Monday, February 19, 2007

ருசியான பிரியாணி செய்வது எப்படி?

காஷ்மீரி பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, காகாக்கடை பிரியாணி, ஆம்பூர் பிரியாணி வரிசையில் இப்பப் புதுசா 'நியூஸி பிரியாணி 'வந்துருக்கு.

வெஜிடேரியன்களும், நான்வெஜிடேரியன்களும் எல்லாரும் இப்படி வந்து கூட்டமா நில்லுங்க.

முதலில் எது?

மொதல்லே நான்வெஜ் சமைச்சுறலாம். ரொம்ப சத்தம் அந்தப் பக்கத்துலே இருந்து வருது. சிக்கனா மட்டனா? எதுவேண்டும் சொல் மனமே..........


ரெண்டு விதத்துக்கும் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்தான் இருக்கு. அதைச் சமைக்கும்போது பார்க்கலாம்.

இப்பெல்லாம் யாரும் பிரியாணிக்குன்னு மசாலா எல்லாம் வூட்டுலெ தயாரிக்கறதை விட்டுட்டாங்க. ரெடிமேட் பொடிகளா நாட்டுலெ குவிஞ்சு கிடக்கு. எனக்குத் தெரிஞ்சவரையில் 'மங்கள் மசாலா' நல்லாவே இருக்கு( வேற வழி? அது மட்டும்தான் இங்கே எனக்குக் கிடைக்குது) அதையும் வாங்கி வச்சுக்குங்க.

இந்த ரெஸிபி கொஞ்சம் 'ரிச்'சாத்தான் இருக்கும். ஆனா ருசி வேணுமுன்னா போடறதைப் போட்டுத்தானே ஆகணும். தினம்தினமா பிரியாணி சாப்புடப் போறோம்? அதனாலே காம்பரமைஸ் பேச்சு இல்லவே இல்லை.


தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் அல்லது மட்டன் - அரைக் கிலோ கொஞ்சம் பெரிய துண்டங்களா நறுக்கிக் கழுவி வச்சுக்குங்க)
  2. பாசுமதி அரிசி - அரைக்கிலோ
  3. பிரியாணி மசாலா - மூணு/நாலு தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
  5. உப்பு - ஒண்ணரைத்தேக்கரண்டி
  6. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாம்
  7. சம அளவில் சேர்த்து அரைச்ச பச்சை மசாலா- மூணு தேக்கரண்டி.( மசாலா பாக்கி ஆச்சுன்னா ஃப்ரீஸ் பண்ணி வச்சுக்கலாம்)
  8. வெங்காயம் பொடியாக அரிஞ்சது - 3 ( பெரிய சைஸ் வெங்காயமா இருந்தா 2 போதும்)
  9. 'துள்ஸீஸ்' கரம் மசாலா - 1 தேக்கரண்டி ( செய்முறை கடைசியில் இருக்கு)
  10. தக்காளிப் பழம் - 4 ( நறுக்கி வச்சுக்கணும்)
  11. கொத்துமல்லித்தழை - அரைக்கட்டு ( 'கால்கட்டு'க்கூடப் போதும்)
  12. புதினாத்தழை - கொஞ்சம்
  13. முந்திரிப்பருப்பு - கால் கப்
  14. உலர்ந்த திராட்சை( கிஸ்மிஸ்) கால் கப்
  15. நெய் - 200 கிராம்.

செய்முறையில் ரெண்டு வழி இருக்கு. சுலபமாச் செய்யறது, கஷ்டப்பட்டுச் செய்யறதுன்னு. எதுவேணும்? ரெண்டையும் சொல்லிடவா?


சுலபமுறை:


அடுப்பைப் பத்தவச்சுக்குங்க:-)

ஒரு பெரிய வாணலியில் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும், அதுலே முந்திரி, திராட்சையை பொரிச்சு எடுத்து வச்சுக்கணும்.

இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துச் சூடானதும் அரைச்சு வச்ச க்ரீன் மசாலாப் போட்டு ஒரு நிமிஷம் வதக்கணும்.அதுலேயே நறுக்கிவச்ச வெங்காயம் சேர்த்து இன்னும் வதக்கணும்.

