Thursday, November 16, 2006

கேள்வியின் நாயகனே!

நம்ம மக்கள்ஸ் கிட்ட கேள்வி கேட்கலாம் அப்படின்னு ஒரு வார்த்தைதான் சொன்னோம். கேள்வி கேட்க நம்ம மக்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா? சும்மா தூள் கிளப்பிட்டாங்க. கேள்விங்களை மெயிலில் அனுப்புங்கன்னு சொன்னா, அத விட்டுட்டு பின்னூட்டமா போடறாங்க, பதிவா போடறாங்க. யாரு என்ன கேள்வி கேட்டாங்கன்னு ஒரே கன்பியூஷன். என்ன கேள்வி எல்லாம் வந்திருக்கு, எதுக்கு பதில் சொல்லியாச்சு, பதில் சொல்லாத கேள்விகளை எப்படி விக்கி பசங்களுக்குள் பாகம் பிரிப்பது என எங்களுக்கே பல கேள்விகள்!!

அது மட்டுமில்லாம, ஒரு கேள்வி ஏற்கனவே யாராவது கேட்டாச்சா இல்லையான்னு தெரியலை, அப்படின்னு வேற ஒரு கம்பிளைண்ட். சரி, இதுக்கெல்லாம் ஒரு வழி செய்யலாமுன்னுதான் இந்த பதிவு.

இதுதான் கேள்விகள் கேட்கும் பதிவு. அதாவது கேள்வி கேட்கறவங்க, இந்த் பதிவுக்கு வந்து கேள்வியை பின்னூட்டம் மூலமா கேட்கணும். நாங்களும் பதில் போட்ட உடனே, அந்த கேள்வி வந்த பின்னூட்டத்தை எடிட் செய்து, பதிலுக்கான உரலைச் சேர்த்திடுவோம்.

கேள்விகளைத் தனிப் பதிவாகக் கேட்டு பதிவு எண்ணிக்கையை ஏற்றிக் கொள்ளும் அன்பர்கள், இங்கு வந்து அந்த பதிவின் உரலையாவது பின்னூட்டமாய் இடுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு பதிவில் முடிந்த மட்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். எங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும், பதில் அளிக்கவும் அது எளிதாக இருக்கும்.

இந்த பதிவுக்கான சுட்டி விக்கி வலைத்தளத்தில் தனியாக தெரியும். அந்த சுட்டி மூலம் இங்கு வந்தால், இது வரை கேட்கப் பட்ட கேள்விகள், பதிலளிக்கப்பட்ட கேள்விகள், அதற்குண்டான உரல்கள் என எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்.

என்ன அன்பர்களே, இந்த ஆலோசனை சரிதானே? இனி என்ன? ஸ்டார்ட் தி மியூஜிக்!

54 comments:

said...

இங்க வந்து கேள்வி கேட்கச் சொன்னா எல்லாரும் எங்க போயிட்டீங்க???

said...

இந்தப் பதிவில் வரும் கேள்விகளுக்காக ஒரு database maintain பண்ணலாம். கேட்கப்பட்ட தேதி வரிசையில் கேள்வி, கேட்டவர் பெயர் , பதிலளித்தவர் பெயர், பதிவுக்கான சுட்டி என்று எல்லா விவரங்களையும் கொடுக்கலாம். பின்னூட்டங்களுக்கிடையே கேள்விகளைத் தேடுவதற்கு நேரமெடுக்கும்.

said...

1. வலைப்பதிவு தொடங்குவது எப்படி?
(சென்னைப் பதிவர் சந்திப்புக்குப் பிறகு இது குறித்து யாரோ எழுதி வருகிறார் என்றாலும் நீங்களும் எழுதலாம்.)

2. தமிழில் கணினியில் தட்டச்சு செய்வது எப்படி? (இது ஒரு தொடராக தமிழ் சிஃபி தளத்தில் நா. கண்ணன் எழுத வெளி வருகிறது. ஆனால், இந்த வலைப்பதிவு வருங்காலத்தில் ஒரு உசாத்துணையாக (reference) மாறும் என்ற நோக்கில் இங்கும் இது குறித்து ஆவணப்படுத்தலாம்.) முக்கியமாக லினக்ஸ், mac இயங்குதளஙளில் எப்படி எழுதுவது என்று சொல்லலாம்?

