Monday, November 27, 2006

தியோடலைட் - ஏன் எதற்கு எப்படி?

தருமியின் இன்னொரு கேள்வி

ரோடு போடும்போது நம்ம ஊர்களில்ஒருத்தர் மூணு கால் இருக்கிற ஸ்டாண்டு ஒன்றில் ஒரு டெலஸ்கோப் (?) மாதிரி ஒண்ணு வச்சிருப்பார். தள்ளி இன்னொருத்தர் ஒரு ஸ்கேல் வச்சிக்கிட்டு நிற்பார். அவங்க என்ன பண்றாங்க? அத எப்படி பண்றாங்க??
அந்தக்கருவியின் பெயர் தியோடலைட். நில அளவைக்கும் உயரங்களை அளப்பதற்கும் கட்டுமான வேலைகளிலும் பலப்பல விதமாக உபயோகப்படும் கருவி. (என் தந்தை நில அளவைத் துறையில் இருந்ததால் இக்கருவி எனக்கு 7 -8 வயதிலேயே பரிச்சயமாகிவிட்டது).

முதலில் இக்கருவியின் கான்சப்டைப் பார்ப்போம்.

ஒரு கொடிக்கம்பம் இருக்கிறது, அதன் உயரத்தை அளக்க விரும்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? ஒரு பையனை இஞ்ச் டேப்புடன் மேலே அனுப்பி அளக்கச் சொல்லலாம். அல்லது கொடிக்கம்பத்தைக் கழட்டி, தரையில் வைத்து நீளத்தை அளக்கலாம் (சர்தார்ஜி ஜோக்கில் வருவது போல உயரம் வேறு, நீளம் வேறு எனக் குழப்பிக்கொள்ளாமல் இருந்தால் சரி). ஆனால் ஒரு லைட் ஹவுஸின் உயரத்தை? 100 மாடிக் கட்டடத்தின் உயரத்தை?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்கும்போது, அந்தக்கட்டடத்தின் அடிமட்டமும், உச்சியும் ஏற்படுத்தும் ஆங்கிள்கள் வேறுபடும் அல்லவா? இதை இன்னொரு பொதுப்புள்ளியில் இருந்து பார்க்கும்போது, அந்த ஆங்கிளை வைத்து, சைன் தீட்டா, காஸ் தீட்டா எல்லாம் போட்டு திரிகோணமிதி வைத்துக் கணக்குப் போட்டால் உயரம் தெரிந்துவிடும் - இல்லையா?


இந்த ஆங்கிளைத் துல்லியமாகக் கணக்கெடுக்கத்தான் தியோடலைட் பயன்படுகிறது. இது ஆதாரமாக ஒரு டெலஸ்கோப் போலத்தான். கிடைமட்டமாகவும், நெட்டுக்குத்தாகவும் அசைக்கவல்ல டெலெஸ்கோப். இதனுடன் இணைந்த பாகைமானிகள் (கிடைக்கு ஒன்று, நெட்டுக்கு ஒன்று) எவ்வளவு ஆங்கிள் அசைத்திருக்கிறோம் என்று காட்டும்.



1. ஒரு ரெபரன்ஸ் புள்ளியை முதலில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்,

2. அளக்கவேண்டிய கட்டடத்தின் அடிமட்டத்தை டெலஸ்கோப்பில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்

3.அளக்கவேண்டிய கட்டடத்தின் உச்சியை டெலஸ்கோப்பில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்.

இதில், ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளியைக் கழித்தால், அடிமட்டமும், உச்சியும் ஏற்படுத்தும் ஆங்கிள் மாற்றம் தெரிந்துவிடும், உயரத்தைக் கண்டுபிடித்து விடலாம். சமதரையில் உள்ள நிலத்தை அளப்பதற்கும் இதே முறைதான். நிலத்தின் ஒரு எல்லை, மற்றொரு எல்லை, ரெபரன்ஸ் புள்ளி - கிடைத்தது ஆங்கிள்.

இப்போதெல்லாம் இதிலும் எலக்ட்ரானிக்ஸ் புகுந்துவிட்டது. கீழே இருப்பது நிக்கானின் லேட்டஸ்ட்.



மூணு குச்சியைப் பற்றியும் கேட்டிருக்கிறார். ட்ரைபாட் என்பது எந்தச் சமமற்ற தளத்திலும் சீராக நிற்கக்கூடிய அமைப்பு. நாற்காலியில் ஒரு கால் சரியில்லை என்றால் ஆடும். முக்காலி ஆடாது. பெரும்பாலும் தியோடலைட் உபயோகப்படுத்தும் இடங்கள் சமச்சீரற்றவையாகத் தான் இருக்கும் என்பதால் முக்காலி.

18 comments:

said...

நிறையா தடவை ரோடில் பாத்திருக்கற மேட்டர்தான். அதுல இவ்வளவு விஷயம் இருக்கா? நல்ல பதிவுதான் பெனாத்தலாரே!

இந்த முக்காலி, நம்ம புகைப்படங்கள் எடுக்க பாவிக்கிற முக்காலி மாதிரித்தானே. அல்லது இதில் எதாவது தனிப்பட்ட வசதிகள் இருக்கா?

said...

சந்திரமுகி படத்துல்ல நம்ம என்ன கொடுமை இது சரவணன் புகழ் பிரபு கூட இதை வச்சு எதோ டகால்டி வேலை செய்யும் போது தானே லாரி அவரை மோத வரும்?

said...

அப்படியா? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

said...