அப்புறம் இன்னும் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும் மஞ்சப்பொடியைப் போட்டு ஒரு கிளறு கிளறிட்டு அதுலே சிக்கன்/ மட்டனைப் போட்டு நல்லா பிரட்டுங்க. அதோட நிறம் லேசா மாறணும். இப்ப அடுத்துச் சேர்க்கவேண்டியது பிரியாணி மசாலா. அடிப்புடிக்காமக் கிளறணும். உப்பையும் இப்ப சேர்த்துறலாம். ஆச்சா......... என்ன பாத்திரத்துலெ பிடிக்குதா? தக்காளியைச் சேருங்க.

சிக்கனா இருந்தா ஒரு டம்ப்ளர் தண்ணீரைச் சேர்த்து அப்படியே அரைத்தீயில் வேகவிடுங்க. மட்டனா இருந்தா தக்காளி சேர்த்ததும் கிளறிட்டு அதையெல்லாம் ஒரு பாத்திரத்துக்கு மாத்திட்டு ப்ரெஷர் குக்கரில் வைக்கலாம்.( குக்கர்ன்னா கால் தம்ப்ளர் தண்ணீர் போதும். ஸ்டீம் வந்த பிறகு அடுப்பை 'ஸிம்' செஞ்சுட்டுச் சரியா 15 நிமிஷம்.


அரிசியை கழுவி( மூணு தடவை. அதான் இந்தியக் குடும்ப வழக்கமாம்) மைக்ரோவேவ் ரைஸ் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊத்தணும். அரிசி அரைக்கிலோன்னா அநேகமா ரெண்டரை கப் வரும். மூணரைக்கப் தண்ணி சேர்த்தாப் போதும். 100% பவர்லே 7 நிமிஷம், 50% பவர்லே 8 நிமிஷம் வைக்கணும். 1000 W மைக்ரோவேவ்க்கு இந்தக் கணக்கு. பவர் இன்னும் அதிகமுள்ள அல்லது குறைவுள்ள மைக்ரோவேவ்ன்னா அதுக்குத் தகுந்தமாதிரி குறைச்சோ, கூட்டியோ வச்சுக்கணும்.


அடுத்த கட்டம் மிக்ஸிங். சிக்கனா இருந்தா இந்நேரம் வெந்திருக்கணும். தண்ணியெல்லாம் சுண்டி நல்ல க்ரேவிப் பதத்தில் இருக்கும் அதே வாணலியில் இப்பச் சேர்க்க வேண்டியது நம்ம 'துள்ஸீஸ்' கரம் மசாலா.

ஒரு கிளறுக்குப்பின் அடுத்து மைக்ரோவேவில் வெந்து தயாரா இருக்கும் சோறு. நல்லாக் கிளறுங்க. ஆனா சாதத்தை நசுக்கிக் கூழாக்காம லேசாப் புரட்டிப்புரட்டி விடணும். வெள்ளைச்சோறு கண்ணுலெ படக்கூடாது. இப்பத் தூவவேண்டியது
ஏற்கெனவே வறுத்துவச்ச முந்திரி & திராட்சை. பாக்கி இருக்கும் நெய்யை அப்படியே பரவலா பிரியாணிமேலே ஊத்திவிடுங்க. கொத்தமல்லி & புதினாவைக் கழுவிப் பொடிப்பொடியா அரிஞ்சு தூவலோ தூவல். ஒரு அஞ்சு நிமிஷம் அடுப்புமேலேயே இருக்கட்டும். தீச்சுவாலை இப்ப 'ஸிம்'லெ இருக்கணும்.

தக்காளி வெங்காயம் எல்லாம் அரிஞ்சு தயிர்லெ போட்டுக் கலக்கி கொஞ்சமா உப்புப்போட்டு ஒரு பச்சடி செஞ்சுக்கலாம். இல்லையா வெள்ளரிக்காய் துருவி, தண்ணீரை ஒட்டப் பிழிஞ்சுட்டு கெட்டித்தயிரில் கலக்குன ரைத்தா.
எல்லாம் இது போதும் சைட் டிஷ். ( வெள்ளரிக்காய் தண்ணீரை ஃப்ரிஜ்லே வச்சுக்கிட்டு ரெண்டு நாளைக்கு முகத்தில் தடவிக்கலாம்.எல்லாம் ஒரு அழகுக் குறிப்புதான். வேணாமா? சரி. அதைக் குடிச்சுருங்க)


வெஜ் பிரியாணி:

இதுலேயும் ரெண்டு வகை. ஈஸி & கஷ்டம்.