3. பங்குச் சந்தை எப்படி செயல்படுகிறது? (இது படித்தவர்களையும் குழப்பும் விதயம்.)

4. தங்கம் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

5. பணவீக்கம் என்றால் என்ன? (இங்கு எப்படி கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டும் என்றில்லை என நினைக்கிறேன்)

6. பிரியாணி செய்வது எப்படி? (என்னைப் போன்று வெளிநாட்டுத் தனிக்கட்டைகளுக்கு உதவும்.)

7. விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது எப்படி ? (ஹி..ஹி..விக்கிப் பசங்கன்னு பேர் வைச்சிட்டு இது கூட சொல்லாட்டி எப்படி? ஒரு கைமாறா இருக்கட்டுமே)

8. மைக்ரோவேவ் ஓவனில் முட்டை வேக வைத்தால் வெடிப்பது ஏன்?

இது பத்தி ஏற்கனவே சொல்லியாச்சே. நம்ம பதிவெல்லாம் படிக்கறதே இல்லையா? இந்த பதிவை கொஞ்சம் பாருங்க. முக்கியமா பின்னூட்டங்களை.

9. பாம்புக்கு காது இருக்கிறதா? பால் குடிக்குமா?

அப்புறம், உங்க வலைப்பதிவு உள்ளடக்கத்த எல்லாம் GNU free documentation licenseல விட்டீங்கனா, இதில இருந்து நல்ல பதிவுகளா எடுத்து விக்கிநூல்கள் தளத்துல ஏன், எதற்கு, எப்படி-னு ஒரு புத்தகம் போட்டிரலாம் !!

said...

"நமது வயிறு மனித மாமிசம் உட்பட்ட எல்லாவிதமான மாமிசங்களையும்
செரித்துவிடும். ஆனால் நமது வயிறும் மாமிசத்தால் ஆனதுதானே, பிறகு ஏன் அது
தன்னைத்தானே செரித்துக் கொள்வதில்லை?"

said...

'விக்கி பசங்க'-னு இருக்கற இந்த வலைப்பூவின் தலைப்பில் சந்தி உண்டா? கிடையாதா?

எனக்கு என்னமோ இது 'விக்கிப் பசங்க' அப்படினுதான் இருக்கனும்னு தோன்றுகிறது. ஏதும் 'எட்டெழுத்து சென்டிமெண்ட்'-ஆ?

said...

CAN U PLEASE GIVE SOME DETAILS A ABOUT DATA ENTRY JOBS .IT WILL BE USEFUL FOR HOMEMAKERS LIKE ME.

நீங்க தப்பான முகவரிக்கு வந்துட்டீங்க. இது வெறும் சந்தேகங்களை கேட்கற இடம். வேலை வாய்ப்புகளுக்கு நம்ம செந்தழலார் ஒரு தனி வலைப்பூ நடத்தறாரு பாருங்க. அங்க போயி ஒரு அப்ளிகேஷன் போட்டு வையுங்க. நன்றி.

said...

ரோடு ரோலர்கள் இன்னும் அளவில் பெரியதாகவே இருப்பது ஏன்?

அதன் வடிவமைப்பை மாற்றியமைக்க யாரும் முன்வரவில்லையா? முயற்சி செய்யவில்லையா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா?

said...

தீக்கங்குகளை தண்ணீரில் போட்டால் "புஸ்"ஸென்ற சப்தம் வருவது எதனால்?

(இந்தியாவிலும் இதே சத்தம்தான் கேட்கிறது?)

வெந்நீரில் போட்டாலும் இதே சப்தம் வருமா?

said...

1. உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளுவோம்
இல்லாயின் இல்லென்று வான் செல்குவோம்

இதை எழுதியது யாரு? இந்த வரிகள்ள சொல்ல வர்ர மறைவான உட்கருத்து என்ன?

2. Scarlet O Hara யாரு?

3. Secret Gardenக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

4. மெல்லிசை மன்னர் இசையில் இசைஞானி பாடிய பாடல்கள் எவை?

