இதன் வடிவமைப்பு பற்றிய செய்திகள், மேலும் பல தகவல்கள் வேண்டுமானால் பின்னூட்டமிடுங்கள், இன்னுமொரு பதிவு செய்கிறேன். நீங்கள் முயலும் புதிரில் அடுத்த அடி தெரியாமல் கஷ்டப்பட்டீர்களானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். சேர்ந்து முயலலாம்.

- இலவசக்கொத்தனார்

42 comments:

said...

என் கேள்விக்கு பதில் சொல்லாட்டி விடமாட்டேன். அதற்குள் சொடக்கு போடுவது எப்படின்னு இன்னொரு பதிவு
(நான் பதிவைப் படிக்கவில்லை)

said...

ஆனா ஒண்ணு. வேலை விஷயமா வெளியூரில் இருக்கேன். அதனால பதில்கள் கொஞ்சம் தாமதமாத்தேன் வரும். அப்புறம் சொல்லலைன்னு ஆரும் வையப்புடாது. ஆமா!

said...

இதை ஹிந்து பேப்பர்ல பார்த்து அப்ப அப்ப விளையாடுவது உண்டு. ரொம்ப எல்லாம் இதில் ஆர்வம் இல்லை கொத்துஸ்.....

ஆனா ஒரு சில நம்ம பசங்க, இதை சால்வ் பண்ண சிந்திக்குறதை பாக்க ரொம்ப பிடிக்கும். என்னமா ரியாஷ்சன் கொடுப்பாங்க தெரியுமா.... விதவித போஸ்ல நின்னு விதவிதமாக யோசிப்பானுங்க.....

said...

//ஆனா ஒண்ணு. வேலை விஷயமா வெளியூரில் இருக்கேன். அதனால பதில்கள் கொஞ்சம் தாமதமாத்தேன் வரும். அப்புறம் சொல்லலைன்னு ஆரும் வையப்புடாது. ஆமா! //

வேலை விஷயமா வெளியூர் போன நீங்க பதிவு போட நேரம் ஒதுக்குன மாதிரி பதில் சொல்லனும். சொல்லிட்டேன்.....

அது சரி, மெய்யாலுமே வேலை விசயமாக தான் வெளியூர் போனிங்களா....

said...

//என் கேள்விக்கு பதில் சொல்லாட்டி விடமாட்டேன். அதற்குள் சொடக்கு போடுவது எப்படின்னு இன்னொரு பதிவு//

உஷாக்கா, அவரே பாவம் நொந்து போய் அடுத்த ஊர்ல வர்கார்ந்து இருக்காரு, அவரை இப்படி டிஸ்டர்ப் பண்ணுறீங்களே... சரி உங்க டவுட் என்ன? போன பதிவுல கேட்டது தானே.... பெரியவங்க இருக்கும் போது சின்ன பையன் நான் சொல்ல கூடாது என்று இருந்தேன். நீங்க இவ்வளவு கேட்பதால் சொல்லுறேன்.

தலைவாசல் ஒரு படத்தில் மடிப்பு அம்சா கேரக்டரில் விசித்ரா னு ஒரு நடிகை நடிச்சாங்க. விசித்ரா சொன்ன கூட யாருக்கும் தெரியாத அளவுக்கு இந்த மடிப்பு அம்சா பெயர் பிரபலம் ஆயிடுச்சு.....

உங்க கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா?

அப்புறம் , சொடக்கு போடுவது எப்படின்னு அவங்க இன்னும் பதிவு போடல. நாமே கேட்கனும் என்று இருந்தேன். ஒரு சமயத்தில் இரு கைகளிலும் சொடக்கு நல்ல சத்தமாக எழுப்புவது எப்படி. கையில் மட்டும் தான் முடியுமா, இல்லை கால் விரலிலும் சொடக்கு போட முடியுமா?

said...