ஈஸியைப் பார்க்கலாமா?

மேலே சொன்னதுலே அந்த ச்சிக்கன்/மட்டனுக்குப் பதிலா மிக்ஸட் வெஜிடபுள் ( காரட், பீன்ஸ், பட்டாணி & கார்ன்) பாக்கெட் அரைக்கிலோ போட்டுக்கலாம். பிரியாணி மசாலா ரெண்டு தேக்கரண்டியே போதும். உப்பும் கொஞ்சம்
குறைச்சுக்குங்க. காய்கறிகள் சீக்கிரம் வெந்துரும். அதனாலே பக்கத்துலே இருந்து கவனிச்சுச் செய்யுங்க. அடுப்புலே வச்சுட்டுத் 'தமிழ்மணம் ' படிக்கப்போக வேணாம்:-)

இப்போ கஷ்டங்கள்:

நான் வெஜ்ஜுன்னா அதுவும் மட்டன்னா கொழுப்பு ஏதும் இல்லாம நல்ல ட்ரிம் பண்ண இறைச்சியா எடுத்துக்குங்க. அப்படியும் சந்தேகமா இருந்தா வெறும் இறைச்சியைக் குக்கரில் வச்சு வெந்தபிறகு, அதில் உள்ள சூப்பை மட்டும்
தனியா ஒரு கிண்ணத்தில் ஊத்தி ஆறவச்சு ஒரு பத்து நிமிஷம் ஃப்ரீஸரில் வச்சுட்டு எடுத்தா, கொழுப்பெல்லாம் இறுகி பாறையா மேலே நிக்கும். அதை மட்டும் எடுத்து குப்பையில் போட்டுரலாம். அதே தண்ணீரை மீண்டும் இறைச்சியில் சேர்த்துக்கலாம்.

அப்புறம் அரிசியை மைக்ரோவேவ் அவனில் வைக்காம கொஞ்சம் நெய் ஒரு வாணலியில் ஊத்தி, கழுவித் தண்ணீர் வடிச்ச அரிசியைப் போட்டு கொஞ்ச நேரம் தீஞ்சுறாமல் வறுத்துட்டு அதுலெயே ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னரைப்பங்குத்
த்ண்ணீர் சேர்த்து அடுப்புலேயே வச்சு தண்ணீர் வற்றும்வரை வேகவச்சு எடுக்கலாம். தண்ணீருக்குப் பதிலா இறைச்சி வெந்தபிறகு கிடைச்ச தண்ணீரையும் பயன் படுத்தலாம்.


வெஜ்ஜுன்னா என்ன கஷ்டமாம்?

இருக்கே......... எல்லாக் காய்களையும் ,அதாங்க அதே காரட், பீன்ஸ், காலி ஃப்ளவர்ன்னு தனித்தனியா வாங்கிச் சின்னதா ஒரே அளவுலே வெட்டி வச்சுக்கணும். பச்சைப் பட்டாணியை வெட்ட வேணாம்:-) உரிச்சு எடுத்துக்கிட்டாப் போதும். எல்லாமே இங்கிலீஷ் காய்களாத்தான் இருக்கணும். தமிழை மட்டும் சேர்த்துறாதீங்க. அது சரிப்படாது.

குடமிளகாய் சீஸனா இருந்தா சின்னத் துண்டுகளா வெட்டி, ஒரு ஸ்பூன் நெய்யிலே வதக்கிட்டு, கடைசியில் மல்லி இலை தூவும்போது இதையும் தூவி அலங்கரிக்கலாம். இப்பதான் எல்லாக் கலர்லேயும் குடமிளகாய் கிடைக்குதே.
சிகப்பு, மஞ்சள், பச்சைன்னு கலந்து போட்டா அட்லீஸ்ட் பார்க்கறதுக்காவது அழகா இருக்கும்:-)

இதோ நீங்கள் ஆவலுடன் காத்திருந்த உலகப்புகழ்(??!!) 'துளசீஸ் மசாலா'வின் செய்முறை:



மசாலா தயாரிக்க :