இவ்வளவுதாங்க கேள்விகள். விடைகள் இருக்குதா?

said...

1.அமெரிக்க அணில்களுக்கு ஏன் முதுகில் மூன்று கோடு இல்ல?

2. தோசை சட்டியிலோ அல்லது மற்ற தாலிப்பான்களிலோ, என் சொய்ங்ங்ங் என்று ஒரு விதமான ஒலி வருகிறது?

3. thanks giving day க்கு எல்லாம் இந்த sale podurangale, ithu eppadi avangalukku kattupadiyaghthu.

stok a irukkartha vida fund flow aanathan viyaparam munnera mudium appdinngra basic karanmo illa veru ethuavathu mukkkiyamana karanom irukka?


4, kelviya yaru kettalum pathil sollveengala ?

said...

கேள்வி 1:
சில பேங்க்குகள் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு பாதுகாப்பு முறையை பற்றிய சந்தேகம்.
பாஸ்வேர்ட் ஜெனெரேட்டர் என்ற ஒரு கருவியை நம் கையில் கொடுத்திருக்கிறார்கள். அது தரும் பாஸ்வேர்டை நாம் வலையில் பயன்படுத்தும்போது அதை எவ்வாறு சரி பார்க்கிறார்கள். சேட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ளும் சாதனம் போல் தெரியவில்லை. ஏதேனும் கணித சமன்பாடு உபயோகப் படுத்தப் படுகிறதா?(அல்காரிதம்)

நான் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் அலுவலகத்தில் நுழைவதற்கே இம்முறை பயன்படுத்தப் பட்டது.

கேள்வி 2:
நான் சின்ன வயதில் படிச்ச ஆங்கில கதை எழுதினது யாருன்னு தெரியல கதை தலைப்பு கூட தெரியாது. கரு மட்டுமே ஞாபகம் உள்ளது அதை கேட்டா கூட பதில் கிடைக்குமா?

said...

I am working in Semiconductor industry,I want to know about Arsenic gas and I want to know Arsenic test, If i fail in arsenic what are the impact will make arsenic in future..

said...

நானும் ஒரு கேள்வியைக் கேட்டு வைக்கிறேன்.

நிபுணர்கள் பதில் சொல்லணும், ஆமா.


போட்டோஜினிக் என்றால் என்ன?

நேரில் பார்க்க நல்லா( அட சுமாரான்னு வச்சுக்குங்க) இருக்கறவங்க
ஏன் போட்டோவுலே நல்லாவே இருக்க மாட்டேங்கறாங்க?

நேரில் படு சுமார் ஆளுங்க போட்டோவுலே இல்லெ சினிமாக்களிலே அட்டகாசமா
இருக்கறது எப்படி? மேக்கப்புன்னு சொல்லித் தப்பிச்சுக்க வேணாம்(-:

said...

நம்ம தஞ்சை பெரிய கோவிலின் மேலுள்ள அந்தப் பெரீஈஈஈஈய கல்லை எப்படி மேலே ஏற்றியிருப்பார்கள்?

சாரப்பள்ளத்திலிருந்து சாரம் கட்டி... அவ்வளவு தூரத்திலிருந்து அம்மாம் உசரத்துக்கா.. ம்ம்..

எப்படி, யார் (ஆனை?)எத வச்சு இழுத்திருப்பாங்க.. புல்லி, கயிறு ம்ம்..சரிப்படலையே..

சரி, பாதி தூரம் வந்தாச்சு.. ஒரு ராத்திரி..எல்லோரும் தூங்கணும்.. நடுவில எப்படி நிப்பாட்றது?

said...

ஐயா,


வ.வா.சங்க தல'க்கு ஒரு சந்தேகம்...

இராகம், தானம்,பல்லவின்னா என்ன??

ராகம் தானம் பல்லவி அப்படின்னா என்னன்னா இங்க வந்து படிச்சி பார்த்துக்கோங்க!

said...

"நமது வயிறு மனித மாமிசம் உட்பட்ட எல்லாவிதமான மாமிசங்களையும்
செரித்துவிடும். ஆனால் நமது வயிறும் மாமிசத்தால் ஆனதுதானே, பிறகு ஏன் அது
தன்னைத்தானே செரித்துக் கொள்வதில்லை?"