உஷாக்கா, இப்ப நானும் உங்க கட்சி தான். கேள்வி கேட்டா தனியா கூப்பிட்டு என்னய மிரட்டுறாங்க..... என்ன கேள்வி எல்லாம் கேட்குறனு....பயமா இருக்கு. நான் முதல இங்கன இருந்து இடத்த காலி பண்ணுறேன். எங்க ஊர் ஆள் ராம்ஸ் வந்த பிறகு தான் நான் இந்த பக்கம் வருவேன்......

said...

இந்த சொடோகு பக்கமே திரும்ப மாட்டேனாக்கும்.... ரொம்ப மண்ட காஞ்ச வெசயமுங்க. ஒங்க பதிவ படிச்சதுக்கப்புறமா அந்தபக்கம் கூட கொஞ்சநேரம் ஒதுங்கலாம் போலருக்கு. மத்தபடிக்கு கொஞ்சம் டிரை பண்ணிட்டு சொல்றேன்!

said...

கொத்துஸ் ஆள் வைச்சி எல்லாம் அடிக்காதீங்க, ராம்ஸ் இது மட்டும் கேட்டுட்டு(சொல்லிட்டு) ஒடிட சொன்னார். அதான்

//"ஆ"னா ஒண்ணு. //

"ஆ" னா இரண்டுங்க, "அ" னா தான் ஒன்னு....

ஐ எஸ்கேப்.........

said...

அடடா புலியார்,
நம்மூர்ப்பாசமே தனிதான்பா!

சின்னப்பையன்னு நினச்சு கொத்ஸு மிரட்டுறாரா? நான் இருக்கேன் கூட.

காலால் சொடக்கு போட முடியுமா என்று கேட்டிருக்கிறீர்கள். சொந்தமாக போட முடியாது.

நெட்டி வேணா முறிக்கலாம்.

said...

உஷா அக்கா,
உங்க சந்தேகம் தீர்ந்துச்சா? கொத்தனார் வேலை விஷயமான்னு சொல்றது இதுதான். இன்னும் விவரமா தங்கமணிக்கு தெரியாம ஆராய்ச்சி செஞ்சு இலவசமா வந்து சொல்வாரு.

said...

சுடோகு!

ஒரு ஜப்பானிய விளையாட்ட நாம் ஏன் விளையாடணும்னு கேக்கறேன்?

இது விஷயமா இடிதாங்கிகிட்டயும், குடிதாங்கிகிட்டயும் பேசறேன்!

சுடோகு என்பது தமிழ் வார்த்தையே அல்ல.

said...

//"ஆ" னா இரண்டுங்க, "அ" னா தான் ஒன்னு....//

சுத்தம் '1' இதுதான் ஒன்னு, '2' இதுதான் இரண்டு.

'அ'ன்னா அ தான். 'ஆ'வனான்னா ஆ வன்னாதான்.

said...

அப்புறம்..

எனக்கு ஒரு பயங்கரமான டவுட்டு ஸ்கூல் படிக்கற காலத்திலருந்து இருக்கு
தீர்த்து வைப்பிங்களா?

வைப்பீங்களோ இல்லையோ நான் சொல்லிடறேன்.

பப்பிளிகாம்(சூயிங்கம்) மெல்லும்போது
ஜில்லுனு தண்ணியோ இல்லாட்டி கலரோ குடிச்சவுடனே கொழ கொழன்னு இருக்கற சூயிங்கம் கட முடான்னு கமருகட்டு மாதிரி ஆயிடுதே ஏன்?

said...

நா.சி ! நன்றி ஐயா, நன்றி. காரெக்டர் பெயரா? நான் யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.
இதற்கு ஒழுங்கா சொல்லாமல், கேள்வி கேளுங்கள் பதில் சொல்ல காத்திருக்கிறோம் என்று ஒரு பில்டப்பு :-)

said...