//தள்ளி இன்னொருத்தர் ஒரு ஸ்கேல் வச்சிக்கிட்டு நிற்பார். அவங்க என்ன பண்றாங்க? //

அந்த இன்னொருத்தர் வெச்சிருக்குற ஸ்கேல் (குச்சி) க்கு பேரு ரேஞ்சிங்க் ராடு. (Ranging Rod)

said...

இது கலக்கல் பதிவு...புதிய விஷயத்தை விளக்கமாக அறிந்துகொள்ள தந்தமைக்கு நன்றி !!!

said...

நல்ல தகவல்.ரொம்ப நாளாகவே அதாங்க தியோடலைட் உபயோகம் என்ன என்று தெரியாமல் இருந்தது.

said...

நல்ல தகவல்.ரொம்ப நாளாகவே அதாங்க தியோடலைட் உபயோகம் என்ன என்று தெரியாமல் இருந்தது.

said...

கட்டுமானத்துறையில் இதன் பங்கு அளவிடமுடியாது.
ரோடு மாத்திரம் இல்லை பல கட்டடங்கள் நேராக போவதற்க்கும் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
நல்ல வேளை ரொம்ப உள்ளே போய் பார்க்காமல் விட்டுவிட்டீர்கள்.படிக்க யாரும் வரமாட்டார்கள்.
:-))

said...

நன்றி கொத்தனார். எல்லாம் அதே முக்காலிதான்.

தேவ், தலைவர் படத்துக்கு இந்லைன் அட்வர்டைஸ்மெண்டா:-))

said...

கூடுதல் தகவல் கொடுத்தமைக்கு நன்றி நாமக்கல் சிபி.

நன்றி செந்தழல் ரவி.

நன்றி பொதக்குடியான்.

நன்றி வடுவூர் குமார். துறையில் உள்ள உங்களைப்போன்றவர்கள் கூடுதல் தகவல்களை அளிக்கலாமே - குறிப்பாக லெவலிங்கில் தியோடலைட்டின் பயன்பாடு பற்றி.

ரொம்ப உள்ளே போவதில் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது:-))

said...

லெவல் பாக்கிறாங்க என்ற அளவில் தெரியும். என்ன, ஏது என்று விளக்கியமைக்கு நன்றி. எனக்கே புரிஞ்சிரிச்சினா பாருங்களேன்.

said...

நன்றி நிர்மல்.

சாலை வடிவமைப்பு, ரோடு ரோலர்கள் பற்றி ஒரு பதிவு தயாராகி வருகிறது. ஆனால் அதில் தியோடலைட் பயன்பாட்டைப் பற்றி துறையில் இருப்பவர்கள் விளக்கினால் மகிழ்வோம்.

கேள்விகளுக்காக தனி பதிவு இருக்கிறதே.. அதில் காபி பேஸ்ட் செய்துவிடுகிறீர்களா? எதையும் கேட்கலாம், எதெனும் ஒரு விக்கியாவது பதில் சொல்லிவிடுவார்கள்.

said...

நன்றி தருமி. ஒத்துக்கறேன். ஒரு ஆசிரியருக்கு புரிய வைக்கிறது கஷ்டம்தான்றதை:-))

said...

அட...
முக்காலிக்கும் அதன் மேல் உள்ள தியோடலைட்டுக்குள்ளயும் இவ்வளவு விசேஷம் இருக்கா..

இனிமே எங்கேயவது இதப்பார்த்தா தியோடலைட் பத்தி சொல்லி கூட வர்றவங்கள இம்ப்ரஸ் பண்லாம் பாருங்க. :)

said...

நல்லதொரு அருமையான தகவலுக்கு நன்றி சுரேஷ். நிஜமாவே புரியுதுங்க.

அப்ப இஞ்சீனியரிங் கல்லூரியில் படிக்கிறவங்க யூனிபார்மோட இதைத்தூக்கிக்கிட்டுதான் இங்கே அங்கே போறாங்களா

said...

இந்த கருவி இப்போது இங்கு ஜூஜுபி ஆகிவிட்டது.3D அளவில் நிலப்பரப்பை எடுத்து அதில் எங்கு கட்டிடம் அமைந்தால் என்ன பிரச்சனை,எது பக்கத்தில் எது இருந்தால் அழகு, என்று பல முறையில் அவதானிக்கமுடியுமாறு அமைத்துள்ளார்கள்.
விலை?
அதிகம் தான்,பெரிய நிறுவனங்கள் வாங்கிப்போடலாம்.
சுரேஷ்,ரோடு பற்றி பதிவு போடும் போது படம் தேவைப்பட்டால் சொல்லவும்,அனுப்புகிறேன்.

said...

பி.ஈ. படிக்கும் போது முதல் வருடத்தில் இந்தக் கருவியைப் பற்றிப் படித்தது போல் தோன்றுகிறது. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்தக் கருவியைப் பற்றி மிக நன்றாக விளக்கிய அருமை நண்பர் ஆருயிர் தோழர் தன்மானச் சிங்கம் நகைச்சுவை நாயகர் திருவாளர். சுரேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

ஒரு போகின் கோண, ஏகபரிமாண மூடல் வழுக்களைப் பரம்பச்செய்யும் முறைகள் பற்றி அறிய விரும்புகிறேன். அதில் போடிச்சின் கணிதமுறை, வரைபுமுறை (Bowditch's Graphical method) பற்றிய விரிவான விளக்கங்களை தமிழில் தந்துதவும் படி வேண்டுகிறேன்.