இந்தக் கேள்வி நினைவுறுத்தப்படுகிறது

ஓகை, உங்க கேள்விக்கான பதில் இங்கே!

said...

//நம்ம தஞ்சை பெரிய கோவிலின் மேலுள்ள அந்தப் பெரீஈஈஈஈய கல்லை எப்படி மேலே ஏற்றியிருப்பார்கள்?//

இந்த கேள்விக்கு தொடர்புடையதான செய்தியை வைத்து ஒரு அறிவியல் சார்ந்த சரித்திரக் கதை "கப்பிப்பயல்" என்ற தலைப்பில் நாளை வெளியாக இருக்கிறது தருமி அவர்களே!

தேன்கூடு போட்டிக்கு அனுப்பவிருக்கும் இந்தக் கதையை அனைவரும் படித்து நான் இன்புற வேண்டுகிறேன்.

said...

என் முதல் சரித்திரச் சிறுகதை கப்பிப்பயல்

said...

தஞ்சை பெரிய கோவில் கிபி 1000 ஆவது ஆண்டு வாக்கில் உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாகவோ அல்லது இதுவே மிக உயரமானதாகவோ இருந்திருக்க வேண்டும்.

கேள்வி: கிபி 1000 ஆவது ஆண்டில் உலகின் மிக உயரமான கட்டிடம் எது?

said...

கம்பராமாயணத்தில் ஒரு பாடல் -இராமரின் முடிசூட்டு விழாக்காண வந்த கூட்டம் நெரிச்சல் பற்றி ; கம்பர் வர்ணிக்கையில் "எள் போட்டால் எண்ணெய்" வருமென குறிப்பிட அபசகுனக் குறையென அஞ்சி...உழுந்து போட்டால் கீழே விழாது எனக் கூறியனாராம். தயவு செய்து அப்பாடலைத் தரவும்.
யோகன் பாரிஸ்

said...

ராகவன்,

// G.Ragavan said...

2. Scarlet O Hara யாரு?//

அவரை(Scarlet O Hara )பற்றித்தான் நீங்க பதிவே போட்டிருக்கிங்களே !!

http://gragavan.blogspot.com/2005/06/gone-with-wind.html

said...

Q on sports-photography

டென்னிஸ் மேட்சுகளில் இப்போதெல்லாம் controvercial calls பற்றி விளையாடுவோர் கேள்வி எழுப்பலாம். உடனே பந்து கோட்டின் எந்த இடத்தில் விழுந்தது என்பது உடனே காண்பிக்கப் படுகிறது.
இது எப்படி?

கிர்க்கெட் மேட்சுகளில் விழுந்து எழும்பிச் செல்லும் பந்தைமட்டும் close-up-ல் replay-ல் காட்டுகிறார்களே. நிச்சயமாக manual-ஆக அந்தப் பந்தை மட்டும் படம் பிடிக்க முடியாது - with very long focal length lenses.
எப்படி முடிகிறது.

கால்பந்து இன்னும் மற்ற விளையாட்டுக்களில் replay மிகச் சரியான இடத்திலிருந்து rewind ஆகிக் காண்பிக்கப் படுகிறதே.
அது எப்படி?

said...

விக்கி பாய்ஸ்,

வெட்டிப்பயலின் பகுத்தறிவு பதிவில் அவர் சொன்ன வார்த்தைகள்:

நான் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டிய பின் நான் கிழித்து கூட போடுவேன்!!! Its none of ur business to teach me how to spend my money.

எனது கேள்வி:

நமது ரூபாயை கிழிக்க/அவமதிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தண்டனை ஏதாவது உள்ளதா?

எனக்கான வரையில் தேடினேன். ஆனால் என்னால் எந்த பதிலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்களும் தேடி சொல்லுங்களேன். நீங்களும் இல்லை என்ன்று சொன்னால் இந்த வதந்தியை (உண்மையாக இல்லாத பட்சத்தில்) பரப்பிய என் நண்பனின் தலை சிதறுகாய்தான்.

நன்றி!!!

உதய்.

said...

ரொம்ப நாளாச்சு கேள்வி கேட்டு.