  1. கிராம்பு 30 கிராம்
  2. பட்டை 30 கிராம்
  3. ஏலக்காய் 30 கிராம்
  4. மிளகு 10 கிராம்
  5. சோம்பு 100 கிராம்
இது எல்லாத்தையும் ஒரு வாணலிலே லேசா வறுக்கணும். அடுப்பை மெலிசா எரிய விடுங்க. எண்ணெய் வேணாம். சும்மா 'ட்ரை'யா, இளஞ்சூடா வறுத்து, ஆறியவுடனே, 'மிக்ஸி ட்ரை ஜார்'லே போட்டு அரைச்சு வச்சிரணும்.
காத்துப் போவாத டப்பாலே வச்சிருங்க. அவ்வளவுதாங்க! ஜமாய்ங்க!

33 comments:

said...

ரொம்ப நன்றி, வர்ர வெள்ளிக்கிழமை இதுதான் நம்ம வீட்ல...

said...

உலகப்புகழ் பெற்ற துளசீஸ் மசாலா ஏஜண்ட் உரிமை கிடைக்குங்களா?:)

said...

சும்மா கமகமன்னு பிரியாணியோட ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கும் எங்க டீச்சர் துள்சி அவர்கள் வாழ்க வாழ்க!!

said...

சரி ஆரம்பிக்கலாம் என்று பார்த்தால்..
கடை ஒன்று கூட இன்னும் திறக்கவில்லை.எல்லாம் சீன புதுவருடப்பிறப்புக்காக மூடியிருக்கிறார்கள்.
ஆனா சிக்கன் / மட்டன் மட்டும் முட்டுது.:-))

said...

பிரியாணி தூள் கிளப்புது.

நாங்கள்லாம் அரிசி, மசாலா, காய்கறி எல்லாத்தையும் ஒண்ணா கொட்டி வேக வச்சு பிரியாணி செஞ்சுடுவோம். :))\

இனிமே இப்படி முயற்சி செஞ்சு பார்க்கணும்.

said...

துளசி
விக்கி பசங்க இப்ப சமையல் சொல்லித்தர ஆரம்பிச்சாச்சா? கொஞ்சமா தேங்காய் போட்டு மசாலாவோட சேர்த்து அரச்சாலும், தேங்காய்ப்பால் சேர்த்து வேகவச்சாலும் இன்னும் ரிச்சா இருக்கும். நேத்திக்கு எங்க வீட்டில் மட்டர் பனீரும் பிரியாணியும் (வெஜ்) டின்னர். நெய் ஊத்தோ ஊத்தினா கொலஸ்டிரால் வரும். அதுக்கு பதில கொஞ்சமா வெண்ணெய், காய்கறிகள் வதக்க ஆலிவ் ஆயில் போட்டாலும் சுவை மாறாது:)

said...

வாங்க அபி அப்பா.

வர்ற வெள்ளிக்கிழமையா?
அப்ப வலைப்பதிவாளர் சந்திப்பு இருக்கா? :-))))

முத்துலெட்சுமி,

உங்களுக்கில்லாத முன் உரிமையா? வாங்க இப்படி லைன்லே
வந்து முதல்லெ நில்லுங்கப்பா:-)))

என்னங்க கொத்ஸ்,

இப்படி வாழ்க வாழ்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி? பிரியாணியைச் செஞ்சுபார்த்து,
( நல்லா இருந்தாமட்டும்) டீச்சருக்கு அனுப்பவேணாமா? :-))

குமார்,

உங்களுக்காகவே வெறும் 'வெஜ்' செக்ஷன் போட்டுருக்கேங்க.:--)))


ராம்ஸ்,

ரஷ்யாவை விட்டதும் சமையலுக்கு 'டாடா' சொல்லிட்டீங்களா?
இப்படி நாலு வகை பண்ணத் தெரிஞ்சுவச்சுக்கிட்டா 'பிற்காலத்துக்கும்' பயனா இருக்கும்:-)


வாங்க பத்மா,

விக்கிப் பசங்க 'ஜாக் ஆஃப் ஆல் ட்ரேட்ஸ்':-))))

ஆலிவ் எண்ணெய் பிரியாணியில் இதுவரை பயன்படுத்தலை. ஆனாவெறும் எண்ணெய் ஊத்துனா
நல்லாவே இல்லை.( நாக்கு ருசி கண்டு போச்சு)

said...