//சுடோகுவின் வரலாறு, இதன் வடிவமைப்பு பற்றிய செய்திகள், மேலும் பல தகவல்கள் வேண்டுமானால் பின்னூட்டமிடுங்கள், இன்னுமொரு பதிவு செய்கிறேன்//

நேரம் கிடைத்தவுடன் இதற்கு பதிவு போட்டுவிட்டு மறுவேலை பாருமையா.

said...

சாரி எனக்கு புரியல... புரிஞ்சிக்கிறதுக்கு ரொம்ப ட்ரை பண்ணேன்.. ஆனாலும் முடியல... எனக்கு விதிமுறைகளும் எடுத்துக்காட்டுல விளக்கமும் இன்னும் நல்லா வேணும்னு நினைக்கிறேன்.. ஏதாவது புக் வாங்கி படிச்சி ட்ரை பன்றேன்...

said...

ப்ளேன்ல் போகும்போது ஒரு முறை bore அடிச்சு ஏதோ magazine-ல ட்ரை பண்ணி இருக்கேன்...இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!

said...

இங்கே ரொம்ப பிரபலமாப் போச்சு இந்த விளையாட்டு.

இதை ஸால்வ் செய்ய ஒரு ச்சின்ன உள்ளங்கை அகல சாதனம்கூட
விக்குது. தினமும் பேப்பரில் ஒவ்வொண்ணு போடறாங்க.

என் தோழியின் கணவர் ( 81 வயசு) இதுலேயே மூழ்கிட்டார். தோட்ட வேலை
செய்ய இப்ப அவருக்கு நேரமே இல்லையாம்:-))))

said...

தம்பி,
//சுடோகு என்பது தமிழ் வார்த்தையே அல்ல.
//
மருத்துவர் ஏற்கனவே பச்ச பச்ச பச்ச துரோகத்துனால நொந்து போயிருக்கார். அவர இன்னும் உசுப்பேத்திவிடவா?

//பப்பிளிகாம்(சூயிங்கம்) மெல்லும்போது
ஜில்லுனு தண்ணியோ இல்லாட்டி கலரோ குடிச்சவுடனே கொழ கொழன்னு இருக்கற சூயிங்கம் கட முடான்னு கமருகட்டு மாதிரி ஆயிடுதே ஏன்?
//
இது கேட்டீங்களே கேள்வி.. சூயிங்கம்களில் binding agent களாக பயன்படுத்தப்படும் latex களின் தன்மை அது.

அதனாலே தான் துணிகளில் சூயிங்கம் ஒட்டிக்கொண்டுவிட்டால், துணியை பிரிட்ஜில் வைத்து குளிரூட்டவும். சூயிங்கம் இறுகி, எடுப்பது சுலபமாகி விடும்.

விரிவாக பதில் தருவதற்கு யாராவது கெமிக்கல் எஞ்சினியர்கள் முன்வராத பட்சத்தில் தேடியாவது சொல்கிறேன்.

நன்றி.

said...

//என் கேள்விக்கு பதில் சொல்லாட்டி விடமாட்டேன்.//

சொல்லலைன்னா நீங்க விட மாட்டீங்க சரி. ஆனா சொல்லாம நாங்களும் விட மாட்டோம். தெரியுமில்ல.

என்ன சொல்லி இருக்கோம்? எங்களுக்குத் தெரியாத விஷயங்களை அந்த துறை ஆளுங்க கிட்ட கேட்டு சொல்லுவோம் அப்படின்னு. அது படியே மடிப்பு அம்சா பத்தின கேள்விக்கு நம்ம நிபுணர் நாகை சிவா வந்து பதில் சொல்லிட்டாரு பாருங்க. இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் ரொம்ப பாடு படணும். அதனால கொஞ்சம் டையம் ஆகும். பொறுமை, பொறுமை!