'கானா' பாட்டு என்பது சென்னைக்கு மட்டும் சொந்தமா? எனக்கு தெரிந்து வட சென்னையில்தான் இது பரவலாக பிரபலம் என்று நினைக்கிறேன். இது எப்படி தோன்றியது? எப்படி பிரபலமடைந்தது?

இந்த 'கானா' என்ற வார்த்தை ஹிந்தி / உருதுவில் வழங்கப்படும் அதே வார்த்தைதானா?

கேள்வியின் காரணம் - திடீரென்று கானா உலகநாதன் 'இலவசமாக' பதிவு எழுத வந்ததால் தோன்றியது.

said...

விக்கி பசங்களா எனக்கு ஒரு திடீர் சந்தேகம். நம்ம தினமும் யூஸ் செய்யும் இந்த கணிணி கீ போர்ட்ல ஏன் எல்லா எழுத்தும் கலச்சுப்போட்டிருக்காங்க? நேற்று நானும் நன்பர் அருளும் பேசும் போது அவர் சொல்லறாரு,முதலில் டைப் ரைட்டரை கண்டுபிடித்தவர், நம்ம மெதுவாக டைப் அடிக்கவேண்டும் என்பதற்காக தான் இப்படி கலைத்து போட்டதாகவும், காலப்போக்கில் அதை அப்படியே பின்பற்றுவதாகவும் சொல்லறாரு! இது உண்மையா??

ஆவலுடன் பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!

அன்புடன்,

ஜெயசங்கர்.நா

said...

hi vicky guys and girls,
இப்போதான் fast bowler ப்லோக்ல பொயி ஜாண்டி ரோட்ஸ்க்கு எபிலெப்சி இருக்குன்னு சொன்னேன் அவர் அத பத்தி எழுதி இருக்கரத பாக்காம.அவரும் பெருந்தன்மையா அத்னாலென்ன தான் எபிலெப்சின்னு ஒரு புதிய வார்த்தை கத்துகிட்டேன்னு சொல்லிட்டு தனக்கு "fits"ன்கர வார்த்தைதான் தெரியும்னு சொல்லி இருக்கார். அப்ப தோணுச்சு epilepsy யும் fits ம் ஒண்ணுதான?? அப்படின்னா seizure ன்னா வேரையா?? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்....ரொம்ப நன்றி.

said...

சிரிப்பூட்டும் வாயு (Laughiing Gas) என்ற வாயுவினை முகர்ந்தால் சிரிப்பு வரும் என்று சொல்லப்படுவது உண்மையா? உட்டாலக்கடியா?

உண்மையென்றால், வருவது புன்முறுவலா? (smile) அல்லது வய்விட்ட சிரிப்பா? (laugh)

- சிமுலேஷன்

said...

one way mirror-ன் அறிவியல் என்ன?
கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?

பழைய photography கேள்வி இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறதே..

said...

சாதாரணமாக உணவுப் பொருட்களை தீயில் காட்டி சூடு செய்யும்போது இன்னும் மொறுமொறுப்புதானே (கிரிஸ்பி) அடையவேண்டும். மாறாக பிஸ்கட்டுகளை தீயில் சுட்டால் கிரிஸ்பி தன்மையை இழந்து நெகிழ்வதன் காரணம் என்ன?

said...

I have received a mail the mail content is like this
"A girl is suffering from Lukemia and She needs money for her operation!If u forward this mail to 12 peoples or more she will get some money for every mail forwared and it will help her for her opearation"
Is mails like this are true If so how they are actaully synchronizing this process of giving money and tracking e mails???

said...

அமெரிக்க கட்சிகளின் சின்னங்களான யானை, கழுதை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன(அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை)

said...

பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் (வெளிநாட்டிலல்ல,உள்ளூரில்தான்) என்ன செய்யவேண்டும்.. காவல்துறையினர் எப்படிக் கண்டுபிடித்துத் தருவார்கள்? சற்று விளக்கமாகப் பதிலளிக்க முடியுமா?

நன்றி
அபுல்

said...

இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள மிகக் குறைந்த பட்ச தூரம் ஒரு நேர்க்கோடு அல்ல என்றும் வளைவானது என்றும் சிலர் சொல்கின்றனரே.எப்படி?

said...