இந்த வாரம் பிரியாணி வாரம். துளசி கரம் மசாலா மட்டும் குரியர் போஸ்ட்ல எங்க வீட்டுக்கு வந்தா!!சீக்கிரம் அனுப்புங்க. பக்கத்துல தான இருக்கேன்

said...

//பிரியாணியைச் செஞ்சுபார்த்து,//

செஞ்சாக்கூட பார்க்கத்தாங்க முடியும். நமக்கு மசாலா அறவே ஆகாது. அதுனால ஒரு மசாலாவும் போடாம ஒரு வெஜிடெபுள் ரைஸ் பண்ணி மனசை தேத்திக்கறேன் விடுங்க. :)

said...

நான் 'கண்மணி விலாஸ்' னு போர்டு வச்சிட்டு ஈ ஓட்டுறேன்.நீங்க இப்படி ஆரம்பிச்சிட்டீங்களா? ஏன் அரிசி மட்டன் தனித்தனியா வேக வைக்கணும்.சேர்த்து வேகும்போது சுவை கூடுமே? எங்க தயாரிப்பு இதோ:
முதல்ல கறியோ,கோழியோ சிளீன் செய்து கொஞ்சம் உப்பு,மஞ்சள் தூள்,தயிர், தனி மிளகாய்த்தூள் சேர்த்து பிசெறி வைத்து'மேரினேட்'செய்ய வேண்டும்.பிறகு களைந்த அரிசியை ஆனியன் வதக்கிய நெய் அ எண்ணையிலேயே போட்டு உடையாமல் சிறிது நேரம் வறுத்துவிட்டு மேரினேட் பண்ண இறைச்சி சேர்த்து வேண்டிய அள்வைவிட 1/2 கப் குறைவாகவே[சாதம் உதிரியாக வரும்] தண்ணீர் விட்டு வேகவைத்து ,ரெடியானதும் வறுத்த கேஷூ நட்டுடன்,பொன்னிறமாக வதக்கிய பொடியாக நறுக்கிய ஆனியன் சேர்த்தால்.....

said...

அப்டியில்ல டீச்சர், தங்கமனி இங்க இல்லதப்பயே ஒரு 100 வலப்பதிவர் கூட்டத்த குடிச்சு சாரி முடிச்சிடனும்னு ஒரு ஐடியா!! வர்ரத்துக்கு இன்னும் 7 மாசம் ஆகும்!!!

said...

நமக்கும் சமையலுக்கும் ரொம்பத் தூரம் அதுன்னாலே சுலபமாச் செஞ்ச பிரியாணி ஒரு பார்சல்.. அப்புறம் கஷ்ட்டப்பட்டு செஞ்ச பிரியாணி ஒரு ரெண்டு பார்சல்.. வெஜ்/நான் - வெஜ் ரெண்டும் தான் சீக்கிரமா அனுப்பி வைங்கப்பா.. விக்கி பாய்ஸ் உங்களுக்குப் புண்ணியமாப் போகும்... ம்ம்.. கொஞ்சம் சூடா இருக்கட்டும்..

said...

நமக்கும் சமையலுக்கும் ரொம்பத் தூரம் அதுன்னாலே சுலபமாச் செஞ்ச பிரியாணி ஒரு பார்சல்.. அப்புறம் கஷ்ட்டப்பட்டு செஞ்ச பிரியாணி ஒரு ரெண்டு பார்சல்.. வெஜ்/நான் - வெஜ் ரெண்டும் தான் சீக்கிரமா அனுப்பி வைங்கப்பா.. விக்கி பாய்ஸ் உங்களுக்குப் புண்ணியமாப் போகும்... ம்ம்.. கொஞ்சம் சூடா இருக்கட்டும்..

said...

சூப்பர்... நாங்களும் இனி பிரியானி பண்ணிட வேண்டியதுதான் ;)))

said...

East Delhi லட்சுமிக்கு, நோய்டா நமக்கு...

said...

அக்காவ்,
எங்க தொழிலுக்கு இப்படி ஒரு கோனார் உரையா? ஆஹா, இன்னும் என்னல்லாம் கிடைக்கும்?

said...