//அதற்குள் சொடக்கு போடுவது எப்படின்னு இன்னொரு பதிவு//

ஹலோ! எங்க திறமையைப் பத்தி என்ன நினைச்சீங்க? ஒரு சமயத்தில் ஒரே கேள்விக்குத்தான் பதில் தெரியாதுன்னு சொல்லுவோமுன்னா? அப்படி எல்லாம் இல்லை. அசராம ஆறு கேள்விகளுக்கு கூட தெரியாதுன்னு சொல்லுவோமில்ல. இது என்னா கேள்வி, சிறுபிள்ளத்தனமா இல்ல இருக்கு....:)

said...

//விதவித போஸ்ல நின்னு விதவிதமாக யோசிப்பானுங்க.....//

புலி, யோசிப்பாங்களா அல்லது யோசிக்கற மாதிரி போஸ் குடுப்பானுங்களா? நாளைக்கு ரெண்டு பொண்ணுங்க உம்ம பக்கத்தில் நின்னு இதைப் பத்தி பேசுனா உமக்கு ஒரு ஓபனிங் கிடைக்குமில்ல. அதான் இந்த பாடு படறோம். ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரும். (ஆஹா பொன்ஸுக்கு கோபம் வரப் போகுதே..ஐயாம் தி எஸ்கேப்)

said...

//வேலை விஷயமா வெளியூர் போன நீங்க பதிவு போட நேரம் ஒதுக்குன மாதிரி பதில் சொல்லனும். சொல்லிட்டேன்..//

கேட்டுட்டேன்.

//அது சரி, மெய்யாலுமே வேலை விசயமாக தான் வெளியூர் போனிங்களா....//

இதெல்லாம் ஒரு மனுசன் சொன்னா நம்பணும். சும்மா குறுக்கால கேள்வி கேட்டுக்கிட்டு.

said...

//பெரியவங்க இருக்கும் போது சின்ன பையன் நான் சொல்ல கூடாது என்று இருந்தேன். நீங்க இவ்வளவு கேட்பதால் சொல்லுறேன்.//

தம்பி புலி, இதெல்லாம் அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். இதுல வந்து வயசெல்லாம் பாக்கப்பிடாது. அவங்க பாரு இந்த வயசுலேயும் எப்படி தெரிஞ்சுக்க ஒரு ஆர்வத்தோட இருக்காங்க. ;)

சரியான பதிலைச் சொல்லி உஷாக்காவின் பெருத்த சந்தேகத்தை (யப்பா கண்ணுங்களா சந்தேகம்தான் பெருத்தது. அந்த அக்கா கிட்ட தப்பா சொல்லி அடி வாங்கிக் குடுக்காதீங்கப்பா) தீர்த்து வைத்த உமக்கு இரும்பரசன் என்ற பெயர் சூடுவதில் பெருமை அடைகிறேன்.

(மடிப்பு சரியா வரணுமின்னா நல்லா அயர்ன் பண்ணணும். அதை சரியா செஞ்சிருக்க. ஆனா அயர்ன் தமிழ் வார்த்தை இல்லையே. அதான் அதைத் தமிழ் படுத்து இரும்பு அரசன் அப்படின்னு பட்டம். ஆனா ஜாக்கிரதையா இருந்துக்கோ. கொஞ்சம் அசந்தாலும் நம்ம ஆளுங்க உன்னை பேரீச்சம் பழத்துக்கு ஆசைப்பட்டு டொனேட் பண்ணிடப் போறாங்க!)

said...

//ஒரு சமயத்தில் இரு கைகளிலும் சொடக்கு நல்ல சத்தமாக எழுப்புவது எப்படி. கையில் மட்டும் தான் முடியுமா, இல்லை கால் விரலிலும் சொடக்கு போட முடியுமா?//

உடற்கூறு சம்பந்தப்பட்ட கேள்வியாக இருப்பதால், ஓவர் டு மருத்துவர்.

said...

//கேள்வி கேட்டா தனியா கூப்பிட்டு என்னய மிரட்டுறாங்க..... என்ன கேள்வி எல்லாம் கேட்குறனு....பயமா இருக்கு.//

எந்த விஷயத்தை வெளிய சொல்லணும், எதை கமுக்கமா அப்படியே விட்டுடணமுன்னு தெரியலையே. போயி உங்க தல கிட்ட ஒரு டுவிஷன் எடுத்துக்கப்பூ.

said...