Why they stoped the CONCORED Flight services?
Can you answer me please!!!

said...

மின்னலைப் பார்த்ததிலிருந்து இடி சத்தம் கேட்கும்வரை இருக்கும் இடைவெளியை வைத்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று தோராயமாகக் கணிக்கிறார்கள் - ஐந்த(சரியாக நினைவில்லை) எண்ணினால் ஒரு மைல் தள்ளி, 10 எண்ணினால் இரண்டு மைல் தள்ளி.

ஒளி/ஒலி வேக வித்தியாசத்தினால் - சரியான விளக்கம்(சரியான எண்ணிக்கை) தரவும்.

said...

அமெரிக்காவில் சாரண அமைப்பு கிறிஸ்துவக்கோவில்களைச் சார்ந்து இருக்கிறது. ஏன் அப்படி? இந்தியாவில் பள்ளிக்கூடத்தில்தான் இருக்கும்.

said...

நண்பர்களே! ஒரு பயனுள்ள வலைப்பூ இது. பதிவர்களின் ஐயப்பாடுகளை நீக்கும் அருமையான பகுதி இது.

நான் பல பதிவுகளுக்கும் சென்று இடுகைகளைப் படித்து பின்னூட்டங்கள் இடுகிறேன். அதன் தொடர்ச்சியாக வரும் பின்னூட்டங்களை அறிய ஆவல். ஆனால் எங்கெல்லாம் பின்னூட்டம் இட்டேன் என மறந்து விடுகிறது. நான் இட்ட பின்னூட்டங்களை எல்லாம் அறிய ஏதெனும் வழி இருக்கிறதா ?? தெரியப்படுத்தவும்

said...

இத‌ற்கு முன்னால் இங்கே விக்கி பசங்களிடம் ஏதோ கேள்வி கேட்ட நினைவு. ஆனால், என்ன கேள்வியென்று நினைவில்லை. இப்போது ஒரு கேள்வி.


'காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை' என்று சொல்லும் வழக்கு இருக்கிறது சரி. ஆனால், காகம் தன் வழியில் போகையில் (காகத்திற்கு தொந்தரவே செய்யாமல்) தேமே என்று செல்லும் மனிதரின் தலையில் கொத்துவதன் காரணம் என்ன?

said...

இங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு விடையை ஒரு பதிவா போட்டுள்ளேன்,

இங்கே:
"http://vovalpaarvai.blogspot.com/2007/10/blog-post_12.html"> சில வினாக்களும் விடைகளும்

said...

முப்பது வயதுக்கு மேல் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்களே அதுபற்றி

said...

கடந்த பின்னூட்டத்தில் லின்க் செய்தது தப்பாக வருகிறது, கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கான பதில்கள்.
இங்கே

said...

Is there a way to cure Hepatitis B?
பதில் சொன்னா நல்லா இருக்கும்.
நன்றி

siva

said...

முரளிக் கண்ணன்,

நீங்க கேட்ட பால் மேட்டர் பத்தி ஏற்கனவே எழுதியாச்சு. இங்க பாருங்க.

said...

இலவசக்கொத்தனாரிடம் இலவசக்கேள்வி கேட்டு வந்த
அனந்த கோடி மனிதருக்கும்
மங்களம் உண்டாகட்டும்.
அண்ணா,நானும் ஒரு கேள்வி
வைத்திருக்கிறன்.உலகத்தில என்னைப்
போல அகதியாய் இருக்கிற
ஜடங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
என்று திருவாய் மலர்ந்து சொல்லும்
கொத்தனாரே !!!!!!!!!!

said...

நம் தாய் மொழி என்பது எது?
நம் அம்மாகிட்ட கத்துக்கிட்டதா?
பள்ளியில் கத்துக்கிட்டு பேசிகிட்டு இருக்கறதா?
கடவுள்கிட்டா டீல் போடறதா?
நம்ம நெனப்பு எதில இருக்குங்கிறதா?

தமிழரா பிறந்து ஆங்கில மீடியத்துல படிச்சு அமெரிக்காவுல வேலைப் பார்க்கிறவர்கள் எந்த மொழியில் நினைக்கிறார்கள்?

said...