நண்பர் ரவி எழுதிக் கொண்டது -

சமையல் பக்கமும் வந்தாச்சா! கன ஜோர்! கலக்கல் தொடரட்டும்.

said...

இப்படி பிரியாணி செஞ்சுட்டு முதல்லே யார்கிட்டே சாப்பிடக் கொடுப்பதுன்னு எதாவது விஞ்ஞானி விக்கி பதில் சொல்வார்களா?

அக்கா நீங்க சொல்லிடாதீங்க.. கோபால் சார் பாவம்

said...

சிநேகிதன்,

அதைத்தான் டீச்சர் கடைசியில் விளக்கமா சொல்லி இருக்காங்களே? ஏதேனும் குறிப்பா வேணும்னா கேளுங்க. அவங்க வந்து விளக்கமாச் சொல்லுவாங்க.

said...

என்ன டீச்சர், பதில் சொல்ல வரலையா? அப்பப்போ வந்து பதில் சொன்னாதானே, பதிவு தமிழ்மணத்தில் வரும், இன்னும் நாலு பேர் வந்து பார்ப்பாங்க.

உங்களுக்கு இதெல்லாம் சொல்லித்தரணுமா என்ன?! :-D

said...

வாங்க சின்ன அம்மிணி.

வாரம் முழுக்க பிரியாணியா?
தினமும் செய்யணுமா இல்லே............ ஃப்ரீஸர்லே இருக்கா? :-))))

கொத்ஸ்,

என்னங்க மசாலா ஆகாதா? சாப்பாட்டுலே மட்டுமா இல்லெ சினிமாலேயுமா?

said...

கண்மணி விலாஸுக்கு வந்துகிட்டே இருக்கேன்.
ஒரு ப்ளேட் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்யாணி......... பார்ஸேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
ஈ இல்லாம இருக்கணும்,ஆமா:-))))




உங்க ரெஸிபியையும் செஞ்சு பார்த்துருவம்லெ

said...

அபி அப்பா,

வர்றதுக்கு 7 மாசமாகுமா?
அப்ப.........

நான் நினைக்கறதுதானா?

said...

தேவ்,

என்னங்க .இப்படி அவசரப்பட்டா எப்படி? 2 பின்னூட்டிகளை அனுப்பிட்டீங்க.
கஷ்டமான முறையில் செஞ்சு அனுப்பப்போறேன்.
நேரமாகும்.

said...

மங்கை,

நொய்டாவுக்கு ஏஜென்ஸி கொடுத்துரலாம். ஆனா அந்த ஏரியாவை நினைச்சாவே 'வயித்தை'
கலக்குதுங்களே(-:

said...

கஸ்தூரிப்பெண் வாங்க.

'துளசி விலாஸ்'லே இப்ப அயிட்டங்கள் கம்மியாயிருச்சு(-:

said...

வாங்க ஜி.

ச்சும்மாச் சொல்லாதீங்க. பண்ணிப்பாருங்க.:-)

said...

சுரேஷ்,

பினாத்தறதுக்கு அளவில்லையா? :-)))))

கோபால் சாரை 32 வருஷமா உயிரோட விட்டு வச்சிருக்கறது எப்படின்னு தெரியுமுல்லே? :-)))

said...

கொத்ஸ்,

அய்யய்யோ.......... அப்பப்ப வந்து பதில் சொல்லணுமா?

அடடா..............ஒரேடியாச் சொல்லிட்டேனே(-:

said...

பிரியாணின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுலயும் மட்டன் பிரியாணி, மீன் பிரியாணின்னா கேக்க வேண்டாம். அடடா! அதுலயும் பெங்களூரு திப்பசந்திரா பேகம்ஸ் பிரியாணில ஒரு மீன் பிரியாணி கிடைக்குமே! அடடடடா!

said...

செய்முறைக்கு நன்றி :)

said...

துளசி அக்கா. நீங்க கடினமான முறைன்னு போட்டிருக்கிற முறையில தான் எங்க வீட்டுல செய்வாங்க. யார் செய்வாங்கன்னு கேக்கறீங்களா? அது... அது வந்து... அது வந்து...

said...

மீன் பிரியாணியா இராகவன்? இதுவரை கேள்விபட்டது கூட இல்லை.