//இந்த சொடோகு பக்கமே திரும்ப மாட்டேனாக்கும்.... ரொம்ப மண்ட காஞ்ச வெசயமுங்க. ஒங்க பதிவ படிச்சதுக்கப்புறமா அந்தபக்கம் கூட கொஞ்சநேரம் ஒதுங்கலாம் போலருக்கு. மத்தபடிக்கு கொஞ்சம் டிரை பண்ணிட்டு சொல்றேன்!//

வாங்க நாகு. முயற்சி பண்ணி பாருங்க. நல்ல விளையாட வந்துதுன்னா வந்து சொல்லுங்க. சந்தேகம் இருந்தா கேளுங்க. விட்டு போன விஷயம் எதாவது கிடைச்சுதுனா அதையும் சொல்லுங்க.

அப்புறம் மறக்காம மத்த பதிவுக்கெல்லாம் வாங்க.:)

said...

//"ஆ" னா இரண்டுங்க, "அ" னா தான் ஒன்னு....//

என்னாது இது? கொஞ்சம் கூட ஒரு இது இல்லாமா? சின்னப்புள்ளத்தனமாயில்லயிருக்கு. (அட உங்க தல எம்மாம் பெரிய வார்த்தை எல்லாம் பேசறாரு!)

உனக்கு யாருடே கணக்குச் சொல்லிக் குடுத்தது? சரியான மாங்காவாத்தான் இருந்திருப்ப போல.

சொல்லறேன் கேட்டுக்க.

'ஆ'னா ஒண்ணுதேன். 'ஆ ஆ'னாத்தேன் ரெண்டு.

said...

//சின்னப்பையன்னு நினச்சு கொத்ஸு மிரட்டுறாரா? நான் இருக்கேன் கூட. //

ராம்ஸு. சொல்ல வந்ததை சரியா சொல்ல வேண்டாமா? எனக்கும் இந்த மாதிரி சின்னப்பசங்களை மிரட்டறது புடிக்கும் அதனால நானும் கொத்ஸ் கூட இருக்கேன் அப்படின்னு விளக்கமா சொல்லு. தம்பி தப்பா புரிஞ்சிக்கப் போகுது.

said...

//ஒரு ஜப்பானிய விளையாட்ட நாம் ஏன் விளையாடணும்னு கேக்கறேன்?//

தம்பி, பதிவ சரியா படிக்கறது இல்லையாக்கும். என்ன சொல்லி இருக்கேன்னு பாரு.

"ஆனால் இதன் மூலம் நம்ம பாரதம்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சேதி."

இந்த மாதிரி டையம் பாஸ் வேலை எல்லாம் நாமதான் உலகத்துக்கே கத்துக் குடுப்போமாட்டும் இருக்குது.

//இது விஷயமா இடிதாங்கிகிட்டயும், குடிதாங்கிகிட்டயும் பேசறேன்!//

நீ யாருக்கிட்ட வேணாலும் பேசிக்கோ. நாளைக்கு ஒரு பிரச்சனையினு வந்தா நானும் நம்ம அடிதாங்கியை கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டு வேடிக்கை பாக்க மாட்டேன். ஆமா.

said...

//'அ'ன்னா அ தான். 'ஆ'வனான்னா ஆ வன்னாதான்.//

வாங்க நாடோடி. 'ஆ' வந்து ஆ தான். அது என்ன வன்னான்னு கூட சேர்த்துக்கறது? இப்பத்தான் முதல்வன் பாட்டு கேட்டீங்களா? அதான் இப்படி வன்னே வன்னே வன்னேவன்னேவன்னே ன்னு சேர்த்துக்கிட்டு பாடறீங்க.

said...