ஏஞ்சாமி! யாரும் இத பாக்கிறீங்களா இல்லியா?
ஒரு கேள்வி ஒரு மாசம் முன்னால கேட்டதா ஞாபகம்.

said...

சோப் ஆபரா என்ற பெயர் எப்படி வந்தது?

said...

உணவுப் பற்றாக்குறையில் தவிக்கும் மக்கள் வயிறு உப்பியிருப்பதற்கு காரணம்?

எப்போதோ படித்தது - மறந்து விட்டது

said...

பழைய ஆங்கிலத்தில்(அமெரிக்காவில்) u எழுத்திற்கு பதில் v எழுத்து ஏன் உபயோகித்தார்கள்?

constitution => constitvtion

said...

Heard Maruthani song in Sakkarakkatti... There is one word coming often in that song... "Deepali" .. I am sure its not Deepavali, since "adi podi deepali" .. Is it a tamil name for a girl .. .i mean oru ponnoda paruvam Deepali'yaa?

said...

பைபிளில் பாபிலோன் நகரம் பற்றிய குறிப்புகள் எத்தனை இடத்தில் உள்ளன?.அனறைய பாபிலோன் (தற்பொழுது ஈராக்)நகருக்கும் இந்தியாவுக்கும் ஏதேனும் வாணிகத் தொடர்பு இருந்திருக்குமா?

said...

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=13415][IMG]http://www.wallpaperhungama.in/data/thumbnails/117/Minissha Lamba-91.jpg[/IMG][/URL]

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=13240][IMG]http://www.wallpaperhungama.in/data/thumbnails/117/Minissha Lamba-90.jpg[/IMG][/URL]

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=13236][IMG]http://www.wallpaperhungama.in/data/thumbnails/117/Minissha Lamba-87.jpg[/IMG][/URL]

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=13234][IMG]http://www.wallpaperhungama.in/data/thumbnails/117/Minissha Lamba-85.jpg[/IMG][/URL]


[url=http://www.wallpaperhungama.in/cat-Minissha-Lamba-117.htm][b]Minissha Lamba Sexy Wallpapers[/b][/url]

Photo gallery at WallpaperHungama.in is dedicated to Minissha Lamba Pictures. Click on the thumbnails into enlarged Minissha Lamba pictures, intimate photographs and snobbish photos. Also check exposed other Pictures Gallery through despite Turbulent property and High Acutance portrait scans, silver screen captures, cinema promos, wallpapers, hollywood & bollywood pictures, photos of actresses and celebrities

said...

I am able to make link exchange with HIGH pr pages on related keywords like [url=http://www.usainstantpayday.com]bad credit loans[/url] and other financial keywords.
My web page is www.usainstantpayday.com

If your page is important contact me.
please only good pages, wih PR>2 and related to financial keywords
Thanks
BehoowNeero

said...

megan foxs sex tape, [url=http://discuss.tigweb.org/thread/187756]naughty megan fox[/url] naked magan fox
kim kardashian sexy video, [url=http://discuss.tigweb.org/thread/187768]kim kardashian second sex tape[/url] kim kardashian sex tape or ipod
taylor swift guitar, [url=http://discuss.tigweb.org/thread/187772]taylor swift verizon center[/url] taylor swift award
hannah montana look alikes geting fuvked, [url=http://discuss.tigweb.org/thread/187786]did hanna montana say that she didn't like black people[/url] hannah montana naked pictures
harry potter tonks, [url=http://discuss.tigweb.org/thread/187792]harry potter books 1 7[/url] cast of harry potter 6
cruises to jamaca, [url=http://discuss.tigweb.org/thread/187798]tom cruise top gun[/url] where to stay in port canaveral before a cruise
young justin bieber, [url=http://discuss.tigweb.org/thread/187812]justin bieber love heart[/url] justin bieber my world albu,
britney spears clothes, [url=http://discuss.tigweb.org/thread/187814]britney spears homemade movie[/url] britney spears twitter
megan fox jennifer's body naked, [url=http://discuss.tigweb.org/thread/175542]megan fox jeniffers body[/url] megan fox panties