//ஜில்லுனு தண்ணியோ இல்லாட்டி கலரோ குடிச்சவுடனே கொழ கொழன்னு இருக்கற சூயிங்கம் கட முடான்னு கமருகட்டு மாதிரி ஆயிடுதே ஏன்?//

அடியாத்தீ. அதி முக்கியமான கேள்வி. சூயிங்கம் சாப்பிடறவங்க சார்பில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. நம்ம ஆட்கள் உங்க சந்தேகத்தை தீர்த்து வைப்பாங்க. கவலை வேண்டாம்.

said...

//இதற்கு ஒழுங்கா சொல்லாமல், கேள்வி கேளுங்கள் பதில் சொல்ல காத்திருக்கிறோம் என்று ஒரு பில்டப்பு :-)//

அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்!

வாதி கூறுவது போல் நாங்கள் எங்கும் சொல்லவில்லை. நாங்கள் கூறியது என்னவென்றால்

"எங்களுக்கு விடை தெரியாத கேள்வியே இந்த உலகத்திலே கிடையாதுங்க! என்ன, பல சமயம் விடை "தெரியாது"ன்னு இருக்கும். ஆனா, எப்படியாவது நாங்களோ, நீங்களோ தேடிக் கண்டுபிடிச்சு விளக்கிடுவோம்."

வேறு ஒரு இடத்திலும்

"
கேள்வி சம்மந்தப்பட்ட துறையாளர்களிடம் இருந்து, கூகுளாண்டவர் கிட்டே நேர்ந்துகிட்டு, எங்க கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நாங்க பதிலை வாங்க முயற்சி செய்வோம். அதே நேரத்தில படிக்கறவங்களுக்கு இந்த விஷயத்திலே வெளிச்சத்தை தூக்கிப் போடமுடியும்னு நம்பிக்கை இருந்தா அவங்களும் எழுதலாம்."

இந்த சித்தாந்தைவிட்டு விலகாமல், எங்கள் கோட்பாடுகளை விட்டு வழுவாமல் இவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்க பெரும் முயற்சிகள் செய்து, மடிப்பை பற்றி முனைவர் பட்டம் வாங்க முயன்று வேண்டாமென விட்ட இரும்பரசன் அவர்களை அழைத்து வந்து தீர்த்து வைத்து விட்டோம்.

அதன் பின் இவர்கள் இப்படி எங்கள் மீது அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர்களின் வயதுக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அடங்கி இருக்கிறோம். ஒரு கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு எல்லாம் போட மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

(போட்டாலும் பைசா பெயராதுன்னு தெரியும். அதான் போடாம இப்படி ஒரு பில்டப்.)

said...

//நேரம் கிடைத்தவுடன் இதற்கு பதிவு போட்டுவிட்டு மறுவேலை பாருமையா.//

இப்போ போட்டதே சரியா புரியலைன்னு சொல்லறாங்க. இதுல என்னத்த மேல்விவரம் தரது?

இருந்தாலும் கேட்டுட்டீங்க. பாத்து எடுத்துப் போடறேன்.

said...

//Nakkiran said...

சாரி எனக்கு புரியல..//

நக்கீரா,

என் பதிவில் குற்றமா? என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? பொருட்குற்றமா?

சாரிங்க, உங்க பேரைப் பாத்ததும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு...
ஹிஹிஹி...

இப்பத்தானே எழுத கத்துக்கறோம். அதனால இந்த மாதிரி ஆகுது. எங்க வரை புரிஞ்சுதுன்னு சொல்லுங்க. அப்புறம் கொஞ்சம் விலாவாரியா சொல்லித்தரேன்.

உங்க தனிமெயில் ஐடி குடுங்க. நான் மெயில் போடறேன்.

said...

//ப்ளேன்ல் போகும்போது ஒரு முறை bore அடிச்சு ஏதோ magazine-ல ட்ரை பண்ணி இருக்கேன்...இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!//

ஆமாங்க. நல்ல சுவாரசியமான விளையாட்டு. பிரயாணங்களின் போது பொழுது போக ரொம்பவே கை கொடுக்கும்.

said...

//நீங்கள் முயலும் புதிரில் அடுத்த அடி தெரியாமல் கஷ்டப்பட்டீர்களானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். சேர்ந்து முயலலாம்.//

ஐயா பெரியவரே!
சுடோகு சுடோகுன்னு பைத்தியமாகி மண்டை காஞ்சு ஆபீசுலயும் ஆப்பு வச்சாலும் உங்க கையில சொல்லலாங்களா?
:)

said...

//இது கேட்டீங்களே கேள்வி.. சூயிங்கம்களில் binding agent களாக பயன்படுத்தப்படும் latex களின் தன்மை அது.

அதனாலே தான் துணிகளில் சூயிங்கம் ஒட்டிக்கொண்டுவிட்டால், துணியை பிரிட்ஜில் வைத்து குளிரூட்டவும். சூயிங்கம் இறுகி, எடுப்பது சுலபமாகி விடும்.//

அடடா மருந்து! பின்னறீங்களே? பப்பிளிகாம் பத்தி நம்ம பப்புலு தம்பி கேட்ட பதிலுக்கு இப்படி ஒரு பிரமாதமான பதில் குடுத்து விக்கிபசங்க பேரை அகிலமெல்லாம் வித்துட்டீங்களே! சூப்பருங்கிறேன்.
:)

said...

//இங்கே ரொம்ப பிரபலமாப் போச்சு இந்த விளையாட்டு.//

உங்க ஊரில் மட்டும் இல்லை. உலகெங்கும் இந்த பைத்தியம் பிடிச்சு அலையறவங்க அனேகம் பேர்.

//இதை ஸால்வ் செய்ய ஒரு ச்சின்ன உள்ளங்கை அகல சாதனம்கூட
விக்குது. //

நீங்க சொல்லறது கைக்கடக்கமா விடியோ கேம் மாதிரி அதுலையே சுடோகு புதிர் வரா மாதிரி ஒரு சாதனம். அதிலயே புதிரை விடுவிக்கவும் செய்யலாம். இங்க 15-20 டாலருக்கு கிடைக்குது.

//தினமும் பேப்பரில் ஒவ்வொண்ணு போடறாங்க.//

பேப்பர், வலைப்பக்கங்கள் என எங்கு காணினும் சுடோகுதான்.

//என் தோழியின் கணவர் ( 81 வயசு) இதுலேயே மூழ்கிட்டார். தோட்ட வேலை செய்ய இப்ப அவருக்கு நேரமே இல்லையாம்:-))))//

எங்க அப்பா கூட!!

said...

//விரிவாக பதில் தருவதற்கு யாராவது கெமிக்கல் எஞ்சினியர்கள் முன்வராத பட்சத்தில் தேடியாவது சொல்கிறேன். //

மருந்து, உமக்கு இந்த மேட்டர் எல்லாம் கூட வருமா? போட்டுத்தாக்கும்வோய்!!

said...

//ஐயா பெரியவரே!
சுடோகு சுடோகுன்னு பைத்தியமாகி மண்டை காஞ்சு ஆபீசுலயும் ஆப்பு வச்சாலும் உங்க கையில சொல்லலாங்களா?
:)//

சொல்லலாமே. ஆபீஸில் வெச்சாலும் சொல்லலாம். வீட்டில் வெச்சாலும் சொல்லலாம்.

காது கொடுத்து கேட்பேன் ஒரு கைப்புள்ள சத்தம்... (ஆனா குவாகுவா சத்தம் இல்லை!)

said...

//விக்கிபசங்க பேரை அகிலமெல்லாம் வித்துட்டீங்களே!//

விக்கி பசங்களா, கொக்கா!!

said...

சுடோகு போடச் சொல்லித் தந்த கொத்ஸ். ரொம்ப நன்றி.